சமீபத்திய பதிவுகள்

UN CAN INVESTIGATE SRILANKA GENOCIDE-video

>> Tuesday, June 2, 2009

StumbleUpon.com Read more...

இலங்கை இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த இந்திய அதிகாரிகள்

இலங்கை இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த இந்திய அதிகாரிகள்-----:பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்


பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, பாமக நிறுவனர்  ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.   அக்கடிதத்தில்,


'' எங்களுக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க கவலை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்துதான். இலங்கையைப் பொறுத்தவரையில் நமது வெளியுறவுக் கொள்கை பெருங்கேடு விளைவித்து வருகிறது.


அண்மைக் காலங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இரண்டு முதன்மையான காரணங்களுக்காகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

முதலாவது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியா போற்றப்படுகிற போதிலும், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், இலங்கை போன்ற அண்டை நாடுகளின் எதேச்சதிகார, சர்வாதிகார அரசுகளுக்கு ஆதரவாக அது செயல்பட்டு வருகிறது. இதில் சீனாவுக்கு இந்தியா ஒத்தூதி வருகிறது.

இரண்டாவது, வலுவான அரசியல் மதிப்பீடுகள் அல்லது பாதுகாப்பு அக்கறைகளின் அடிப்படையில் அல்லாமல், ஒரு சார்பான அதிகாரவர்க்க சக்திகளால் நமது வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை அமைப்புகளை சேர்ந்த உயரதிகாரிகள் பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரப்புக்கு தொடர்ந்து புகழ்பாடி வருகிறார்கள்.

 நேபாளத்தின் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக அந்நாட்டின் மன்னருக்கும், இலங்கையின் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மக்கள் சமுதாயத்தில் இருந்து வருகிற அறிவார்ந்த கருத்துகளை எடுத்துக் கொள்ளுதல், பொது விவாதம், கலந்தாய்வு ஆகியவற்றுக்கு வெளியுறவுக் கொள்கையில் முற்றிலும் இடமில்லாமல் இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கடந்த மே 22-ம் தேதி வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட பெருந்தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை அமைந்திருந்தது.

வன்னிப் பகுதியில் அண்மையில் முடிவடைந்துள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஜெர்மனியும் வேறு 16 நாடுகளும் விடுத்த வேண்டுகோளை விவாதிப்பதற்காகக் கடந்த மே 26-ம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை ஐ.நா. மனித உரிமை மன்றம் கூட்டியிருந்தது.

தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அஞ்சிய இலங்கை அரசு, எதிர் நடவடிக்கை எடுத்தது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் துணையுடன் இந்திய உள்ளிட்ட 12 நாடுகளின் ஒப்புதலுடன் தானே உருவாக்கிய தீர்மானம் ஒன்றை இலங்கை சுற்றுக்கு விட்டது.

இலங்கை அரசின் இந்தத் தீர்மானமும், ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் இந்தியத் தூதரான ஏ.கோபிநாதன் இத்தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசியதும் ஐ.நா. மனித உரிமை மன்றம் ஒரு பிற்போக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வழிவகுத்தது. இத்தீர்மானம் உலகம் முழுவதும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது.

 இப்போது இருள்படிந்த அமைப்பாக மாறிவிட்ட ஐ.நா. அமைப்பு வரலாற்றில் மிகவும் கோட்பாடற்ற, வெட்கமற்ற முறையில் நிறைவற்றப்பட்ட ஒரு தீர்மானம் இதுவாகத்தான் இருக்கும்.

வெறுக்கத்தக்க இத்தகைய தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு அது நிறைவேற வழிவகுத்திருப்பது இந்தியாவுக்கும் அதன் வெளியுறவுக் கொள்கைக்கும் பெரும் இழிவை ஏற்படுத்தி இருக்கிறது.

 இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியும் இப்போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனின் தலைமை செயலராக இருப்பவருமான விஜய் நம்பியார் இந்த இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று கடுமையாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது.

விஜய் நம்பியாரின் சகோதரரும், ஊதியம் வாங்கிக் கொண்டு இலங்கைப் படைக்கு கருத்துரையாளராக இருப்பவருமான ஓய்வுபெற்ற இந்தியப் படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியார் தான் `தமிழர்களை அழித்தொழிக்கும்' இந்த சதி முழுவதற்கும் பின்னணி என்று கூறப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடுமாறு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கிடையே, இப்போதுள்ள முதன்மையான பொறுப்புகளில் இருந்து இந்த அதிகாரிகள் அனைவரையும் நீக்க வேண்டும். ஐ.நா.வில் பணியாற்ற விஜய் நம்பியாருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரத்தைத் திரும்பப்பெற வேண்டும்.

இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக ஓய்வுபெற்ற லெப்டினனட் ஜெனரல் சதீஷ் நம்பியாருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய அரசின் ஆவணங்களில் இருந்து இந்த இழுக்கும், கறையும் அகற்றப்படாத வரையில், இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிப்படி நல்லாட்சியை, பொறுப்பான ஆட்சியை வழங்குவது உங்களால் இயலாத ஒன்றாகிவிடும்''என்று குறிப்பிட்டுள்ளார்.

StumbleUpon.com Read more...

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்? சோனியாகாந்தி, ராகுல்காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் வேண்டாம் ‐ இந்திய புலனாய்வு துறை எச்சரிக்கை:


 
இலங்கை அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்ட போராட்டத்தின் போது புலி உறுப்பினர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இறுதிக் கட்ட போராட்டத்தின் போது சுமார் 300 – 400 வரையிலான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இவ்வாறு கரையோரப் பகுதிகள் வழியாக இந்தியாவிற்குள் ஊடுறுவியுள்ளதாக அந்நாட்டு புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
கனிஷ்ட மட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களே இவ்வாறு இந்தியாவிற்குள் ஊடுறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். இலங்கையில் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அனைவரையும் கொன்றுவிட்டதாக இலங்கை இராணுவமும் அறிவித்தது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற போரின் போது தப்பிய, சுமார் 300 முதல் 400 விடுதலைப் புலிகள் இந்தியாவுக்குள் அகதிகள் என்ற போர்வையில் ஊடுருவி இருப்பதாக இந்திய புலனாய்வுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் காவற்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முகாம்களில் தங்கியுள்ள அகதிகளும் கண்காணிக்கப்படுகின்றனர். சந்தேகத்துக்குரியவர்கள்  அழைத்துச் செல்லப்பட்டு தனி முகாம்களில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மற்ற அகதிகள் அனைவரும் திறந்த வெளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டம்மானைப் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து கடலோர மாநிலங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்திய கப்பற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் தென்னக கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

StumbleUpon.com Read more...

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி

 
 

StumbleUpon.com Read more...

புலிகளின் மேலும் சில அரசியல்துறை உறுப்பினர்கள் கைது என்கிறது ராணுவம்

 
 

விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரை தடுப்பு முகாமில் வைத்து இலங்கைப் படையினர் கைது செய்துள்ளதாக அரச கட்டுப்பாட்டில் உள்ள சிங்களத் தினசரியான தினமின பத்திரிகை ராணுவத்தினரை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் நிர்வாகப்பிரிவுத் தலைவர்களான கரிகாலன், யோகரட்ணம் யோகி, லோறன்ஸ் திலகர், எழிலன், பாலகுமார், இளம்பரிதி, தங்கன் ஆகிய ஏழு பேருடைய பெயர்களையும் அது குறிப்பிட்டுள்ளது.

நிர்வாகப் பொறுப்பாளர் பூவண்னன், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா, உதவி உள்விவகாரப் பொறுப்பாளர் ஞானம், யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் ஆகியோரும் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தினமின தெரிவித்துள்ளது.

கரிகாலன் முன்னர் கிழக்குப் பிராந்தியத்தின் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பானவராகக் கடமையாற்றியவர். யோகரட்ணம் யோகி விடுதலைப் புலிகளின் பேச்சாளராகக் கடமையாற்றியவர். ஈரோஸின் முன்னாள் தலைவரான பாலகுமார் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆலோசகராக இருந்தார். லோறன்ஸ் திலகர் முன்னர் புலிகளின் பாரிஸ் பொறுப்பாளராகக் கடமையாற்றியிருந்தார். இவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தாத, புலிகளின் சிவில் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

StumbleUpon.com Read more...

மு.க.அழகிரி விமான நிலையத்தில் அப்படி என்ன செய்தார்!!!!!!!

மனிதாபிமானம் மிக்கவர் மந்திரி மு.க.அழகிரி உதவியை மறக்க முடியாது; டெல்லியில் இருந்து திரும்பிய பயணிகள் பேட்டி
இதனை நம்பிய பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறங்கி உள்ளனர். ஆனால் அதிகாரிகள் எதுவும் செய்யாமல் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டனர். இதனால் பயணிகள் விமான நிலையத்தில் இருக்க இடம் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமலும், முதியவர்களும், குழந்தைகளும் தவித்துள்ளனர். உடனே சுற்றுலா பயணிகள் தமிழ் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் விரைந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
அதன்படி தமிழ்நாடு எக்ஸ் பிரசில் தனி பெட்டி மூலம் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டனர். புறப்படும் முன்பு மு.க.அழகிரியை தமிழக பயணிகள் சந்தித்து கண்ணீர் மல்க பூங்கொத்து, பொன்னாடை வழங்கி நன்றி தெரிவித்தனர். நீங்கள் மட்டும் இல்லா விட்டால் எங்கள் கதி என்ன ஆயிருக்கும் என்றே தெரியவில்லை இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என்று கூறிவிட்டு விடை பெற்றனர்.
உடனே அவர் எங்களிடம் முதலில் நீங்கள் சாப்பிட்டீர்களா மிகவும் அன்போடு விசாரித்து, கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று கூறி 2 பஸ் மூலம் எம்.பி.க்கள் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று 13 அறைகளை ஒதுக்கி தங்க வைத்து, சாப்பாடு, காப்பி என அனைத்து வசதிகளையும் செய்து தந்தார். மு.க.அழகிரியின் மனிதா பிமானத்தை எங்கள் வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் என்றனர்.

உடனே அவரை சந்தித்து எங்கள் நிலைமையை எடுத்து  

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP