சமீபத்திய பதிவுகள்

பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் கொடூரம்

>> Friday, August 6, 2010




வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.


ஆப்கானிஸ்தான். காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்கள். இதுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அடையாளங்கள். அழகு மிகுந்த அந்த தேசம், தற்போது உருக்குலைந்து போய் கிடக்கிறது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆப்கானிஸ்தான். அப்போது அவர்கள் வைத்தது தான், அங்கு சட்டம். பெண்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் அங்கு அரங்கேறின. கடந்த 2001ல் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம், ஆப்கனில் குவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின், தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், தலிபான்களின் ஆதிக்கம் இன்னும் அங்கு கொடிகட்டி பறக்கிறது. தலிபான்களின் கொடூரத்துக்கு ஆளான ஆப்கன் இளம்பெண் ஒருவரை பற்றிய விஷயம் தான், தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையைச் சேர்ந்த குழு, ஆப்கனுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.


அது குறித்த விவரம்:


பீபி ஆயிஷா: அந்த இளம்பெண்ணின் பெயர் பீபி ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார், அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார், ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர்.


வீட்டை விட்டு வெளியேறினார்: ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்தார். அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.


மூக்கு வெட்டப்பட்டது: உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.


இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார். காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார். அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.


மறுவாழ்வு: இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். பயங்கரவாதத்துக்கு தன் முகத்தையே விலையாக கொடுத்த ஆயிஷா, "டைம்' பத்திரிகை குழுவிடம் கூறுகையில், "தலிபான் அமைப்புடன் சில ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடிவு செய்துள்ளாக அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார். ஆனால், மிகக்கொடூரமாக நடந்து கொள்வோரிடம் எப்படி இணக்கமாக வாழ முடியும். என்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அவர் கள் தானே' என, தனது சிதைந்த முகத்தை விரல்களால் தொட்டுக் காட்டி விரக்தியுடன் பேசினார்.



source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவராக மாறியிருக்கும் இலங்கைச் சிறுமிக்கு வழக்கில் வெற்றி!

 


 

இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து மாறி கிறிஸ்தவராக வாழ்ந்து வரும் இலங்கைச் சிறுமி


 ரிப்கா பாரியை பெற்றோரிடம் ஒப்படைக்க முடியாது என்று அமெரிக்க நாட்டு சிறுவர் நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

 

கிறிஸ்தவ மார்க்கத்துக்கு மாறி இருக்கின்றமையால் பெற்றோரால் கொல்லப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளார் அமெரிக்காவில் வாழும் இலங்கையரான ரிப்காபரி .கிறிஸ்தவராக கடந்த வருடம் மாறிய பின் பெற்றோரிடம் இருந்து பிரிந்து சென்று கிறிஸ்தவ பாதிரிமாருடன் வாழ்ந்து வருகின்றார்.

 

 

இவர் ஒரு புற்று நோயாளி. ஆனால் கிறிஸ்தவ வழிபாடு நோயைக் குணப்படுத்து விடும் என்று பரிபூரணமாக நம்புகின்றார். இதனால் நோய்க்கு எந்தவொரு சிகிச்சையுமே எடுப்பதில்லை. இவருக்கு அடுத்த வாரம்தான் 18 வயது ஆகின்றது. இந்நிலையில் இன்னமும் 18 வயது பூர்த்தியாகாத மகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பெற்றோர் அமெரிக்காவின் சிறுவர் நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

 

ரிப்காக்கு புற்றுநோய்ச் சிகிச்சையை கட்டாயம் வழங்க வேண்டி இருக்கின்றமையால் பெற்றோரிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் என்று அந்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்சிகிச்சையை எடுக்காவிட்டால் மகளின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பெற்றோருடன் சென்றால் பெற்றோரால் கொல்லப்பட்டு விடுவார் என்றும் கிறிஸ்தவ மதம் மீதான நம்பிக்கை நோயைக் குணப்படுத்தி விடும் என்றும் ரிப்கா நீதிமன்றுக்கு எழுத்துமூலம் விளக்கம் கொடுத்துள்ளார். 18 வயதாகி விட்டால் ரிப்கா சுயமாக முடிவுகளை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில் சிறுமியின் நலன் கருதி அவரை பெற்றோருடன் சேர்த்து விட முடியாது என்றும், இலங்கைக்கு நாடு கடத்த முடியாது என்றும் நீதிபதி அறிவித்துள்ளார். இத்தீர்ப்பின் மூலம் அமெரிக்காவில் பிரஜாவுரிமை பெறும் வாய்ப்பு இச்சிறுமிக்கு 18 வயதை அடைந்த பின் உண்டு என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன


source


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இந்த வார இணையதளம்

 

இமேஜ்களை மாற்றி அழகுபடுத்த
நீங்கள் டவுண்லோட் செய்த அல்லது உருவாக்கிய படங்களைச் சிறப்பாக வேறு நீங்கள் விருப்பப்படும் வடிவத்தில் அல்லது கவர்ந்திழுக்கும் வகையில் மாற்ற வேண்டுமா? அல்லது கூடுதலாக மெருகூட்ட வேண்டுமா? படங்களைப் புதிய கோணத்தில் அமைத்து உங்கள் இணைய தளங்களில் பதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இதற்கென இணையதளம் ஒன்றில் ஒரு டூல் தரப்பட்டுள்ளது. இதன் பெயர் ஐட்ச்ஞ்ஞு Image Embellisher . இதனை எப்படிச் செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.
1. முதலில் நீங்கள் மாற்றம் செய்திட விரும்பும் இமேஜை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
2. பின் Image Embellisher இருக்கும் தளம் செல்லவும். இதற்கு http://www.chami.com/htmlkit/services/imge/  என்ற முகவரியினை அமைத்து என்டர் தட்டவும்.
3. இந்த தளத்தில் பலவகையான வடிவங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
4. பின் பிரவுஸ் பட்டன் அழுத்தி, நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் இமேஜைத் தேர்ந்தெடுத்து Open கிளிக் செய்திடவும்.
5. சிறிது நேரம் கழித்து நீங்கள் அனுப்பிய படம், தேர்ந்தெடுத்த வடிவில், சிறிய அளவில் கிடைக்கும். இது உங்களுக்குப் பிடித்திருந்தால், டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இதே போல வேறு சில வசதிகளையும் இந்த டூல் மூலம் மேற்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த படம் ஒன்றை, இணையத்தில் பதிக்க விரும்பு கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் அதனை டவுண்லோட் செய்திடக்கூடாது என விரும்புகிறீர்கள். Image Embellisher  அந்த இமேஜ் எப்படித் தோற்றம் அளிக்கும் என ஒரு இமேஜைக் காட்டும். அதனை இணையத்தில் பதிக்கலாம். இணையம் மூலம் படங்களை விற்பனை செய்பவர்களுக்கு இது மிகவும் பயன்படும். இந்த டூலை ஆன் லைனில் வைத்துப் பயன்படுத்துவதால், எந்த புரோகிராமி னையும் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை.


source:dinamalar



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP