சமீபத்திய பதிவுகள்

பாகிஸ்தான் வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் மரண அடி!முகமது யூசப்,யூனிஸ்கானுக்கு வாழ்நாள் தடை.

>> Wednesday, March 10, 2010

நம்பமுடியவில்லை... பாகிஸ்தான் வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் மரண அடி!

 

ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் இன்ப கனவுகள் ஓங்கி நிற்கும். ஆனால், அதற்கு மொத்த மரண அடியாக அமைந்துவிட்டது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவு.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. வேகங்களுக்கும், கடல் காற்றுக்கும் இடையில் பாகிஸ்தான் வீரர்களால் சிறப்பாக விளையாட்டை கொடுக்க முடியவில்லையா? அல்லது அனுபவமின்மையா?

தொடக்கம் முதல் இறுதி வரை சொத்தப்பலாகவே அமைந்தது!

தொடர் தொடங்கியது முதல் முடியும் வரை பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்கள். கம்ரன் அக்மால் மேட்ச் ஃபிக்ஸிங், அப்ரிதியின் பால் டாம்பரிங் (பந்தை சேதப்படுத்திய புகார்) என அந்த சர்ச்சைகள் பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிவார்கள். இறுதியில் ஒரு வெற்றி கூட கைப்பற்றாமல் வெறும் கையுடன் பாகிஸ்தான் அணி நாடு திரும்பியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு மரண அடியாக இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை அறிவிப்பு என்பதை விட 'தண்டனை' விவரம் என்று சொல்வதே சாலப் பொருந்தும்.

கேப்டன் முகமது யூசப் மற்றும் யூனிஸ்கானுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாழ்நாள் கிரிக்கெட் தடை. இவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவ வீரர்கள் மட்டுமல்ல நட்சத்திர வீரர்கள் கூட. ஆஸ்திரேலிய தொடரில் இவர்கள் பங்கு திருப்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக வாழ்நாள் தடை விதித்தது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இது போதாது என்று அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ராணா நவித் ஹாசனுக்கு ஒரு வருட தடையும், 20 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

மேலும், இரு வீரர்களாக கம்ரன் அக்மாலுக்கு 6 மாத தடை, 30 லட்ச ரூபாய் அபராதமும், அவரது இளைய சகோதரர் உமர் அக்மலுக்கு 6 மாத தடை, 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதில் கம்ரன் அக்மால் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க கூடாது என ஓர் அணியும், சேர்க்களாம் என்று ஓர் அணியும் உருவாகி பிரச்னை கிளப்பியது தனி கதை. அதிலும் தன்னை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுவேன் என்று கம்ரன் அக்மல் சின்ன குழந்தை போன்று மிரட்டியதை பலர் எள்ளி நகையாடியதும் தனிக்கதை.

இவர்களை விட படுமோசமாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மொத்தமும் தலை குனிய வைத்த அஃப்ரிதிக்கு வெறும் 6 மாத தடை மற்றும் 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவ்விவகாரத்தில் சோயிப் மாலிக், ராணா நவித், அக்மல் சகோதரர்கள் ஆஸ்திரேலியாவில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் இந்த தண்டனை கொடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தற்போது புது பயிற்சியாளராக பதவியேற்றுள்ள வக்கார் யூனீஸ் கருத்தும் இதில் எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது மேலும் சர்ச்சை உருவாக்கியுள்ளது.

இதைப் பற்றி சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வெளியிட்ட கருத்து...

முன்னாள் கேப்டன் ஜாகிர் அப்பாஸ்: அணியில் உள்ள வீரர்களின் செல்வாக்கு மிகுதியால் மற்ற ஆட்டக்காரர்களின் திறன் பாதிப்படைந்துவிட்டது. தேவையில்லாத வீரர்களை நீக்க போர்டுக்கு முழு உரிமையும் உள்ளது. இதனால் இனிவரும் வீரர்களுக்கு ஒரு வித அழுத்தம் கொடுக்கும், இதுவே அணிக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று நினைக்கிறேன். வரும் டிவெண்டி 20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும் அதைப் பற்றி கவலை பட மாட்டோம். அணியின் ஒழுக்கமே முதல் முக்கியம்.

முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்: இது முற்றிலும் முட்டாள் தனமானது. யூனிஸ்கான் மற்றும் முகமது யூசப் நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடுபவர்கள். பாகிஸ்தான் இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்பவர்கள் இவர்களுக்கு இத்தகைய தண்டனை தேவையற்றது. இவர்கள் விரைவில் கோர்ட் மூலம் இதனை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா: பாகிஸ்தான் அணிக்கு எப்போழுதும் ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே பிரச்சனைகள் அதிகம் சந்திக்கிறது. ஆனால் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் என்றுமே பாதிப்பு வந்ததில்லை. அணியில் உள்ள பிரச்னைகளை உடனடியாக களைய வேண்டும். அதே நேரம் தடை பெற்ற வீரர்கள் உடனடியாக அதனை சரிசெய்துவிட்டு அணிக்கு திரும்ப வேண்டும்.

தேர்வாளர் மற்றும் சூழற்பந்துவீச்சாளருமான அப்தூல் காதீர்: இது துணிச்சலான முடிவு. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒழுக்கம் உடனடியாக சரி செய்யத்தான் வேண்டும் இத்தகைய தீர்மானங்களால் மாநில கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பாடமாகவும் அமையும், இனி அணியிலும் ஒழுக்கம் முழுமையாக கடைபிடிக்க இது உதவும்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் சர்ப்ராஸ் நவாஸ்: இது மிகச் சிறந்த முடிவு. பாகிஸ்தான் வீரர்கள் இனிமேலும் இதனை கருத்தில் கொண்டு சிறப்பான ஆட்டத்தை கடைபிடிக்க வேண்டும். யூனிஸ் கானும், முகமது யூசப்பும் சர்வதேச அளவில் சிறந்த விளையாடுபவர்கள் தான், ஆனால் அவர்களுடன் மற்ற வீரர்களும் தண்டனை பெற்றுள்ளனர் எனபதை நினைத்துப் பார்க்க வேண்டும். அக்மலுக்கு ஒரு வருடம் தடைவித்திருக்கலாம்.

சர்ச்சைக்கும், வம்புக்கும் பெயர் பெற்ற முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரசீத் லத்தீப்: யூனிஸ்கானுக்கு இது அதிக்கப்படியான தண்டனையாகவே இதனை கருதுகிறேன். எதற்காக யூனீஸ்க்கு வாழ்நாள் தடை என்பதை தன்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. யூனீஸ்கான் மீது தனிப்பட்ட கால்புனர்ச்சியே இதை காட்டுகிறது. ஆனால் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சில வீரர்களுக்கு இது சிறந்த எச்சரிக்கைதான். அதேநேரம் யூனிஸ் கானு, முகமது யூசப்பும் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என்பதில் ஐய்யமில்லை. ஆனால் இவர்களுக்கு வயதாகிவிட்டதை நாம் உணர வேண்டும். நவீத் போன்று அக்மாலுக்கும் ஒரு வருடம் தடை வித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆக இவர் யூனீஸ்கானுக்கு ஆதரவா? இல்லை எதிரியா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆக மொத்தத்தில் இந்த தடாலடி விவகாரத்தால் மீண்டும் ஒரு முறை உலக கிரிக்கெட் விமர்சகர்களின் பார்வை பாகிஸ்தான் பக்கம்  திரும்பிவிட்டது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



source:vikatan


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP