சமீபத்திய பதிவுகள்

திருட்டு நகல் அமோகமாய் கிடைக்கும் விண்டோஸ் 7

>> Sunday, February 7, 2010

 

 


 இந்தியாவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முறையாகச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னரே, அதன் திருட்டு நகல்கள் இந்தியப் பெரும் நகரங்களில் கிடைக்கத் தொடங்கிவிட்டன. ஒரு சிலர் இணையத் தளங்களில் இருந்து இதுபோன்ற திருட்டு நகல்களை டவுண்லோட் செய்தும், அதிலிருந்து சிடிக்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். பொதுவாக மைக்ரோசாப்ட் தன் ஒரிஜினல் சிடிக்களுக்கு ப்ராடக்ட் கீ ஒன்றை, 16 எண் மற்றும் எழுத்துக்கள் கொண்டதாக, வழங்கும். அதனைச் சரியாக அமைத்தால் தான், இந்த புரோகிராம்கள் இயங்கத் தொடங்கும். ஆனால் தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்புகளுக்கு அது போன்ற ப்ராடக்ட் கீ எதுவும் இல்லாமலே இயங்கும்படி இந்த திருட்டு நகல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. 
இது போன்ற திருட்டு நகல்கள் தயாரிக்கப்படுவது, சாப்ட்வேர் தொழிலில் உள்ள நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலி யாய் இருந்து வருகிறது. குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் தான் இது போன்ற முயற்சிகள் பெருமளவில் நடந்தேறி வருகின்றன. இந்தியாவில் 208 கோடி டாலர் அளவிற்கு இந்த திருட்டு முயற்சிகளினால் இந்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய விற்பனையில் வரி ஏய்ப்பும் ஏற்படுவதால் அரசுக்கு 20 கோடி டாலர் மதிப்பில் இழப்பு உண்டாகிறது.டில்லியின் ரிச்சி ஸ்ட்ரீட் என அழைக்கப்படும், டிஜிட்டல் சாதனங்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற, நேரு பிளேஸ் என்ற இடத்தில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடிக்கள் ஒன்று ரூ.50 விலையில் தரத் தயாராய் இருப்பதாகத் தன் அடையாளம் சொல்லவிரும்பாத ஒருவர் கூறினார். இந்த விண்டோஸ் பிரிமியம் தொகுப்பு, அதிகார பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ.6,799க்குக் கிடைக்கிறது. 
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, திருட்டு சாப்ட்வேர் சிடிக்களை வாங்கிப் பயன்படுத்து பவர்கள் பல ஆபத்துக்களுக்கு உள்ளாவார் கள். முதலாவதாக இது சட்டப்படி தவறு. காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுத்தால் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பயன்படுத்து பவரைக் கைது செய்து சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கவும் முடியும் என்றார். 
மேலும் கூறுகையில் திருட்டு சாப்ட்வேர் சிடிக்களுடன் பல மால்வேர் புரோகிராம்களும் இணைந்தே தரப்பட்டு, பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்கள் மற்றவருக்குச் செல்லும் அபாயமும் என்றார். மேலும் இது போன்ற திருட்டு புரோகிராம்களை விற்பனை செய்பவர்கள், மைக்ரோசாப்ட் வெளியிட்ட சோதனைப் பதிப்புகளைக் காப்பி எடுத்து விற்பனை செய்வதாகவும், அதனால் முழுமையான பாதுகாப்பினை அவை பெற்றிருக்காது எனவும் கூறினார். மேலும் இவை ஜூன்1, 2010க்குப் பின் இயங்காது என்றும் கருத்து தெரிவித்தார். 
மேலும் தொழில் நுட்ப ரீதியாகவும் இவற்றின் இயக்கத்தில் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் விளக்கினார். திருட்டு சிடிக்கள் மூலம் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தினால், அது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.
திருட்டு சிடிக்களை வாங்கிப் பயன்படுத்து பவர் ஒருவரைச் சந்தித்துக் கேட்ட போது, இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்த அதிகப் பணம் செலவழித்து, ஹார்ட்வேரை மாற்றி அமைக்க வேண்டிய துள்ளது என்றும், இந்நிலையில் மேலும் அதிக பணம் கொடுக்காமல் சாப்ட்வேர் கிடைக்கிறது என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள் என்று கூறினார். 
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் வேண்டுமானால் சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைப் பணம் கொடுத்து வாங்கட்டும்; நாங்கள் வாங்க மாட்டோம் என்று கூறினார். மைக்ரோசாப்ட் ஒவ்வொரு நாட்டின் வாங்கும் சக்திக்கேற்ப சாப்ட்வேர் தொகுப்பிற்கு விலை வைக்க வேண்டும் என அவருடைய ஆதங்கத்தினை வெளிப் படுத்தினார். இந்நிலையில் இன்னொரு பிரச்னையும் எழுந்துள்ளது. வெளிநாட்டி லிருந்து பேக்கேஜ்டு சாப்ட்வேராக இறக்குமதி செய்தால், இந்திய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்று யாராலும் தெளிவாகக் கூற முடியவில்லை. இதனால் அதிகார பூர்வமான விண்டோஸ் 7 சாப்ட்வேர் கிடைப்பது தாமதமாகிக் கொண்டு வருகிறது என்று கூறினார். திருட்டு சாப்ட்வேர் வாங்காதீர்கள். கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்படும்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP