சமீபத்திய பதிவுகள்

வேர்ட் டிப்ஸ்

>> Wednesday, September 15, 2010


வேர்டில் எல்லைக் கோடு அச்சிட
வேர்ட் தொகுப்பில் ஆவணங்களைத் தயாரிக்கையில், பக்கங்கள் அழகாகக் காட்சி அளிக்க பார்டர்களை ஏற்படுத்தி அச்சடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் நமக்கு வாசகர்களிடம் இருந்து வரும் கடிதங்களில் பலர், இந்த எல்லைக் கோடுகள் சில வேளைகளில், மேலே உள்ளவையோ, பக்கவாட்டில் உள்ளவையோ, அச்சிட மறுக்கின்றன என்று தெரிவித்து, அதனை எப்படி அச்சிடவைப்பது என்றும் கேட்டுள்ளனர். 
முதலில் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்வோம். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்குக் காரணம், பார்டர் கோடுகளை மிகப் பெரிதாக அமைப்பதுதான். எல்லை மீறிச் செல்லும் இந்த பெரிய எல்லைக் கோடுகளை அச்சுப்பொறியால் அச்சிட இயலுவதில்லை. அனைத்து பிரிண்டர்களும், தாளின் ஓரங்களைச் சுற்றி "dead space"  என்று ஓர் இடத்தைக் கொள்கின்றன. இந்த இடமானது பிரிண்டரால் பயன்படுத்த என பிரிண்டர் ஒதுக்கிக் கொள்கிறது. எனவே இதில் எதுவும் அச்சாகாது. ஒவ்வொரு பிரிண்டரும் ஒவ்வொரு வகையில் இந்த அச்சிடா இடத்தை வரையறை செய்துள்ளன. அது எவ்வளவு என்பதை பிரிண்டருடன் தரப்படும் குறிப்பேட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
எனவே நாம் இதனை உணர்ந்து நம் பார்டர் கோடுகளை அமைக்க வேண்டும். இதனை அமைத்திடும் வழிகளை வேர்ட் தருகிறது. நீங்கள் வேர்ட் 2007க்கு முன்னர் வந்த தொகுப்புகளைப் பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்குறித்துள்ளபடி செட்டிங்ஸ் அமைக்கவும்.
1.  Format  மெனுவிலிருந்து  Borders and Shading என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Borders and Shading டயலாக் பாக்ஸினைக் காட்டும். 
2.இந்த டயலாக் பாக்ஸில் Page Border  டேப் தேர்ந்தெடுக்கவும். 
3. பின்னர் இதில் Options  பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Border and Shading Options  என்ற  டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 
4. இதன் மூலம் மேல், கீழ், இடது மற்றும் வலது ஓரங்களை செட் செய்திடலாம். Dead SpaceUS  அதிகமாக இருக்கும் வகையில் செட் செய்திடவும்.  
5. அடுத்து இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றவும்.
1. ரிப்பனில் Page Layout என்ற டேப் காட்டப்படுகிறதா என்று பார்த்து, அதனைத் தேர்ந்தெடுக்கவும். 
2.  Page Background  குரூப்பில் Page Borders என்ற பக்கத்தினைக் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Borders and Shading  டயலாக் பாக்ஸில், Page Border   டேப்பினைக் காட்டும். 
3. அடுத்து ஆப்ஷன்ஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Border and Shading Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். 
4.இந்த டயலாக் பாக்ஸில் உள்ள கண்ட்ரோல்களைப் பயன்படுத்தி, உங்களுக்கு பார்டர் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதனை உறுதி செய்திடவும். வேர்டில் பாராகிராப் பார்டர் அமைப்பதற்கான கண்ட்ரோல் போலவே இவையும் செயல்படுகின்றன.
5. இவற்றின் மூலம் மேல், கீழ், இடது மற்றும் வலது ஓரங்களை செட் செய்திடலாம். Dead SpaceUS  அதிகமாக இருக்கும் வகையில் செட் செய்திடவும்.  
6. அடுத்து இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் அச்சடிக்கையில், இன்னும் ஆவணத்தின் எல்லைக் கோடுகள் அச்சிடப் படவில்லை என்றால், நீங்கள் செட் செய்த பேஜ் பார்டர் செட்டிங்ஸ் மற்றும் பேஜ் மார்ஜின் செட்டிங்ஸ் இணைந்து ஒத்துப் போகவில்லை என்று பொருள். உங்களுடைய பேஜ் பார்டர் செட்டிங்ஸ் Dead SpaceUS  அதிகமாக இருக்கும் வகையிலும், பேஜ் மார்ஜினுக்குக் குறைவாகவும் இருக்கும்படியும் செட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  எடுத்துக்காட்டாக, உங்களுடைய பேஜ் பார்டர், கீழாக  36 புள்ளிகளில், அதாவது ஒன்றரை அங்குல இடத்தில் அச்சிட செட் செய்யப்பட்டிருந்தால், பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்கான  பேஜ் மார்ஜின் இதனைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும்.  இதனை மீண்டும் சோதனை செய்து உறுதி செய்து பின் ஓகே கிளிக் செய்து  அச்சிட்டுப் பார்க்கவும். 
திறக்கும் பைல் உன்னுடையதல்ல! 
வேர்ட் தொகுப்பில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்த முனைகையில், அல்லது அதனை பெயர் மாற்ற, அழிக்க முற்படுகையில்,இந்த ஆவணமானது இன்னொருவரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி கிடைக்கும். நாம் ஒருவர் தானே கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த பைலைத் தான் மூடிவிட்டோமே, பின் ஏன் இந்த செய்தி என நாம் திகைப்போம். இந்த எதிர்பாராத செய்தி, திகைப்பினை சந்திக்காமல் இருக்க சிலவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
வேர்ட் எப்போதும் ஒரு டாகுமெண்ட் யாரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது, அல்லது மற்றவர் பயன்படுத்த முடியா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தேடி அறிந்து கொண்ட பின்னரே செயல்படும். இதன் மூலம் டாகுமென்ட் ஒன்றில் இருவர் ஒரே நேரத்தில் எடிட் செய்து சிக்கல் ஏற்படும் சூழ்நிலை தடுக்கப்படுகிறது.
நீங்கள் முதன்முதலாக வேர்ட் தொகுப்பினைத் திறக்கிறீர்கள். டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க முயற்சிக்கிறீர்கள். அப்போது அந்த டாகுமெண்ட் "locked for editing by another user?" என்று செய்தி கிடைக்கிறது. வேர்ட் உங்களுக்கு படிக்க மட்டுமே அந்த டாகுமெண்ட்டைத் திறக்கிறது. ஆனால் உங்களுக்கோ அதனை எடிட் செய்திட வேண்டும் என்பது நோக்கம். 
இங்கு என்ன நடக்கிறது என்பதனை வேர்ட் எப்படி ஆவணங்களைத் திறக்கிறது என்பதனைப் பார்த்து புரிந்து கொள்ளலாம். நீங்கள் டாகுமெண்ட் ஒன்றைத் திறக்கையில், வேர்ட் அந்த டாகுமெண்ட்டிற்கான owner file  ஒன்றைத் திறக்கிறது. அந்த பைல் நீங்கள் திறக்க இருக்கும் அதே பைல் பெயரில் திறக்கப்படுகிறது. அந்த பெயருக்கு முதலாக ஒரு டில்டே அடையாளம் (a tilde (~))  இருக்கும். இதனை அடுத்து ஒரு டாலர்(($))   அடையாளமும் இருக்கும்.  எடுத்துக் காட்டாக நீங்கள் திறக்க விரும்பும் கோப்பின் பெயர் BigBudget.doc  என்றால், வேர்ட்  ~$gBudget.doc   என்ற பெயரில் இன்னொரு கோப்பிற்கு உரிமையுள்ளவருக்கென ஒரு பைலைத் திறக்கிறது. 
இந்த உரிமையாளருக்கான பைல் மூலம் தான், வேர்ட் அப்போது அந்த டாகுமெண்ட்டை யார் திறந்து வைத்துப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து கொள்கிறது. இது ஒரு தற்காலிக பைல் தான். (நீங்கள் பைலை மூடுகையில் இது அழிக்கப்படுகிறது) இந்த பைலில் தான், அந்த ஆவணத்தைத் திறந்தவர், கம்ப்யூட்டரில் எந்த லாக் இன் பெயரில் நுழைந்தாரோ அவரின் பெயர் இருக்கும். பைல் அழிக்கப்படுகையில் அதுவும் நீக்கப்படும்.
இங்கு தான் பிரச்னையே தொடங்குகிறது. ஆரம்பத்தில் சொன்னபடி என்ற செய்தி வருகிறது என்றால், அதற்கான காரணம் கீழ்க்குறித்த மூன்றில் ஒன்றாக இருக்கலாம். 
1. வேர்ட் தொகுப்பு, இறுதியாகப் பயன்படுத்தப் பட்ட போது, சரியாக மூடப்படவில்லை. இதனால் அது உருவாக்கிய தற்காலிக பைல் அழிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் கம்ப்யூட்டருக்கு வந்த மின்சாரம் திடீரென தடை பெற்று, இயக்கம் முடங்கிப் போயிருக்கலாம். 
2. இந்த டாகுமெண்ட், நெட்வொர்க் ஒன்றில் இன்னொருவரால் திறக்கப்பட்டிருக்கலாம். 
3.  வேர்ட் தொகுப்பு இரண்டாவது முறையாகத் திறக்கப்பட்டு அங்கே இந்த டாகுமெண்ட் திறக்கப்பட்டிருக்கலாம். 
மேலே சொன்ன எவையும் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை எனத் தெளிவாக நீங்கள் உறுதி செய்து கொண்டால், நீங்கள் இந்த டாகுமெண்ட்டைக் கீழ்க்காணும் வழிகளில் சென்று பத்திரமாக, உங்களுக்காகவே, எடிட் செய்வதற்காகவே திறக்கலாம்.
1. உங்களுடைய சிஸ்டத்தில் வேர்ட் எத்தனை முறை திறக்கப்பட்டிருந்தாலும், அனைத்தையும் மூடவும்.
2. டாஸ்க் மேனேஜர் விண்டோவினைத் திறக்கவும். (கண்ட்ரோல் + ஆல்ட்+டெலீட் - Ctrl+Alt+Del  அழுத்தவும்)
3. அப்ளிகேஷன்  (Application) டேப் தேர்ந்தெடுத்து, அதில் வேர்ட் இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தால், அதனைத் தேர்ந்தெடுத்து நிறுத்தவும்.  நீங்கள் மேலே 1ல் கூறியதனைச் சரியாக நிறைவேற்றி இருந்தால், இந்த டேப்பில் வேர்ட் இயக்கத்தினைக் காண முடியாது.
4. அடுத்து  Processes  டேப்பினைப் பார்க்கவும்.
5. Processes  பட்டியலில்  Winword.exe  என்ற பைல் பெயர் உள்ளதா எனப் பார்க்கவும். இருந்தால் அதனைத் தேர்வு செய்து End Process  என்பதில் கிளிக் செய்திடவும். எச்சரிக்கை செய்தி கிடைக்கும். யெஸ் என அனுமதி தரவும். இந்த செயல்பாடு எதற்காக என்றால், வேர்ட் சில வேளைகளில் குழப்பமடைந்து, உங்கள் கம்ப்யூட்டர் மெமரியில் சில வேலைகளை விட்டு வைக்கும்.
6. டாஸ்க் மேனேஜரை நிறுத்தவும்.
7. அடுத்து விண்டோஸ் எக்ஸ்புளோரர் பயன்படுத்தி, நீங்கள் திறக்க விரும்பும் கோப்பு உள்ள போல்டரைத் திறக்கவும். அதில் மேலே சொன்ன டில்டே மற்றும் டாலர் அடையாளங்களுடன், நீங்கள் தேடும் பைலின் பெயரையும் கொண்டு ஒரு பைல் இருந்தால், அதனை அழிக்கவும்.   இப்போது நீங்கள் திறக்க விரும்பும் பைலை, உங்களுடையதாக, உங்களுக்கே உரிமையானதாக நீங்கள் திறந்து எடிட் செய்திடலாம்.


source:dinamalar

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP