சமீபத்திய பதிவுகள்

பயர்பாக்ஸ் ட்ரிக்ஸ்

>> Tuesday, January 12, 2010

 
 

பயர்பாக்ஸ் பிரவுசர் குறித்து பல்வேறு டிப்ஸ்களும் தகவல்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இந்த டிப்ஸ்களே அதன் பயன்பாட்டிற்கும் அடிப்படையாய் அமைகின்றன. அண்மையில் அதிகம் அறியப்படாத வசதிகள் சிலவற்றை பயர்பாக்ஸ் தொகுப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்பட்டது. அவை அனைத்துமே ஒருவருடைய பிரவுசிங் அனுபவத்தினை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் அமைப்பதாக உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
1. டேப்களுக்கு காப்பி அமைக்க: ஒரு குறிப்பிட்ட டேப்பில் அதற்கான திறக்கப்பட்ட தளம் இருக்கும். இப்படியே நிறைய தளங்களைத் திறக்கலாம். சில வேளைகளில் இரு முனைகளில் உள்ள டேப்களில் உள்ள தளங்களை அடுத்தடுத்து பார்க்க வேண்டியதிருக்கும். அப்படியானால் ஒரு முனையில் உள்ள டேப்பினை அடுத்த முனையில் உள்ள தளம் அருகே இழுத்து வைக்கலாமா? அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கு ஒரு காப்பி எடுத்து, இன்னொரு முனையின் அருகே அமைத்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா! அதெப்படி ஒரு டேபிற்கு காப்பி அமைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதா! ஆனால் காப்பி அமைக்க முடியும் என்பதே உண்மை. எந்த டேப்பிற்கு காப்பி அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதன் மீது கர்சரை வைத்து, பின் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே அதனை இழுத்து வந்து, டேப் பாரில் காலியாக உள்ள இடத்தில் விடவும். இப்போது விட்ட இடத்தில் அந்த டேபிற்கான காப்பி கிடைக்கும். இதனையும் திறந்து இயக்கலாம். தேவையில்லை என்றால் ஒன்றை மட்டும் மூடிவிடலாம்.
2.டூல்பாரில் சிறிய ஐகான்கள்: இது ஒரு சின்ன வசதிதான். இருந்தாலும் பலர் இதனை விரும்பிப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணுகிறேன். நேவிகேஷன் பட்டன்களை சிறிதாக அமைக்க விரும்புகிறீர்களா! டூல்பாரில் உள்ள ஹோம் ஐகான் மீது கர்சரைக் கொண்டு ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் கஸ்டமைஸ் (Customize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் கட்டத்தில் உள்ள ஐகான்களை நீக்கலாம்; அல்லது புதியனவற்றை இணைக்கலாம். அதே நேரத்தில் யூஸ் ஸ்மால் ஐகான்ஸ் என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் ஐகான்கள் அனைத்தும் சிறியதாகக் காட்டப்படும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மனித குண்டுகளாக மாறும் 7 வயது சிறுவர்கள்: இங்கிலாந்து போலீசார் தகவல்

 
 லண்டன், ஜன 11-
 
இங்கிலாந்தில் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே, இவை எங்கிருந்து உருவாகிறது என்று இங்கி லாந்து போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
 
அப்போது, இங்கிலாந்தில் ஒரு பிரிவை சேர்ந்த சிறுவர் கள் மனித குண்டுகளாக மாற விரும்புவது தெரிய வந்தது. அவர்கள் 7 வயது முதல் 10 வயது வரை உள்ளவர்கள்.
 
இவர்கள் தொடக்க பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பிட்ட சில வெப்சைட்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
 
பாட புத்தகங்களில், நான் மனித குண்டாக மாற விரும்புகிறேன் என்று எழுதி வைக்கின்றனர் என பள்ளி ஆசிரியர்களே வருத்தப்படுகின்றனர்.
 
இந்த தகவலை தி டெலி கிராப் ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வன்முறை எண்ணம் கொண்ட 228 இளைஞர்கள் மற்றும் "டீன்ஏஜ்" பிரிவினரின் மனதை சீர்படுத்தி நல்வழிக்கு திருப்பும் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசு ஈடுபட்டுள்ளது

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்....


 

ஒரே டேட்டா – பல செல்கள்
எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.
செல்களை இணைத்து தலைப்பை உருவாக்க எக்ஸெல் ஒர்க் புக் தயாரிக்கும் போது, ஏதேனும் ஒரு தலைப்பை முதலில் உருவாக்க விரும்புவோம். இதனை ஒரு செல்லில் உருவாக்குவதைக் காட்டிலும், பல செல்களை ஒன்றாக்கி அமைத்தால் பார்க்க எளிதாக இருக்கும். இவ்வாறு பல செல்களை ஒன்றாக ஆக்குவதே மெர்ஜிங் செல்ஸ் ("merging cells") என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முதலில் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார்(Formatting toolbar)  செல்ல வேண்டும். இங்கே Merge and Center என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இப்போது நாம் தேர்ந்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நாம் விரும்பும் தலைப்பினை டைப் செய்து அமைத்துக் கொள்ளலாம். 
நீளமான எண்ணை டைப் செய்திட எக்ஸெல் செல்களில் எண்களை டைப் செய்தால் அதன் வழக்கப்படி 15 இலக்கங்களுக்கு மேல் அது அனுமதிக்காது. அப்படி டைப் செய்தால் அவற்றைத் தன் பாணியில் வடிவமைத்து ஒரு சைபரைச் சேர்த்துவிடும். ஆனால் நமக்கு ஒரு கிரெடிட் கார்டு அல்லது வங்கி அட்டை எண் போல பல இலக்கங்கள் அடங்கிய எண் வேண்டுமென்றால் என்ன செய்திடலாம். எண்ணுக்கு முன்னால் ஒரு ஒற்றை மேற்கோள் குறியைப் (apostrophe)  போட்டு டைப் செய்திடவும். 
சில சுருக்கு வழிகள்
Ctrl1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்



F2செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். 
CtrlPage Up:  ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். 
CtrlPage Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். 
CtrlShift":  இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். 
Ctrl': இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். 
CtrlR: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும். 
CtrlD: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும். 
Ctrl': செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக்களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்கு வழியைப் பயன்படுத்தலாம். 
Ctrl$:  கரன்சி மதிப்பை இரண்டு தசம ஸ்தானங்களுக்கு தரும் வகையில் பார்மட் செய்திட இந்த சுருக்கு வழி பயன்படுகிறது.



மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி சொல்யூசன்ஸ்
விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளுக்கான பாதுகாப்பு வளையம் தரும் பைல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்ற செப்டம்பர் மாதம் இது பன்னாட்டளவில் தரப்பட்டது. தற்போது இந்தியாவில் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டும் இது இலவசமாகத் தரப்படுகிறது. இந்த தொகுப்பில் ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி மால்வேர் மற்றும் ஆண்ட்டி ஸ்பைவேர் என மூன்று வகையான பாதுகாப்பு தரப்படுகிறது. கட்டணம் செலுத்தி மைக்ரோசாப்ட் இயக்கத் தொகுப்பினைப் பெற்று, பதிவு செய்து இயக்குபவர்களுக்கு மட்டும் இந்த பாதுகாப்பு பைல்கள் கிடைக்கும். இந்த பாதுகாப்பு தரும் பைல்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அப்டேட் செய்யப்படும். இன்டர்நெட் இணைப்பில் சிஸ்டம் இருக்கையில் இவை வேலிடேட் செய்யப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. 
இந்தியாவில் பிஷ்ஷிங் புரோகிராம்கள் மூலம் பலர் பாதிக்கப்படுவதால், இத்தகைய பாதுகாப்பு வளையங்கள் அடங்கிய புரோகிராம்கள் அவசியம் தேவைப்படுகின்றன. எனவே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இவற்றைத் தருகின்றோம் என்று மைக்ரோசாப்ட் நுகர்வோர் பாதுகாப்பு நிர்வாகி ஸ்ரீவத்சவா கூறினார்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கை தொடர்பாக டப்ளினில் மக்கள் நீதிமன்றத்தின் அமர்வு : உலகின் முன்னணி கல்விமான்கள் பங்கேற்பு


 

altஅயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள திருத்துவக் கல்லூரியில் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை இலங்கையின் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான நிரந்தர மக்கள் நீதிமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.

 

 

"போர்க்குற்றங்கள்" மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவே இந்த மக்கள் நீதிமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. 2006/ 2009 இற்கிடையிலான புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான இந்த மக்கள் நீதிமன்ற அமர்வை இலங்கையில் சமாதானத்துக்கான ஐரிஷ் மன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்திச் சேவை தெரிவித்தது.


ஆசியாஇ ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகியவற்றைச் சேர்ந்த சட்ட மனித உரிமைகள் குழுக்கள் நீதிமன்ற அமர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருக்கும் அதேசமயம், நீதிமன்றத்தின் முன்னால் போர்க்குற்றங்கள் தொடர்பாக தனிப்பட்டவர்கள் குழுவினர் அறிந்த விடயங்கள் தொடர்பாக சாட்சியமளிப்பார்கள்.


மக்கள் நீதிமன்றக் குழுவில் உலகின் சில முன்னணி புத்திஜீவிகள், கல்விமான்கள், ஜூரர்களும் இடம்பெறுகின்றனர். இந்தியாவின் டில்லி மேல் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதிபதி ராஜிந்தர் சச்சாரும் இலங்கை யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பரிசீலிக்கவுள்ளனர். 


யுத்தத்தின் இறுதிக்கூட்டம் தொடர்பாக வெளியான அறிக்கைகள் தொடர்பாக நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்ற கருத்தைக் கொண்டிருந்த இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஷ் மன்றம் இந்த ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளது. 


யுத்தம் இடம்பெற்ற பகுதிக்கு பத்திரிகையாளர்கள் நிவாரணப் பணிப்பாளர்கள் போன்ற சாட்சிகள் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டதால் "சாட்சியம் இல்லாத யுத்தம்" என்ற கருத்தை இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஷ் மன்றம் கொண்டுள்ளது.


பிரெஞ்சு மருத்துவக் குழு தெரிவித்ததன் பிரகாரம், கொத்தணிக் குண்டுகள், வெள்ளி பொஸ்பரஸ் பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சித்திரவதை நீதிவிசாரணைக்குப் புறம்பான மரணதண்டனை, வல்லுறவு, பாலியல் வன்முறைகள், பொதுமக்களுக்கு எதிரான ஆயுதமாக உணவு, தண்ணீர் பயன்படுத்தப்பட்டமை போன்றவை தொடர்பாக ஊடக சான்றுகள் இருப்பதாக இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஷ் மன்றம் கூறியுள்ளது.


இராணுவத் தீர்வை அமுல்படுத்தியதன் மூலம் 60 வருடகால இன மோதலுக்கு வெற்றியாளரின் சமாதானம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 


இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வானது தீர்வாக அமைய முடியாது என்று 2002 இல் சர்வதேச சமூகம் உறுதி படத்தெரிவித்திருந்ததற்கு முரணானதாக இது இருப்பதாகவும் இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஷ் மன்றம் குறிப்பிட்டிருக்கிறது.


இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் சமூக, பொருளாதார, கல்வி அந்தஸ்து தொடர்பாக ஆய்வு செய்த குழுவுக்கு தலைமை தாங்கியிருந்த ராஜிந்தர் சச்சாருடன் அகிம்சை, சகிப்புத் தன்மைக்காக யுனெஸ்கோவின் விருதைப் பெற்றிருந்த பிராங்கோயிஸ் ஹெவ்ராட், பெண்கள் உரிமைகள் தொடர்பாக நன்கு அறியப்பட்ட எகிப்தின் எழுத்தாளர் நாவல் அல் சாதாவி, தாய்லாந்தின் பௌத்த சமாதான பணியாளர் சுயால்க் சிவரக்ஷ, ஐ.நா.வின் முன்னாள் உதவிச் செயலாளர் நாயகமும் சர்வதேச சமாதான விருதைப் பெற்றவருமான டெனிஸ் டல்லிடே, மிலானிலுள்ள பி.பி.ரி.யின் செயலாளர் நாயகம் கியானி ரொக்நோனி இனப் படுகொலைகள் தொடர்பான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் டானியல் பெயர்ஸ்ரீன், டப்ளினிலுள்ள மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பு மன்றத்தின் முன்னணி அமைப்பின் பணியாளர் மேரி லோவ்லர், சர்வதேச சட்டத்துறை கல்விமான் ஓய்ஸ்ரீன் ரிவெற்றர், துருக்கியிலுள்ள குர்திஸ்ஷில் பிறந்த மனித உரிமைகள் பணியாளர் எரென் கெஸ்ஸின் ஆகியோர் இந்த மக்கள் நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.


நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கும் உரைபெயர்ப்பதற்கும் பல முன்னணி மாண்புமிக்கோர் இணங்கியுள்ளனர். 


அவர்களில் இந்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணஐயர், எழுத்தாளர் அருந்ததி ரோய் ஆகியோரும் இடம்பெறுகின்றனர். 


source:swissmurasam


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 88-வது இடம்


 


புதுதில்லி, ஜன.10: உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 88-வது இடம் கிடைத்துள்ளது. இதில் பிரான்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.

 சர்வதேச சுற்றுலா வாரஇதழ் ஒன்று மக்களின் வாழ்க்கைத் தர அடிப்படையில் 2010-ம் ஆண்டின் சிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பிரான்ஸ் முதலிடம் பெற்றுள்ளது.

 ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா 7-வது இடத்தில் உள்ளது.

 உலகின் 194 நாடுகளை, 8 பிரிவுகளில் வகைப்படுத்தி 30-வது ஆண்டாக இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாழ்வாதாரம், கலாசாரம், பொருளாதாரம், சுகாதாரம், உள்கட்டமைப்பு, பருவநிலை போன்றவை முக்கிய அம்சமாக கொள்ளப்படுகிறது.

 இவை அனைத்திலும் இந்தியாவுக்கான புள்ளிகள் அதிகரித்துள்ளன. வாழ்வாதார பிரிவில் இந்தியா 65 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும். வாழ்வாதாரம் அதிகம் தேவைப்படும் நாடுகளில் இராக் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளன.

 இப்பிரிவில் பூடான், பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பர்மா ஆகிய நாடுகள் முறையே 80, 56, 65, 73, 64, 63, 75 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

 இடர் மற்றும் பாதுகாப்பு பிரிவில் பூடான், மாலத்தீவுகள் உள்ளிட்ட 55 நாடுகள் 100 புள்ளிகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளன. ஆனால், இராக், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இப்பிரிவில் பூஜ்ஜியம் புள்ளிகளையே பெற்றுள்ளன.

 இதில் இந்தியா மற்றும் நேபாளம் 64 புள்ளிகளையும்,இலங்கை 71 புள்ளிகளையும், பர்மா மற்றும் வங்கதேசம் 57 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

 அனைத்துப் பிரிவுகளிலும் அதிக புள்ளிகளைப் பெற்று சிறந்த நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. தொடர்ந்து 5-வது ஆண்டாக இப்பெருமையை பிரான்ஸ் பெற்று வருகிறது. இதில் 88-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

 அரசின் பல்வேறு வகையான புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து தான் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

source:dinamani

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஏரா​ள​மான நிலப்​ப​ரப்பை சீனா​வி​டம் இழந்​து​விட்​டோம்


 
 


புது​தில்லி,​ஜன.10: இந்​திய அர​சின் வெவ்​வேறு துறை​க​ளைச் சேர்ந்​த​வர்​க​ளி​டையே ஒருங்​கி​ணைப்​பும்,​​ ஆவ​ணங்​களை முறை​யா​கப் பரா​ம​ரிக்​கும் பழக்​க​மும் இல்​லா​த​தால் ஆயி​ரக்​க​ணக்​கான ஏக்​கர் நிலங்​களை சீனா​வி​டம் இழந்​து​விட்​டோம் என்ற அதிர்ச்​சித் தக​வல் வெளி​யா​கி​யி​ருக்​கி​றது.​

ஜம்மு-​காஷ்​மீர் மாநில எல்​லையை ஒட்​டிய பகு​தி​யில் ஆண்​டு​தோ​றும் சீனத்​தின் பரப்பு அதி​க​ரித்​துக் கொண்டே வரு​வ​தாக அவர்​க​ளு​டைய வரை​ப​டங்​கள் காட்​டும்​போ​தும் இந்​திய அர​சின் உரிய துறை அதி​கா​ரி​கள் அதில் அக்​கறை செலுத்​த​வில்லை.​ இத​னால் சர்​வ​தேச அள​வில் புழங்​கும் வரை​ப​டங்​க​ளில் இந்​தி​யா​வின் நிலப்​ப​ரப்பு குறு​கி​விட்​டது.​

ஜம்மு-​காஷ்​மீர் மாநி​லத்​தின் லே நக​ரில் சமீ​பத்​தில் நடந்த உயர் அதி​கா​ரி​கள் கூட்​டத்​தில் இது அம்​ப​ல​மா​னது.​ இதில் மத்​திய உள்​துறை அமைச்​சக அதி​கா​ரி​கள்,​​ மாநில உயர் அதி​கா​ரி​கள்,​​ ராணுவ அதி​கா​ரி​கள் ஆகி​யோர் கலந்​து​கொண்​ட​னர்.​

லே பகுதி ஆணை​யர் ஏ.கே.​ சாஹு இந்​தக் கூட்​டத்​துக்​குத் தலைமை வகித்​தார்.​ பிரி​கே​டி​யர் சரத் சந்த்,​கர்​னல் இந்​தர் சிங் உள்​ளிட்ட மூத்த அதி​கா​ரி​கள் இக்​கூட்​டத்​தில் கலந்து கொண்​ட​னர்.

source:dinamani
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP