சமீபத்திய பதிவுகள்

அனோமா பொன்சேகா கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பல்

>> Tuesday, February 9, 2010

 

நேற்றைய தினம் சரத் பொன்சேகா இராணுவப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து இன்று தனது வீட்டில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவரது மனைவி அனோமா பொன்சேகா கண்ணீர்மல்க நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தாய்மாரையும் இளைஞர்களையும் குறிவைத்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனது கணவர் சட்டத்திற்குப் புறம்பான ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுதான் இலங்கையின் ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாய்மாரே இளைஞர்களே சகோதரிகளே எனக்கு உதவுங்கள் என்ற பாணியில் இந்த வேண்டுகோள் ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகமே இல்லை எனத் தொண்டை கிழிய அங்குள்ள தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் உலகிற்குச் சொல்லிவந்தபோது, சிங்களம் எள்ளி நகையாடியது. தற்போது அதே அவர்களுக்கு திரும்பவும் நடக்கிறது. 

இங்கு முக்கியமாக ஒரு விடயம் கவனிக்கப்படவேண்டும். சரத் பொன்சேகாவை அரசாங்கம் விடுவிக்காத பட்சத்தில் அனோமா பொன்சேகா களமிறங்குவார் என்பதில் ஜயமில்லை. அவர் பெண்கள் மற்றும் தாய்மார்களின் ஓட்டுக்களைக் கவரமுடியும். இந் நிலையை தமிழர்கள் சாதகமாக்கிக் கொள்வது அவசியம். புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகள் இது தொடர்பாக கவனம் செலுத்தி எதை எதைச் செய்வதன் மூலம், பிளவுபட்டுள்ள சிங்களம் மேலும் பிளவுபடும் என ஆராய்வது நல்லது. 






--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

எல்லா அப்ளிகேஷனுக்கும் அப்டேட்

 
 




 


விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான். அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம் களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும். எம்பி3, வீடியோ, தொலைபேசி, டிவி ட்யூனர், கேமரா மற்றும் மொபைல் இணைப்பிற்கான அப்ளிகேஷன் கள் என அனைத்தையும் நாம் கண்காணித்து அப்டேட் செய்வது எளிதா என்ன? சில வேளைகளில் இது போன்ற புரோகிராம்களுக்கு அப்டேட் இருப்பதாகச் சொல்லி, நம்மை ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு அழைத்துச் சென்று வைரஸ்களை நம் கம்ப்யூட்டருக்குள் தள்ளிவிடும் போலி புரோகிராம்களும் நிறைய உண்டு. இதற்கெல்லாம் விடிவாக நமக்கு ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர்Secunia PSI. (PSI Personal Software Inspector)  இதனை என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் உள்ள பழைய புரோகிராம்களுக்கு அவற்றின் நிறுவனங்கள் அப்டேட் தந்தாலும் தரவிட்டாலும், செகுனியா அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பின் பாதுகாப்பற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் என ஒரு பட்டியலை நமக்கு அளிக்கிறது. எந்த புரோகிராம்களுக்கெல்லாம் அப்டேட்டட் பைல்கள் உள்ளனவோ அவற்றின் லிங்க்குகளைப் பட்டியலிட்டு தருகிறது. இந்த லிங்க்குகளில் கிளிக் செய்து நம் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இவற்றுடன் எந்த புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்களை அவற்றைத் தயாரித்து அளித்த நிறுவனங்கள் தரவில்லையோ அவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா சிஸ்டம் தொடங்கும்போதே இயங்கி, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்களையும் ஸ்கேன் செய்கிறது. புதிய புரோகிராம்கள் இருந்தால் அவற்றிற்கான அப்டேட் பைல்களை ஆய்வு செய்கிறது. புரோகிராம்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் கோட் இருந்தால் அதனையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா பி.எஸ்.ஐ. கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் அல்லது பயர்வால் புரோகிராம்களுக்குப் பதிலியாகக் கொள்ள முடியாது. ஆனால் இவை மேற்கொள்ளாத ஒரு முக்கிய வேலையை மேற்கொண்டு நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது. இந்த அருமையான பாதுகாப்பு புரோகிராமினைhttp://secunia.com/vulnerability_scanning/personal/  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். சென்ற ஆகஸ்ட் மாதம் இதன் அண்மைக் காலத்திய பதிப்பு வெளியானது. பதிப்பு எண் 1.5.0.1. இதன் பைல் சைஸ் 716,320 bytes ஆகும். 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளில் சராசரியாக இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3,228.



கொமாடோ ஃபயர்வால் 
கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு பயர்வால் ஒன்று எப்போதும் அவசியமாகும். பொதுவாக நாம் அனைவரும் விண்டோஸ் சிஸ்டம் தொகுப்புடன் வரும் பயர்வால் தொகுப்பினையே பயன்படுத்துகிறோம். ஏனென்றால் இது இலவசமாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இணைத்துத் தரப்படுகிறது. இது நல்லது தான். ஆனால் குறைந்த பட்ச பாதுகாப்பினையே விண்டோஸ் பயர்வால் தருகிறது. தற்போது மற்ற பயர்வால் தொகுப்புகளில் கிடைக்கும், நவீன பாதுகாப்பு வசதிகளை இது தருவதில்லை. ஒவ்வொரு பைலையும் முழுமையாக ஸ்கேன் செய்திடும் வசதி இதில் இல்லை. மேலும் நம்பிக்கைக்குகந்த நெட்வொர்க் கம்யூனிகேஷன் செட் செய்திடும் வசதியும், மைக்ரோசாப்ட் தரும் பயர்வால் தொகுப்பில் இல்லை. இந்த கூடுதல் வசதிகளுடன் ஒரு பயர்வால் தொகுப்பு நமக்கு இணையத்தில் கிடைக்கிறது. அதுவும் இலவசமாகக் கிடைக்கிறது. இது Comodo Firewall Pro என அழைக்கப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் புதிய விண்டோஸ் 7 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இது இணைந்து செயல்படுகிறது. 
இதனை http://www.personalfirewall.comodo. com /download_firewall.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடலாம்.



புதிய டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்
ட்ரான்ஸென்ட் நிறுவனம் அண்மையில் புதிய டிஜிட்டல் மியூசிக் பிளேயரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. MP330 என அழைக்கப்படும் இந்த பிளேயர் வழக்கமான பார்மட்களுடன் FLAC (Free Lossless Audio Codec)  என்ற புதிய பார்மட் மற்றும் ஆகிய MP3, WMA, WAV and WMADRM10 ஆகிய பார்மட்களையும் சப்போர்ட் செய்கிறது. இதில் ஏழு ஈக்குவலைசர் செட்டிங்ஸ் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 83 x 25.5 x 11.5  மிமீ ஆக உள்ளது. எடை 25 கிராம். இதன் உள்ளாக யு.எஸ்.பி. கனெக்டர் தரப்பட்டுள்ளது. எனவே இதனை வெகு எளிதாக ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ் போலவும் பயன்படுத்தலாம். மற்ற பிளேயருடன் இணைத்து இதில் பாடல்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த பிளேயரில் எப்.எம். ரேடியோவும் தரப்பட்டுள்ளது. 2,4 மற்றும் 8 ஜிபி அளவுகளில் (விலை ரூ.2,500, ரூ.3,000 மற்றும் ரூ.4,000) கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. அனைத்திற்கும் 2 ஆண்டு வாரண்டி தரப்பட்டுள்ளது. 



ஐந்தில் ஒன்று எங்களுடையது
இந்தியாவில் வளர்ந்து வரும் நோட்புக் கம்ப்யூட்டர் மார்க்கட்டில் 20 சதவிகிதப் பங்கினைப் பெற சோனி இந்தியா நிறுவனம் முயன்று வருகிறது. 2010 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கினை அடைய பல வழிகளை மேற்கொள்கிறது. 
நவீன தொழில் நுட்பத்துடன் பல நோட்புக் கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்பட்டு வெளிவர இருக்கின்றன. அத்துடன் மார்க்கட்டிங் பிரிவிலும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன. இதற்கென ரூ.15 கோடி முதலீடு செய்யப்படுகிறது. தற்போது இயங்கும் 500 விற்பனை மையங்களின் எண்ணிக்கை 1000 ஆக இரு மடங்காக உயர்த்தப்பட உள்ளது. இந்தி திரைப்பட நடிகை கரீனா கபூர் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டுள்ளார். வயோ நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் என தனியாக 20 மையங்கள் இந்தியாவெங்கும் திறக்கப்பட உள்ளன. தற்போது நோட்புக் கம்ப்யூட்டர் மார்க்கட்டில் சோனி இந்தியா 15% பங்கினைக் கொண்டுள்ளது. இதனை உயர்த்த மிகவும் ஸ்லிம்மான நோட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்குகிறது. ஆப்பிள் மேக்புக் ஏர் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் எடை குறைவாக 655 கிராம் அளவில் சோனி நோட்புக் கம்ப்யூட்டர்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிகரெட் வெடித்ததால் வாயில் 51 தையல்

 


இந்தோனேஷியாவில் ஒருவர் பிடித்த சிகரெட் திடீரென வெடித்ததால் அவரது 6 பற்கள் கீழே விழுந்ததுடன், வாயில் 51 தையலும் போடப்பட்டது.

ஜகர்த்தா‌வில் வசித்து வரும் அண்டி சுசந்தோ (31) என்பவர் சிகரெட் பிடித்தபடியே தனது மோ‌ட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது வாயில் இருந்த சிகரெட் திடீரென வெடித்தது. இதில் அவரது ஆறு பற்கள் கீழே விழுந்ததுடன், வாயும் சின்னாபின்னமாக பிளந்துவிட்டது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வாயில் 51 இடங்களில் தையல் போடப்பட்டது.

தனது பள்ளி பருவத்திலிருந்தே சிகரெட் பிடித்து வருவதாகவும், தற்போது நிகழ்ந்த சம்பவம் தமக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் சுசந்தோ கூறியுள்ளார்.

இதனிடையே இந்தோனேஷியாவைச் சேர்ந்த 'நூஜாரானோ டொபாக்கோ' என்ற நிறுவன தயாரி‌ப்பு சிகரெட்டைத்தான் சுசந்தோ பிடித்ததாகவும், எனவே அந்நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் சுசந்தோவின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

ஆனால் அவ்வாறு நஷ்ட ஈடு ஏதும் தர முடியாது என்றும், தங்கள் நிறுவன தயாரிப்பு சிகரெட்டில் வெடி பொருட்கள் ஏதும் கிடையாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில் சிகரெட் எதனால் வெடித்தது என்ற காரணத்தைக் கண்டறிய காவல் துறையினர்தான் மண்டையை பிய்த்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


source:z9world


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விவாகரத்து கேட்டு 12 வயது சிறுமி வழக்கு


 
 
சவுதி அரேபியாவில், 12 வயது சிறுமி ஒருவர், அவரது 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கை, தீர்ப்புக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக அவர் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுமார் 22,000 டாலர்கள் பணத்துக்காக இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த தனது தந்தையை மீற விரும்பவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் கூறியதாக, சவுதி அரேபியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

குழந்தைத் திருமணங்கள் மிகவும் அதிகரித்து வரும் அளவில் சர்ச்சைக்குரியதாக மாறிவரும் சவுதி அரேபியாவில், இந்த வழக்கு குறிப்பிடத்தக்க அளவு கவனத்தை ஈர்த்துள்ளது.


source:z9world.com

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கோஸ்டாரிகாவின் முதல் பெண் அதிபராக லாரா சின்சிலா தேர்வு

 
 கோஸ்டாரிகாவின்    முதல் பெண் அதிபராக    லாரா சின்சிலா தேர்வு
லத்தீன் அமெரிக்கா,  பிப். 9-
 
அமெரிக்க கண்டத்தில் கோஸ்டாரிகா நாடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் தேசிய விடுதலை கட்சியின் சார்பில் போட்டியிட்ட லாரா சின்சிலா வெற்றி பெற்றார்.
 
இதன் மூலம் கோஸ்டாரிகா நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் வருகிற மே மாதம் 8-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்கிறார்.
 
50 வயதான இவர் அரசியல் அனுபவம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே இவர் தற்போது அதிபராக இருக்கும் அரியாஸ் அமைச்சரவையில் மந்திரி உள்ளிட்ட பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.
 
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்சிலாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் அவர் பேசினார்.
 
அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். வார்த்தகத்தை பெருக்க தீவிர முயற்சி மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈராக்கில் யாத்திரிகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

  23 பேர் பலி
 கர்பலா, பிப். 4-
 
ஈராக்கில் தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கர்பலா நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் யாத்திரிகர்களின் மீது தற்கொலை தீவிரவாதிகள் மனித குண்டு தாக்குதல் நடத்தினார்கள்.
 
பாக்தாத் அருகேயுள்ள பாபில் மாகாணத்தில் ஹில்லா என்ற இடத்தில் இருந்து ஈராக்கின் மத்திய பகுதியில் உள்ள கர்பலாவுக்கு ஆயிரக்கணக்கான ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடைபயணமாக சென்று கொண்டிருந்தனர்.
 
அப்போது வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கார் திடீரென கூட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அதில் இருந்த தற்கொலை தீவிரவாதி வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.
 
இதை தொடர்ந்து யாத்திரிகர்கள் 23 பேர் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
 
இந்த தாக்குதலில் 147 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக 2 ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என கர்பலாவின் சீனியர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தர , தரவென இழுத்து ‌செல்லப்பட்ட பொன்சேகா

தர , தரவென இழுத்து ‌செல்லப்பட்ட பொன்சேகா ; இலங்கை எதிர்கட்சிகள் கண்டனம் 

Top world news stories and headlines detail 

 கடந்த மாதம் 27ம் தேதி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பொன்சேகா, தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டுவதற்கு, சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக, பொன்சேகாவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கூறியதாவது: பொன்சேகாவும், அவரின் மீடியா செயலர் செனகா டி சில்வாவும் ராணுவ போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தலைநகரில் அவர்களின் அலுவலகத்தில் இருந்த போது கைதாகினர். அப்போது, "உங்கள் மீது கிரிமினல் சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ராணுவ போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' என, அதிகாரி ஒருவர் பொன்சேகாவிடம் தெரிவித்தார்.இவ்வாறு உதவியாளர் கூறினார்.



ரணில் விக்கிரமசிங்கே கண்டனம்: பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு இலங்கை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பொன்சேகா கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இவரது கைது ராணுவ சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல பொது சட்டத்திற்கும் எதிரானது. கைதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



முஸ்லிம் காங்கிரஸ் ‌கண்டனம்: பொன்சேகா கைது மிக அருவருப்பாக நடந்தது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த அமைப்பு தலைவர் ரவுப்ஹக்கீம் கூறுகையில்: பொன்சேகா அரசியல் தலைவர்களுடன் ஆலோசித்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நேரத்தில் போலீசார் அருவருப்பாக, மிக மோசமான முறையில் இழுத்து சென்றனர். இது கண்டிக்கத்தக்கது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



கைதுக்கு முன்பு பொன்சேகா அளித்த பேட்டியில் கூறியது என்ன ? : நேற்று இரவு கைது செய்யப்படும் முன்பு பகல் நேரத்தில் பொன்சேகா பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார். இவரது பேட்டியில் அவர் கூறிய விவரம் வருமாறு: இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச கோர்‌ட்டில் விசாரணை நடந்தால் அங்கு நான் சாட்சியம் அளிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு தெரிந்தது, நான் கேள்விபட்டது, ‌எனக்கு கூறப்பட்டது ஆகியன அவசியம் கோர்‌டில் தெரிவிப்பேன். போர்க்குற்றம் செய்தவர்கள் யாரும் தப்பிக்க கூடாது. கோர்ட் முன்பு நிறுத்தப்பட வேண்டும். நான் யாரையும் காப்பாற்ற போவதில்லை. உண்மை சொல்லாதவர்கள் துரோகிகள் என கூறியிருந்தார்.



சர்‌வதேச கோர்ட்டில் ஆஜராகி விஷயங்களை தெரிவிப்பேன் என்று கூறிய சில மணி நேரத்தில் அவர் கைது‌ செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேட்டி அதிபர் ராஜபக்ஷேவை சினமூட்டியிருக்கலாம் என அங்குள்ள பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.



அதிபர் ரஷ்யாவில் - ரணில் இந்தியாவில் : பொன்சேகா கைது செய்யப்பட்டபோது இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே ரஷ்யாவில் இருந்தார். எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு பயணம் ‌மேற்கொண்டிருந்தார். பொன்சேகா கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போலீசாரால் பறிக்கப்பட்டு விட்டது என பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP