சமீபத்திய பதிவுகள்

ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய காணொளி

>> Wednesday, November 17, 2010

நியுயோர்க் தமிழ் ஊடக குழு என்னும் ஒரு அமைப்பு தமிழ் தாயொருவர் கூறிய சோகங்களையும் அவரின் ஏக்கங்கள் மற்றும் கனவுகளையும் வைத்து ஒரு காணொளியை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இக்காணொளி ஆனது, ஈழத்தமிழரின் அவலங்கள் இழப்புக்கள் மற்றும் ஏக்கங்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

ஒளிப்படங்கள், காணொளிப்பதிவுகள் மற்றும் பாடல்கள் மூலம் அதன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அவலங்களுக்கு பின்னரும் இழந்த எமது தமிழீழத்தை மீட்டு எடுப்பதற்காக இன்று புலம்பெயந்த நாடுகளில் ஒரு அமைப்பு மெதுவாகவும் மற்றும் பலமாகவும் தோன்றி வருகின்றது.

அது மேற்கொண்டு வரும் பல்வேறுபட்ட முயற்சிகள் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் மூலம் தமிழீழம் மீட்கப்படும் என்ற நம்பிக்கையையும், சர்வதேசம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்னிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு ஒரு தாய் காணும் கனவாகவும் இது காண்பிக்கப்பட்டுள்ளது. அது நனவாகும் என்ற எதிர்பார்புடனும் இவ் காணொளி தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

இக் காணொளியானது நாடுகடந்த அரசாங்கத்தினது அல்ல. இது நியுயோர்க் தமிழ் ஊடக குழு என்னும் ஒரு அமைப்பினது ஆகும். இக்காணொளியானது உணர்வுபூர்வமாகவும், கவரும் வகையிலும் பாடல்கள் மற்றும் காட்சியமைப்பு அமைந்திருந்தமையாலும், எமது பரப்புரை மற்றும் இலக்கு நோக்கி பயணிப்பதற்கு உந்து சக்தியாக இருக்கும் என்ற காரணத்தினாலும் இதனை இணைத்துள்ளோம். இது ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய காணொளி ஆகும்.source:nerudal
--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP