சமீபத்திய பதிவுகள்

இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: ஜூனியர் விகடன்

>> Wednesday, November 25, 2009

 
நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு பரவிக் கிடந்தது!

'தலைவர்' தோன்ற மாட்டார்!

நான்காம் கட்ட ஈழப் போரில் புலிகள் பெரிதாக வீழ்ச்சியடைந்து, 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என்று இன்னும்கூட ஒரு தரப்பினர் சொல்லிவரும் நிலையில்தான் மாவீரர் தினம் வருகிறது. பிரபாகரன், பொட்டு அம்மான், யோகி என்று மாவீரர் தின உரையை நிகழ்த்தப் போகும் புலித் தலைவர் பற்றிய யூகப் பட்டியலையும் ஆளுக்கொன்றாக பலர் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களோ இதனை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலரிடத்தில் பேசினோம்.

"ஒவ்வொரு வருடமும் தாயகத்தில் மட்டுமே நடக்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இந்த வருடம் உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் கொண்டாடப்படுவதே புலிகளின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றிதான். இதற்கு காரணமே, மீண்டும் வலுவான ஆயுதப் போராட்டம் தலையெடுக்கும் என்று புலிகள் அறிவிக்காமல் இருப்பதுதான். தற்போதைய சூழலிலும் அப்படியொரு தோற்றத்தையே தொடர நினைக்கிறார்கள் புலிகள். அதனால் தற்போதும் உயிரோடிருக்கும் புலிகளின் முக்கியத் தளபதிகள் யாரானாலும், அவர்கள் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எதிர்ப்படும் விளைவுகள் எப்படியிருக்கும் என முன் கூட்டியே கணித்த பிரபாகரன், சமர்க்கள ஆய்வு மைய இயக்குநராக இருந்த யோகியை அப்போதே ஓர் ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். எதிர்காலத்தில் தான் வெளிப்பட முடியாத ஒரு பின்னடைவு உண்டானாலும்கூட, இயக்கத்தின் எதிர்காலக் கொள்கைகளை சூழலுக்குத் தகுந்தவாறு வெளிப்படுத்தும் அதிகாரத்தை யோகிக்கு மட்டுமே தலைவர் வழங்கியிருந்தார். யோகி தன்னை வெளிப்படுத்தினாலும், வெளிப்படுத்தாவிட்டாலும் மாவீரர் தினத்தில் வெளியாகப் போகும் கொள்கைகள் என்னவோ யோகி வகுத்தவையாகத்தான் இருக்கும்.

அதேசமயம், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது!" என்கிறார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!

மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், 'பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்' என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமாக வலம் வருகிறதாம். "இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.

"இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்ள்ஸ் அன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். 'உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!' என சார்ள்ஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்" என்று கூறும் குறுந்தகடு 'விநியோகஸ்தர்'கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -

"போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆபிரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்டு படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய… இராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.

இருந்தாலும், இராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்" என்று கூறுகிறார்கள் இவர்கள்.

இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். "பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்" என முடிகிறதாம் அந்த இரகசிய சர்க்குலேஷன் சி.டி!

இந்தியாவின் துணையோடு இலங்கையில் போர்!

'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில்.

'போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.

போர் முடியும்வரை இதற்கு தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்குத் தலையாட்டும் பொம்மையாகிவிட்டது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் டு முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷே, மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப் படுத்தத் தொடங்கியிருப்பதையும் எரிச்சலுடன் பார்க்கிறது.

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான 'றோ' மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.

வெடிக்கும் பொன்சேகா!

அதிபர் தேர்தலுக்குத் தயாராகிவரும் பொன்சேகா, சமீபத்தில், கொழும்பிலுள்ள ஒரு பத்திரிகைக்கு இப்படி பேட்டியளித்திருக்கிறார். "எனது பாதுகாப்பு படையை 25 ஆட்களாகக் குறைத்தபோது, நான் எதிர்த்தேன். பின்பு 60 பேராக அதிகரித்தபோதும் பாதுகாப்பில்லை என தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்பு படையினரை ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் இது வரை நான் பார்த்ததுகூட கிடையாது. அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என சந்தேகிக்கிறேன்!" என பொன்சேகா கொந்தளிக்க, அவசரகதியாக அதனை மறுத்திருக்கிறது சிங்கள அரசு. 'நாட்டுக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த என்னை, அரசு இப்படியெல்லாம் அவமானப்படுத்தலாமா?' என பொன்சேகா எழுப்பியிருக்கும் கேள்வி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தைக் கிளப்பியிருக்கிறதாம்.

இதற்கிடையில் பொன்சேகாவே சில ஆட்களைவிட்டுத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு அரசாங்கத்தின் மீது பழி போடலாம் என்பதால், அவரது பாதுகாப்பை திடீரென உயர்த்தியிருக்கிறார்களாம். இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, கொழும்பு ரோயல் கல்லூரி அருகில் ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்கவிருக்கிறாராம் பொன்சேகா. பொதுவேட்பாளர் பற்றி வாய்திறக்காமல் இருந்து வந்த முக்கியக் கட்சியான ஜே.வி.பி-யும் தற்போது பொன்சேகாவை பொதுவேட்பாளராக களமிறக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது!

இந்தியாவுக்கு மூன்று புறம் ஏற்கெனவே சீனாவால் பலமான ஆபத்து உள்ளது. வடபகுதியில் இருக்கும் சீனா… மேற்கில் பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும், கிழக்கில் பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஒரே பகுதியாக இருந்து வந்த தெற்கிலும் தற்போது இலங்கையின் ஆதரவினால் கச்சத்தீவில் இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது.

மொத்தத்தில் இலங்கையில் தற்போது வரப்போகும் தேர்தலில் ராஜபக்ஷே, பொன்சேகா என யார் ஜெயித்தாலும் சரி… இந்தியாவுக்கு அது ஒருவகையில் தோல்வியாகவே முடியும் நிலை! இதெல்லாம், புலி ஆதரவாளர்களால் ஏற்கெனவே தீர்க்கதரிசனத்தோடு சுட்டிக் காட்டப்பட்ட எச்சரிக்கைகள்தான். இப்போது சூடு கண்ட நிலையில், தன் பார்வையை மாற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது இந்திய அரசு" என்று கூறும் புலி தரப்பினர்,

"இதையெல்லாம் ஊன்றி கவனிக்கிறார்கள் எஞ்சியுள்ள புலித் தலைவர்கள். இலங்கையில் மீண்டும் ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முனையும். அதற்கு தோதாக புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து, ஆயுதம் மற்றும் யுத்த தந்திர உதவிகளையும் இந்திய அரசு செய்வதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட, இலங்கையின் வரலாற்றுச் சக்கரம் ஆரம்பத்திலிருந்து சுழலும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு!" என்கிறார்கள்.

'யுத்தத்தை யார் புலிகள் தரப்பில் நடத்துவார்கள்?' என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதிலுண்டு!

"சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் இராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன். அப்போது 'இராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க்குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்' என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை.

அதன்படி, பொட்டு அம்மானில் தொடங்கி கதிர்காமத்தம்பி அறிவழகன், பாலசிங்கம், இராஜரத்தினம், அண்டு வேல்மன், இளங்கப்பிள்ளை, வீரசிங்கம், ரஞ்சித் பெர்ணாண்டோ, டேவிட் பூபாலபிள்ளை, லூகாஸ் பாலசிங்கம், நடராசா மதிதரன், ஜேம்ஸ் கருணாகரன், சதியன் குமரன், பாலச்சந்திரன், ஜெகன்மோகன் உள்ளிட்ட புலனாய்வுப்பிரிவின் முக்கியத் தளபதிகள் 57 பேர் உலக நாடுகள் முழுவதிலும் சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சமயம் பார்த்து வெளியில் வருவார்கள்" என்பதே இவர்கள் தரும் நம்பிக்கையான விளக்கம்!

ஜூனியர் விகடன்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை

 

annaஅன்பான தமிழீழ மக்களே! தேசப்பற்றாளர்களே! மண்காத்த வீரர்களே! வணக்கம்தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் நீண்ட நெடிய எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருக்கின்றோம்.

இதுவரை காலமும் இத்தகைய இழப்புகளும் அளப்பரிய சாதனைகளையும் நிலைநிறுத்திய மாவீரர்களின் தியாகங்களும் எம்மை எமது இலட்சிய உறுதியில் திடம் மிக்கவர்களாக உருவாக்கியது. அன்பான உறவுகளே சமகால சூழ்நிலையில் நாம் இராணுவரீதியாக ஒரு பின்னடைவை சந்தித்துள்ளோம். ஆனாலும் இப்பின்னடைவிற்கு பின்னால் ஏறக்குறைய இந்தியா சீனா ஈரான் பாகிஸ்தான் போன்ற நான்கு வல்லரசுகளின் இராணுவ அரசியல் ராஐதந்திர ரீதியிலான நேரடியான செயற்பாடுகள் முக்கியம் பெற்றிருந்தன. இவை தவிர பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி தமிழின அழிப்பை நியாயப்படுத்திய சிறீலங்காவை சரியாக இனங்கானத்தெரியாத அனைத்துலக சமூகத்தின் பாராமுகமும் எமது பின்னடைவிற்கான முக்கிய காரணிகளாக இடம் பெற்றுள்ளன.

இரண்டாவது தடவையாக எமது தமிழீழ விடுதலைப்போரில் இந்தியாவின் தலையீடு மிகப்பெரிய இருண்ட யுகத்திற்குள் எம்மை இட்டுச் சென்றுள்ளது. மிக இடர்பாடான இக்காலத்தில் தான் எம் தாய் தேசம் தன் கருவறையில் சுமந்து வந்த துரோகிகளையும் நாம் சரியாக இனங்கான வேண்டிய காலப்பகுதியாகும். நாம் நேசிக்கும் எமது மக்களே நாம் எமது நிலங்களை முழுமையாக இழந்திருக்கின்றோம். எமது பலம் சிதைக்கப்பட்டிருக்கின்றது ஆனாலும் எமது போரிடும் வலு அழிக்கப்படவில்லை. காலநீட்சியில் எமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இவ் வஞ்சகமான சம்பவங்களில் இருந்து ஒன்றை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

எம்மைச்சுற்றியுள்ள பிராந்திய வல்லரசுகளின் மீது ஓர் தெளிவான பார்வையுடன் பாதுகாப்புடனுமே எமது எல்லா விதமான போராட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டும். திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் துப்பாக்கி முனையில் எமது உறவுகள் சிக்கித்தவிக்கின்றனர். இந் நிலை மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் வேதனை கொள்ள வைக்கும் விடயம்தான். ஆனால் விடுதலைக்காக அல்லும் பகலும் தம்மை உறுத்தியும், வருத்தியும் போராடிய போராளிகளே இன்று எம்கனவுகள் நனவாகப்போகவில்லை என்று உள் மனதுக்குள் வாடிவதங்கி, நம்பிக்கையற்று, மனஉழைச்சலாகி, பாதைமாறி பயணிக்க வேண்டாம்.

எமது பெயரையும், நாம் கூடிவாழ்ந்தும், ஒன்றாக கதைபலபேசி படுத்துறங்கிய நண்பர்கள் சாவடைந்து அவர்கள் வரும்போது நாளும் பொழுதும் நாம் அடைந்த துன்பமும் வேதனைகளும், நினைக்கும் போது இன்று எமக்கு தாங்கமுடியாததொன்றாகவல்லவா இருக்கின்றது. அவற்றை நாம் கண்மூடி கொஞ்சம் நேரம் சிந்திப்போம். இன்று எங்களையும் எங்கள் புனிதப்பயணத்தையும் தமது சுயநலத்திற்காக பயன்படுத்தி புலம் பெயர் மண்ணில் அமைப்பைக்களங்கப்படுத்த சிலர் முனைகின்றனர். எல்லோரையும் மன்னிப்போம், அவர்களும் அம்மண்ணின் மைந்தர்கள் என்பதை எமது பண்பால் உணரவைப்போம். இறுதிச்சமர் வரை இலட்சியக் கனவு சுமந்த ஏக்கத்தை எம் கைகளில் தந்துவிட்டு சென்ற மாவீரர்களினதும் ஐம்பதினாயிரத்திற்கு அதிகமான மக்களும் எந்த இலட்சியத்திற்காக தம் உயிர்களை அர்ப்பணித்தார்களோ அந்த உயரிய இலட்சியத்திற்காக நாம் தொடர்ந்து போராடுவோம்.

எமது போராட்டத்தின் செல்லும் பாதைமட்டுமே மாறியுள்ளது எமது இலட்சியம் ஒன்றுதான். ஒருங்கிணைந்த உலக வல்லரசுப்படைகளோடு மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களோடு இறுதி வரை போராடி வீரகாவியம் எழுதிச்சென்ற மாவீரர் தடம் வழி தொடர்வது தான் மானமுள்ள ஒவ்வொரு தமிழ் மகனின் மகாத்தான சிந்தனையாகும் நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை எமது இலட்சியப்பாதையில் குறுக்கிட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் மன்னிக்கப்போவதில்லை எம்தேசம் மலரும் நாள் வரை விடுதலைப்போர் தொடரும். தொடரப்போகும் எமது அரசியல் போருக்கு வலுவான மக்கள் குரலும், தகுதிவாய்ந்தவொரு அரசியல் அமைப்பும் தேவைப்படுகின்றது. அதை ஐனநாயக வழியில் உலகம் எதிர்பார்க்கின்றது எமது டிசெம்பர் 12,13 களில் பிரான்ஸ்ல் அமையப்போகும் ஐனநாயக வழித்தேர்தல் ஒரு படிக்கல்லாகவே அமையப்போகின்றது. இதில் அனைவரும் பங்களித்து உங்கள் வாக்குகளை அளித்து எங்கள் அனைவரின் கனவை நனவாக்க பலம் கொடுப்போம்வலிமையே தமிழனின் வாழ்வு

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

போராளி


source:tamilspy
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலிகளின்குரல் வானொலி சிற்றலை, செய்கோள் ஊடாக ஒலிபரப்பாகிறது

 

மதிப்புக்குரிய தமிழீழ மக்களே,தமிழக உறவுகளே, புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே, உலகவாழ் எம்முறவுகளே

தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில்

எமது இணைய தளத்திலும் செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம்.
மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5மணி தொடக்கம் 22மணி வரை ஒலிக்கவுள்ளது

இணைய முகவரி:
www.pulikalinkural.com

செய்கோள்
அலைவரிசை விபரம்:
Name: NTR- Tamil
Satellite: Eurobird 9
Frequency: 11919
Polarization: Vertical
Symbol Rate : 27500
Fec : 3/4

அதே நேரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய நாட்களில் சிற்றலையூடாக தமிழீழம்,சிறிலங்கா,இந்தியா மற்றும் அனைத்து ஆசியா நாடுகளுக்கும் ஒலிக்கவுள்ளது அதன் அலைவரிசை விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

புதன்,வியாழன் ஆகிய நாட்களில் தாயக நேரம் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்,18.30மணி தொடக்கம் 19.30மணிவரை 11510 என்ற அலைவரிசையில் எமது சிறப்பு ஒலிபரப்புக்களை கேட்கலாம்.

வருகின்ற மாவீரர் நாள் சிறப்பு ஒலிப்ரப்பினை பிற்பகல் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற அலைவரிசையிலும்
18.30மணி தொடக்கம் 20.30மணி வரை 11510 என்ற அலைவரிசையிலும்
20.30மணி தொடக்கம் 23.30மணி வரை 6225 என்ற அலைவரிசையில் மாவீரர் நாள் ஒலிபரப்புக்கள் ஒலித்து நிறைவு பெறும்.

தமிழீழத்தின் தேசிய நாளான மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை மேற் கூறப்பட்ட அலைவரிசைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்

இவ்வண்ணம்
புலிகளின்குரல் நிறுவனம்
info@pulikalinkural.com


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்

தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்

 தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம்.

annai9காலம் காலமாக அரசியல் அனாதைகளாக இருந்த எம் இனத்தை தலைநிமிர்ந்து நடக்க வைத்த கரிகாலன் ஈழத்திலே வந்துதித்த நாளாகவும் (கார்த்திகை-26), தமிழர் நிமிர்விற்கு முதல் வித்தாகி வழிகாட்டிய மாவீரன் லெப்டின்ட் சங்கர் வீரச்சாவடைந்த நாளும் (கார்த்திகை-27)  சேர்ந்ததனால் கார்த்திகை மாதமே பெருமை அடையும்படி அமைந்துவிட்டது.

அவ்வாறு சிறப்புப் பெற்ற கார்த்திகை 27 அன்று எம் பெரும் தலைவன் ஆற்றும் உரை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்

கடந்த கால கார்த்திகை மாத அந்த நாட்களை அசை போட்டுப் பார்த்தால் ஒவ்வொரு தமிழனும் தலைவன் உரை கேட்டு உற்சாகத்துடன் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தி நெக்குருகி நின்று தியாகச் சுடர் ஏற்றுவதோடு நின்று விடாது புதிய புலிகளாக புறப்படும் காட்சிகள் மனத்திரையில் தோன்றி சிலிர்க்க வைக்கின்றது.

ஆனால் இந்த கார்த்திகை 27 என்றும் இல்லாதவாறு மாறுபட்ட எதிர்பார்ப்புடனே இம்முறை அமைந்துள்ளது. மே மாத முள்ளிவாய்க்கால் சமர்க்களத்தின் விவரிப்புக்கள் பலவாறாக அமைந்ததனால் ஏற்பட்ட குழப்பகரமான நிலைக்கு இன்றுவரை எந்தவித திருப்திகரமான பதில்களும் அமைந்து விடவில்லை.

அதனால் தலைவர் உரையில் என்னவிடயம் இடம்பெறும் என்பதைவிடுத்து தலைவர் உரையாற்றுவாரா… இல்லையா… என்ற எதிர்பார்ப்புடன் கூடிய தவிப்பே உலக தமிழர்களது நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றது.

இப்போதைய நிலையில் கடவுள் என்றொரு சக்தி இருந்தால் தமிழர்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே தலைவரது இருப்பு தொடர்பான கேள்வியே எழும்.

தலைவர் இருந்தால் போதும் மற்றவைகளை நாம் பார்த்துக்கொள்வோம் என்ற மனநிலைக்கு கடந்த பல மாதங்களில் ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களும், அவை ஏற்படுத்திய மனச்சோர்வுமே காரணமாகும். அந்நிலை முற்றிலும் உண்மையானதும் அர்த்தமுள்ளதுமான எதிர்பார்ப்பாகும்.

அனைத்துலக ரீதியிலான விடுதலைப்பணி தற்போதும் முன்னெடுக்கப்பட்டுவரினும் முன்னரைப்போன்ற வீச்சு அற்றதாகவே காணப்படுகின்றது.

தலைமை தொடர்பான மாறுபட்ட செய்திகளால் ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாக செயலற்றவர்களாக மாறியவர்கள் போக இதனையே காரணமாகக் கொண்டு பிளவுகளை ஏற்படுத்தி தனி ஆவர்த்தனம் செய்ய முற்பட்டவர்கள் என இருவகையிலானவர்களது எதிர்பார்ப்பிற்குரிய நாளாக கார்திகை 27அமைந்து விட்டது.

மனச்சோர்வடைந்துவிட்டவர்கள் தலைவர் மீள் வருகையினை அடுத்து புதிய உற்சாகத்தோடு களம் காண காத்திருக்கையில் இரண்டாமவர்கள் அவமானப்பட்டு ஒதுங்கி நிற்கவோ இல்லை குழப்பகால செயற்பாடுகளை மறந்து மீண்டும் ஒன்றினைந்து கொள்ளவோ வாய்ப்பபை ஏற்படுத்தும்.

மாறாக எதிர்வரும் 27ம் திகதி தலைவர் நேரில் தோன்றாவிடில் மனச்சோர்வடைந்தவர்கள் முற்றிலுமாக எமது விடுதலைப்போராட்ட பயணத்தில் இருந்து தம்மை விடுவித்து கொண்டு ஓய்வெடுக்க முற்படலாம். ஆனால் இரண்டாமவர்கள் இதுவே தமக்குரிய களமாக கருதி உணர்வாளர்களை மேலும் மேலும் நம்பிக்கை இழக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடலாம்.

தமிழின விடுதலை என்ற பரந்துபட்ட இலட்சியத்தினை தமது மூச்சிலும் மேலாக கருதி களமாடிவந்த தலைவரது வருகையினை எமது குறுகிய நலன்களுக்குள் இவ்வாறு வரையறை செய்து கொள்ளவேண்டிய துர்பார்க்கிய நிலையில் நாமுள்ளோம் என்பதே வேதனை மிக்கதாக உள்ளது.

இதனையே எதிரியானவன் விரும்பினான். எமக்குள் பிளவுபட்டு தமிழீழ விடுதலை, தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகிய அடிப்படை கொள்ளையில் இருந்துவிடுபட்டு உணவு, மருந்துப் பொருட்களுக்கும் கையேந்துபவர்களாகவும், வவுனியா தடுப்புமுகாம்களில் இருந்து வெளியே விட்டாலே போதும் என்ற நிலைக்கும் எமது போராட்ட இலக்கினை சிறுமைப்படுத்தி கொள்ளும் அளவிற்கு சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.

சாதகமற்ற நிலையில் அமைந்துள்ள புறச்சூழல்

நமது உற்சாகத்திற்காகவும் குழப்பவாதிகளாக உருவாகியுள்ளவர்களது முகத்தில் கரியை பூசுவதற்காகவும் கண்டிப்பாக தேசியத் தலைவர் வெளிப்பட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தை விடுத்து அதற்கேற்ப புறச் சூழல் உள்ளதா என்பதை இவ்விடத்தில் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.

தமிழீழ தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகிய இலட்சியங்கள் ஏதுமறியாத காலகட்டத்தில் எமது மக்களை கொன்று குவிக்கும் சிங்களனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தோடு களமாட புறப்பட்ட பதின் வயது பிரபாகரனை அப்போது யாரும் கண்டு கொண்டதில்லை.

இராணுவ அச்சுறுத்தல் நெருக்கடிகள் பலகடந்து முழுமையான கட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர்களது பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற மாபெரும் இயக்கத்தை கட்டி எழுப்புவதற்கு தலைவர் உள்ளிட்டவர்கள் கொடுத்தவிலை பட்ட துன்பங்கள் யாவரும் அறிந்ததே.

இடைப்பட்ட காலத்தில் காட்டிக்கொடுப்புக்கள் நம்பிக்கைத்துரோகங்கள் போன்ற இடர்பாடுகளையும் தாண்டியே எமது விடுதலை இயக்கத்தை வழிநடாத்தி வந்தார் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். எல்லா இடர்பாடுகளையும் மிஞ்சும் வகையில் தற்ப்போது ஏற்பட்டுவிட்ட நெருக்கடி நிலை முற்றிலும் மாறுபட்டதாகும்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் இதுவரை காலம் கண்டிராத ஒரு நெருக்கடி மிகுந்த காலகட்டமாக இது அமைந்துள்ளது. தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளை உணர்ந்து கொண்டுதானே சிங்களத்துடன் கைகோர்த்து முள்ளிவாய்க்காலில் மிக்ப்பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தியதுடன் எமது விடுதலைப்போராட்டமும் அதன் கட்டமைப்புக்களும் முற்றிலுமாக சிதறடிக்கப்படுவதற்கு துணைநின்றன இந்த சர்வதேச நாடுகள்.

விடுதலைப் போராட்டங்கள் தொடர்பான வல்லரசுகளின் நிலைப்பாடு

1990 களிற்கு பின்னர் ஏற்பட்ட உலகமய அரசியல், விடுதலைப் போராட்டங்களை தமது சந்தை ஆதிக்கத்திற்கு ஏற்படும் இடையூறாக பார்க்கத் தொடங்கியதன் விளைவே இந் நிலைக்கு அடிப்படையாகும்.

எமது விடுதலைப் போராட்டம் மட்டுமன்றி கடந்த 20 வருடங்களில் 30ற்கு மேற்பட்ட ஆயுதப் போராட்ங்கள் தேசிய தன்னுரிமைக்காக நடைபெற்றுள்ளன. மிகப்பெரும் இரத்தக்களரிக்கு பிறகே சிலவற்றில் உலக நாடுகள் தலையிட்டன.

தத்தமது ஆதிக்க போக்கினை நிலைநிறுத்துவதற்கு ஏற்றவாறாக ருவாண்டா, சோமாலியா, கொசோவா, சூடான் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த தேசியப் போராட்டங்களில் இவ் உலக நாடுகள் தலையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமது தன்னாட்சி உரிமையினை நிலை நிறுத்துவதற்காக போராடும் இனங்கள் ஒடுக்கும் அரசுகளின் இறையாண்மைக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவே உலக நாடுகளால் நோக்கப்படுகின்றது.

வல்லரசுகளின் ஆதிக்க நலன்களும் அவற்றிகிடையிலான மோதல்களும்தான் இந்நிலைக்கு அடிப்படை காரணம். இருப்பினும் தன்னாட்சிக்கான போராட்டங்களில் எந்தவகையில் எத்தகைய சூழலில் உலக நாடுகள் தலையிடலாம் என்பதற்கான தெளிவான சர்வதேச சட்டங்கள் இல்லாததும் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது.

இதனால் தன்னாட்சி கோரிக்கையும், நாட்டின் இறையாண்மையும் எதிரெதிராக நிறுத்தப்படுவதற்கு எளிதாகிறது.

அவ்வாறே தன்னாட்சிகோரி புறப்படுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அடக்கி ஒடுக்கியும் அரச பயங்கரவாதத்தை தட்டிக்ககொடுத்தும் தமது பிராந்திய ஆதிக்கத்தை உறுதி செய்து வருகின்றன உலக வல்லரசு நாடுகள்.

உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய கட்டுக்கோப்பை பாதுகாக்கும் அய்க்கிய நாடுகள் சபையின் கடமைகளை தேசியத் தன்னுரிமைப் போராட்டங்களிற்கு எதிராக நிறுத்துவது வழமையாக நடந்து வருகின்ற ஒன்றே. 1980ம் ஆண்டு அய்க்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் ஆணைக்கிணங்க தேசிய தன்னுரிமை பற்றி விவாதித்து அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்டவர்களுள் ஒருவரான கெக்டர் குரோசு எசுபீல்  (Hector Gros Espiell) கூறுகையில்:

தற்போதைய சர்வதேச மெய்நிலையை கணக்கில் கொண்டால் தேசிய இனமக்களின் தன்னுரிமை என்பது வேறு எந்த சட்ட உரிமைகளையும் விட முதன்மை பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது என தெளிவுபடுத்துகிறார்.

தேசிய தன்னுரிமை அமைதிவழியில் மறுக்கப்படும் போது ஆயுத மோதல்களாக வடிவெடுக்கின்றது என்று கூறும் எசுபீல், அந்த மோதலை உள்நாட்டுப் போராக வரையறுக்கக் கூடாது, அது தேசங்களுக்கிடையில் நடக்கும் மோதல் என்பதாகவே பார்க்கப்பட வேண்டும் எனவும் தெளிவுபடுத்துகின்றார்.

தேசிய தன்னுரிமை பற்றி விவாதித்து அறிக்கை தாக்கல் செய்த மற்றொருவர் தெரிவிக்கையில் "தெளிவான வரையறுக்கப்பட்ட எல்லைப்பகுதியில் தன்னாட்சி நடாத்திய வரலாறும், தனித்த பண்பாடும், இழந்த தன்னாட்சியை மீண்டும் பெறுவதற்காண பொதுவிருப்பமும் ஆற்றலும் உள்ள (தேசிய இனம்) மக்களே தேசிய தன்னுரிமை பெறத் தகுதி பெற்றவர்கள் என வரையறுத்து கூறுகின்றார்.

இவ் இரு அறிக்கைகளும் அய்க்கிய நாடுகள் பொதுச்சபையின் பல்வேறு உறுப்பு நாடுகளிடம் விரிவான கருத்து கேட்கப்பட்டு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆவணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் தேசிய தன்னுரிமைப் போராட்டங்களை ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும் என்ற மனிதநேய ஆர்வலர்களது குரல்கள் தொடர்ந்து ஒலித்ததன் காரணமாக 2000ம் ஆண்டு ஆவணி மாதத்தில் தேசிய தன்னுரிமை குறித்த முதல் உலக மாநாடு செனீவாவில், அய்க்கிய நாடுகள் சபையினால் கூட்டப்பட்டது. பலதரப்பட்ட சட்ட அறிஞர்கள் பல கோணங்களில் ஆய்வறிக்கைகளை இம் மாநாட்டில் முன்வைத்தனர்.

சட்ட வல்லுனர் கரேன் பார்க்கர் அம்மையார் (Karen Parker) தமது ஆய்வறிக்கைகளில் தமிழீழம், திபெத், காசுமீரம், மேற்கு சகாரா போன்ற தேசிய இனப் போராட்டங்களை வரலாற்று வழிப்பட்டு விளக்கமாக முன்வைத்தார்.

குறித்த தேசிய இனங்கள் எவ்வாறு ஏகாதிபத்திய நாடுகளால் ஆளப்பட்டு பின் விட்டு செல்லும் போது பல்வேறு தேசிய இன மக்களை ஒன்று சேர்த்து ஒற்றை ஆட்சி கோட்பாட்டின் கீழ் ஓர் குறித்த இனத்தவரிக் கைளில் ஆட்சி அதிகாரங்களை ஒப்படைத்து சென்றதையும் குறிப்பிட்டு அதனால் ஏற்பட்ட அதிகார கையாடல் மூலம் ஏற்பட்ட இனப்பிளவை சரிசெய்வதே அய்க்கிய நாடுகள் சபையின் கடமை என்று கரேன் பார்க்கர் அம்மையார் வலியுறுத்தினார்.

செப்டெம்பர் 11 தாக்குதலும், தன்னுரிமை கோரும் இனங்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகளும்

இவ்வாறு உலகளாவிய ரீதியில் தன்னாட்சி உரிமைக்காக போரடிவரும் தேசிய இனங்களது நியாயபூர்வத் தன்மையினை ஏற்றுக் கொள்ளும் ஏது நிலை உருவாகி வந்தவேளையில்தான் 2001 செப்டெம்பர் 11ல் நடைபெற்ற அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புச் சம்பவம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது.

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் உலகில் நடைபெற்றுவரும் அனைத்து உரிமைப் போராட்டங்களையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் வரையறுப்பதில் உலக வல்லரசு நாடுகள் பெருமளவில் வெற்றி அடைந்தன.

பயங்கரவாத அடைமொழி வழங்கப்பட்ட பின்னர் தன்னாட்சி கேட்டு போராடி வந்த தேசிய இனங்களும் அவை சார்ந்த போராட்ட இயக்கங்களும் முற்றிலும் மாறுபட்ட நெறிமுறைகளை கையாள வேண்டிய நிலை உருவாகியது.

உலக வல்லரசுகளின் காய்நகர்தல்களை திறம்பட எதிர் கொண்டு அவர்களுக்கு வாய்ப்பான கள சூழல்களையும் இனம் கண்டு விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது வேண்டியது அவசியமாகியது. ஏன் என்றால் இன்று அப்பழுகக்ற்ற சனநாயக வழிப்பட்ட சர்வதேசியம் எதுவும் நடப்பில் இல்லை. அந்தந்த நாடுகளும் தமது தேவைகளை அல்லது ஆதிக்க நலன்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டே உலகை அனுகுகின்றன. இந்த மெய்நிலையை உணர்ந்து கொண்டு மாற்று வியூகம் வகுத்து செயற்படும் விடுதலைப் போராட்டமே வெற்றிபெற முடியும் என்ற நிலையிலேயே எமது போராட்ட வடிவமும் மாற்றமடைந்தது என்பதனை எம்மவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வல்லரசு நாடுகள் கூட்டுச்சேர்ந்து உலகப்பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதாக கூறி தன்னாட்சி கேட்டு போராடிவந்த விடுதலை அமைப்புகள் மீதும் அவை சார்ந்த இனத்தின் மீதும் எல்லையில்லா அடக்கு முறையை திணிக்க முற்பட்டு நின்றனர்.

இக்காலப் பகுதியில் யசீர் அரபாத்தின் தலைமை அகற்றப்பட்ட பின் அமைந்த பாலசுத்தீன அரசாகட்டும் தாலிபான்களது பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆப்கானித்தானில் ஏற்படுத்தப்பட்ட அரசாகட்டும் சதாம் குசைனின் மணிமகுடம் இறக்கப்பட்ட பின்னர் அமைந்த ஈராக் அரசாகட்டும் எல்லாமே அமெரிக்கா சார்ந்த வல்லாதிக்க நாடுகளது ஏவல் பணியாளர்களாகவே செயல்பட்டு வந்தனர்-வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் அரசுகள் தமிழக முதல்வர் கூறியது போன்று எசமானார்களை கோபப்படுத்தும் விதமாக செயற்படாது எள் என்றால் எண்னெயாக உருகிநிற்கும் தலைமைகளின் வழிகாட்டுதல்களில் இயங்கி வருகின்ற போது, ஆக்கிரமிப்பு சக்திகளிற்கு அசைந்து கொடுக்காது தனித்துவமாக செயற்பட்டு வந்தது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையிலான தமிழர்களது விடுதலைப் போராட்டம்.

இராணுவ மேலாண்மை நிலையிலும் மக்கள் தளத்திலும் நின்று தலைவன் எடுத்த முடிவுகள் தன்னலமற்றது

இக்காலப்ப பகுதியில், நூற்றாண்டு வலிமை மிக்க ஆணையிறவு முகாம் மூச்சு விடும் நேரத்திற்குள்ளாக பொடிப்படியாக்கப்பட்டு உலக நாடுகளிடம் இரந்து பெற்ற அதி உச்ச ஆயுதபலம் கொண்டு தீச்சுவாலையாக எரிக்க முற்பட்ட போது வீரம் செறிந்த எதிர்ச்சமர் புரிந்து ஆரம்பித்த இடத்திலேயே பலத்த இழப்புக்களுடன் புகைந்து போகச் செய்தும் சிங்களத்தின் இதயமான கட்டுநாயக்கா வான்படைத்தளத்தை தகர்த்து பல்லாயிரம் கோடி இழப்புக்களை ஏற்படுத்தியதோடில்லாது மீள் எழுச்சி கொள்ள முடியாதவாறு பொருளியல் ரீதியாகவும் பலத்த அடி கொடுத்து யுத்த களத்தில் மேலான்மை பெற்றே இருந்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

இருந்தும் புறச்சூழல் சாதகமற்று இருந்தமையினால் போராட்ட வடிவத்தினை மாற்றியமைக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு எமது தேசியத்தலமை தள்ளப்பட்டது என்பதே உண்மையாகும்.

தேசியத்தலைவர் எந்த முடிவு எடுப்பதாகிலும் எமது மக்களது நலன் கருதியே எடுப்பார். கொண்ட கொள்கையில் பற்றுறுதி கொண்டு தமிழீழ தனியரசு ஒன்றே தமிழ் மக்களிற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பதில் உறுதியாக இருப்பவர் எம் தலைவர். இதனை காடந்த காலங்களில் எத்தனையோ முறை பதவி ஆசை உள்ளிட்ட இன்னபிற விலைபேசல்களுக்கும் சமரசத்திற்கும் உட்படாது நின்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இராணுவ சமநிலையில் மேலோங்கி நின்றபோது போர் ஓய்வு முடிவை எடுத்து சமாதான பாதையில் பயணப்பட எடுத்த முடிவும் அறிவிக்கப்படாத நான்காம் கட்ட ஈழப்போரில் கிளிநொச்சி வரையான இராணுவ முன்னகர்வை வீரத்துடன் எதிர்த்து நின்று களமாடிவந்த நிலையில் எவ்வித எதிர் தாக்குதலும் இன்றி கிநொச்சி பரந்தனை விட்டகன்றதும் அதன் பின்னர் மேற்கொண்ட முடிவும் தலைவர் தன் சார்ந்தோ அல்லது தன்சார்ந்தவர்கள் நலன் கருதியோ எடுத்திருக்கவில்லை.

சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்டுவரும் அரச பயங்கரவாதத்திற்கு ஒத்திசைவான போக்கையே சர்வதேச நாடுகள் பிராந்திய நலன் அடிப்படையில் கடைபிடிக்க முற்பட்ட போது அந்த நாசகார கூட்டணியை எதிர் கொள்வதற்கு மாற்றுவழி தேடியே எந்த முடிவாக இருந்தாலும் எடுத்திருப்பார் என்பது உறுதி.

தலைவரது முடிவினை மறுதலிப்பதற்கோ விமர்சனம் செய்வதற்கோ யாருக்கும் தகுதியும் இல்லை உரிமையும் இல்லை. பெயர், புகழ், பணத்தை சம்பாதிப்பதற்காக குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து அதிமேதாவித்தனமான கருத்துக்களை தமிழக ஊடகத்தளத்தில் இருந்து வெளிப்படுதிவருபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எவ்வளவு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்ட போதிலும் அதிலிருந்து மீள்வதற்காக எந்த முடிவை எடுப்பதென்றாலும் களத்திலே நின்று அந்த மக்கள் மத்தியில் அவர்களுக்கு கவசமாக இருந்தே எம் தலைவர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக போரியல் கோட்பாடுகளை கநற்றறியாது முற்றிலும் எமது தாயக சூழலுக்கேற்றவாறான போர் பயிற்சி முறைகளையும், நெறிமுறைகளையும் தயாரித்து அதன் அடிப்படையில் பயிற்றப்பட்ட ஆயிரம் ஆயிரம் புலி வீரர்களது சாதனைகள்தான் மேற்சொன்ன இராணுவ சமநிலையில் மேலாண்மையினை பெறுவதற்கு அடிபப்டையாக இருந்தது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எந்தவித வெளிசக்திகளது ஆதரவோ ஒத்துழைப்போ இன்றி தனியே எமது மக்களின் தார்மீக ஆதரவு தளத்தில் நின்றே இவ் உயரிய நிலையை அடைந்தார்கள். இதுவே சர்வதேசத்திற்கு உறுத்தலாக அமைந்தது.

அபரிமிதமான வளர்ச்சி கண்டு பலம் பெற்ற முப்படை கட்டமைப்பினை ஏற்படுத்தியதுடன் செயற்திறன் மிக்க நடவடிக்கை மூலம் வியத்தகு மேன்மைநிலையை நோக்கி சென்று கொண்டிருந்த எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச நாடுகளை அச்சம் கொள்ள வைத்தது என்றால் மிகையாகாது.

அதனால் பிராந்திய வல்லாதிக்க நிலையும் அதோடிணைந்த வர்த்தக ஆதிக்க நிலையும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.

இதனை தவிர்ப்பதற்கு முதலில் பலதடவைகள் பேசிப்பார்த்தும் முடியவில்லை என்றான பின்னரே முற்றிலுமாக அழித்தொழித்து தமது பிராந்திய வல்லாதிக்க நிலைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை போக்கிக் கொள்ள முடிவெடுத்து நடாத்தியும் விட்டனர் இவ் உலகவல்லரசு நாடுகள்.

தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக்கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு

முள்ளிவாய்க்கால் களமுணையுடன் எமது விடுதலைப் போராட்ட கட்டமைப்பு முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதான ஒரு நிலைபாட்டின் அடிப்படையிலையே சர்வதேச நாடுகள் தமிழ் மக்களது தீர்வு தொடர்பாக சிறிலங்காவை நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை பெறவேண்டுமாயின் அவசரகால சட்டத்தை உடணடியாக நீக்க வேண்டும் எனவும் சரத்துகளில் ஒத்துக் கொண்டதற்கினங்க மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் அத்தோடு இறுதிப்போர் நிகழ்ந்த காலப்பகுதியில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுதந்திர விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது பிரான்சு நாடு.

சிறிலங்கா அரசிற்கு அரசியல், பொருளியல் பெரும் ரீதியிலான நெருக்கடிகளை சர்வதேச நாடுகள் ஏற்படுத்தி வந்தாலும் அதனால் முற்றுமுழுதாக எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்பதே உண்மைநிலையாகும்.

ஆனால் சர்வதேச மாறுதல் நிலையானது தற்போதைய நிலையில் மிகவும் அவசியமானதாகும்.ஏனெனில் சிறிலங்காவை நெருக்கடிக்குள் வைத்துக் கொண்டுதான் எமது அடுத்த கட்டத்தை நாம் முன்னெடுத்து செல்லமுடியும்.

எது எவ்வாறாயினும் எமது உரிமைப்போராட்டத்தை ஏற்றுக் கொண்டு தமிழீழ தனியரசினை அங்கீகரிக்க வேண்டும், தமிழீழ விடு;தலைப்புலிகளே தமிழ் மக்களது ஏகபிரதிநிதிகள் என்ற எமது அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் செயற்படுவதற்கு இந்த சர்வதேச நாடுகள் இதுவரை முன்வரவில்லையே..!

இறுதிப்போர் முடிவடைந்து ஆறுமாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அந்த போரின் வடுக்களை தமது உடலிலும், உள்ளத்திலும் சுமந்து நடைபிணங்களாக முட்கம்பி வதைமுகாம்களில் சிக்கித்தவித்து வரும் மக்களை பார்வையிடவோ, மாபெரும் இனப்படுகொலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலைய பகுதிகளை பார்வையிட்டு அதற்கான ஆதாரங்களை பெற்று இன அழிப்பிற்கு காரணமானவர்களை தண்டிக்கவோ இவ்வல்லரசு நாடுகள் இதுவரை ஆக்கபூர்வமான முன் முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை.

இந்நிலையில் இறுதிப்போரிற்கு பின்னரான காலப்பகுதியில் மக்களது மறுவாழ்விற்கென பல ஆயிரம் கோடிகளை வாரிக் கொடுத்தனவே இவ்வல்லரசு நாடுகள். அவ் நிதியாதாரத்தை பயன்படுத்தி உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு முட்கம்பி முகாம்களில் அடைபட்டிருக்கும் எமது மக்களை பார்வையிடவோ முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலையப் பகுதியை பார்வையிடவோ அனுமதிக்குமாறும் இல்லாவிட்டால் மறுவாழ்விற்கான நிதி உதவியை வழங்கமாட்டோம் என்ற கோரிக்கையினை வைத்திருக்கலாமே…!

அவ்வாறு வலுவான நிலையில் நின்று தட்டிக்கேட்பதை விடுத்து நிதியுதவிகளையும் செய்துவிட்டு ஒப்பிற்கு கோரிக்கைகளை வைத்துவருவதானது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போலல்லவா உள்ளது.

உலகநாடுகளது வழிகாட்டுதலில் சமாதானப் பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையினை நீக்குவதற்கு இன்றுவரை எந்த நாடும் முன்வரவில்லை. மாறாக ஒபாமா அரசாங்கமோ போர் முடிவுற்றதன் பின்னரும் கூட இன்னும் சில வருடங்களிற்கு தடையினை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகள் தற்போது சிறிலங்கா அரசிற்கு அரசியல் பொருளியல் ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தாலும் மேற் சொன்ன நிலைகளை எட்டாத வரை அம்முயற்சிகள் எமது மக்களது துயரங்களிற்கு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.

தமிழக குழுவினரது வருகையும் தொடரும் தமிழரின் அவல நிலையும்

தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்ட நாட(க)hளுமன்ற குழுவினரது வேண்டுதலுக்கிணங்க முட்கம்பி வேலி முகாம்களில்(தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தது போன்று தங்கக்கூண்டில்) இருந்து பெருமளவில் விடுவிக்க படுவதாக ஒரு மலிவான விளம்பரத்தை தமிழக ஆளும் தி.மு.க. அரசு தனது ஊடகபலத்தினை கொண்டு தேடிக்கொண்டுள்ளது. தமிழக நாட(க)hளுமன்ற குழு செல்வதற்கு முன்னரே ஆயிரக்கணக்கிலான மக்கள் வதைமுகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவ்வாறு உலகறிந்த வதைமுகாமில் இருந்து வெளியேற்றப்படும் தமிழ் மக்கள் உலகறியா வேறு முகாம்களில் சிறைவைக்கப்படுவதுதான் உண்மைநிலை ஆகும்.
இவ்வாறு முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்றிவிடுவதுடன் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதில்லை. எமது மக்கள் கேட்பது சுதந்திரமான வாழ்க்கையினை.

படுக்கையறைக்கு வெளியிலும், குளியலிடத்திற்கு சுற்றிவரவும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிலைபெற்று நிற்கும் சுதந்திரத்தை எமது மக்கள் விரும்பவில்லை.

சோறா சுதந்திரமா என்ற கேள்வி எழுந்த கடந்த காலங்களில் எல்லாம் சுதந்திரம்தான் பெரிதென்று பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தாங்கிக் கொண்டு தமிழீழ விடுதலைப்பயணத்தில் கைகோர்திருந்த மக்களை ஆட்டு மந்தைகளை விட கொடுமையான வாழ்க்கைக்கு தள்ளிசுதந்திர வேட்கையினை நீர்த்துப் போகும் வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது சிங்கள அரசு.

முகாமில் இருந்து விடுவிக்கப்படுபவர்களது நடமாடும் சுதந்திரம் எவ்வளவு தூரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது விடுவிக்கப்பட்டவர்கள் அனுபவித்துவரும் பயணக்கட்டுப்பாடுகளில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

உலக மக்களின் நல்வாழ்வினை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட உலக மகா சபையும் தமிழர்களை வஞ்சித்து விட்டது

கடந்த மே மாதம் 17ம் திகதிக்கு பின்னர் தமிழர்கள் தலைமை அற்றவர்களாக்கப் பட்டுள்ள சூழ்நிலையில் அந்த பொறுப்பை ஏற்று எமது மக்களிற்கு நீதியான சுதந்திரமான வாழ்வை அமைத்து கொடுக்கவேண்டிய உலக மகா சபையான அய்க்கிய நாடுகள் சபையோ அல்லது மேற்குலக நாடுகளோ இதுவரை செயலற்ற நிலையிலையே உள்ளன.

இறுதிப்போர் நடைபெற்ற போது மக்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுவதால் அனைத்துலக நாடுகள் தலையிட்டு போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் போர்ப்பகுதியில் இருந்து மக்களை வெளியேறி வருமாறு கூறினார்களேதவிர போரை நிறுத்துவதற்கு முயற்சிகளேதும் எடுத்திருக்கவில்லையே!

அவ்வாறு வெளியேறி வந்தவர்களது பாதுகாப்பினையோ அடிப்படை உரிமைகளையோ பெற்றுக் கொடுப்பதற்கு போர்ப்பகுதியைவிட்டு வெளியே வா வா என்றவர்கள் ஏன் முன்வரவில்லை.


StumbleUpon.com Read more...

அரசியலும் மதமும்

 

 

Swine Flu

எப்பவோ நடந்தது போல் இருக்கிறது பாபர் மசூதி இடிப்பு சம்பவம். அதை விசாரித்த லிபரான் கமிஷன் 17 ஆண்டுகள் கழித்து அறிக்கை சமர்ப்பிக்க, அது கசிந்து பரபரப்பாகி, ஒரு வழியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1029 பக்கங்கள். வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்பட 68 பேர் குற்றவாளிகள் எனக் கூறியுள்ளது.அரசியல் வேறு, மதம் வேறு. இரண்டையும் கலப்பது மிக ஆபத்தானது என தனது அறிக்கையில் கூறியுள்ளார் நீதிபதி லிபரான். அரசியலில் நேர்மை அவசியம். அதை உறுதி செய்ய மதம், ஜாதி, பிராந்திய அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதற்கு தடை விதிக்க வேண்டும். ம¦றினால் கடுமையான தண்டனை தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உலகம் முழுவதுமே ஒவ்வொரு நாட்டிலும் பல கட்சிகள் உள்ளன. இவை எல்லாமே கொள்கை அடிப்படையில் செயல்படுகின்றன. எங்குமே மதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. அதன்பின், சிறுபான்மையினராக இருந்ததால் முஸ்லிம்கள் நலனுக்காக முஸ்லிம் லீக் தோன்றியது. பெரும்பான்மையாக இருந்த இந்துக்கள் சார்பில் ஆர்எஸ்எஸ், சங் பரிவார், விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகள் தோன்றின.

ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் அரசியல் கட்சியாக 1951ல் ஜன சங்கம் தொடங்கப்பட்டது. இது மற்ற இந்து அமைப்புகளின் ஆதரவுடன் 1980ல் பாரதிய ஜனதா என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டது. பின்னர் கூட்டணி சேர்ந்து ஆட்சியையும் பிடித்தது. ஒரு அரசியல் கட்சியின் ஆட்சி நடக்கும்போது, அந்தக் கொள்கைக்கு மாறுபட்டவர்கள் இருப்பார்கள். காலப் போக்கில் அந்தக் கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சி மாறவும் வாய்ப்புண்டு. ஒரு கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் சொந்த விருப்பத்துக்காக கட்சி மாறும்போது, அவருடன் சேர்ந்து தொண்டர்கள் கூட்டமும் இடம்மாறுவது உண்டு. மேலும் கட்சிகளின் கொள்கைகளிலும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதில்லை. தொண்டர்கள் மத்தியிலும் பெரிய அளவுக்கு வெறுப்பு இருப்பதில்லை. எனவே, மதமும், அரசியலும் தனித்தனியாக இருக்கும் வரைதான் இரண்டுக்குமே நல்லது. 


source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

செல்போனில் எடுத்த குடும்ப பெண்களின் படங்கள் இண்டர்நெட்டில்

செல்போனில் எடுத்த குடும்ப பெண்களின் படத்தை இண்டர்நெட்டில் பரப்பினார்கள்: மாணவர்கள் உள்பட 6 பேர் சிக்கினர்
சென்னை, நவ. 23-
 
சென்னையில் ஆண்களும், பெண்களும் சகஜமாக பேசி பழகுவது அதிகரித்து வருகிறது. கள்ளம்கபடம் இல்லாமல் இந்த நட்பு நீடித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி. அதே வேளையில் நட்பாக பழகும் பெண்ணிடம் சில்மிஷ வேலைகள் செய்ய ஆரம்பித்தால் பெண்ணின் பாடு திண்டாட்டம்தான்.
 
அந்த வகையில் சில வக்கிர மனம் படைத்த வாலிபர்கள் தங்களுடன் நட்புடன் பழகும் குடும்ப பெண்களிடம் நைசாக பேசி செல்போன் காமிரா முலம் படம் எடுத்துக் கொள்கிறார்கள். பின்னர் அந்த படத்தை பப்ளிக் இணைய தளங்களில் சேர்த்து விடுகின்றனர். பெரும்பாலான பெண்களின் படத்துடன் அவர்களது செல்போன் நம்பர்களையும் போட்டு விடுகின்றனர்.

போதாகுறைக்கு அந்த படத்திற்கு அருகில் நான் சென்னையில் இருக்கிறேன். உல்லாசத்திற்கு தயார் என்ற அறிவிப்பு ஆங்கிலத்தில் மின்னுகிறது. 
இதை பார்த்து சபல ஆசாமிகள் பலர் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை வரை செல்ல நேரிடுகிறது. இத்தகைய விபரீதங்களை தடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர்கிரைம் போலீசார் இத்தகைய நபர்களை கண்காணித்து வந்தனர்.
 
இந்த நிலையில் திருவான்மியூரைச் சேர்ந்த பாமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் பொறியியல் கல்லூரி மாணவி. இவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
 
அதில் யாரோ மர்ம ஆசாமி நான் கல்லுரியில் இருந்து சுற்றுலா சென்ற போது எடுத்த படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டு தன்னுடைய செல்போன் நம்பரை குறிப்பிட்டு உல்லாசத்துக்கு தயார் என்ற ஆபாச வாசகத்தோடு பரப்பி விட்டுள்ளான்.

இதனால் எனக்கு நிறைய பேர் போன் செய்து தொல்லை செய்கின்றனர். இண்டர்நெட்டில் பரப்பப்பட்ட எனது படங்களை அழித்து, பரப்பி விட்ட மர்ம ஆசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் அதிரடியாக துப்பு துலக்கினர்.
 
பாமாவின் படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டது அவருடன் கல்லூரியில் படிக்கும் நெருங்கிய நண்பர். அவர் மீது ஒருதலையாக காதல் கொண்டு இது போன்ற வக்கிர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த மாணவரை பிடித்து எச்சரித்தனர்.
 
புகார்தாரர் பாமா கேட்டுக்கொண்டதால் மாணவரின் எதிர்கால வாழ்க்கை நலன் கருதி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இதே போல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணின் படத்தை உடன் வேலை பார்க்கும் ஊழியரே இண்டர்நெட்டில் பரப்பி விட்டதாக சிக்கினார். பக்கத்து வீட்டு பெண்ணின் படத்தை இது போல் பரப்பிய மற்றொரு மாணவரும் பிடிபட்டார். இதுவரை சென்னையில் 2 மாணவர்கள் உள்பட 6 பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.
 
இதுகுறித்து சைபர்கிரைம் உதவி போலீஸ் கமிஷனர் சுதாகர் கூறியதாவது:-
 
இண்டர்நெட் மூலம் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களை தடுப்பதில் போலீசார் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குடும்ப பெண்களின் படத்தை செல்போன் நம்பர்களுடன் வெளியிட்டு தவறான வகையில் அவதூறு பரப்பும் நபர்கள் தப்ப முடியாது. கடந்த 2 வருடத்தில் இதுபோன்று 6 புகார்கள் வந்தது.

இதில் அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் சிக்கினர். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
 
பெண்கள் விருப்பப்படியே அவர்களை எச்சரித்து அனுப்பி விடுகிறோம். புகார்தாரர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படுகிறது. சமீபத்தில் கூட மாணவியின் படத்தை அவதூறாக பரப்பிய கல்லூரி மாணவர் சிக்கினார்.
 
எனவே இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் முறைபடி புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP