டெக்ரான், பிப்.24-
ஈரான் நாட்டின் கிழக்கு பகுதியில் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பிராந்தியத்தில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் தலைவர் அப்துல் மாலிக் ரிகி கைது செய்யப்பட்டார். இவரது தலைமையில் செயல்பட்ட குழுவுக்கு ஜுன்டாலா என்று பெயர். இது பலுச்சி இன சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறது
.ஈரான் நாட்டில் தென்கிழக்கு கோடியில் உள்ளது. இந்த மக்கள் ஏழைகள். இங்கு சட்டம் ஒழுங்கு எதுவும் இல்லை. இந்த பகுதியில் ஜுண்டாலா தீவிரவாதிகள் வலுவாக இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பழங்குடி இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் ராணுவ தளபதிகள் சென்றபோது,இந்த தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தி ராணுவ தளபதிகள் 6 பேர் உள்பட 42 பேரை பலிகொண்டனர்.
இந்த தீவிரவாத குழுவின் தலைவர் ரிகி அவரது குழுவை சேர்ந்த 2 பேருடன் கைது செய்யப்பட்டார். கடந்த 2002-ம் ஆண்டு தான் இந்த குழு தொடங்கப்பட்டது. அப்போது ஈரானில் இருந்து பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றும், நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை உலகத்துக்கு தெரிவிக்க வன்முறையை தவிர வேறு வழி தெரியவில்லை என்று ரிகி தெரிவித்தார்.
source:dailythanthi
--
www.thamilislam.co.cc

0 கருத்துரைகள்:
Post a Comment