சமீபத்திய பதிவுகள்

தமிழ்வின் தளத்தின் தந்திரங்கள்

>> Monday, March 15, 2010

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியத்திற்கானமக்கள் முன்னணியின் வேட்பாளருமாகிய கஜேந்திரன்அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்அதன் முழுவடிவம் இங்கே தரப்படுகின்றது.

15-03-2010, ஊடக அறிக்கை

கடந்த 14-03-2010 அன்று தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்குவன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப்புறம்பானது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள்கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம்பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போதுதமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும்எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்அத்துடன் கிளிநொச்சிமகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொருகலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை.அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவதுமுற்றிலும் பொய்யான விடயமாகும்.

மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழுநடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள்உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறுபூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைவெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியைகூட்டமைப்பு கையாள்கின்றது.

அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சிநிரலும் அரங்கேறுகின்றதுமைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயகஇருந்தார் என்றும்தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒரு இந்தது போன்றதொருபொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன்மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர்.

திரு.சு..தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல்துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும்எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்ததுஇது உண்மையில் வன்னியில் வசித்தமக்களுக்கு தெரியும்பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள்பரப்பப்படுகின்றதுஆனால் பிளவுபட்டு சோர்வடைந்துமரணபயத்தில் உறைந்துபோயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்குதமிழ் என்றநிகழ்வினூடாக சாதிசமயபிரதேசவர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர்பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால்அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன்.

வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்தஉழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.புலம் பெயர்மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப்போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான்மேற்கொண்டிருந்தேன்ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளைபெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமானநீதியுடன் வாழக் கூடியஎதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.

கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ளநிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படைகொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்குதெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காகதிணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல.

இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துஅவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்லகடந்த 12-3-2010 அன்றதினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள்அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீதுஎனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொதுமக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ்வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனதுஆதரவாளர்கள் கூறியதாகவும் 13-3-2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.

ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக்கொள்ளவில்லைசுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம்எப்படி நடந்திருக்க முடியும்அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல்பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது.இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள்யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை.

எனக்கும்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும்,புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ளமுடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகஇவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர்கூட்டமைப்பு கொள்கையைகைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்லவைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்லவைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்துகஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும்வன்னியில் இருந்து ஒரு மடல்என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யானசெய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.

இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செ.கஜேந்திரன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்

source:vannionline

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP