சமீபத்திய பதிவுகள்

செல்போனில் நிர்வாண படம் எடுத்த ஒரு போலீஸ்காரர்

>> Saturday, May 30, 2009

போலீசாரிடம் சிக்கி சீரழிந்த இளம்பெண்!
 
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் போலீஸ் பயிற்சி மையத்தில் சமையல் வேலை செய்து வருபவர் உமா (28) (பெயர் மாற்றம்) இவரை அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மிரட்டி கற்பழித்தார். இதனால் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
 
இது பற்றி அங்குள்ள சில போலீஸ்காரர்கள் அவரிடம் விசாரித்தபோது சப்- இன்ஸ்பெக்டர் கற்பழித்ததை கூறினாள்.
 
இந்நிலையில் அவர் அங்குள்ள குளியல் அறையில் குளிப்பதை ஒரு போலீஸ்காரர் தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அதை அவரிடம் காட்டி, இதை சி.டி.யில் பதிவு செய்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி கற்பழித்தார். பின்னர் அவரது நண்பர்கள் 9 பேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் கும்பலாக சேர்ந்து அவளை கற்பழித்தனர்.
 
இதில் அவர் மயங்கி விழுந்ததால் போலீசார் அவளை போட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.
 
இது பற்றி அவள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணாவை சந்தித்து புகார் கொடுத்தார். ராமகிருஷ்ணா உத்தரவின் பேரில் உமாவை கற்பழித்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இது பற்றி உமா கூறும்போது, செல்போனில் என்னை நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.

StumbleUpon.com Read more...

சானியா மிர்சா இனிமே இந்த உடையில் தான் நீங்கள் பார்க்க முடியும்?




சானியா மிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம்

டென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ் சிலாம் வென்று சாதனை படைத்தார்.

டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. அவர் சிறு வயது முதலே தன்னுடன் படித்த சோரப்மிர்சா என்பவரை மணக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.

சோரப்மிர்சா ஐதராபாத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை கம்ரான் மிர்சா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், கம்ரான் மிர்சாவும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சானியா மிர்சா சோரப் மிர்சா திருமண நிச்சயதார்த்தத்தை ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.

நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று சோரப் மிர்சாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, சானியா மிர்சா திருமணத்திற்கு பிறகும் டென்னிஸ் ஆடவேண்டும் என்றனர்.

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளை வென்றதும் ராஜபக்சேவுக்கு பாராட்டின தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்

விடுதலைப்புலிகளை வென்றதும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்தினார்கள்: ராஜபக்சே

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே 'தி வீக்' என்ற ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்பேட்டியில்,  ''புலிகளுக்கு எதிராக என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியும் ஒரே சமயத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல்
காட்டியிருக்கிறது.


விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சிகள் தோற்றுவிட்டன; எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும்
வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.


 புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு
பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை''அதிரவைத்துள்ளார் ராஜபக்சே.

StumbleUpon.com Read more...

கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

 

இலங்கை கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதனால் கிழக்கு மாகாணம் மீது சிங்கள ராணுவத்தின் கவனம் திரும்பி உள்ளது.

இது பற்றி, இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா,

''இலங்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதற்காக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

 மேலும் 300 தற்கொலைப் படையினர் இலங்கையின் பல பகுதிகளில் ஊடுருவி இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. எனவே ராணுவத்தை உஷார்படுத்தி உள்ளோம்.

வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவ படையை நிரந்தரமாக வைக்க இயலாது. மற்ற பகுதி அச்சுறுத்தல்களை ராணுவம் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவம் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்படும்''என்று தெரிவித்துள்ளார்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP