சமீபத்திய பதிவுகள்

குர்‍ஆன் எரிப்பு நாள் 9/11: இது சரியா? தவறா?

>> Saturday, August 7, 2010

 


 
 



குர்‍ஆன் எரிப்பு நாள் 9/11: இது சரியா? தவறா?


அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஒரு சபை, செப்டம்பர் 11ம் தேதியன்று, பன்னாட்டு குர்‍ஆன் எரிப்பு நாள் என்றுச் சொல்லி, அன்று குர்‍ஆனை எரிக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள். இதர கிறிஸ்த சபைகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த குர்‍ஆன் எரிப்பு நாளை தமிழ் கிறிஸ்தவர்களாகிய நாமும் எதிர்க்கிறோம். எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த புளோரிடா சபை போதகர் கீழ்கண்டவாறு கூறியுள்ளார், இஸ்லாம் என்பது ஒரு வன்முறை மார்க்கம், அது ஏமாற்றும் மார்க்கம் என்றுச் சொல்லியுள்ளார்.
Quote:
"We believe that Islam is of the devil, that it's causing billions of people to go to hell, it is a deceptive religion, it is a violent religion and that is proven many, many times," church pastor Terry Jones was quoted as saying by the CNN.

http://www.hindustantimes.com/US-church-to-burn-Quran-on-Sep-11/Article1-580352.aspx

BurnQuran.jpg

அவர் சொல்வது உண்மை தான், இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் தான், அது வன்முறையை தூண்டும் மார்க்கம் தான், ஆனால், நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு குர்‍ஆனை எரிப்பது என்பது சரியான வழி அல்ல‌.

புளோரிடா சபை போதகருக்கு:

புளோரிடா சபை போதகரே, உங்கள் கோபம் நியாயமானது, உலக வர்த்தக மையத்தை செப்டம்பர் 11ம் தேதியன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்கியது, கண்டிக்கப்படவேண்டியது தான். ஆனால், உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதம் சரியானது அல்ல. குர்‍ஆனை எரிப்பது சரியானது அல்ல, இது தவறானது.

குர்‍ஆன் எரிப்பதற்கு அல்ல, குர்‍ஆன் படிப்பதற்கு.

நீங்கள் உருப்படியாக ஏதாவது சமுதாயத்திற்கு நன்மை செய்யவேண்டும் என்று விரும்பினால், முதலில் இந்த குர்‍ஆனை எரிக்கும் இந்த செயலை விட்டுவிடுங்கள். இது தேவையில்லாத ஒன்று. குர்‍ஆனை எரித்து என்னத்தை சாதிக்கப்போகிறீர்கள். உங்கள் சுற்றுப்புற சூழலில், நல்ல காற்றோட்டம் இருக்கும் சூழலில் எரியும் புகையை பறக்கவிட்டு, நல்ல காற்றோட்டத்தை கெடுக்கப்போகிறீர்கள் அவ்வளவு தான்.

ஆனால், இதை விட நல்ல ஆலோசனை என்ன தெரியுமா? குர்‍ஆனை படியுங்கள், ஹதீஸ்களை படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படியுங்கள். இஸ்லாம் ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் இல்லை புரிந்துக்கொள்ள கடினம் என்றுச் சொல்வதற்கு, எனவே, குர்‍ஆனை படியுங்கள் எரிக்காதீர்கள்.

என் சமுதாயத்திற்கு நான் நன்மை செய்யவேண்டும், இஸ்லாமிலிருந்து மக்களை காப்பாற்றவேண்டும் என்று விரும்பினால், உங்கள் சபை மூலமாக இஸ்லாமிய குர்‍ஆன் வகுப்புகளை உருவாக்கி, நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள அவர்களை ஊக்குவியுங்கள். பைபிள் கல்லூரிகளில் இஸ்லாமை ஒரு பாடமாக வைத்து, அங்கு இஸ்லாம் பற்றிய உண்மையை கற்றுக்கொடுங்கள். எனனைக் கேட்டால், இஸ்லாம் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக்கொள்வதை விட, இஸ்லாமியர்கள் தான் அதிகமாக மொத்தமாக அறிய கடமைப்பட்டு இருக்கிறார்கள். இஸ்லாமின் கையில் மாட்டிக்கொண்டு, துன்பத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பது அவர்கள் தான். எனவே, அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய முழு அறிவை புகட்டுங்கள். அதோடு கூட, இஸ்லாமியரல்லாதவர்களும் இஸ்லாமை அறிந்துக்கொள்ள உதவி செய்யுங்கள், முடிந்தது வேலை.


மக்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவை புகட்டுங்கள், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் பொய்யை உலகிற்கு தெரிவியுங்கள். இஸ்லாமிய வாதம் புரிய அனேகர் உருவாகியுள்ளனர், உதாரணத்திற்கு சாம் ஷமான், டேவிட் உட், ராபர்ட் ஸ்பென்சர் போன்றவர்கள் இருக்கிறார்கள், இவர்களை அழைத்து இஸ்லாமிய அறிஞர்களோடு பல தலைப்புக்களில் விவாதம் புரியவையுங்கள்.

முஹம்மதுவின் வாழ்க்கையை முழுவதுமாக மக்கள் அறியும்படி செய்யுங்கள்.

குர்‍ஆனை எரிப்பதை விட, அதை படிப்பதினால் அதிக நன்மை உண்டாகும் என்பது என் கருத்து.

சத்தியத்திற்கு எதிர்த்து நிற்க குர்‍ஆனுக்கு சக்தியில்லை, இஸ்லாமுக்கும் சக்தி இல்லை, எனவே, இயேசு சொன்னது போல, சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும் என்பதை மனதில் வைத்தவர்களாக, இந்த குர்‍ஆன் எரிப்பு வேலையை நிறுத்திவிடுங்கள்.





--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP