சமீபத்திய பதிவுகள்

கணினி கற்கலாம் வா நீ !

>> Wednesday, January 27, 2010


 

ஈனியாக், யூனிவாக்... இப்படி எழுபது வருடத்துக்கு முந்தி கம்ப்யூட்டர் முதல் முதலாக உருவாக்கின போதே அதை என்ன வேலைக்கு பயன்படுத்த வேணும்னு தீர்மானம் செஞ்சுட்டாங்க. துப்பாக்கி, குண்டு, டாங்க் மாதிரி அதுவும் யுத்தத்துக்கு தேவைப்படும் ஒரு ஆயுதம். அவ்வளவுதான். ஆகாயத்துல இந்த வேகத்துல இந்த உயரத்துலே பறந்து இங்கே இருந்து குண்டு போட்டால், அது எங்கே விழும் என்று துல்லியமாகக் கணிக்க இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது கம்ப்யூட்டர் ரொம்ப உதவியா இருந்தது.

மனிதகுல முன்னேற்றத்துக்கு கம்ப்யூட்டரைப் பயன்படுத்த ஆரம்பிச்சது அதுக்கு அப்புறம்தான். டன் கணக்கிலே எடையோடு ஒரு பெரிய அறை அளவு இடத்தை ஆக்கிரமிச்ச பழைய கம்ப்யூட்டர் போய், இப்போ அதைவிட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சின்னச் சின்ன கம்ப்யூட்டர் எல்லாம் வந்துடுச்சு. முக்கியமா, நாம் போகிற இடமெல்லாம் கொண்டு போகும் லேப் டாப் கம்ப்யூட்டர். மடியிலே அதை இருத்தி வேலை செய்யறதாலே மடிக் கணினின்னு பெயர். மொபைல் தொலைபேசி மாதிரி லேப் டாப் இப்போ சர்வ சாதாரணமாகிட்டு இருக்கு. அப்பப்ப சார்ஜ் பண்ணி வச்சுக்கிட்டா, எங்கேயும் இருந்து கணக்கு போடலாம். இன்டர்நெட்டுலே மேயலாம். சினிமா பார்க்கலாம்.

லேப் டாப் அறிமுகமானது 1973-ல். இன்று வரை கம்ப்யூட்டர் உற்பத்தியில் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் ஐ.பி.எம் கம்பெனிதான் இதையும் செய்தது. முதல் லேப் டாப்புக்கு ஸ்கேம்ப்னு பெயர். எதுக்கு இது யூஸ் ஆகும்னு கேட்டபோது எதிர்பார்த்த மாதிரி பதில் - 'அதிகம் அலைச்சல் இருக்கற ராணுவ அதிகாரி, இன்கம்டாக்ஸ் அதிகாரி, மருந்து கம்பெனி ரெப்ரசென்டேடிவ் இவங்களுக்காகத்தான் இந்த லேப்டாப்'. ஆனால், எல்லா தரப்பினர் கையிலும் போய்ச் சேர அடுத்த பத்து வருஷம்தான் பிடிச்சது. மேசையில் வெச்சு வேலை பார்க்கிற டெஸ்க் டாப்பை விட, இப்போ லேப்டாப்தான் அதிகம்.

லேப்டாப் உருவாக்கணும்னு முடிவு செய்ததுமே அதுக்கு அடிப்படையா ரெண்டு விஷயங்களை எடுத்துக்கிட்டாங்க. டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்லே இருக்கற மானிடர், பிராசஸர், ஹார்ட் டிஸ்க் டிரைவ், கீ போர்ட், ஸ்பீக்கர் இப்படி எல்லாமே லேப்டாப்பிலும் இருக்கணும். ஆனால், இடத்தை அடைக்காமல், கையிலே தூக்கிட்டுப் போகிற ஒரு சின்ன பெட்டி மாதிரி இருந்தா போதும். பெட்டியைத் திறந்ததும் மூடியோட அந்தப் பக்கம் எல்.சி.டி திரையை வச்சுட்டா மானிட்டருக்கு மானிட்டர், பெட்டிக்கும் உறுதியான மூடி. சரி, கீ போர்ட்? மேல் மூடி மானிட்டர் அப்படீன்னா, கீழ்ப் பாகம் கீ போர்ட். அதோடு கூட ஒரு மௌஸ் இணைச்சுக்க வசதி. அல்லது ட்ராக் பால் என்று சின்ன உருண்டை கீ போர்ட் நடுவிலே இருக்கும். கூடவே, டச் பேட் என்ற சிறு சதுரத்தில் விரலை நகர்த்தினால் மௌஸ் மாதிரி அது இயங்கி, விரல் அசைத்தபடி லேப்டாப் மானிட்டரில் நகர்வு ஏற்படும். மானிட்டர், கீ போர்ட் போக, பெட்டியில் மீதி பாகத்துலே, அதாவது கீ போர்டுக்குக் கீழே பத்திரமான தடுப்புக்கு கீழே சி.பி.யூ மதர் போர்ட், ரேண்டம் அக்சஸ் மெமரி, ஹார்ட் டிஸ்க், வெப்பம் கூடாமல் தடுக்க குட்டியூண்டு மின்விசிறி இதெல்லாம். கம்ப்யூட்டர் பெட்டி ரெடி!

ஓ.கே. இந்தப் பெட்டி குழந்தை தூக்கற மாதிரி கனமில்லாமல் இருக்கணும். ஆனாலும், விற்பனைக்கு வந்த முதல் லேப்டாப் ஐபிஎம் 5100-ன் எடை பத்து கிலோவுக்கு கொஞ்சம் அதிகம். இத்தனைக்கும் உள்ளே பேட்டரி கூட கிடையாது. பெரியவங்களே கொஞ்சம் கஷ்டப்பட்டு தூக்க வேண்டியிருந்தது.

பொறுங்க ப்ளீஸ்னு திரும்ப டிசைனை திருத்தினாங்க. 1982-ல் மெல்லிய லேப்டாப் கிரிட் காம்பாஸ் விற்பனைக்கு வந்தபோது முதல்லே அதை வாங்கியது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா. விலை கிட்டத்தட்ட நாலரை லட்சம் ரூபாய். இப்போ முப்பதாயிரம் ரூபாய்க்கு நல்ல லேப்டாப் கிடைக்குது. அதுவும் கேமரா, டிவிடி போட்டு படம் பார்க்க வசதி, நாள் முழுக்க பயன்படுத்தப் போதுமான லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் இப்படி ஏகப்பட்ட விஷயங்களோடு. எடையும் வெறும் நாலு அல்லது ஐந்து கிலோ தான் இருக்கும். இது கூட அதிகமான எடையாச்சே? அப்போ சப் நோட்புக் கம்ப்யூட்டர் வாங்கிக்குங்க. எடை ரெண்டே ரெண்டு கிலோதான். என்ன, மானிட்டர் கொஞ்சம் குட்டியா, 13 இஞ்ச்தான் இருக்கும். பாட்டரி பத்து மணி நேரம் வரும்.

லேப்டாப் கம்ப்யூட்டரில் பெட்டியைத் திறந்ததும் திரை. அதை அப்படியே பதிச்சு வைக்காமல், கீ போர்டைச் சுற்றி நமக்குத் தேவையான கோணத்திலே திருப்பி நிறுத்த, கொஞ்சம் கொஞ்சமா சுழற்ற வழி செய்யறது டேப்லட் கம்ப்யூட்டர்.

உட்கார்ந்துதான் லேப்டாப்பை பயன்படுத்த முடியும். நின்னுக்கிட்டு அல்லது நடந்துக்கிட்டு ஒரு கையால் இயக்கி கணக்கு போட அமெரிக்காவிலே ஹீவ்லெட் பாக்கார்ட் கம்பெனியிலே இந்த சேலஞ்சை சமாளிக்க குஷியாக கிளம்பினாங்க. அவங்க 1991-ல் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கைப்பிடி கம்ப்யூட்டர்(ஹேண்ட் ஹெல்ட் கம்ப்யூட்டர்) ஹெச்பி 95 எல்.எக்ஸ். இதை பொதுவாக பி.டி.ஏ.-ன்னு அழைப்பது வழக்கம்.

நீங்க கல்லூரியிலே படிக்கும்போது கைக் கடியார கம்ப்யூட்டர் கூட எடுத்துப் போகலாம். அதைவிடச் சின்னதா, மோதிரக் கம்ப்யூட்டர் கூட வர வாய்ப்பிருக்கு. முடியாதுன்னு என்ன இருக்கு கம்ப்யூட்டர் உலகத்திலே?


source:vikatan

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP