சமீபத்திய பதிவுகள்

1 ரன்னில் இந்தியா "திரில்' வெற்றி

>> Sunday, February 21, 2010

 

இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது சர்வதேச ஒரு தின ஆட்டத்தில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஜெய்ப்பூரில் துவங்கியது. இந்த ஆட்டம் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸ வென்ற தென் ஆப்பிரிக்கா, முதலில் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் சேர்த்து தோல்வி கண்டது.

முன்னதாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சச்சினும், சேவாகும் களமிறங்கினர். முதல் ஓவரில் ஒரு அற்புதமான பெüண்டரியை விளாசி தனது கணக்கைத் துவக்கினார் சச்சின்.

ஆனால் 2-வது ஓவரிலேயே அவசரப்பட்டு ஓடி ஆட்டமிழந்தார் சச்சின். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து 2-வது விக்கெட்டுக்கு சேவாகுடன், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.

÷இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தது. சேவாக் அதிரடியாக விளையாடினாலும், கார்த்திக் பொறுமையாக விளையாடினார்.

சேவாக் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் வேகமாக அடித்த பந்து, பந்துவீச்சாளர் லாங்வெல்ட் கையில் பட்ட பின்னர் ஸ்டம்பில் பட ரன்-அவுட்டானார் சேவாக். சேவாக் 37 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதில் 2 இமாலய சிக்ஸர்களும், 6 பெüண்டரிகளும் அடங்கும். சேவாக்-கார்த்திக் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து கார்த்திக்குடன், கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் லாங்வெல்ட் பந்தில், பீட்டர்சனிடம் பிடிகொடுத்து கார்த்திக் ஆட்டமிழந்தார். அவர் 56 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்தார்.

தோனி 26 ரன்களிலும், அடுத்து வந்த விராட் கோலி 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனாலும் ஒருமுனையில் நங்கூரம் போல நின்று நடுவரிசை ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். அவர் 63 பந்துகளில் 58 ரன்களைச் சேர்த்தார். இதில் ஒரு சிக்ஸரும், 6 பெüண்டரிகளும் அடங்கும்.

யூசுப் 18, ரவீந்திர ஜடேஜா 22, பிரவீண்குமார் 13 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் ஆசிஷ் நெஹ்ரா 16 ரன்களும், ஸ்ரீசாந்த் ரன் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

காலிஸ் 3 விக்கெட்: தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜேக்ஸ் காலிஸ் சிறப்பாக பந்துவீசி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பார்னெல், லாங்வெல்ட், மோர்கெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

காலிஸின் சாதனை: டெஸ்ட், ஒரு நாள் போட்டி இரண்டிலும் 10 ஆயிரம் ரன்கள், 245-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்தும், 100-க்கும் மேற்பட்ட கேட்சுகள் பிடித்தும் சாதனை புரிந்துள்ளார் ஜேக்ஸ் காலிஸ். இந்த சாதனையைச் செய்துள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

÷299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பின்னர் ஆடத் துவங்கியது தென் ஆப்பிரிக்க அணி.

துவக்க ஆட்டக்காரர்களாக ஹெர்ùஸல் கிப்ஸýம், போஸ்மேனும் களமிறங்கினர். போஸ்மேன் அதிரடியாக விளையாட, கிப்ஸ் பொறுமையாக விளையாடினார். போஸ்மேன் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 29 ரன்களைச் சேர்த்து பிரவீண்குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கிப்ஸýடன், ஜேக்ஸ் காலிஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் கிப்ஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் ஜடேஜா பந்தில், கோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 40 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பெüண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

தொடர்ந்து வந்த டிவில்லியர்ஸ் சிறிது நேரம் தாக்குப் பிடித்து ஆடி 25 ரன்களைச் சேர்த்தார். அதைத் தொடர்ந்து வந்த அல்விரோ பீட்டர்சன், மோர்கெல், மார்க் பெüச்சர் ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். பீட்டர்சன் 9 ரன்களும், மோர்கெல் 2 ரன்களும், பெüச்சர் 5 ரன்களும் சேர்த்தனர். இயன் போத்தா 10 ரன்கள் சேர்த்து யூசுப் பதான் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுமுனையில் ஜேக்ஸ் காலிஸ் அபாரமாக விளையாடி அரை சதமடித்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் அசராமல் நின்று அற்புதமாக விளையாடி அணி வீரர்களுக்கு நம்பிக்கையூட்டினார் காலிஸ். இருப்பினும் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரீசாந்த் பந்தில் வீழ்ந்தார்.

இந்நிலையில் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பார்னெலும், ஸ்டெயினும் அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா படிப்படியாக முன்னேறியது.

÷சிக்ஸர்களும், பெüண்டரிகளுமாக விளாசி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார் பார்னெல். மறுமுனையில் ஸ்டெயினும் சிறப்பாக விளையாடி தன் பங்குக்கு ரன்களைக் குவித்தார்.

÷இருவரின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். இந்நிலையில் கடைசி ஓவரில் 10 ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தென் ஆப்பிரிக்கா.

÷கடைசி ஓவரை பிரவீண்குமார் வீசினார். முதல் பந்தில் பார்னெல் ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தில் ஸ்டெயினை ஆட்டமிழக்கச் செய்து இந்தியாவுக்கு நம்பிக்கையூட்டினார் பிரவீண். லாங்வெல்ட் களமிறங்கினார். 3-வது, 4-வது பந்துகளில் தலா ஒரு ரன் வந்தன. 5-வது பந்தில் லாங்வெல்ட் 3 ரன் எடுத்தார். பெüண்டரிக்கு சென்ற பந்தை சச்சின் அபாரமாக தடுத்தார். இதையடுத்து கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான கட்டத்தை எட்டியது ஆட்டம்.

÷கடைசி பந்தை பார்னெல் எதிர்கொண்டார். பிரவீண் பந்தை வீச, அது ஒயிட் பந்து என நடுவர் அறிவித்தார். இதனால் ஆட்டம் மேலும் பரபரபரப்புக்குள்ளானது. கடைசி பந்தில் 3 ரன்கள் எடுக்கவேண்டும். கடைசி பந்தை பிரவீண் வீச பந்தை அடித்து விட்டு ஒரு ரன்னை எடுத்து விட்டு 2-வது ரன்னை எடுக்க பார்னெல் ஓடினார். அதற்குள் பந்தைப் பிடித்த பார்னெலை ரன்-அவுட்டாக்கினார் தோனி.

இதையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்றது இந்தியா.

இந்திய அணித் தரப்பில் ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீசாந்த், பிரவீண்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஆசிஷ் நெஹ்ரா, பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்


source:tamilnewsinf


-- 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP