சமீபத்திய பதிவுகள்

பி.பி.சி., பாராட்டு மழையில் சச்சின்

>> Thursday, February 25, 2010


பாராட்டு மழையில் சச்சின் : கால் தொட்டு வணங்க கவாஸ்கர் விருப்பம்
 

Front page news and headlines today 

புதுடில்லி : ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் விளாசிய முதல் வீரரான சச்சினுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இவரது கால் தொட்டு வணங்க, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை காட்டிலும் சச்சின் தான் சிறந்த வீரர், என புகழாரம் சூட்டப் பட்டுள்ளது.



குவாலியரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடி யாக பேட் செய்த சச்சின், 200 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார். சுமார் 40 ஆண்டு கால ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் எடுக்கும் முதல் வீரரான இவர், மீண்டும் ஒரு முறை வெற்றி நாயகனாக ஜொலித்தார். 36 வயதான நிலையில், மிக நீண்ட நேரம் விளை யாடியது இவரது உடல் உறுதியை காட்டியது.



கிரிக்கெட் கடவுள்: இது குறித்து பிரிட்டன் மீடியா வெகுவாக புகழ்ந்துள்ளது. பி.பி.சி., வெளியிட்டுள்ள செய்தியில்,""கடைசி ஓவரில் ஒரு ரன் எடுத்து சச்சின் நிகழ்த்திய சாதனை பிரமிக்க வைத்தது. ஒரு இன்னிங்ஸ் முழுமையாக விளையாடியது அவரது உடல் வலிமையை சுட்டிக் காட்டியது,'' என குறிப் பிட்டுள்ளது.



டைம்ஸ் பத்திரிகையின் செய்தியில்,""கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சினின் சாதனையை அனைவரும் பாராட்ட வேண்டும. 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவருக்கு, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது,'' என குறிப்பிட்டுள்ளது. சச்சின் சாதனை குறித்து பல்வேறு அணிகளின் முன்னாள் கேப்டன்கள் புகழ்ந்து கூறியது:



கவாஸ்கர் (இந்தியா): சர்வதேச கிரிக்கெட்டில், சச்சினை போல் 93 சதங்கள் மற்றும் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் வேறு யாரும் எடுக்கவில்லை. இவரை போன்ற சாதனையாளரின் கால் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன். சச்சினுக்குள் எப்போதுமே ஒரு சிறுவனின் உணர்வு உண்டு. அந்த உணர்வு தான் தொடர்ந்து சாதிக்க தூண்டுகிறது. இவரது அகராதியில் "போதும்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. எனவே, டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 450 ரன், ஒரு நாள் போட்டிகளில் 250 ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். பின் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, 2011ல் உலக கோப்பை கைப்பற்ற வேண்டும்.



வெங்சர்க்கார் (இந்தியா): ஒரே நாளில் சச்சின் 200 ரன்கள் எடுத்துள்ளது வியக்கத்தக்க விஷயம். இந்த இலக்கை வெறும் 147 பந்துகளில் எட்டியது அவரது மனம் மற்றும் உடல் வலிமையை எடுத்துக் காட்டுகிறது.



அஜித் வடேகர் (இந்தியா): சச்சின் சாதனைக்காக விளை யாடுவதில்லை. சாதனைகள், அவரை தேடி வருகின்றன. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி வருகிறார். இவரது, "சூப்பர் பார்மை' பார்க்கும் போது, 2011ல் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றுவது உறுதி.



நாசர் ஹூசைன் (இங்கிலாந்து): பொதுவாக வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது இல்லை. ஆனாலும், குவாலியரில் சச்சினின் ஆட்டத்தை பார்த்த போது, கவாஸ்கர், ஆலன் பார்டர், லாரா, பாண்டிங்கை காட்டிலும் சிறந்த வீரராக தோன்றி னார். தவிர, ஆஸ்திரேலிய "பேட்டிங் பிதாமகன்' பிராட்மேனை காட்டிலும் மிகச் சிறந்த வீரராக காட்சி அளித்தார்.



சயீத் அன்வர் (பாக்.,): கடந்த 1997ல் சென்னை யில் நான் 194 ரன்கள் விளாசி சாதனை படைத்த போது, சச்சின் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது முதல் ஆளாக என்னை பாராட்டினார். பதிலுக்கு இப்போது, எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.



லோக்சபாவில் பாராட்டு: சாதனை நாயகன் சச்சினுக்கு, லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் மீராகுமார் வாசித்த செய்தியில்,"" ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த உலகின் முதல் வீரர் என்ற, மகத்தான சாதனை படைத்த சச்சின், தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இது இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்,'' என தெரிவிக்கப்பட்டது.



முதல்வர் வாழ்த்து: சச்சினுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்து தந்தி: குவாலியரில் நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த உங்களுக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முந்தைய சாதனைகள் அனைத் தையும் நீங்கள் கடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அருமையான உலக சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தாங்கள் கூறியதால், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தேசமே தங்களால் மிகவும் பெருமைப்படுகிறது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.



இதுவே ஆசை: சாதனை குறித்து சச்சின் கூறுகையில், ""சாதனைகள் முறியடிப்பதற்கே என கூறுவதுண்டு. இதன் அடிப்படையில் எனது சாதனையை, இந்திய வீரர் ஒருவர் தகர்த்தால் மகிழ்ச்சி அடை வேன்,'' என்றார்.



3வது இடம்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் களுக்கான ரேங்கிங் பட்டியலில், சச்சின், 3வது இடத்துக்கு (766 புள்ளி) முன்னேறி னார். கேப்டன் தோனி (827), முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன்மூலம் ரூ. 35 லட்சம் பரிசு பெற காத்திருக்கிறது


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஹேக்கர்களின் புதிய இலக்குகள்


 


கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது. 
அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
இவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள் நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக் காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. 
மேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது. 
ஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.



பயர்பாக்ஸ் பேட்ச் பைல்
அண்மையில் பயர்பாக்ஸ் 3.5.6 பிரவுசரில் உள்ள பல பிரச்னை களைத் தீர்க்கும் அப்டேட் பேட்ச் பைல் ஒன்றை, மொஸில்லா வெளியிட்டுள்ளது. இவற்றில் சில மிக ஆபத்தான வையாக இருந்தன. 62 இடங்களில் பிழை கண்டறியப்பட்டு, இந்த பேட்ச் பைல் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் கிடைத்துள்ள வெளியீட்டுக் குறிப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் மிக மிக முக்கியமான மூன்று பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மெமரியில் பிரச்னைகளை ஏற்படுத்தியது எனவும், அது சரி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவை தவிர 62 இடங்களில் இருந்த சில குறைகளும் களையப்பட்டுள்ளன. இந்த பேட்ச் பைலை கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிப் பயன்படுத்தலாம். http://enus.www.mozilla.com/enUS/products/download.html?product=firefox3.5.6&os=win&lang=enUS இதனால் நமோரகா (Namoroka) என்ற பெயரில் வெளியிடப்படப் போவதாக இருந்த பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 3.6 இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா? , போ, போ

கையில் கிடைத்ததை வைத்து மனநோயாளி வரைந்த ஓவியம் : குட்டிசுவரில் குவிந்த ரசிகர்கள்
 

Human Intrest detail news ராமநாதபுரம் : இடிந்த சுவரில் கையில் கிடைத்தவற்றை கொண்டு மனநோயாளி ஒருவர் வரைந்த தத்ரூபமான ஓவியத்தை காண, ஏராளமானோர் குவிந்ததால் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத் தில் புண்ணிய தலங்களுக்கு நிகராக மனநோயாளிகளின் எண்ணிக்கைக் கும் பஞ்சமிருக்காது. இது போன்ற நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு "ஸ்பெஷல்' தன்மை இருக்கும். அந்த வகையில் ராமநாதபுரத்தில் சிறிது நாட்களாக சுற்றித்திரியும்,தஞ்சாவூரை சேர்ந்த சதானந்தம் என்ற மனநோயாளியின் செயல், நேற்று பலரையும் சிந்திக்க வைத்தது. ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை அருகே உள்ள இடிக்கப் பட்ட கட்டடத்தில் சில நாட்களாக முடங்கிய,



இவரின் நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. "என்ன தான் உள்ளே நடக்கிறது, என, பார்க்க அந்த இடிந்த கட்டடத்தில் உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும் தான். ""இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பகுதியின் வழித்தடத்தில் சிலர் நடந்து செல்வதை போல'' தத்ரூபமான ஓவியம் ஒன்று அந்த சுவரில் வரையப்பட்டிருந்தது. கையில் கிடைத்த செங்கல், செடிகளின் இலை, குச்சிகள், கட்டைகள் போன்றவற்றை கொண்டு அந்த ஓவியத்தை சதானந்தம் வரைந்ததை கண்டு அங்கு கூடியவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் காட்டு தீ போல பரவ,பலரும் ஆர்வமுடன் வந்து அந்த ஓவியத்தை பார்த்து ரசித்து, போட்டோ எடுத்து சென்றனர். இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓவியத்தல் மறுதிசையில் அமர்ந்திருந்த சதானந்தத்திடம், ""சார், வாங்க உங்களுக்கு சாப்பாடு வேணுமா? என்ன வேணும் கேளுங்க,'' என, ஒருவர் கேட்டார்.



""இன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா? , போ, போ, போய் வேலையை பாருங்க...,'' என, தனக்கே உரிய பாணியில் தத்துவம் கசிந்தார் சதானந்தம். "திறமைக்கு "மனம்' ஒரு பொருட்டல்ல,' என, பலரும் முணுமுணுத்தபடி களைந்தனர்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈரானில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் தலைவர் கைது

 

டெக்ரான், பிப்.24-

ஈரான் நாட்டின் கிழக்கு பகுதியில் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பிராந்தியத்தில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் தலைவர் அப்துல் மாலிக் ரிகி கைது செய்யப்பட்டார். இவரது தலைமையில் செயல்பட்ட குழுவுக்கு ஜுன்டாலா என்று பெயர். இது பலுச்சி இன சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறது

.ஈரான் நாட்டில் தென்கிழக்கு கோடியில் உள்ளது. இந்த மக்கள் ஏழைகள். இங்கு சட்டம் ஒழுங்கு எதுவும் இல்லை. இந்த பகுதியில் ஜுண்டாலா தீவிரவாதிகள் வலுவாக இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பழங்குடி இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் ராணுவ தளபதிகள் சென்றபோது,இந்த தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தி ராணுவ தளபதிகள் 6 பேர் உள்பட 42 பேரை பலிகொண்டனர்.

இந்த தீவிரவாத குழுவின் தலைவர் ரிகி அவரது குழுவை சேர்ந்த 2 பேருடன் கைது செய்யப்பட்டார். கடந்த 2002-ம் ஆண்டு தான் இந்த குழு தொடங்கப்பட்டது. அப்போது ஈரானில் இருந்து பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றும், நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை உலகத்துக்கு தெரிவிக்க வன்முறையை தவிர வேறு வழி தெரியவில்லை என்று ரிகி தெரிவித்தார்.

source:dailythanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP