சமீபத்திய பதிவுகள்

எம்.எஸ்.ஆபீஸ் 2010: இயக்க என்ன தேவை

>> Monday, March 29, 2010

 
 

 வரும் ஜூன் மாதம் வெளியிடப்பட இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பினைக் கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்து இயக்க, கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன் என்னவாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்ப ட்டுள்ளது. உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் 2007 இயங்கிக் கொண்டிருந்தால், அந்த கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பினையும் இயக்கலாம். இப்போது கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கம்ப்யூட்டர் ஒன்றினைத் தகுதியான நிறுவனத்திடமிருந்து பெற்றால், அந்த கம்ப்யூட்டரிலும் ஆபீஸ் 2010 இயக்கலாம். ஆனால் ஆபீஸ் 2003 மட்டுமே இதுவரை இயக்கிக் கொண்டிருந்தால், அந்தக் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2007 தொகுப்பு இயங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
ஆபீஸ் 2010 – 32 பிட் பதிப்பு கீழ்க்காணும் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும். விண்டோஸ் எக்ஸ்பி + சர்வீஸ் பேக் எஸ்.பி.3., விஸ்டா எஸ்.பி.1., விண்டோஸ் 7, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 (எம்.எஸ். எக்ஸ்.எம்.எல். உடன்)
ஆபீஸ் 2010 –64 பிட் பதிப்பு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைத்திலும் இயங்கும். விண்டோஸ் சர்வர் 2003 ஆர்2 சிஸ்டத்தில் மட்டும் இயங்காது.
ஆபீஸ் 2010 இயங்க குறைந்த பட்ச மற்ற தேவைகளாவன. 500 ஏத் ப்ராசசர் 256 எம்பி ராம் மெமரியுடன் இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் 1 அல்லது 1.5 ஜிபி தேவைப்படும். 
ஆபீஸ் 2010 பதிப்பு ஆபீஸ் 2007 போல் இல்லாமல், கிராபிக்ஸ் கார்ட் திறன் தேவையிலும் வேறுபட்டு உள்ளது. எக்ஸெல் சார்ட், பிரசன்டேஷன் காட்சிகள் போல பைல்களுக்கு இந்த தேவை அவசியமாகிறது. குறைந்த பட்சம் மைக்ரோசாப்ட் DirectX 9.0c கிராபிக்ஸ் ப்ராசசர் 64 எம்பி வீடியோ மெமரியுடன் தேவைப்படும். ஆனால் பொதுவாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, பெரும்பாலா னவர்கள் ஒவ்வொரு முறை ஆபீஸ் தொகுப்பு வெளியாகும் போதும், புதிய திறன் கொண்ட ஹார்ட்வேர் இணைந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமா? என்று கேட்கின்றனர். இதை மனதில் வைத்து, கூடுமானவரை ஆபீஸ் 2007 இயங்கிய அதே ஹார்ட்வேர் தேவைகளுடன், ஆபீஸ் 2010 தொகுப்பும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.
கம்ப்யூட்டர் கிராஷ்!


இது அடிக்கடி நாம் கேட்கும் ஒரு சொல் தொடர். அது என்ன கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது? உங்கள் மீது மோதி நின்னு போச்சா! என்று சிலர் கேலி செய்வார்கள். கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது என்பது வேறு ஒன்றைக் குறிப்பிட்டாலும், நாம் எதிலாவது மோதி நின்றால், கவலைப்படுவதனைக் காட்டிலும் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் கவலைப்படுவோம். இல்லையா? 


அடிப்படையில் கம்ப்யூட்டர் கிராஷ் என்பது ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் அல்லது உங்கள் சிஸ்டம் புரோகிராமில் ஏதேனும் ஒரு பகுதி தன் வழக்கமான செயல்பாட்டினை மேற்கொள்ள முடியாமல் போவதுதான். இதனால் மற்ற புரோகிராம் அல்லது கம்ப்யூட்டரின் மற்ற செயல்பாடுகளும் முடங்கிப் போவதுதான். குறிப்பாக கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய பகுதி இயங்காமல் முடங்குவது, கம்ப்யூட்டரின் செயல்பாடு முழுவதையும் நிறுத்தி விடும். எது காரணமாக இருந்தாலும், கம்ப்யூட்டர் கிராஷ் என்பது அடிக்கடி நடைபெறக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது. கம்ப்யூட்டர் கிராஷ் என்பதனை சிலர் சிஸ்டம் கிராஷ் என்றும் கூறுவார்கள்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP