சமீபத்திய பதிவுகள்

6,000 ஒட்டகங்களை எங்களிடம் தாருங்கள்

>> Thursday, January 21, 2010


 
 துபாய் : "உங்கள் நாட்டிலுள்ள ஒட்டகங்களைக் கொல்லாதீர்கள்; அவற்றை நேசிக்கும் எங்களிடம் அனுப்பி விடுங்கள்' என்று, ஆஸ்திரேலிய அரசிடம் சவுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமான ஒட்டகங்கள் உள்ளன. இவை, அந்நாட்டு விலங்கு அல்ல, ஆப்கானிஸ்தானிலிருந்து முன்பு 1840ல், ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை.

போக்குவரத்து பயன்பாட்டுக்காக வளர்க்கப்பட்ட அவை, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இரண்டு மடங்கு பெருகி விட்டன. இதனால், வடக்குப் பகுதியில் உள்ள 6,000 ஒட்டகங்களை அடுத்த வாரத்தில் கொன்று அழித்து விடப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து, ஒட்டகங்களை மிகவும் நேசிப்பவர்களான சவுதி மக்கள், இணையதளம் மூலம் ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், "ஒட்டகங்களைக் கொல்லாதீர்கள்; அவற்றை எங்களிடம் அனுப்பி விடுங்கள்' என்று கூறி வேண்டுகோள் விடுத்துள்ளனர்

source:dinamalar



மேலதிக செய்திகள்



விருத்தாச்சலம் கிளையில் கூட்டுக் குர்பானியாக ஓட்டகம்! 

DSC_0293தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கிளை சார்பாக கூட்டுக்குர்பானகியாக ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது. ஒட்டக இறைச்சி அப்பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது!

.tntj.net



 
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வங்கதேசத்தை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

சிட்டகாங்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

சிட்டகாங்கில் நடந்து வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றிருந்தாலும், இது மிகச் சிறப்பான வெற்றியாக கருத முடியாது. காரணம், முதல் இன்னிங்ஸில் இந்தியா ரன் சேர்க்க மிகக் கடுமையாக போராடியது. 

முன்னணி பேட்ஸ்மேன்கள் சட் சட் என அவுட் ஆகிப் போக சச்சின் புண்ணியத்தால் இந்தியா 243 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை இழந்தது.

வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்தியாவை வெறும் 2 வங்கதேசப் பந்து வீச்சாளர்கள் மட்டும் மொத்தமாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஆடிய வங்கதேச அணி 242 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்தியா தனது 2வது இன்னிங்ஸில், 413 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

மிகப் பெரிய வெற்றி இலக்கைத் துரத்தத் தொடங்கிய வங்கதேசம் தடுமாற்றத்துடன் தனது துரத்தலைத் தொடங்கியது.

இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. காரணம், வங்கதேச விக்கெட் கீப்பர், முஷ்பிகர் ரஹீம் போட்ட அபார சதம்தான். சிறப்பாக ஆடிய ரஹீம் 101 ரன்களைக் குவித்தார். 

மற்ற வீரர்களில் தமீம் இக்பால் 52 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

ரஹீமீன் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படவில்லை, மாறாக தாமதப்பட்டது.

இறுதியில் 301 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது வங்கேதசம்.

இதன் மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்தியத் தரப்பில், மிஸ்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இவர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 3, ஜாகிர் கான் 2 விக்கட்களை சாய்த்தனர். ஷேவாக்குக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.


source:thatstamil.oneindia

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

போணியாகாத பாகிஸ்தான் வீரர்கள் ; மூக்கறுப்பு என ஆவேசம்;

போணியாகாத பாகிஸ்தான் வீரர்கள் ; மூக்கறுப்பு என ஆவேசம்; நட்புறவும் பாதிக்குமாம்
 

Top world news stories and headlines detail இஸ்லாமாபாத்: டில்லியில் ஐ.பி.எல்., கிரிக்கெட் டுவென்டி 20 அணிக்கான ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் விலைக்கு வாங்கப்படாதது பாகிஸ்தானுக்கு கடும் கோபத்தையும் , எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு புறக்கணிக்கப்பட்டது இரு நாட்டு உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.



வரும் மார்ச் மாதம் 12 ம் தேதி டுவென்டி -20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான அணிகள் சார்பில் வீரர்களை ஏலம் எடுக்கும் வைபவம் மும்பையில் நடந்தது. இந்த ஏலத்தில் வெஸ்ட் இண்டீசின் அணி வீரர் கெய்ரன் போலார்டு மற்றும் ஷேன்பாண்ட் அதிகப்பட்சமாக மூன்றரை கோடி வரை விலை போயுள்ளனர். இந்த ஏலத்தில் பிரபல தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். பல ரவுண்ட்டுகளாக ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் முதல் ரவுண்டில் இந்திய வீரர் கைப் , பாகிஸ்தான் வீரர் அப்ரிதி, அக்மல் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இரண்டாவது சுற்றில் கைப் மட்டும் விலை போனார். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அப்ரிதி , அக்மல் ஆகிய இருவரையும் யாரும் வாங்கவில்லை. இதனால் அப்ரிதி கடும் அதிருப்தி வெளியிட்டார்.



பார்லிமென்டில் எதிர்ப்பு : இந்நிலையில் பாகிஸ்தான் பார்லிமென்டிலும் இந்த விவகாரம் வெடித்தது. இதில் எதிர்கட்சிகள் இந்தியாவின் இந்த மூக்கறுப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில் : இந்தியாவில் நடந்த ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது பாகிஸ்தானுக்கு மூக்கறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நடந்து கொள்வது இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். இந்தியாவில் இனி பாகிஸ்தான் விளையாடலாமா என்பது குறித்தும், கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சபாநாயகர் பக்மிதா மிர்சா கூறுகையில் : இந்தியாவுக்கு செல்ல வேண்டியிருந்த பாகிஸ்தானிய பார்லி., குழுவினர் செல்ல மாட்டார்கள். என கூறியுள்ளார். அந்நாட்டு துறை விளையாட்டு துறை அமைச்சரும் எதிர்காலத்தில் இந்தியாவுடனான விளையாட்டு ரீதியிலான ஒப்பந்தம் , நடவடிக்கை இருக்காது என்றும் கூறியுள்ளார்.



பாகிஸ்தானின் இந்த பேச்சுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்,எம்,கிருஷ்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்., அமைப்பு வர்த்தக ரீதியானது. இதற்கும் இந்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. வீரர்கள் விலை நிர்ணயிப்பது மற்றும் ஏலம் நடத்துவது ஐ.பி.எல்., தான் . இரு நாட்டு உறவை பாதிக்கும் படி இந்தியா நடக்கவில்லை. இந்திய அரசுக்கும், இந்த அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் நினைக்கிறது என்றார்.



பாதுகாப்பு பிரச்னை : பாகிஸ்தான் வீரர்களை ஐ.பி.எல்., திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது. அதாவது பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கும் பட்சத்தில் பாதுகாப்பு பிரச்னை மற்றும் தேவையில்லாத சட்ட ஒழுங்கு விவகாரம் எழும் என்ற சந்தேகத்தினால் பாக்., வீரர்கள் புறக்கணிக்கப்ப்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மும்பை தாக்குதல் அடுத்து இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரு நாடுகள் இடையே விளையாட்டு போர் துவங்கியாச்சு 


source:dinamaalr


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம்


பொது இடங்களில் பர்தா : பிரான்சில் அபராதம்

 

பாரிஸ் :   "பிரான்சில் பொது இடங்களில் பர்தா  அணிந்து நடமாடினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்ற புதிய சட்டம்  பிரான்ஸ் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, "பர்தா  அணிவது அடிமைத் தனத்தைக் குறிக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் பிரான்சில், இதுபோன்ற உடைகளை அனுமதிக்க முடியாது' என்று அறிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனம் வந்தாலும், இம்மாதம் முதல்வாரத்தில் பிரான்ஸ் பார்லிமென்டில், "பொது இடங்களில் பர்தா  மற்றும் நிக்கா  உடை அணிந்து வந்தால், 51 ஆயிரம் ரூபாய் (750 யூரோ) அபராதம் விதிக்கப்படும்' என்ற மசோதா கடும் வாக்குவாதங்களுக்கிடையில் சட்டமாக  நிறைவேற்றப்பட்டது.
அதிபர் கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ் கோப் இது குறித்து கூறியதாவது: உடலை முழுவதுமாக மறைத்து, கண்களுக்கு மட்டும் திரையிடும் பர்தாவுக்கும், உடலை மறைத்து கண் மட்டும் தெரியும் வகையில் உள்ள  நிக்கா உடைக்கும் இந்த அபராதம் பொருந்தும். கலாசார விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் மட்டும் இதற்கு விதிவிலக்கு உண்டு. இந்த சட்டம் மத அடிப்படையில் அல்ல. மத மற்றும் மதச்சார்பின்மை சார்ந்த அறிஞர்களிடம் நாங்கள் பேசிய போது, பர்தா  என்பது மத அடிப்படையில் உருவானதல்ல என்று அவர்கள் உறுதிபடுத்தினர். இவ்வாறு கோப் தெரிவித்தார்.



source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP