சமீபத்திய பதிவுகள்

வாழ்த்துக்களை வீடியோவாக அனுப்ப...

>> Sunday, November 1, 2009

 

இமெயில், இணைய தள வாழ்த்து அட்டைகள், மொபைல் எஸ்.எம்.எஸ் என எந்தவித செலவும் இன்றி வாழ்த்துக்களை பண்டிகைக் காலங் களில் அனுப்புகிறோம். செலவு எதுவும் இல்லாததால், அல்லது குறைந்த செலவில் அனுப்ப முடிகிறது என்பதால் இவை குவிகின்றன.  இந்த வரிசையில் இப்போது வீடியோ கிளிப்புகளை வாழ்த்துக்களாக அனுப்பும் வசதி கிடைத்துள்ளது. யாரும் வீடியோ கிளிப்புகளை இணையத்தில் பதிந்து வைத்திட வசதி தந்த கூகுள் நிறுவனம் தன் இணைய தளத்தில் இந்த வசதியினைத் தந்துள்ளது. இதனை அனுப்புவதும் மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் கூகுள் யு–ட்யூப் தளம் செல்ல வும். உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய் திடுங்கள். உங்களுக்கு அக்கவுண்ட் இல்லை என்றால் ஒன்றை உருவாக்குங்கள். பின்http://www.youtube.com/greetings  என்ற முக வரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.  இந்த தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு பலவகையான வாழ்த்து வீடியோ கிளிப்புகள் தரப்பட்டிருக் கும். இதில் உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வீடியோ கிளிப் புகளைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக நீங்கள் எதிர்பார்த்தால் கீழாகச் சென்று எதிர்பார்க்கும் வீடியோக்களுக்கேற்ற சில சொற்களை அமைத்துத் தேடலாம். பின் கிடைக்கும் வீடியோ கிளிப்புகளில் ஒன் றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

வீடியோ கிளிப் ஒன்றைத் தேர்ந்தெடுத்த வுடன் ஒரு பாப் அப் ஸ்கிரீன் கிடைக்கும். அதில் இந்த வீடியோவினை வாழ்த்தாக அனுப்ப கூடுதல் அம்சங்களை இணைக் கலாம். பேக் கிரவுண்ட் தீம் அமைக்கலாம். பெர்சனல் மெசேஜ் ஒன்றை டைப் செய் திடலாம். இவை எல்லாம் முடித்துவிட்டால் அனுப்ப வாழ்த்து ரெடியாகிவிடும். இதனை உங்கள் நண்பர் அல்லது உற வினர் ஒருவருக்கு அனுப்பலாம். அல்லது மொத்தமாக 25 பேர் வரை அனுப்பலாம்.  பிறகென்ன வீடியோக்களை அனுப்பி உங்கள் நண்பர்களையும் உறவினர் களையும் வாழ்த்துங்களேன். அவர்கள் சந்தோஷப் படுவார்கள்


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கை போரில் மனித உரிமை மீறல்கள்: சிங்கள ராணுவ தளபதியிடம் அமெரிக்கா விசாரணை

இலங்கை போரில் மனித உரிமை மீறல்கள்: சிங்கள ராணுவ தளபதியிடம் அமெரிக்கா விசாரணை ராஜபக்சேவின் சகோதரருக்கு எதிராக போர்க் குற்ற ஆதாரம் கேட்கிறது கொழும்பு, நவ.2- இலங்கை போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிங்கள ராணுவ தளபதி பொன்சேகாவிடம் 4-ந் தேதி அமெரிக்கா விசாரணை நடத்துகிறது. ராஜபக்சேவின் சகோதரருக்கு எதிராக அவரிடம் தகவல்களைக் கேட்கிறது. 170 குற்றச்சாட்டுகள் இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வாரம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஓர் அறிக்கை தாக்கல் செய்தது. 68 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், கடந்த மே 2-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக 170 குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபக்சே மீது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, போர்க் குற்ற விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த விசாரணை தொடர்பாக, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக சாட்சியம் அளிக்க வருமாறு இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்க அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். பொன்சேகா தலைமையில்தான் இறுதிக்கட்ட போர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ராணுவ தளபதிக்கு அழைப்பு ராணுவ தளபதி பொன்சேகா, அமெரிக்காவின் `கிரீன் கார்டு' வைத்திருப்பவர். அதைப் புதுப்பிப்பதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஒக்லகோமா என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில் தங்கி உள்ளார். அங்கு இருந்த பொன்சேகாவை டெலிபோன் மூலமாக தொடர்பு கொண்டு அமெரிக்க அதிகாரிகள் பேசினர். அப்போது, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக சாட்சியம் அளிக்க வருமாறு அழைப்பு விடுத்தனர். இத்தகவலை இலங்கை அரசிடம் பொன்சேகா தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார். வக்கீல் யோசனை மேலும், அமெரிக்க வெள்ளை மாளிகையின் வக்கீலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரெட் பீல்டிங்கின் சட்ட உதவியை பொன்சேகா நாடியுள்ளார். விசாரணையில் ஆஜராகி அனைத்து கேள்விகளுக்கும் உண்மையாக பதில் அளிக்குமாறு பொன்சேகாவுக்கு பிரெட் பீல்டிங் யோசனை தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், பொன்சேகாவுக்கு உதவியாக, ஒரு சட்ட நிறுவனத்தின் வக்கீல்களை இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வக்கீல்களை பயன்படுத்திக் கொள்ள பொன்சேகாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒக்லகோமாவில் 4-ந் தேதி பொன்சேகா, அமெரிக்க அதிகாரிகள் முன்பு சாட்சியம் அளிப்பார் என்று இலங்கையில் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு கருத்து அமெரிக்காவின் இந்த கிடுக்கிப்பிடியால் இலங்கை அரசு அச்சம் அடைந்திருப்பதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுபற்றி இலங்கை அரசுத் தரப்பில் கேட்டபோது, இவ்விவகாரம் பற்றி உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் பதில் அளித்தனர்.



source :dailythanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

“அல்கொய்தாவை அழிக்காமல் பாகிஸ்தான் தப்ப முடியாது” அமெரிக்கா அறிவிப்பு


 
 இஸ்லாமாபாத்,  அக்.31-
  
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் கடந்த புதன்கிழமை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இச்சம்ப வம் நடந்த இடத்தை பார்வையிடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தான் வந்துள்ளார்.
 
பெஷாவர் சென்ற அவர் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நாசவேலைக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகள் எங்கு இருக் கிறார்கள் என எங்களுக்கு தெரியாது. அதுபற்றிய தகவல்கள் எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் அரசுக்கு தெரியும்.
 
அவர்கள் (அல்கொய்தா தீவிரவாதிகள்) பாகிஸ் தானில்தான் பதுங்கி இருக் கிறார்கள். அவர்கள் பாகிஸ் தானுக்கு மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கும் அச் சுறுத்தலாக இருக்கின்றனர்.
 
எங்களுக்கும் (அமெரிக்கா வுக்கும்) அச்சுறுத்தலாக உள்ளனர். பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்த லாக இருக்கின்றனர். எனவே பாகிஸ்தானை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தீவிரவாதம் ஒழிய வேண்டுமென்றால் நீங்கள் அல்கொய்தாவிடம் இருந்து விலக வேண்டும்.
 
ஆகவே, அல்கொய்தா தலைவர்களை கைது செய்ய வேண்டும் அல்லது அழிக்க வேண்டும். தீவிரவாதத்தில் இருந்து பாகிஸ்தான் தப்ப வேண்டுமென்றால் அல்கொய்தா தீவிரவாதி களை ஒழிக்க வேண்டும். அதுதான் ஒரேவழி.
 
வரிசிஸ்தான் பகுதியில் அமெரிக்கா ராணுவ உதவி மட்டும் அளிக்கவில்லை. அங்கு தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு செய்வதில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். எங்களது நட்புநாடு குடியரசு அரசாக அமைய வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.
 
தெற்கு வரிசிஸ்தான் பகுதியில் ராணுவம் நல்ல முறையில் தனது பணியை செய்து வருகிறது. அப்பகுதி யில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. அவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெறும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP