சமீபத்திய பதிவுகள்

ஆபீஸ் 2010 - பீட்டா டவுண்லோட்

>> Friday, April 2, 2010


 

பல வாசகர்கள் புதியதாக மைக்ரோசாப்ட் தர இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2010 சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சோதனைத் தொகுப்பு கிடைக்கும் தள முகவரி, அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டுமானால் கம்ப்யூட்டர் கான்பிகரேஷன் எப்படி இருக்க வேண்டும் மற்றும் அதில் என்னவெல்லாம் இருக்கின்றன என்று விலாவாரியாக சிவகாசி வாசகி ஒருவர் கேட்டுள்ளார். அனைவருக்குமான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த மெகா வெளியீடு எம்.எஸ். ஆபீஸ் 2010 ஆகத்தான் இருக்கும். அதன் சோதனைத் தொகுப்பு சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கான பேரால் டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறைகள் குறித்து உலகெங்கும் இருந்து பல வாடிக்கையாளர்கள் தகவல்களை அளித்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இதன் சோதனைத் தொகுப்பு, சென்ற இதழில் தந்தபடி,  http://www.microsoft. com/office/2010/en/downloadofficeprofessionalplus/default.aspx என்ற முகவரி யில் கிடைக்கிறது.
இங்கு உங்கள் லைவ் அல்லது ஹாட் மெயில் அக்கவுண்ட் மூலம் சென்று பெறலாம். இதனை ஐ.எஸ்.ஓ. பைலாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். பைல் அளவு 684 எம்பி.(32பிட்) 750 எம்பி (64 பிட்). அதன்பின் இன்ஸ்டால் செய்து வரும் 31 அக்டோபர் 2010 வரை பயன்படுத்தலாம். அதன்பின் இந்த சோதனைத் தொகுப்பு இயங்காது. இயக்கம் நிறுத்தப்படுவதற்கு முன் எச்சரிக்கை செய்தி தரப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 
முதன் முதலாக 32 மற்றும் 64 பிட்களில் தரப்படும் ஆபீஸ் தொகுப்பு இதுதான். உங்கள் சிஸ்டத்திற்கு உகந்தது எது என்று முடிவு செய்து அதனை டவுண்லோட் செய்திடவும். குறிப்பாக விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள், சரியாக இதனைக் கையாள வேண்டும். தங்களிடம் உள்ள சிஸ்டம் எந்த வகை என்று அறிய ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் மற்றும் சிஸ்டம் மெயின்டனன்ஸ் சென்று பார்க்க வேண்டும். இதில் சிஸ்டம் என்பதனைக் கிளிக் செய்தால், உங்களிடம் உள்ள விண்டோஸ் 7, எத்தனை பிட் வகையைச் சார்ந்தது என்று தெரியவரும். அதற்கேற்ற ஆபீஸ் பீட்டா தொகுப்பை இறக்கிக் கொள்ளலாம். 
தற்போதைக்கு ஆபீஸ் புரபஷனல் ப்ளஸ் மட்டுமே கிடைக்கிறது. ஆபீஸ் புரபஷனல், மற்றும் ஹோம் அண்ட் பிசினஸ் தொகுப்புகள் பின் நாளில் கிடைக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்வதற்கான ப்ராடக்ட் கீ முதலிலேயே தரப்படுகிறது. 25 எண்கள் அடங்கிய கீ, இன்ஸ்டால் செய்த பின் 30 நாட்களுக்குப் பின் பயன்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே தேவை. இந்த கீ, சோதனைத் தொகுப்பை ஆக்டிவேட் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். பின் நாளில் ஒரிஜினல் விற்பனைத் தொகுப்பிற்குப் பயன்படுத்த முடியாது. 
மைக்ரோசாப்ட் ஆபீஸ் புரபஷனல் ப்ளஸ் என்ற இதனை டவுண்லோட் செய்து இயக்கினால், புதிய வழிகளில் இது என்னவெல்லாம் வசதிகளைத் தருகிறது என்று அனுபவப்படலாம். இதில் வேர்ட், ஒன் நோட், இன்போ பாத், பவர்பாய்ண்ட், அக்செஸ், ஷேர் பாய்ண்ட் ஒர்க்ஸ்பேஸ், அவுட்லுக், பப்ளிஷர், கம்யூனிகேடர், எக்ஸெல் ஆகியவை உள்ளன. 
இது இறுதியாக வடிவமைக்கப்படுவதற்கு முன்னதான சோதனைத் தொகுப்பு என்பதால், இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிந்து கொள்வது நல்லது. நாம் என்ன என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிந்து கொள்ளலாம்.
1. முதலில் நீங்கள் முதன்மையானது என்று கருதும் அலுவலக அல்லது வீட்டில் வைத்துப் பயன்படுத்தப் படும் பெர்சனல் கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டாம். இரண்டாவதாக, உபரியாக உள்ள, அதிக முக்கியத்துவம் இல்லாத டேட்டா உள்ள கம்ப்யூட்டரில் பயன்படுத்தவும். 
2. பயன்படுத்த இருக்கும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் தொகுப்பு இருந்தால், அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடவும். 
3. இன்ஸ்டால் செய்திடும் முன், மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள ரிலீஸ் நோட்ஸ் என்னும் தகவல் குறிப்பைப் படித்துத் தெரிந்து கொள்ளவும். இதனை http://go.microsoft.com/fwlink/?LinkID= 163393&clcid=0x409 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
4. இந்த ஆபீஸ் தொகுப்பு குறித்த தகவல்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அதற்கென உள்ள அமைப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். அப்படி ஒரு அமைப்பினைhttp://social.technet. microsoft.com/Forums/en/office 2010general/threads  என்ற முகவரியில் காணலாம். இன்னொரு அமைப்பு http://blogs.technet. com/office20 10/ என்ற முகவரியிலும் கிடைக்கிறது.
5. இன்ஸ்டால் செய்த பின், விண்டோஸ் அப்டேட் இயக்கப்பட்டு அப்டேட் செய்யப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP