சமீபத்திய பதிவுகள்

நாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி

>> Monday, April 19, 2010

  

 பல வேளைகளில், நடக்க விருக்கும் நிகழ்ச்சி தொடர்பாக சில நாட்கள் கழித்து இமெயில்களை அனுப்புவோம் என்று திட்டமிடுவோம். குறிப்பாக பிறந்த நாள் வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துக் கடிதங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட நாட்களில் அனுப்பினால் தான், பெறுபவர் மகிழ்ச்சி அடைவார். குறிப்பிட்ட நாட்களில் நம் வேலைப் பளுவின் காரணமாக அல்லது மறதியாய் அனுப்பத் தவறிவிடுவோம். முன் கூட்டியே இமெயில்களைத் தயார் செய்து ட்ராப்ட்டாக வைத்திடலாம். ஆனால் குறிப்பிட்ட நாளில் அவற்றை நினைவில் வைத்து அனுப்ப வேண்டுமே. அதைத்தான் நம்மில் பலர் மறந்துவிடுகிறோம். இதற்கு என்னதான் வழி? 

ஒன்றா, பல வழிகள் உள்ளன. இது போல எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய மெயில்கள், குறிப்பிட்ட நாளில் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் அனுப்ப வேண்டிய மெயில்கள் என முன்கூட்டியே தயாரித்து வைத்து அனுப்ப பல இணைய தளங்கள் நமக்கு வசதியை அளிக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. LetterMeLater:  எதிர்கால இமெயில் அனுப்பும் வசதி களைத் தருவதில் இந்த வசதிதான் சிறப்பாகச் செயல் படுவதுடன், கூடுதல் வசதிகளையும் அளிக்கிறது.http://www.lettermelater.com/  என்ற முகவரியுள்ள தளத்தில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுக்க வேண்டும். உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும். பின் மின்னஞ்சல் கடிதத்தினைத் தயார் செய்து, அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் நாளினையும் பதிந்து வைக்க வேண்டும். உடனேயே உங்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் பதிந்து வைத்த எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய இமெயில் குறித்த செய்தி அனுப்பப்படும். பின் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நீங்கள் பதிந்த இமெயில் அனுப்பப்படும். பதிந்த நாளுக்குப் பின், தயாரித்த இமெயில் செய்தியில் ஏதேனும் எடிட் செய்திட வேண்டுமானால் இந்த தளம் சென்று, பாஸ்வேர்ட் கொடுத்து, மெயிலைத் திறந்து சேர்க்கலாம். பைல்களை அட்டாச் செய்திடலாம். 
2. Eternity Message: இந்த வசதியும் மேலே குறிப்பிட்ட வசதியைப் போலவே செயல்படுகிறது. இந்த தளத்தின் மூலம் எச்.டி.எம்.எல். மெசேஜ் தயார் செய்திடும் வசதி கிடைக்கிறது. இதில் ட்ராப்ட் வடிவில் மெயில்களைத் தயாரித்து ஜஸ்ட் சேவ் செய்து வைத்திடலாம். அவற்றை அனுப்ப எண்ணினால், பின் அனுப்ப வேண்டிய தேதி குறிப்பிட்டு மார்க் செய்து வைக்கலாம். இந்த வசதியைப் பெற http://eternitymessage.com  என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். 
3. l8r: எதிர்கால இமெயில் சேவை இந்த பெயரில் கிடைக்கிறது. இந்த தளத்தைப் பொறுத்த வரை நீங்கள் மார்க் செய்து வைத்த மின் அஞ்சல்கள் குறித்து, அவ்வப்போது உங்கள் மின் அஞ்சலுக்கு நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்படும். இது போல நீங்கள் சொல்லியபடி மெயில் குறிப்பிட்ட நாளில் அனுப்பப்பட இருக்கிறது என்று தகவல் அனுப்பப்படும். இதன் மூலம் நாம் குறித்துவைத்தவை நமக்கு நினைவூட்டப்படுகின்றன. இந்த வசதி கிடைக்க http://www.l8r.nu/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும். 
4. FutureMail: எதிர்காலத்திற்கென மார்க் செய்யப்படும் இமெயில்களை இந்த வசதியின் மூலமும் அனுப்பலாம். அவ்வாறு குறிக்கப்பட்ட மெயில்களை ஆர்.எஸ்.எஸ். பீட்ஸ் ஆகவும் காணலாம். இந்த வசதி http://futuremail.bensinclair.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. 
5. Email Future: பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அனுப்ப வேண்டிய இமெயில் கடிதங்களை எங்காவது பதிந்து வைத்து அனுப்புமாறு செய்திடலாமா? அந்த வசதியை Email Future தருகிறது. இந்த வசதியைப் பெற நீங்கள் அணுக வேண்டிய தள முகவரி –http://emailfuture.com



6. Future Me:  எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய இமெயில்களைக் குறிப்பிட்டு சேவ் செய்திட முடியும் என்றால், நமக்குத் தேவையான நினைவூட்டும் கடிதங்களையும் எழுதிப் பதிந்து வைக்கலாமே. அவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அனுப்புமாறு செய்திடலாமே. அப்படிப்பட்ட ஒரு மெயில் வசதிதான்  Future Me ஆகும். இதனைப் பெற http://www.futureme.org/ என்ற முகவரிக்குச் செல்லவும். 
7. Email Capsule:  இதுவும் எதிர்காலத்தில் இமெயில் அனுப்பும் வசதியாகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளமுகவரி: http://www.bored.com/ emailcapsules/



8. Mail Freezer : வேடிக்கையான எதிர்கால இமெயில் வசதி இது. இதன் பெயர் கூறுவது போல, இந்த தளத்தில் இமெயில்களை வெகு காலத்திற்கு ப்ரீஸ் செய்து வைக்கலாம். ஒன்று, இரண்டல்ல, நூறு ஆண்டுகளுக்குக் கூட இதில் இமெயில்களைச் சேர்த்து வைக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஆண்டு, நாள் குறித்து அனுப்பும் வசதி இதில் இல்லை. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி :http://www.mailfreezr.com/



9. WhenSend:  மிக எளிமையான வசதி. மெயிலை எழுதி என்று அனுப்ப என்று குறித்துவிட்டு வந்துவிடலாம். மெயில் சரியாக அனுப்பப்பட்டுவிடும். செல்ல வேண்டிய தள முகவரி: http://www.whensend.com



10. YouScribbleYou: குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு இமெயில் செய்தியினைத் தொடர்ந்து அனுப்ப வேண்டுமா? இந்த வசதி உதவுகிறது. ஒரே இமெயிலை இரண்டு முகவரிகளுக்கு அனுப்பும் வசதியையும் தருகிறது. இதனைப் பெறச் செல்ல வேண்டிய இணைய முகவரி:http://www.youscribbleyou.com


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP