சமீபத்திய பதிவுகள்

இறுதி போர் நடந்த இடங்களை பார்வையிட்ட யாழ். ஆயர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்

>> Monday, February 8, 2010

 
 

வன்னியில் போர் நடந்து முடிந்த களத்தை முதன் முறையாக யாழ்.மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்திர நாயகம் பார்வையிட்டார்.

அது பற்றி கருத்து தெரிவிக்கையில் - மக்கள் தங்களது இழந்த போன வாழ்க்கையையும், வழிபாட்டிடங்களையும அந்த இடங்களில் மீண்டும் நிறுவுவது "தாங்கிக் கொள்ள முடியாத சுமை" என குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின் வன்னி யுத்த களத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட முதல் நபர் ஆயரே.

பொது மக்கள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எவருக்கும் இதுவரை சிறிலங்கா அரசு அந்த யுத்த களப் பகுதிக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயத்தின் திருவிழாவில் பங்கேற்ற ஆயர் தேவாலய திருவிழாக்களின் போது ஆடம்பரமாய் செலவழிப்பதை நிறுத்திவிட்டு உடமைகளை இழந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
 
விளம்பரப்படுத்தாமல் ஐன.29இல் போர் நடந்த இடங்களைச் சென்று பார்த்த அதிர்ச்சி இன்னமும் மாறா நிலையில், கிழக்கு கடற்கரை கத்தோலிக்க மீன்பிடிக் கிராமமான மாத்தளனில் தான் கண்டவற்றை விபரித்தார்.
 
எல்லா இடங்களிலும் அழிவு தான் தென்படுவதாகவும் அது தமது மக்களின் எதிர் காலத்தை அச்சுறுத்தியபடி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இறுதிக் கட்டப் போரின் போது மாத்தளன் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பலர் காயம் மற்றும் அங்கவீனம் அடைந்தனர்; மேலும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து ஓட நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தில், 17 பங்குக்குரிய 110 தேவாலயங்களும் 15 கத்தோலிக்க மதத் தொடர்பகங்களும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
 
இவற்றில் பெரும்பாலான வழிபாட்டிடங்கள் மட்டுமல்ல, கிராமங்கள், வயல் நிலங்களும் கூட காடு பற்றிய நிலையில் உள்ளன.

'மக்கள் தங்கள் வாழ்வின் சேமிப்புகள் அனைத்தையும் இழந்து விட்டதால் மீண்டும் புனரமைத்தல் என்பது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத சுமையாகி விட்டது' என ஆயர் மேலும் தெரிவித்தார்.

கடைசிப் போர் நடந்த இடங்களில் - 

  • வழிபாட்டிட கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.
  • வழிபாட்டு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
  • நெல் விளையும் களங்கள் புதர்களாகி விட்டன.
  • ஆடு, மாடு முதலிய கால்நடைகள் அழிந்துவிட்டன.
  • வீடுகள் அனைத்தும் கற்குவியல்களாக காட்சியளிக்கின்றன.
  • எரிக்கப்பட்ட சிற்றுந்துகள், பேருந்துகள், மற்றும் உந்துருளிகளின் எச்சங்கள் குவிந்து காணப்படுகின்றன.

உணர்வுகளால் உந்தப்பட்ட ஆயர்,  மீண்டும் இந்த மக்களின் வாழ்க்கையை புனரமைக்க முடியுமா என ஆதங்கப்படுகின்றார்.
 
சிறிலங்காப் படையினரால், விவசாய கிராமங்களான மாங்குளம் , ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கும் ஆயர் கூட்டிச்செல்லப்பட்டார்.

சமய வழிபாட்டுத் துறை துணை அமைச்சரான பண்டு  பண்டாரநயாக - அரசு சமீபத்தில் அறிவித்தபடி, மக்கள் அவரவர் இடத்திலேயே மீண்டும் குடியமர்த்தப்பட்டு சமய வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என்றும் அதற்கான புணரமைப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும் தெரிவிக்கிறார்.
 
யாழ்ப்பாண மறைமாவட்டம் தவிந்த - மன்னார் மறைமாவட்டத்திலும் 148 தேவாலயங்கள் கைவிடப்பட்டுள்ளது. அத்தோடு - போரைத் தவிர ஆழிப் பேரலை போன்றவற்றால் சேதமடைந்த தேவாலயங்கள் இன்னும் புதுப்பிக்கபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


source:puthinappalakai 


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP