சமீபத்திய பதிவுகள்

நிறுவனப் பெயர்கள்

>> Wednesday, March 10, 2010

 

இரு இதழ்களுக்கு முன்னால் நில நிறுவனங்களின் பெயர்கள் வந்த நிகழ்வுகளைப் பார்த்தோம். படிக்க மிகவும் சுவாராஸ்யமாக இருந்ததாகப் பல வாசகர்கள் எழுதி உள்ளனர். இதோ இன்னும் சில:
அகாய் (AKAI)ஜப்பானிய மொழியில் அகாய் என்ற சொல் சிகப்பு வண்ணத்தைக் குறிக்கிறது. பொதுவாக சூரிய உதயத்துடன் சிகப்பு வண்ணத்தைக் குறிப்பிடுவார்கள். ஜப்பான் சூரியன் உதிக்கும் நாடு; ஏனென்றால் கிழக்கு மூலையில் உள்ள நாடு ஜப்பான். சூரியன் உதிக்கும் நாடு எனப் பெயர் பெற்றது. ஜப்பானியக் கொடியின் மையத்தில் சிகப்பு வண்ணத்தில் சிறிய வட்டம் இருக்கும். அகாய் ஒரு ஜப்பானிய நிறுவனம் என்று குறிக்கவே இந்த சொல் நிறுவனத்தின் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.
பிளாபங்க்ட் (Blaupunkt): ஜெர்மானிய மொழியில் இந்த சொல் நீல நிறத்தில் அமைந்த புள்ளி அல்லது நீல நிற முனையினைக் குறிக்கிறது. முதலில் இந்த நிறுவனத்திற்கு ஐடியல் (Ideal) என்ற பெயரே வைக்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஹெட்போன் கள் தயாரிக்கப்பட்டன. அவற்றின் தரத்தைச் சோதித்த பின்னர் விற்பனைக்கு அனுப்பப் படும் முன்னர் அதில் நீல நிறப் பொட்டு வைத்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அதுவே நல்ல தன்மையின் அடையாளமாக உணரப்பட்டது. பின்னர் அந்த நீலப் புள்ளியே இந்நிறுவனத்தின் ட்ரேட் மார்க்காகவும், அதனைத் தொடர்ந்து அதுவே நிறுவனப் பெயராகவும் மாறியது.
கேனன் (Canon): இந்த நிறுவனம் பெற்றிருந்த முதல் பெயர் பிரிசிசன் ஆப்டிகல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் லேபரட்டரி என்பதாகும். இந்நிறுவனம் தான் ஜப்பான் நாட்டில் முதல் முதலாக 35மிமீ போகல் பிளேன் ஷட்டர் கேமராவினைத் தயாரித்து வெளியிட்டது. அந்த கேமராவின் பெயர் க்வானன் (Kwannon) என்பதாகும். ஜப்பானிய மொழியில் புத்தருடைய போதி சத்துவ கருணை என்று பொருள் தரும். இந்த சொல்லையே சிறிது மாற்றி கேனன் என்ற பெயர் இந்த நிறுவனத்திற்குப் பின்னாளில் வைக்கப்பட்டது.
கேசியோ (Casio): தொழிற்சாலை சாதனங்களை வடிவமைப்பதனை முதல் நோக்கமாகக் கொண்டு முதலில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. டடாயோ கஷியோ என்பவர் இதனை நிறுவினார். இவர் பெயரான கஷியோ (Kashio)  என்பதுதான் சிறிய மாற்றத்துடன் இச்ண்டிணி என இந்நிறுவனத்தின் பெயராக வந்தது. 1946ஆம் ஆண்டு முதல் இது இயங்கிவருகிறது.
காம்பேக் (Compaq): இணைவமைதியுடன் நல்ல திறனுடன் தன்மையுடன் இயங்கும் என்பதைக் குறிக்க இரண்டு சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அவை – Compatibility and Quality   ஆகும். இந்த இரண்டையும் இணைத்து Compaq என்ற சொல்லை உருவாக்கி இந்நிறுவனத்திற்குப் பெயர் வைத்தனர். 
எப்சன் (Epson): இந்த நிறுவனத்தின் பெயர் வந்த நிகழ்வு சற்று வேடிக்கையானதாகும். தைவா கோக்யோ (Daiwa Kogyo) என்ற பெயரில் இந்த நிறுவனம் 1942ல் ஹிசாஓ யமஸகி என்பவரால் உருவாக்கப்பட்டது. கடிகாரத்திற்குத் தேவையான பாகங்களைத் தயாரிக்க நகனோ என்ற இடத்தில் இது அமைக்கப்பட்டது. 1968ல் இதன் பெயர் ஷின்ஸு செய்கி என்ற பெயரைப் பெற்றது. அதே ஆண்டில் இதன் முதல் மினி பிரிண்டர் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இதனை இ.பி. 101 (E.P. Electronic Printer 101)  என அழைத்தனர். 1975 ஆம் ஆண்டில் இரண்டாவது வகை மாடல் பிரிண்டர் தயாரிக்கப்பட்டு வெளியானது. இவற்றை முதலில் வெளியான பிரிண்டரின் மகன் என்றழைக்கும் வகையில் "Son of EP101"  என அழைத்தனர். இதுவே பின்னர் "Son of EP"  என மாற்றம் பெற்று பின் மீண்டும் உணீண்ணிண எனப் பெயர் பெற்றது.
ஹிடாச்சி (Hitachi) ஜப்பானிய மொழியில் ஹிடாச்சி என்றால் சூரிய உதயம் என்று பெயர். ஜப்பானை சூரியன் உதிக்கும் நாடு என உலகத்தவர் அழைப்பதனால், ஜப்பானிய பாரம்பரியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிகும் வகையில் ஹிடாச்சி என்ற பெயர் இந்த நிறுவனத்திற்கு வைக்கப்பட்டது


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP