சமீபத்திய பதிவுகள்

“போதை” லேகியம்:கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்கள் மயக்கம்

>> Friday, May 7, 2010

"போதை" லேகியம் சாப்பிட்டதால் கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்கள் மயக்கம்; டி.வி.யில் மீண்டும் ஒளிபரப்பியதால் பரபரப்பு

நகரி, மே. 7-
 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையம் அடுத்த பத்தூர் வல்லம் பகுதியில் அமைந்துள்ளது கல்கி பகவான் ஆசிரமம். இங்கு கல்கி பகவானாக இருப்பவரின் உண்மையான பெயர் விஜயகுமார். இதற்கு முன்பு இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தார். இவரது மனைவி புஜ்ஜம்மா. இவர் தற்போது தனது பெயரை அம்மா பகவானாக மாற்றிக்கொண்டு பத்மாவதி தாயாரின் அவதாரம் என்று கூறி வருகிறார்.
 
இந்த 2 பகவான்களையும் வழிபட தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் செல்கிறார்கள். இங்கு வரும் பெண் பக்தர்கள் போதை பிரசாதம் கொடுத்து கற்பழிக்கப்படுவதாக கடந்த மாதம் ஆந்திர மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
 
மேலும் அங்கு போதையில் பெண்கள் ஆட்டம் போடுவது ஏ.பி.என். தெலுங்கு டி.வி.யில் ஒளிபரப்பானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் ஏ.பி.என். டி.வி.யில் நேற்று இரவு கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்களுக்கு "போதை" லேகியம் கொடுக்கப்படும் காட்சிகள் மீண்டும் ஒளிபரப்பானது. அதில் பெண்கள் போதை லேகியம் சாப்பிட்டதும் ஆட்டம் போடுவதும் பின்னர் மயங்கி விழுவதுமாக இருந்தனர்.
 
முதன் முதலாக இந்த லேகியம் சாப்பிடுவோரின் வாயில் இருந்து நுரை தள்ளுகிறது. அவர்களை அங்குள்ள ஊழியர்கள் (தாசாஜிக்கள்) தூக்கிச் சென்று தண்ணீர் தெளிக்கிறார்கள். ஆனாலும் போதை லேகியம் சாப்பிடுவதால் 24 மணி நேரம் கழிந்தே அவர்கள் விழிக்கிறார்கள். இக்காட்சிகளை பார்த்த ஆந்திர மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
 
கல்கி பகவான் ஆசிரமத்தில் பணியாற்றிய சாந்தி என்பவர் கூறும்போது, நான் கடந்த சில ஆண்டுகளாக கல்கி பகவான் ஆசிரமத்தில் தாசாஜியாக (தன்னார்வ ஊழியர்) பணியாற்றினேன்.
 
அப்போது ஆசிரமத்திற்கு வரும் ஆண்-பெண்களிடம் ராமகிருஷ்ணன பரமஹம்சர், மீராபாய், ரமணமகரிஷி போல் முக்தி அடைய ஆசைப்படுகிறீர்களா? என்று விஜயகுமார் (கல்கி பகவான்) கேட்பார். முக்தி அடைய விரும்பும் பக்தர்களுக்கு போதை கலந்த லேகியத்தை கொடுக்கச் சொல்வார்.
 
அந்த போதை லேகியத்தை சாப்பிடும் அனைவரும் 24 மணி நேரமும் மயக்க நிலையில் இருப்பர். அப்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. சில பெண்கள் அரை நிர்வாண கோலத்தில் ஆட்டம் போடுவார்கள். அதை விஜயகுமார் பார்த்து ரசிப்பார்.
 
மயக்க நிலையில் உள்ள பெண்களை ஆசிரம நிர்வாகிகள் சிலர் ரகசிய அறைகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பர்.
 
இதன் காரணமாக ஏராளமான பெண்கள் கர்ப்பமாகி உள்ளனர். அவர்களுக்கு ஆசிரமத்தில் வைத்தே கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இது அங்குள்ள ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும்.
 
இந்த ஆசிரமத்தில் நடைபெறும் கொடூர சம்பவங்கள் பற்றி போலீஸ், மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் குற்ற வாளிகள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறார்கள்.
 
போதை லேகியம் கொடுத்து ஏராளமான பெண்களை சீரழித்து வரும் விஜயகுமார், புஜ்ஜம்மா (அம்மா பகவான்) மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கல்கி பகவான் ஆசிரமத்தில் முக்திக்காக கொடுக்கப்படும் லேகியம் சாப்பிட்டபலர் வயிறு சம்பந்தமான நோய், மஞ்சள் காமாலை, சிறுநீரக கோளாறால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆசிரமம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கல்கி பகவான் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் ரோசையாவை கண்டித்து மகளிர் அமைப்புகள், பொது நல அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த திடீர் கொந்தளிப்பால் கல்கி ஆசிரம நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்

source:maalaimalar

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP