சமீபத்திய பதிவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றுள்ள இலங்கை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

>> Monday, June 28, 2010

கே.பி என்னும் துருப்புச் சீட்டை எடுத்து விளையாடும் இலங்கை!

 

இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டார் கே.பி என்றும், அவர் சிறையில் வாடுவதாகவும், அவரை இலங்கை அரசு சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கே.பி அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார், கே.பி இவருடன் பேசினார் என அரசல் புரசலாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 9 பேர் அடங்கிய தமிழர்கள் குழு ஒன்று அவரைச் சென்று சர்வசாதாரணமாக பார்த்துவிட்டு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து கே.பி நடத்திய பத்திரிகையாளர் மாநாடும் அதன் விபரங்களையும் லக்பிம வார ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பதை தென்னிலங்கை மக்கள் கூட அறியவில்லை. ஆனால் திடீரென கே.பி புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலருடன் வடக்கு – கிழக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து திரும்பிய கே.பி குழுவினர் கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வெள்ளை நிற காரில் வந்து இறங்கினார் பத்மநாதன். அவரின் பையை பாதுகாப்பு படையினரே சுமந்து வந்தனர். அவருக்கு தேவையான சிகரட்டையும் அவர்களே ஓடிச் சென்று வாங்கி வந்தனர் எனவும், கே.பியின் குழுவில் அங்கம் வகித்த 9 உறுப்பினர்களில் அவரது உறவினர்கள் சிலரும் இருந்ததாகவும் லக்பிம தெரிவித்துள்ளது. அது மேலும் குறிப்பிடுகையில்..

புலம் பெயர் தமிழர்கள் தற்போது இரண்டாகப் பிளவுற்றிருப்பதாக குறிப்பிடுகிறது. அதாவது கே.பியின் அபிமானிகள் என்று ஒரு பிரிவும், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என ஒரு பிரிவாக, புலம்பெயர் தமிழர்கள் இரண்டாகப் பிரிவுற்றுள்ளனராம். இதில் பிரித்தானியாவில் உள்ள பலர் கே.பியோடு தொடர்ந்தும் தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசில் அங்கத்துவம் வகிக்கும் சிலரும் இதில் அடங்குவர்.

கே.பியை துருப்புச் சீட்டாக வைத்து இலங்கை அரசு தற்போது ஒரு புதிய அரசியல் யுத்தக் களத்தை திறந்துள்ளதே இப்போது தோன்றியுள்ள நிலையாகும். இதனை புலம்பெயர் தமிழ் சமூகம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே பெரும் பாடாக உள்ளது. எங்கு குத்தினால் தமிழர்களுக்கு வலிக்கும் என்று தெரிந்து வைத்துள்ள இலங்கை அரசு, அதனை தற்போது பாவிக்கிறது. புரியவில்லையா? அதுதான் ""போராளிகளின் புனர்வாழ்வு"" ! இதனைப் பயன்படுத்தி துருப்புச் சீட்டாக கே.பியைக் களமிறக்கி இருக்கிறது இலங்கை அரசு. போராளிகளை வெளியே விட அவர்களுக்கு ஏதாவது கற்கை(கல்வி) கொடுக்கப்படவேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்துகிறதாம். அதனால் பெரும் நிதியை புலம்பெயர் நாடுகளில் திரட்டி அதனை இலங்கையில் பாவிக்க சில தமிழ் பிரமுகர்கள் நேரடியாகவே பிரயத்தனம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க, நாம் ஏற்கனவே எதிர் பார்த்தது போல கே.பிக்கு அரசாங்கம் ஒரு பொது மன்னிப்பை வழங்குவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அவர் அரசுக்கு விடுதலைப் புலிகளின் பெரும் பணத்தை வழங்கினார், மற்றும் கப்பல்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் என்று செய்திகளை சிங்கள மக்களிடம் திட்டமிட்டு இலங்கை அரசு பரப்பி வருகிறது. எனவே பிற்காலத்தில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும் சிங்கள மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பாது. அத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி என்ற வாசகங்களையே இலங்கை அரசு தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது, இந்நிலையில் சர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகள் தம்மோடு இணைந்தே செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தன்னை இனம் காட்டும் அபாயமும் உள்ளது.

அத்தோடு கே.பியின் வரவால், கருணா, ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், டக்ளஸ், மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இவர்கள் ஒரு பொது உடன்பாட்டிற்குள் வர சமீபத்தில் ஒன்றுகூடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கே.பி குழுவோடு சென்றிருந்த 9 பேரும், அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்ததாம், அந்தவேளை அங்கு வந்த அந்த குறிப்பிட்ட அமைச்சரை, தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக் கூற முற்பட்டவேளை, அவர் அதனைத் தவிர்த்து கையால் வணக்கம் மட்டும் சொன்னாராம், அத்தோடு இங்கு அரசியல் பேச வேண்டாம், நீங்கள் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை, அதனால் புனர்வாழ்வு பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.

சரணடைந்த பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றுள்ள இலங்கை அரசின் இராணுவம் போர்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் புரிந்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எனவே புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களுக்கு இடையே ஊடுருவி போர்குற்ற முன்னெடுப்புக்களைத் தடைசெய்யக்கூடும் அல்லது முன்னெடுக்கப்படும் விடயங்களை அறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முடியும். எனவே அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவோர் இது குறித்து மிகுந்த கவனம் கொள்வது நல்லது.

இலங்கை அரசின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து, தெளிவுபெறுதல், நல்லது. ஒரு சிலரின் சுயலாபம், மற்றும் அரசியல் நலனுக்காக எமது இனத்தின் மானத்தை அடகு வைக்கவேண்டாம். சூழ் நிலைக் கைதியாக இருக்கும் கே.பி குறித்தும் மிக அவதானமாகச் செயல்படுவதே நல்லது.இன்னும் சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ள கே.பி விரைவில்

இந்த மாதிரியான தோற்றத்தையே தமிழ் மக்களிடம் பெறப்போகிறார்.


source:athirvu
--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP