சமீபத்திய பதிவுகள்

'அது'க்கும் வந்துவிட்டது ரோபோ 'ராக்சி...!'

>> Monday, January 25, 2010

 

Top global news update 

மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளால், உலகம் பல்வேறு வசதிகளைப் பெற்றுள்ளது. விமானம், கப்பல், வாகனங்கள் என துவங்கி, கண்டுபிடிப்புகள் நீண்டுக் கொண்டே போகின்றன. இந்த வகையில், மனிதனின் அரிய கண்டுபிடிப்பு ரோபோக்கள். மனித சமுதாயத்திற்கு ரோபோக்கள் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன.


முடியாத முதியவர்களுக்கு உதவுதல், ஆபத்தான இடங்களில் பணியாற்றுதல் என ரோபோக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன. கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வையை இழந்தவர்களுக்கும் ரோபோக்கள் உதவி வருகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதியில், பெரிய தொழிற்சாலைகள், மருத்துவம், அறுவை சிகிச்சை, விண்வெளி பயணம் உள்ளிட்டவைகளில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன.இந்த வரிசையில், செக்ஸ் உணர்வு அதிகம் கொண்டவர்களை திருப்தி செய்யும் வகையில் ரோபோக்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. "ட்ரூ கம்பானியன்' என்ற நிறுவனம் இந்த செக்ஸ் ரோபோவை தயாரித்துள்ளது.



அழகிய, கவர்ச்சி மிக்க பெண்ணைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோவின் பெயர் ராக்சி.சிந்தடிக் மென்தசை பொருட்களைக் கொண்டு செயற்கையான தோலால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கும், தொடுவதற்கும்  உண்மையான பெண்ணை போன்று உணரப்படும் இந்த ரோபோ, செயற்கை அறிவுத்திறனும் கொண்டது.



செக்ஸ் ரோபோவின் உள்ளே ஒரு லேப்-டாப் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. ரோபோவை தொடும் போதே அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள உணர்வு கருவிகள் செயல்படத் தொடங்கி விடும். அதற்கேற்ப ரோபோ செயல்படுகிறது. உள்ளே பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர் மூலம் சத்தம் வெளிப்படுகிறது. ஆனால், ரோபாவால் அதன் இஷ்டப்படி நகரவோ, தலை மற்றும் உதட்டை  அசைக்கவோ முடியாது. அனைத்தையும் கம்ப்யூட்டர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.



செக்ஸ் ரோபோவை வடிவமைத்துள்ள டக்ளஸ் இனேஸ் கூறும் போது, ""ஏ.வி.என்., அடல்ட் என்டர்டெயின்மென்ட் எக்ஸ்போ கண்காட்சியில் முதன் முதலாக செக்ஸ் ரோபோ ராக்சி காட்சிக்காக வைக்கப்பட்டது. ஆண்களின் விருப்பு, வெறுப்புகளை புரிந்து கொள்ளும் வகையில் ராக்சி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்த்தல், பேசுதல், கேட்டல், உணர்தல் ஆகிய நான்கு வித உணர்ச்சிகளையும் இது வெளிப்படுத்தும். வாடிக்கையாளர் கால்பந்து குறித்து பேசினால், அது குறித்து அதுவும் பேசும். கிரிக்கெட் குறித்து பேசினால், அதுவும் திரும்ப பேசும். இப்படி, அனைத்து விஷயங்களிலும் வாடிக்கையாளரை இந்த ரோபோ திருப்திபடுத்தும்.



தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள செக்ஸ் ரோபோவின் உயரம் 170 செ.மீ., எடை 54 கிலோ. வாடிக்கையாளர்கள், தங்களின் பழக்க வழக்கங்களையும், விருப்பத்தையும் முன்கூட்டியே கூறினால், அதற்கேற்ப செக்ஸ் ரோபோ வடிவமைத்து தரப்படும். ரோபோவின் கை, கால்கள் தானாகவே திரும்ப முடியாது. ரோபோவை திருப்பி வைத்தால் பேச தயாராகி விடும். செக்ஸ் ரோபோவை பெற, மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாயுடன் மாத சந்தா கட்டணத்தையும் கட்ட வேண்டும். ஆண் செக்ஸ் ரோபோவும் தயாராகி வருகிறது; அதன் பெயர் ராக்கி ட்ரூ,'' என்றார்.



இன்றைய நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் செக்ஸ் ரோபோ விற்பனைக்கு வந்துள்ளது. மிக விரைவில், உலகின் அனைத்து பாகங்களிலும் இதன் விற்பனை துவங்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP