சமீபத்திய பதிவுகள்

சாட்சியம் இல்லாத மனித பேரவலம்-உலகில் எங்கும் இல்லாத கொடூரம்

>> Tuesday, May 5, 2009

செய்தியை வாசிக்க படத்தில் மேல் அழுத்தவும்




StumbleUpon.com Read more...

என்ன பிழை செய்தோமடி தாயே ? மனதை கலங்க வைக்கும் பாடல்

என்ன பிழை செய்தோமடி தாயே




என்ன பிழை செய்தோமடி தாயே


தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

வெடி விழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காய்ந்த குளம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி படிந்த சிறு முற்றம்

இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை
தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய………………சம்மதமோ…………..

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

விளக்கேற்றிய மாடமெல்லாம்
வீழ்ந்தே போனதோ…………..

ஊஞ்சலாடிய கம்பு இல்லை
நீந்தி பழகிய ஆறு இல்லை

என் தோப்பினுள் அடைந்த
பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற
தாய்பூனை என்ன ஆனதோ

முற்றம் தெளித்திட
விடியல் வருமோ
யுத்த சாமத்தில்
வாழ்வு முடியுமோ?

source:pachaitamilan.blogspo

StumbleUpon.com Read more...

வன்னி தமிழர்கள் நிலைப்பற்றி தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துள்ள இரகசிய வீடியோ



சேனல் 4 என்ற தொலைக்காட்சி எடுத்துள்ள இரகசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



StumbleUpon.com Read more...

அன்பான தொப்புள் கொடி உறவுகளே இதை பார்த்த பிறகும் நீங்கள் இவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டுமா??





StumbleUpon.com Read more...

புதுவகையான பல்குழல் எறிகணைத் தாக்குதல் பொது மக்கள் உடல் கருகிச் சாவு

புதுவகையான பல்குழல் எறிகணைத் தாக்குதல் பொது மக்கள் உடல் கருகிச் சாவு
 
இன்று அதிகாலை இராணுவத்தால் புதுவகையான பல்குழல் எறிகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது பல மக்கள் உடல் கருகி இறந்துள்ளனர்
 

StumbleUpon.com Read more...

செல்போனில் ஜெ.பிரச்சாரம்

நான் ஜெயலலிதா பேசுகிறேன்-----:செல்போனில் ஜெ.பிரச்சாரம்

லோக்சபா தேர்தலுக்காக அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா குரலில் ஒலிக்கும் மொபைல் போன் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

தேர்தல் கமிஷன் பிறப்பித்த அதிரடி உத்தரவால் கட்சியினர் தொழில்நுட்ப பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., இ-மெயில், தொலைபேசி ஆகியவற்றின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

எப்.எம்., ரேடியோவிலும் விளம்பரம் செய்யப்படுகின்றன. தி.மு.க., சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் வரவேற்பாளர்களை பணியமர்த்தி தொகுதியில் உள்ள தொலைபேசி இணைப்புகளில் தொடர்பு கொண்டு ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க., சார்பிலும் மொபைல்போன் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தொலைபேசி ஒன்றில் இருந்து வரும் அழைப்பை 'ஆன்' செய்தால், ஜெயலலிதாவின் குரலில் இரண்டு நிமிடம் வரை பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அந்த பிரச்சாரம்,'நான் ஜெயலலிதா பேசுகிறேன்,' என்று துவங்குகிறது. பின், தேர்தல் வாக்குறுதிகளை கூறி அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் சின்னங்களுக்கு ஓட்டளியுங்கள்' என்று கூறி பிரச்சாரம் நிறைவடைகிறது

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP