சமீபத்திய பதிவுகள்

இந்த வார இணையதளம்

>> Friday, June 4, 2010


சயின்ஸ் ஸ்நாக்ஸ்
தலைப்பு சற்று வேடிக்கையாக உள்ளதா? இணையத்தில் உலா வருகையில் நானும் இதனைப் பார்த்து வியந்து உள்ளே சென்றேன். பின்னர் தான் தெரிந்தது, அங்கு உள்ள செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் மூளைக்கு தீனி (ஸ்நாக்ஸ்) போடும் அறிவியல் சமாச்சாரங்கள் என்று. மிக அற்புதமான பயனுள்ள இந்த தளத்தினை நாம் அனைவரும் தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். 
நாம் அன்றாடம் பார்க்கும் சில சாதாரண விஷயங்கள் குறித்து அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. ஆகாயம் ஏன் நீல நிறமாக இருக்கிறது? சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் ஏன் சிகப்பாக உள்ளது? பிளாஷ் லைட் எரிந்து அணைந்த பின்னர் அதன் இமேஜ் ஏன் நம் கண்கள் முன் தொடர்ந்து சில விநாடிகளுக்குத் தெரிகிறது? இரண்டு உதடுகளுக்கு இடையில் ஏன் சத்தம் வருகிறது?
இது போன்ற சாதாரண விஷயங்களுக்கு நாம் விளக்கங்களைத் தேடி எங்கு செல்வது? பல இணைய தளங்கள் இருந்தாலும்,http://www.exploratorium.edu/ snacks/index.html என்ற முகவரியில் உள்ள தளம், இந்த கேள்விகளுக்கு நல்ல விளக்கத்தினைத் தருகிறது. இது போன்ற பல விஷயங்கள் இதில் மிகவும் எளிமையாகவும், அனைத்து தகவல்களுடனும் தரப்பட்டுள்ளன.
தளத்தில் நுழைந்தவுடன் இரண்டு வரிசைகளில், மேலே காட்டப்பட்டிருப்பது போன்ற விஷயங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைத் தேடி, நாம் விரும்புவதைக் கிளிக் செய்தால், அங்கு நம் கேள்விக்கான விடை தரப்படுவதுடன், எளிய பொருட்கள் மூலம் எப்படி அவற்றை விளக்கலாம் என்றும் காட்டப்படுகிறது. இது தான் இந்த தளத்தின் சிறப்பு. Instructions, Advice, and Helpful hints  என மூன்று பிரிவுகளில் இவை தரப்படுகின்றன. நீங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதில் உள்ள எளிய செயல்பாட்டினை மேற்கொண்டால் போதும். விஷயங்கள் தெளிவாகும்.
தளத்தின் முகப்பு பக்கத்தில் சயின்ஸ் ஸ்நாக்ஸ் மூன்று பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளன. Science by Subject, Snack supplies, Snacks from az  என இவை உள்ளன. முதல் பிரிவில் கெமிஸ்ட்ரி, கலர், மின்சாரம் எனத் தொடங்கி, பாடப்பிரிவுகள் பதினாறு பெரிய பிரிவுகளில் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கிளிக் செய்தாலும் நாம் தேடும் தகவல்கள் கிடைக்கும். அறிவியலை மிக எளிதாகவும், விளக்கமாகவும் தரும் இந்த தளம், நாம் அடிக்கடி சென்று படித்து வர வேண்டிய ஒரு தளமாகும்.


source:dinamalar

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP