சமீபத்திய பதிவுகள்

கனிமொழி எம்.பி கைது

>> Wednesday, February 16, 2011

தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்; கனிமொழி எம்.பி.-5 ஆயிரம் பேர் கைது
சென்னை, பிப். 16-
 
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதி தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் பருத்தி துறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த செயலை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் தி.மு.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி வழங்க வில்லை. எனவே மைலாப்பூர் லஸ்கார்னர் அருகில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினர், மகளிர் அணியினர் இதில் கலந்து கொண்டனர்.
 
அப்போது, இலங்கை அரசே தமிழக மீனவர்களிடம் அத்துமீறி நடக்காதே. கைதான மீனவர்களை உடனே விடுதலை செய். கண்டிக்கிறோம் ராஜபக் சேயை கண்டிக்கிறோம். மத்திய அரசே அப்பாவி தமிழக மீனவர்களை காப்பாற்று" என்று கோஷம் எழுப்பினார்கள். மீனவர்களுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தி வந்தனர்.
 
ஆர்ப்பாட்டத்தின்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
 
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். நேற்று 106 மீனவர்களை கைது செய்துள்ளனர். எதற்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. 106 மீனவர்கள் கைதானதை கேள்விப்பட்டதும் தி.மு.க. தலைவர் முதல்- அமைச்சர் கலைஞர் மிகவும் வேதனைப்பட்டார். அவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக் கும்படி மத்திய அரசை வற்புறுத்தினார். தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டதால் பெரும் திரளாக வந்திருக்கிறோம். மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்.
 
தமிழர்களின் உணர்வை இதைவிட ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவோம். மீன வர் சமுதாயத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும். இதுதான் தி.மு.க. தலைவர் கலைஞரின் எண்ணம். கைதான தமிழக மீனவர்களை இலங்கை அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
 
அதன் பிறகு கனிமொழி தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக செல்ல முயன்றனர். அவர்களை நாகேஸ்வரராவ் பூங்கா அருகே கனிமொழி உள்பட சுமார் 5 ஆயிரம் தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேன், பஸ்களில் ஏற்றப்பட்டு மந்தவெளியில் உள்ள பி.எஸ்.எஸ். பள்ளி மைதானத்துக்கு கொண்டு போகப்பட்டனர். அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பெ.வீ. கல்யாணசுந்தரம், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ். பாபு, எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், சங்கரிநாராயணன், முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், மாணவர் அணி செயலாளர் கடலூர் இள. புகழேந்தி, தலைமை நிலைய செயலாளர்கள் சதாசிவம், எஸ்.ஏ.எம்.உசேன். மகளிர் அணி துணைத் தலைவர் விஜயா தாயன்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் மற்றும் நிர்வாகிகள் வி.எஸ்.ரவி, வி.எஸ்.ஜெ.சீனிவாசன், ஆர்.டி.சேகர், ஏ.டி.மணி, சுரேஷ்குமார், ஐ.கென்னடி, சேப்பாக்கம் மதன்மோகன், இந்திராநகர் ரவி, இளைஞர் அணி வி.எஸ். ராஜ், அகஸ்டின்பாபு, ஜெ.கருணாநிதி, காமராஜ், தனசேகரன், பாண்டி பஜார் எஸ்.ஜி.தமிழரசன், உதயசூரியன், ஏழுமலை, அடையாறு லோகநாதன், ஸ்ரீகாந்த், அன்புதுரை, வில்லிவாக்கம் எஸ்.டி.விஜய்ஆனந்த், மா. அகிலன், ராஜாமுகமது, சுகி, மேட்டுக்குப்பம் கமலக் கண்ணன் உள்பட ஏராளமான நிர்வாகிகள்- தொண்டர்கள் கைதானார்கள்.

source:maalaimalar

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP