சமீபத்திய பதிவுகள்

பல் பாதுகாப்பு...

>> Tuesday, May 25, 2010


பல் பாதுகாப்பு...
Dr. A. ஆர்த்தி பிரகாஷ்


                   சென்ற இதழில் பற்குச்சி கொண்டு பல் துலக்கும் பல நல் வழி முறைகளை நாம் அலசினோம்.

இதற்கு நீங்கள் அனைவரும் சரியான பல் துலக்கும் முறையினை அறிந்து, தெளிந்து, கடைப்பிடித்து, நற்பயனை அடைய ஆரம்பித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

சரி...

பற்குச்சி உங்கள் பற்களில் உள்ள பிளேக்சை (Plaques) அகற்றிவிடும் என்று தப்போது நம்புகிறீர்களா?

அப்படி நீங்கள் நினைத்திருப் பீர்களேயாயின், தெரிந்துகொள்ளுங்கள். பற்குச்சியால் மட்டுமே பிளேக்சை முழுமையாக அகற்றிவிட முடியாது. வெளிப்புறங்களில் உள்ள பற்குச்சுகளால் தொடக் கூடிய பிளேக்சை மட்டுமே அகற்ற அது மிக மிக சரியான வழியாகும். பற்களுக்கு இடையே யுள்ள இடைவெளி களிலுள்ள பிளேக்சை பற்குச்சுகளால் தொடவும் முடியாது, முழுவதுமாக அகற்றவும் முடியாது.

எனவே, இந்த இடுக்குகளில் உள்ள பிளேக்குகளை அகற்ற, சிறப்பு சாதனங்கள் உள்ளன

தற்போது பலராலும் வாங்க முடிந்த, வாங்கி உபயோகிகக்கூடிய, சாதனமான இதை, சரியாக உபயோகிக்கும் முறைகளை பற்றி பார்ப்போமா..

அத்தகைய ஓர் எளிய, சிறிய, சீரிய சாதனமே பிளாசிங் (Flossing) எனப்படும். இது உலகெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு பயன்படுத்தப் படும் பொருளை (Dental floss)  டென்டல் பிளாஸ் என்பர்.

சில நாடுகளில் இம்முறையினை பற்கள் துலக்கும்போதே உபயோகிக்கப் பழகியுள்ளனர்.

இதனை உபயோகிக்க, சின்னஞ்சிறு சிறார்களை சிறு வயது முதலே பழக்கிவிடுகிறார்கள். அது என்ன பார்ப்போமா?

பிளாசிங் செய்யும் செம்மையான வழிகள்

மிக சிறிய நாடா போன்ற பொருளே டெண்டல் பிளாஸ் ஆகும். இது இன்று அனைத்து அங்காடி மற்றும் மருந்துக் கடைகளிலும் தாரளமாக கிடைக்கிறது. இதனைக்கொண்டு எப்படி நாம் நல்ல முறையில் பிளாசிங் செய்ய ஆரம்பிக்கலாம் என்பதை அறிவோம்.

ஒரு 45 செ.மீ. அல்லது 18 இஞ்ச் நீளம் கொண்ட பிளாசை எடுத்துக்கொண்டு அதனை 10 செ.மீ. அல்லது 4 இஞ்ச் நீளத்தில் இரு முனைகளிலும் நடு விரலில்சுற்றிக் கொண்டு கடைசி மூன்று விரல்களால் மடித்துப் பிடித்துக்கொண்டு 2 இஞ்ச் நீளத்தில் பிளாசை இரு ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்துக்கொண்டு பற்களின் இடையே செலுத்தி பற்களிலிருந்து ஈறுகளை நோக்கி நகர்த்தி தேய்க்கவேண்டும். மேலும் கீழும் மெதுவாக இம்முறையில் பிளாசை ஒவ்வொரு பல்லையும் சுற்றி மெல்ல வளைத்து மெதுவாக தேய்த்து விடவேண்டும். வேகமாகவோ, பலமாகவோ தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் அது மெல்லிய ஈறுகளை அறுத்து ஊறு விளைவிக்கும்.

பிளாசினை உபயோகித்துக் கொண்டே மெதுவாக நகர்த்தி, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சுற்றி சுற்றி நகர்த்ததிக் கொள்ள வேண்டும். இது போல் அனைத்து பற்களின் இடுக்குகளிலும் பிளாசிங் செய்ய வேண்டும். நன்றாக தேய்த்தப் பின் பிளாசை முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டே ஈறுகளுக்கு எதிர்புறமாக நகர்த்தி வெளியே எடுத்து விடலாம்.

பிளாசிங் செய்யாவிடில் என்ன நேரிடும்

பிளாசிங் செய்யாவிடில் இரு பற்களின் இடுக்குகளிலும் பிளேக்குகள் தங்கி கெட்டிப்பட்டுவிடும். இந்நிலையில் பல் மருத்துவரால் மட்டுமே அகற்ற முடியும் என்ற நிலைக்கு அதனை தள்ளியிருப்போம். நாளடைவில் பாக்டீரியாக்கள் இங்கு தங்கி ஈறுகளை உறுத்தி, ஊறுவிளைவித்து, பற்கள் வலுவிழந்து ஆடவும், எலும்புகள் தேயவும், வாய் நாற்றம் வீசவும் காரணமாகிவிடும்.

பற்களைத் தேய்ப்பதாலும், பிளாசிங் செய்வதாலும், பற்களுக்கு ஊறுவிளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாய் நாற்றம், ஈறு உபாதைகள், மற்றும் பல் இழப்பு இவைகளை தவிர்த்து, இனிய புன்னகையை வாழ்நாள் முழுதும் நமதாக்கிக்கொண்டு இன்புற்று வாழ்வோம்.

குறிப்பு

நிறைந்த முழு பயனை அடைய பற்களை முதலில் துலக்கி, பின்னர் உடனே பிளாசிங் செய்து முடித்து, அதன்பின் வாயினை நன்றாக கொப்பளித்து விடவேண்டும்.

உங்களின் வினாக்களுக்கு விடை தெரிய தொடர்பு கொள்ள  விலாசம்.

aarthiprakashdentalcare@gmail.com.


source:nakkheeran
--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP