சமீபத்திய பதிவுகள்

இதப்படிங்க முதல்ல:தேனீக்களை வரவழைக்க புதுமை பொங்கல்

>> Thursday, November 5, 2009

  

Human Intrest detail newsஅலங்காநல்லூர் : அலங்காநல்லூர்அருகே கொண்டையம்பட்டியில் தேனீக்களுக்கு உணவாக சர்க்கரை பாகு பொங்கலிட்டனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளடக்கிய கிராமங்கள் பெரும்பாலும் மலை சார்ந்தும் நீர் நிலை நிரம்பிய ஊரணி, குளம் நிறைந்த பகுதியாகும். கால சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் பருவமழை பொய்த்து போனது. இதனால் மானாவாரி உட்பட தோட்ட விவசாயிகள் பயிர் செய்யமுடியவில்லை. மலை பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள் காய்ந்து போன நிலையில் உள்ளது. இதனால் ஆடு, மாடு, பறவைகள் உணவுக்காக பெரிதும் சிரமப்படுகிறது. சமீபத்தில் பெய்து வரும் மழையால் கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைத்து வருகிறது. பறவைகளுக்கு தேவையான உணவு கிடைக்காமல் இரை தேடி அலைகிறது. பறவை இனத்தில் தேனீ, பூக்களில் உள்ள மகரந்தத்தை உண்டு மனிதர்களுக்கு மருந்தாகவும், உணவாகவும் தருகிறது.



படித்து வேலை கிடைக்காமல் அரசு வேலை தேவையில்லை மன உறுதி போதும் என்ற நோக்கத்தில் மதுரை மாவட்டம் கொண்டையம்பட்டியில் தென்னைமரத்தடியில் தேனீ வளர்த்துபணம் சம்பாதித்து சாதித்து கொண்டிருப்பவர் ஜோஸ்பின் மேரி. சில வருடங்களாக தேனீக்களை நம்பி வாழ்ந்த இவருக்கு தோட்டக்கலை துறை உதவி புரிந்தது. ஆனால் இயற்கை ஒத்துழைக்கவில்லை. மழை பெய்ய வேண்டி மழைக்கஞ்சி காய்ச்சுதல், கழுதைக்கு கல்லயாணம், தவளைக்கு கல்யாணம் என இன்றைய விஞ்ஞான காலத்திலும் செய்து வருகின்றனர். மதுரை மாவட்ட மதுரம் தேனீ வளர்ப்போர் சுய உதவிக்குழு சார்பில் கொண்டையம்பட்டியில் தேனீக்களை வரவழைக்கவும் மழை பெய்யவும் சர்க்கரை பாகு கரைத்து பொங்கல் படைத்து வழிபட்டனர். கரூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நாமக்கல் பகுதியில் இருந்து சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் விஜயக்குமார், துறை அலுவலர் பன்னீர் செல்வம், தேனீ வளர்ப்பு வல்லுனர் முத்துக்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தோட்டக்கலை துறையினர் செய்திருந்தனர். வேளாண்ளை உதவி அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார்.



source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஒசாமா பின்லேடனின் புதிய வீடியோ போலியானது?

 
 
lankasri.com
அல்-கய்டா தலைவர் ஒசாமா பின்லேடன் தோன்றும் வீடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அந்த வீடியோவில் மங்கலாக காணப்படும் நபர் ஒசாமா பின்லேடனின் உருவத்தை ஒத்தவராக இருந்தாலும் அது ஒசாமா தானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், அபு யஹ்யா அல்-லிபி என்ற மதம் மாறியவர் ஏற்பாடு செய்த விருந்தில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவில் ஒபாமா இருந்ததாகவும், இந்த வீடியோ பதிவு அஸ்-சாஹப் என்ற அல்கய்டாவின் ஊடகப் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த வீடியோவில் பின்லேடன் என்று குறிப்பிடப்படுபவரின் முகம் மட்டும் மங்கலாக உள்ளதால், அது பின்லேடனாக இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான தாக்குதலுக்குப் பின்னர் உலகளவில் மிகப் பயங்கரமான தீவிரவாதியாக கருதப்படும் ஒசாமா பின்லேடன், ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்ததாக நம்பப்பட்டு வரும் நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

source:newsonews
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இதுவரை வெளிவராத... இலங்கைச் சித்ரவதை:நாலாவது மாடியில் பிரபாகரன் பெற்றோர்!


'மே, 1968...

'அர்ச்சகரின் மீதுதான் தவறு!' - அந்த இளைஞனின் உதடுகளில் இருந்து உஷ்ணமாக வெளிப்பட்டன வார்த்தைகள். கோபம் அனலாகத் தெறிக்கும் தன் மகனின் முகத்தை விநோதமாகப் பார்த்தார்கள் பெற்றோர் இருவரும்.

'என்ன நடந்தது எனத் தெரிந்துதான் பேசுகிறாயா? தமிழரான அந்த அர்ச்சகரை சிங்களவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?' - பதில் கோபத்துடன் திருப்பிக் கேட்டார் அந்த இளைஞனின் தந்தை.

'தெரியும், சிங்களவர்கள் கொளுத்திவிட்டார்கள். அவர்கள் கொளுத்தும் முன்பே அர்ச்சகர் அவர்களைக் கொன்றிருக்க வேண்டும்' - கோபம் குறையாமல் அந்த இளைஞன் சொல்லவும் கூடுதலாக அதிர்ச்சி தந்தைக்கு!

'தேவாரத்தையும், திருவாசகத்தையும் சொல்லிக்கொடுத்து, திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் எனப் படித்த உன்னிடம் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன? தவறு, பகைவனிடம்கூட நாம் அன்பு பாராட்டத்தான் வேண்டும். அன்பே சிவம், அன்பே கடவுள், அன்பே உலகம்!' எனப் பதிலுக்கு அழுத்தி அழுத்தி அந்த இளைஞனுக்கு அன்பைப் போதிக்கிறார் அந்தத் தந்தை!

30 ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்காக ராணுவம் கட்டிப் போராடிய பிரபாகரன்தான் அந்த இளைஞன். பிரபாகரனுக்கு அன்பை அழுத்தி அழுத்திச் சொன்னவர் தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை. சிங்களப் பகைவனுக்குக்கூட அன்பு பாராட்ட வேண்டும் எனப் போதித்த பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கிடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்ரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவவைத்திருக்கிறது.இலங்கை வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்கக் குடும்பம் திருவேங்கிடம் வேலுப்பிள்ளையினுடையது. இலங்கை அரசாங்கத்தில் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணிபுரிந்தவருக்கு பிரபாகரன், ஜெகதீஸ்வரி, விநோதினி என மூன்று குழந்தைகள். மகன் பிரபாகரன் தேர்ந்தெடுத்த பாதையை மாற்ற ஆரம்பத்தில் எவ்வளவோ முயற்சித்தவர். பின்னாட்களில் மகனுக்குப் பின்னால் திரண்ட போராட்ட வீரர்களைப் பார்த்து, தவிப்புடன் ஆசி வழங்கி போராட்டத்துக்குத் தத்துக் கொடுத்தார் மகனை. அதன் பிறகு சிங்கள அரசுக்கும் பிரபாகரனின் படைக்கும் பல முறை போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது வேலுப்பிள்ளைதான். வேதனை யும் பயமும் உள்ளுக்குள் நொறுக்கினாலும், மகனின் வீரப் போராட்டத்துக்காக எதையும் வெளிக்காட்டாமல் வெள்ளந்தி மனிதராக வாழ்ந் தவர். ஒரு கட்டத்தில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துக் கொடுக்க... மூத்த மகள் ஜெகதீஸ்வரி கணவருடன் கனடா சென்றுவிட்டார். இளைய மகள் விநோதினி திருச்சியில் தங்கி விட்டார்.

மரபுவழி ராணுவப் போர் உக்கிரமாகத் தொடங்கிய காலத்தில் பிரபாகரன், தன் பெற்றோரை வற்புறுத்தி 83-ம் ஆண்டில் இந்தியா அனுப்பிவைத்தார். திருச்சி ராமலிங்க நகரில் இருந்த விநோதினியின் வீட்டில் தங்கியிருந்தபடி மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர் இருவரும். பின்னர், விநோதினியும் கனடா சென்றுவிட, தங்களுக்கு மருத்துவம் பார்த்த முசிறி டாக்டர் ராஜேந்திரனுடன் முசிறியிலேயே தங்கி இருந்தனர்.

அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் 2003-ம் ஆண்டில் தமிழீழம் கிளம்பிப் போனார்கள். அதன் பிறகு கடைசி வரை பிரபாகரனுடயே இருந்தவர்களை இறுதிக்கட்டப் போரின்போது தமிழகத்துக்குச் செல்லும்படி எவ்வளவோ கூறி இருந்திருக்கிறார் பிரபாகரன். 'வாழ்வோ, சாவோ... இனி உன்னோடுதான்' என்ற உறுதியோடு இருந்தவர்கள், சிங்கள ராணுவத்தின் கைகளில் சிக்கியது காலத்தின் கோலம்தான்.

''போர் பாதிப்பின் அடையாளமாக எஞ்சிஇருந்த மிச்சசொச்சம் தமிழ்ச் சொந்தங்கள் சொந்த தேசத்துக்கு உள்ளேயே நாடு கடத்தப்பட்ட அகதிகளாக ராணுவத்திடம் சரண் அடைந்திருந்தனர். அந்த மக்களோடு மக்களாக மாணிக் ஃபார்ம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்தனர் பிரபாகரனின் பெற்றோர். அவர்களைத் தேடி வந்த ராணுவத்தினர் ஏனைய மக்களைச் சித்ரவதைக்கு உள்ளாக்கியபோது, தாங்களாகவே முன்வந்து 2009, மே 20-ம் தேதி தங்களை ஒப்புக் கொடுத்தனர் பிரபாரனின் பெற்றோர். வவுனியா இடைத்தங்கல் முகாமுக்கு இருவரையும் அழைத்துச் சென்ற ராணுவம், அங்கு தனிமையில் வைத்திருந்தது. 76 வயதான வேலுப்பிள்ளையும், 71 வயதான பார்வதியம்மாளும் உடல்நிலை மோசமாகி மிகவும் சிரமப்பட்டபோதுகூட, அவர்களுக்கான மருத்துவ உரிமையைப் பறித்தது ராணுவம்'' என்று இப்போது சொல்லும் சில ஈழத் தமிழ் பிரமுகர்கள்,

''60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு உதவியாக உறவினர் ஒருவரை வைத்துக்கொள்ளலாம் என்ற பொது விதி யைக்கூட பிரபாகரனின் பெற்றோருக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். ஒரு மாத காலம் வவுனியா முகாமில் இருந்தவர்களை, பின்பு சிங்கள ராணுவம் எங்கோ கொண்டு சென்றது. இதுவரை விவரம் தெரியாமல் இருந்தது. இப்போது, அந்த அப்பாவி முதியவர்கள் இருவரும் 'ஃபோர்த் ஃப்ளோர்' எனப்படும் இலங்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருப்பதாக வரும் செய்திகள் கேட்டு நடுங்கிப் போயிருக்கிறோம்'' என்கிறார்கள் உள் ளார்ந்த பதைபதைப்புடன்!

'ஃபோர்த் ஃப்ளோர்' என்ற வார்த்தையைக் கேட்டு ஏன் பதைபதைக்க வேண்டும்?

அது அப்படித்தான்! ஜெ.ஆர்.ஜெயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் கொழும்பு கொல்பிட்டிப் பகுதியில் உள்ள கட்டடத்தின் நான்காவது மாடிக்கு மெள்ள மெள்ள அப்படியரு 'புகழ்' சேரத் துவங்கியதாம்! இலங்கை மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அங்கே ஹிட்லரின் சித்ரவதைக் கூடத்தைவிட பயங்கரமான நிகழ்வுகளை அரங்கேற்றிக் காட்டுவது வழக்கமாம். அரசுக்கு எதிரான முக்கிய தமிழ்முகங்கள் சிக்கிவிட்டால்... அவர்களை சிறுகச் சிறுக நொறுங்கவைத்து ரகசியங்களைப் பிடுங்க முடிவெடுத்துவிட்டால்... இந்த 'ஃபோர்த் ஃப்ளோரு'க்குக் கொண்டுபோய்விடுவார்களாம்.

''இங்கே போய் உயிரோடு திரும்பியவர்கள் மிக அபூர்வம்தான்! அப்படி உயிரோடு திரும்பி வர்றவங்களும் வாழ்நாள் முழுக்க நிம்மதியாத் தூங்க முடியாது. கனவிலும் மிரட்டும் கொடுமைகள் அப்படி! சுவர் எங்கும் தெறித்து விழுந்த ரத்தக்கறைகளும், ஓயாத மரணவலி ஒலங்களும் அந்த நான்காம் மாடியில் ஒலித்துக்கொண்டே இருக்குமாம். அந்த இடத்தை 'சாத்தானின் மாளிகை' என்றும் 'பிசாசுக் கூடாரம்' என்றும் விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்வது வழக்கம்'' என்று விளக்கம் கிடைக்கிறது.

விசாரணைக்காக வரும் நபர்களை வகைப்படுத்தியே சித்ரவதை தொடங்குவார்களாம். ஆடைகளைக் கழற்றி, பனிக்கட்டிகள் நிரம்பி இருக்கும் ஓர் அறையில் நடுங்கும் குளிரில் உறையவைப்பது... கேட்கிற கேள்விக்கு 'திருப்தி'கரமான பதில் வராவிட்டால், குளிருக்கு நேரெதிரான பாஸ்பரஸ் ட்ரீட்மென்ட் நடக்குமாம். பாஸ்பரஸை உடலில் தடவி, கொதிக்கிற மின் தகட்டைக் கையிலெடுத்து...

மேற்கொண்டு கேட்டால், இளகிய மனங்கள் துடிதுடித்துப் போகும்.

தலைகீழாகத் தொங்கவிடுவது... பிறகு, பி.வி.சி. பைப்புகளில் மணலை நிரப்பி அடித்து நொறுக்குவது... தலைகீழாகத் தொங்குபவரின் தலையில் முழுக்க பெட்ரோல் நிரம்பிய ஒரு பாலிதீன் பையை மாட்டுவது... மூச்சுவிட முடியாமல் அவர்கள் பெட்ரோலை மெள்ள மெள்ளக் குடிப்பதையும்... அதன் நெடி மிகுந்த காற்றைச் சுவாசிப்பதையும் ரசிப்பது!

விதவிதமாக நீள்கின்றன இந்த சித்ரவதைப் படலங்கள். வாய் வழியே பெட்ரோல் சென்று அரை மயக்க நிலையில் ஆழ்ந்த பிறகும், கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப்போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும்.

உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும்போது, நான்கைந்து பேர் மட்டுமே கால்நீட்டி அமரக்கூடிய ஓர் அறைக்குள் 20-க்கும் மேற்பட்ட நபர்களை நின்ற நிலையில் அடைத்துவிடுவார்களாம். துளிகூட வெளிச்சம் புகாத அந்த இருட்டறைக்குள் முனகலும், மூச்சுவிடும் சத்தமும் மட்டும்தான் துணையிருக்கும். மற்றபடி எல்லாமே அந்தகாரம்தான்! மனநிலையை உருக்கி, உண்மைகளை வாங்குவதற்காக இப்படி உணவு, தண்ணீர் தராமல் பலநாட்கள் இருட்டுக்குள் வைத்திருப்பது உண்டு என்றும் இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது சேதி.

''பெண்களின் நிலைமையோ எழுத்தில் வடிக்க முடியாது'' என பயம் பரவ 'ஃபோர்த் ஃப்ளோர்'பற்றி விவரிக்கிறார்கள் இலங்கைத் தமிழ் நிருபர்கள் சிலர்.

''இத்தகைய ஓரிடத்தில் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை என்ற பெயரில் பிரபாகரனின் தாய் - தந்தை வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம். வேலுப்பிள்ளைக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உள்ளனவாம். தாய் பார்வதியம்மாளுக்கும் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பாதிப்பு உண்டாம். அவர்களுக்கு அங்கே என்னவிதமான மருத்துவக் கண் காணிப்பு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சிங்கள அதிகாரிகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் புரியவில்லை!

இருவரையும் தனித்தனியே பிரித்து தனிமைச் சிறையில் அடைத்துவைத்திருப்பதாக துளியளவு இரக்கமுள்ள சில அதிகாரிகள் மூலம் தகவல் வருகிறது. முதுமையில் தனிமையின் பயம் எத்தகைய மனக் குழப்பங்களை உண்டாக்கும் என்று சொல்லத் தேவையில்லை. உணவுக் கட்டுப்பாட்டுக்கும் வழியில்லை அந்த நோயாளித் தம்பதிக்கு!

இந்திய எம்.பி-க்கள் குழு இலங்கை சென்றபோது 'பிரபாகரனின் பெற்றோரைப் பார்க்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார் திருமாவளவன். இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரான பசில், பிரபாகரனின் பெற்றோர் நலமுடன் இருப்பதாக மட்டுமே தெரிவித்திருக்கிறார். ''அவர்களை வெளியில் விடுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவர்கள் இந்தியாவில் தங்குவதாக இருந்தால் மட்டும்தான் வெளியில் விடுவோம். மற்ற வெளிநாடுகளுக்குப் போனால், அவர்கள் எங்களுக்கு எதிராகப் பேட்டி கள் கொடுப்பார்கள். இப்படித்தான் டாக்டர் தமிழ்வாணியை நாங்கள் வெளியில்விடச் சம்மதித்தோம். ஆனால், லண்டன் போனவர் எங்களையே விமர்சித்தார். அந்த மாதிரி பிரபாகரனின் பெற்றோர் செயல்படக் கூடாது அல்லவா?'' என்று பசில் ராஜபக்ஷே, திருமாவளவனிடம் சொன்னதாக எங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது'' என்கிறார் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் ஒருவர்.

இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் மற்றும் எம்.பி. சோனாதி ராஜா ஆகியோரின் உதவியுடன் பெற்றோரை மீட்டுத் தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறாராம் பிரபாகரனின் சகோதரி விநோதினி. இதற்கு இலங்கை அரசாங்கம் எந்தளவு ஒத்துழைக்கும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்த போர்க் குற்ற அறிக்கை தாக்கலாகி இருப்பதைத் தொடர்ந்து, இங்கிருந்து யாரையும் இனி வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை சம்மதிக்காது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்!

''பிரபாகரனின் பெற்றோருக்கு உண்மையில் என்ன நடந்தது, அவர்களது இப்போதைய நிலைமை என்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்'' என்று தமிழீழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தயாராகி வருகின்றன. இலங்கையின் சித்ரவதை அத்தியாயம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை


source:Kvikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அல் - காய்தா ஆயுத குவியல் : சவுதி போலீஸ் கண்டுபிடிப்பு

 
 
lankasri.com
சவுதி தலைநகர் ரியாத்தில் அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தினர் புதைத்து வைத்திருந்த பெருமளவிலான ஆயுதக் குவியலை காவல் துறையினர் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

ரியாத்திலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காலி வீடு ஒன்றில், கான்கிரீட் ஸ்லாப்பிற்கு கீழே இந்த ஆயுதக் குவியல் புதைக்கப்பட்டிருந்தது.

அதில் 281 துப்பாக்கிகள், 250 மேகசிகன்கள், தோட்டாக்கள் அடங்கிய 35 பெட்டிகள் உள்ளிட்டவை இருந்ததாக ஸவுதி உள்துறை அமைச்சக பேச்சாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் அலி கூறியதாக சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

அதே சமயம் இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும்,தீவிரவாதிகள் அல்லது கிரிமினல்கள் யாருக்காவது இதில் தொடர்பு இருக்கலாம் என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்காதவரை யாரையும் கைது செய்ய இயலாது என்றும் அவர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அல் - காய்தா தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே மேற்கூறிய ஆயுதக்குவியல் கைப்பற்றப்பட்டதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது

source:newsonews

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது


  


புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் உருவாகும் புதிய கட்டமைப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசு வரவேற்கிறது..


இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஆலோசனைக் குழு தனது முழுமையான அறிக்கையை 2009 டிசம்பரில் வெளியிடுவதற்குரிய இலக்குடன் பணிகளை உரிய வேகத்தில் தொடர்ச்சியாக
மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பாக நாங்கள் பல்வேறுபட்ட பிரேரணைகளையும், குறிப்பான கேள்விகளையும் புலத்துத்தமிழ் சமூகத்திடமிருந்து தொடர்ந்தும் பெற்றுவருகின்றோம். மேலும், கடந்த
மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களும் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ளன. 

எதிர்வரும் வாரங்களில் தமிழ்மக்கள் பெருந்தொகையாக வாழும் மற்றைய நாடுகளுக்கான இணைப்பாளர்களும், செயற்பாட்டுக்குழுக்களும் அறிவிக்கப்படவுள்ளன.ஏப்பிரல் 2010ல் தேர்தல்களை நடத்துவதறகுரிய வகையில் பணிகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. எதிர்வரும் இரண்டு மாத காலங்களுக்கு புலத்துத்தமிழ் சமூகத்துடன் எமது இதுவரையிலான முன்மொழிவு மற்றும் குறிப்பிடப்பட்ட சில கேள்விகள் தொடர்பாகப் பரவலான ஆலோசனைகள் மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்துள்ளோம்.இந்தச்சந்தர்ப்பத்தில் அண்மைக்காலமாக எழுப்பபட்டுவரும் சில கேள்விகள் தொடர்பான எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். 

2009 யூனில் வெளியிடப்பட்ட எமது முதலாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று நாடுகடந்த தமிழீழ அரசுவினை நிறுவும் செயற்பாடானது அனைத்துத்தமிழர் அலகுகளையும் ஒன்றுபடுத்துவதற்கான அடிப்படையில் சனநாயக வழியிலமைந்த ஒரு முன்னெடுப்பாகும். புலத்துத்தமிழ் சமூகம் சனநாயக உரிமைகளைப் பிரயோகிப்பதற்கு நேரிடையான தேர்தல் ஒரு சிறப்பான வாய்ப்பு என்பதே எங்களது தெளிவுபடுத்தப்பட்ட நிலைப்பாடாகும். இதுவொன்றே நாடுகடந்த தமிழீழ அரசுக்கான சட்டபூர்வத்தன்மையைத் தரும். 

இதனால் நேரிடையாக தேர்வுசெய்யப்பட்டவர்களைத் தவிர்ந்த பிறர் எவரும் நாடுகடந்த அரசுவின் அங்கமாக முடியாது. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுவானது தனது முதல் விடயமாக அரசியலமைப்பு நிர்ணயசபையாகச் செயற்படும். மேலும், நாடுகடந்த தமிழீழ அரசினது ஆட்சிசார் செயற்பாடுகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் செயற்படும் அல்லது உருவாக்கப்படும் கட்டமைப்புக்களுடன் எத்தகைய உறவினைப் பேணுவது என்பதை இவ்வாறு நேரிடையாக தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களே முடிவு செய்வார்கள். 

சில நாடுகளில் தேர்தல்கள் மூலம் புதிய தேசியளவிலான கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தகைய சனநாயக முயற்சிகளை வரவேற்கின்றோம். ஆனாலும், இந்த வேளையில் அவ்வகை முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. ஏனெனில், அவ்வாறுசெய்வதென்பது அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் சனநாயகமற்ற ஊகநடவடிக்கையாக அமைந்துவிடும்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி:info@govtamileelam.org



விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்.




 source:athirvu

 





StumbleUpon.com Read more...

வலுக்கிறது வெ(ற்)றி கூட்டணி மோதல்.தளபதிக்கு ஆசி அதிபருக்கு அதிர்ச்சி

''எதிரி ஆகிறார் தளபதி' என்ற தலைப்பில், மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் இலங்கைக் களத்தில் அரங்கேறி வரும் உள்குத்து பகை பற்றி 28.10.2008 தேதியிட்ட ஜூ.வி-யில் விரிவான கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அதில் நாம் குறிப்பிட்டிருந்தபடியே அடுத்தடுத்து ஃபொன்சேகா சில மூவ்களை நகர்த்த... சூடாகிக் கிடக்கிறது ராஜபக்ஷே தரப்பு! விடுதலைப் புலிகளுடனான போரில் சகல போர் மரபுகளையும் மீறி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றழித்த இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நடத்தி வரும் முயற்சியும் இதன் மூலம் ஏக விறுவிறுப்பு அடைந்திருக்கிறது.

பொது வேட்பாளர் ஃபொன்சேகா!

ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷேயை எதிர்த்து இலங்கையின் பிரதானஎதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து பொது  வேட்பாளராக ஃபொன்சேகாவை களமிறக்கும் முடிவில் இருக்கின்றன. இந்நிலையில், இலங்கையில் இருப்பது உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதை உணர்ந்த ஃபொன்சேகா, அதிபர் தேர்தல் வரை அமெரிக்காவில் இருக்க முடிவு செய்து, மனைவி அனோமாவுடன் அங்கே போய்விட்டார். அங்கிருந்து அவர் கிளப்பிவிடும் ஏவுகணைகள்தான் ராஜபக்ஷே சகோதரர்களை அதிரச் செய்திருக்கிறது!

ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான சில சிங்கள எம்.பி-க்களிடம் இது குறித்துப் பேசினோம். ''அதிபரின் தம்பி கோத்தபய, பகிரங்கமாக ஃபொன்சேகாவுக்கு எச்சரிக்கை விடுக்கிற அளவுக்கு இரு தரப்புக்கும் இடையே நடக்கும் மோதல் வெளிப்படையாகிவிட்டது. இதனால்தான், ஃபொன்சேகா அமெரிக்கா கிளம்பிப் போனார். அவர் முதலில் போனது சிங்கப்பூருக்குதான். அங்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் சிங்கள எம்.பி-யான ஜெயலத் ஜெயவர்த்தனே ஆகியோரை 'கிரவுன் பிளாஸா ஹோட்ட'லில் சந்தித்து பேசிய ஃபொன்சேகா, அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்தாலோசித்தார். மிக ரகசியமாக நடந்த இந்த சந்திப்பு உளவு அமைப்புகளால் மோப்பம் பிடிக்கப்பட்டு, ராஜபக்ஷேவின் கவனத்துக்குப் போயிருக் கிறது.

இதற்கிடையில், அமெரிக்கா சென்றுவிட்ட ஃபொன்சேகா, வாஷிங்டனில் உள்ள புத்த விகாரையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அங்கு உரையாற்றிய அவர், 'சீருடை அணிந்த ஜெனரல்கள் தொடர்ந்து ராணுவ சேவையிலேயே இருந்துவிட முடியாது. நான் ஏற்கெனவே ஓய்வு பெறும் வயதைத் தாண்டி நான்கு வருடங்கள் பணியாற்றி விட்டேன். இருந்தும் நாட்டுக்காகத் தொடர்ந்து சேவை செய்யும் எண்ணம் எனக்கிருக்கிறது. எனது சீருடையைக் கழற்றிவிட்ட பிறகும்கூட சமூக சேவைகளின் மூலமாக நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணத்தில்தான் இருக்கிறேன்.

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதால் மட்டுமே... நாட்டின் பாதுகாப்பு 100 சதவிகிதம் உறுதியாகி விடவில்லை. யுத்தத்தின்போது இடம்பெயர்ந்தமக்களுக் கிடையே ஊடுருவியுள்ள புலிகளை அடையாளம் காண வேண்டும். ஏனைய மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களுக்கே அனுப்பவேண்டும். இந்த மக்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், இன்னும் பல பிரபாகரன்கள் இலங்கையில் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, சாதித்த வெற்றி பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் எந்த ஒரு பயனும் ஏற்படாது' என ராஜபக்ஷேவின் நடவடிக்கை களையும் துணிச்சலாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் ஃபொன்சேகா. அதனால் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக அவர் போட்டியிடப் போவது உறுதியாகிவிட்டதாகவே தோன்றுகிறது!'' என்கிறார்கள் அந்த சிங்கள எம்.பி-க்கள்.

தெம்பு கொடுக்கும் தேரர்கள்!

''இலங்கையின் அரசியலமைப்பைப் பொறுத்த வரைக்கும் புத்த விகாரையில் இருக்கும் புத்த பிட்சுகளான தேரர்களின் பங்கு மிகவும் முக்கியம். அவர்கள் நினைத்தால் யாரையும் அரசியல் செல்வாக்கில் கொண்டு வருவார்கள். அதோடு, எத்தகைய சக்தி படைத்தவர்களையும் அரசியலில் இருந்து ஓரங்கட்டி விடுவார்கள். தற்போது, அந்த தேரர்களின் ஆதரவு மெள்ள மெள்ள ஃபொன்சேகாவுக்கு கைகூடி வருகிறது. வாஷிங்டன் விகாரையில் பாராட்டுக் கூட்டம் முடிந்ததும், அங்குள்ள பிரதம தேரர் தர்மசிறீயை தனியே சந்தித்தார் ஃபொன்சேகா. அப்போது தனது சாதனைகளையும் வேதனைகளையும் எடுத்துரைத்த ஃபொன்சேகா, வாஷிங்டன் நிகழ்ச்சியின் போதுகூட கூட்டுப்படைகளின் தளபதி என்ற முறையில் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரியாவோ, தூதரக அதிகாரிகளோ கலந்து கொள்ளாததையும் சொல்லி வருந்தியிருக்கிறார். இதையெல்லாம் கேட்ட தேரர் தர்மசிறீ, 'நடப்பது நல்லதாகவே நடக்கும்; நீங்கள் தேர்தலுக்குத் தயாராகுங்கள்' என ஃபொன்சேகாவுக்கு ஆசி கூறி அனுப்பியிருக்கிறார்!'' என்கிறார்கள் கொழும் பில் உள்ள சில பத்திரிகையாளர்கள்.

பதிலடி பாய்ச்சல்!

ஃபொன்சேகாவின் அமெரிக்கப் பேச்சுக்கு பதிலடி யாக, அவருக்கு பதிலாக ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெஃப்டினென்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, இலங்கை ராணுவத் தலைமையகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். ''ராணுவத்தில் உள்ளோர் அரசாங்கத்துக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட முடியும். ராணுவச் சீருடை அணியும் எந்தவொரு அதிகாரிக்கோ, படைச் சிப்பாய்க்கோ அரசியலில் ஈடுபடும் உரிமை கிடையாது. அதை மீறி செயல்படுபவர்களின் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!'' என பேசியிருக்கிறார். இன்னொரு பக்கம் ஊடகத் துறை அமைச்சரான யாப்பாவோ, ''ஃபொன்சேகாவின் கருத்து தனிப்பட்ட ஒன்று; அதைப் பற்றி அரசாங்கம் கவலைப்படாது!'' என கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், நேபாள நாட்டுக்குப் பயணமாகி... வழியில் திருப்பதிக்கு வந்த அதிபர் ராஜபக்ஷே, ஃபொன்சேகாவின் அடுத்தடுத்த மூவ் குறித்துக் கேட்டறிந்தபடியே இருந்திருக்கிறார். 'ஃபொன்சேகாவின் அரசியல் ஆசைக்கு எதிராக யாரும் சீண்டும் வகையாகப் பேச வேண்டாம்' என அவர் தடை போட்டாராம். அதன் பிறகுதான், இலங்கையின் பாதுகாப்புத் துறை செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே, 'அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனாலும், ராணுவ யூனிஃபார்மை கழற்றி வைத்துவிட்டு வருவது நல்லது!' என சற்றே மென்மை காட்டிப் பேசினாராம்.

அதிரடி அமெரிக்கா!

ராஜபக்ஷேவுக்கும், ஃபொன்சேகாவுக்கும்இடையே நடக்கும் மோதல்களைக் கண்காணித்துக்கொண்டி ருக்கும் அமெரிக்கத் தரப்பு, ராஜபக்ஷே சகோதரர் களுக்கு எதிரான போர் குற்ற விசாரணைகளில் ஃபொன்சேகாவை சாட்சியமளிக்க வைக்க முயற்சித்து வருகிறது. இதனால், ராஜபக்ஷே தரப்பு ஏகத்துக்கும் வாடிக் கிடக்கிறது. இது பற்றி நம்மிடம் சில இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள் பேசினார்கள்.

''இலங்கையின் மீது போர் குற்ற விசாரணைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர். 68 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2008 மே 2-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்ற 170 போர் குற்றங்கள் இடம்பெற்றிருக்கிறதாம். இதில், ராஜபக்ஷேவின் சகோதரர் கோத்தபயவைத்தான் பிரதானமாகக் குற்றம் சாட்டுகிறார்களாம். அமெரிக்காவுக்கு ஃபொன்சேகா வந்ததுமே, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ராபர்ட் ஓ பிளேக்கை சந்திப்பதோடு, ஹவாய் தீவில் ஹிலாரியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இரண்டையுமே திடீரென கேன்சல் செய்த அமெரிக்கா, ஃபொன்சேகாவுக்கு மறைமுகமாக ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. போர்க்குற்றங்களில் ராஜபக்ஷே மற்றும் கோத்தபய ஆகியோரின் தொடர்புகளை பற்றிய சாட்சியங்களை அளித்து, அவரை அப்ரூவராக மாற அமெரிக்கா நிர்ப்பந்தித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே, ஃபொன்சேகாவின் க்ரீன் கார்டு குடியுரிமையைப் புதுப்பிக்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.

அதோடு, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக வருகிற 4-ம் தேதி தங்கள் முன் ஆஜராகும்படி ஃபொன்சேகாவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. அவர் தங்களுக்கு எதிராக சாட்சியமளித்தால், பெரிய சிக்கலாகிவிடும் என்பதால் ராஜபக்ஷே தரப்பு அவரைத் தொடர்புகொண்டு சமாதானப்படுத்த முயன்றது. இது எதையும் கண்டுகொள்ளாத ஃபொன்சேகா, வெள்ளை மாளிகையின் முன்னாள் வழக்கறிரான பிரெட் பீல்டிங்கிடம் ஆலோசனை கேட்டிருக் கிறார். அவரும் 'நடந்த போர்க் குற்றங்களைக் ஒப்புக்கொண்டு அப்ரூ வராக சாட்சியமளிப்பதுதான் நல்லது' என ஃபொன்சேகாவுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறாராம்.

இன்னொரு பக்கம், ஃபொன்சேகா தங்கள் கைமீறிப் போய்விடாத வண்ணம்... அவருக்கு 'உதவியாக' ஒரு சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் களை இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால், ராஜபக் ஷேவைக் கவிழ்க்க சரியான சந்தர்ப்பமாக ஃபொன்சேகா இதைக் கருதுவதால் ரகசியமாக போர்க் குற்றங்கள் தொடர்பாக சில ஆவணங்களை அமெரிக்காவிடம் வழங்குவார் எனவும் இலங்கையில் ஒரு பேச்சிருக்கிறது. ஒருவேளை, ஃபொன்சேகா தங்களைக் காட்டிக் கொடுத்தால் அதை வைத்தே சிங்கள மக்களிடம் அனுதாபம் தேடும் திட்டத்தையும் தீட்டி வைத்திருக்கிறதாம் ராஜபக்ஷே தரப்பு!'' என்றார்கள் அந்த தமிழ் எம்.பி-க்கள்.

பொம்மை அதிபர் ஃபொன்சேகா!

''ராஜபக்ஷே மற்றும் கோத்தபய மீது போர்க் குற்ற நடவடிக்கைகளைப் பாய்ச்சப் போகும் அமெரிக்க அரசு, ஃபொன்சேகாவை இலங்கைக்கு அதிபராக்கும் முடிவிலும் இருக்கிறது. அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கும் நிலையில் 'அதிபரே எங்க ஆள்' எனச் சொல்லும் விதமாக ஃபொன்சேகாவை பொம்மையாக்கி, இலங்கையில் பலமாக தன் காலை ஊன்ற முயற்சிக்கிறது அமெரிக்கா. உண்மையில்... கொஞ்சமும் மனசாட்சியின்றி போர்க் குற்றங்களை அரங்கேற்றியதில் ஃபொன்சேகாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்படியிருக்க அவர் திடீர் அப்ரூவர் அவதாரம் எடுக்கிற பின்னணியில் அமெரிக்காவின் உளவு அமைப்புகளின் கைங்கர்யங்கள் பலமாக இருக்கின்றன.

புலிகளுடனான போரில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது, வேடிக்கை பார்த்த அமெரிக்கா, இப்போது போர்க் குற்றங்களை விசாரிக்கத் துணிவது இலங்கையின் ஆட்சி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரத்தான். இலங்கையில் கால் வைக்கும் எண்ணத்தில் சில வருடங்களுக்கு முன்பு புலிகளுடன்கூட பேச்சு வார்த்தை நடத்தியது அமெரிக்கா. ஆனால், புலிகளோ... 'தனிஈழம்' என்கிற கொள்கையிலேயேஉறுதியாக இருந்தனர். அதனால்கடுப்பாகிப் போன அமெரிக்கா, சிங்கள அரசுக்கு ஆதரவு காட்டியது. இப்போது ராஜபக்ஷேவுக்கும் ஃபொன்சேகா வுக்கும் மோதலை உண்டாக்கி அதில் குளிர்காயத் துடிக்கிறது. புலிகளை அழிப்பதற்காக இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இப்போது தான் அமெரிக்காவின் சதி புரியத் தொடங்கி இருக்கிறது!'' என்கிறார்கள் இலங்கை விவகாரத்தைத் தொடர்ந்து கவனிக்கும் உலக உற்றுநோக் காளர்கள்.

எப்படியோ... இலங்கையின் வரலாற்றில் அடுத்த சில நாட்களும் மிக முக்கியமானவையாக இருக்கு மென்றே தோன்றுகிறது!

- மு. தாமரைக்கண்ணன்   
 source:vikatan
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அமெரிக்காவில் தேர்தல்:ஒபாமா கட்சிக்கு இழப்பு


அமெரிக்காவில் தேர்தல்: 2 மாகாணங்களை ஒபாமா கட்சி இழக்கிறது
 விர்ஜினீயா, நவ. 4-
 
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பரேக் ஒபாமா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். இந்த நிலையில் விர்ஜீனியா, நியூஜெர்சி ஆகிய 2 மாகாணங்களில் கவர்னர் தேர்தல் நடந்தது.
 
இதை தொடர்ந்து ஓட்டு போட்ட வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் விர்ஜீனியா மாகாண தேர்தலில் எதிர்கட்சியான சுதந்திரா கட்சி வேட்பாளர் பாப் மேக் டொன்னல் வெற்றி பெறுவது உறுதி என தெரிய வந்துள்ளது.
 
நியூஜெர்சியில் இரு கட்சி வேட்பாளர்களும் சம நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிபர் தேர்தலில் இப்பகுதியில் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதிபர் தேர்தல் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் கவர்னர் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது ஆளும் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

source:maalaimalar

StumbleUpon.com Read more...

சவூதி அரேபியாவில் இரு இலங்கையர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றம்


 

சவூதி அரேபியாவில் கொலை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக இரு இலங்கையர்களுக்கும் ஒரு இந்தியருக்கும் சிரச்சேதம் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையர்களில் ஒருவர் பெண் என்பதும் ஜெட்டாவின் செங்கடல் நகரில் இவர்கள் மூவரின் தலைகளும் வாளால் துண்டாக்கப்பட்டதாகவும் சவூதி உள்துறை அமைச்சர் கூறினார்.

இந்தியாவைச் சேர்ந்த பார்மில் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பந்தர் நிகார் ஆகிய இருவரும் சவூதி பெண்மணியான மரியம் ஹுசைன் வீட்டுக்குள் சென்று அவரை மூச்சுமுட்டச் செய்து கொலை செய்ததோடு அங்கிருந்த நகைகளையும் திருடியுள்ளனர், 

மேற்படி இருவரும் சவூதி பெண்மணியில் வீட்டில் வேலைக்கிருந்த இலங்கைப் பெண்மணியின் உதவியுடன் அங்கு சென்றுள்ளமையும் உறுதியானதாலேயே மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த மூவரின் மரண தண்டனைகளுடன் சேர்த்து இந்த ஆண்டு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை 59 ஆகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இது 102 ஆக இருந்தது.




source:athirvu--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP