சமீபத்திய பதிவுகள்

பத்திரிகையாளனா நீ? எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படுவாய்!”

>> Thursday, July 28, 2011

 
 

"லுடிர படிவ ரள கயஅந யனே படிடின ளவயவரள. க்ஷரவ றந றயவேநன டிடேல லடிர. றுhல hயஎந லடிர டநகவ ரள டமைந வாளை?"

இப்படிச் சொல்லி கதறி அழுதவர் ஜோதிர்மயி தேவின் சகோதரி லீலா. தேவ் பிரபல ஆங்கில நாளிதழான 'ஆனை னயல' யின் குற்றச் செய்திகள் பிரிவின் ஆசிரியராகப் பணியாற்றியவர். கடந்த சில தினங்களுக்கு முன்னால் மும்பையில் மாலை மூன்றரை மணியளவில் சில மர்ம ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதோ ஒரு சிறிய உரையாடல்:
"நீங்கள் பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறீர்களா?"
"ஆமாம்."

"மூடி மறைக்கப்படும் உண்மைகளை எல்லாம் நீங்கள் பத்திரிகையில் துணிச்சலோடு எழுதி வெளியிடுகிறவரா?"
"ஆமாம்! கண்டிப்பாக அதுவே பத்திரிகை தர்மம்."
"அப்படியானால் எந்த நேரத்திலும் நீங்கள் மர்ம ஆசாமிகளால் கொல்லப்படலாம்."

'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்று இறைவனிடம் வாதாடிய 'நக்கீரன்' தோன்றியபோதே முதல் பத்திரிகையாளன் தோன்றி விட்டான் என்று சொல்லப்படுகிறது. அந்த முதல் பத்திரிகையாளனிலிருந்து - இன்றைய ஜோதிர்மயி தேவ் வரை அனைவருமே துயரத்திற்குள்ளாகிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர் கதையாய் முடிவின்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் 1996 முதல் 2005 வரை புகைப்படக்காரராகப் பணியாற்றிய தேவ், 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழிலும் அதன் பிறகு மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர் 'ஷ்சைடி னுயைட' என்ற ஆங்கில நூலின் ஆசிரியரான இவர் பத்திரிகைத் துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

இவர் எதற்காகக் கொல்லப்பட்டார்? இவரைக் கொன்றவர்கள் யார்?
பல குழப்பமான பதில்கள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.
மும்பை நிழலுலக தாதாக்கள் பற்றிய இவரது புத்தகமே இவரைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமாயிற்று என்று சிலர் சொல்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக மும்பை கடலோரத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த டீசல் கடத்தல் தொடர்பான தகவல்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி, அந்த மாபியா கும்பல் காவல்துறையால் கைது செய்யப்பட காரணமாக இவர் இருந்ததே இவரது உயிர் பறிப்புக்கு காரணமாயிற்று என்றும் பலர் சந்தேகப்படுகிறார்கள்.
தேவ் சம்பவத்தன்று மாலை மூன்றரை மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் காட்கோபர் மேற்கு அம்ருத் நகர் பகுதியிலுள்ள டி-மார்ட் வணிக வளாகம் அருகே சென்று கொண்டிருந்தபோது மிகக் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு கொலைவெறியர்கள் காட்டுமிராண்டித் தனமாக அவரைச் சாகடித்திருக்கிறார்கள். அவரது கழுத்து, மார்பு, வயிறு போன்ற பகுதியில் எட்டு இடங்களில் மாறி மாறிச் சுட்டு அவரைக் கொன்றுவிட்டு, பட்டப் பகலில் தப்பித்தும் ஓடி விட்டார்கள். அவரைக் காப்பாற்ற யாராலும் முடியவில்லை.

இது என்ன ஒரு கொடுமை?
இன்று பத்திரிகைகள் உண்மைகளை எழுதவில்லை என்றால் அனைத்து ஊழல்களும் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விடாதா? 'நான்காவது தூண்' என்று பெருமையோடு அழைக்கப்படுகிற பத்திரிகை உலகத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் இப்படிக் கொன்றழித்து விட்டார்கள் என்றால், அநீதிகளையும், 
அக்கிரமங்களையும் அம்பலப்படுத்த யார் முன்வருவார்கள்? நியாயத்தையும், நீதியையும் யார் முன்னிறுத்த வருவார்கள்?

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி உட்பட பல அமைச்சர்களும் இந்த அநாகரீக வன்முறைச் செயலைக் கண்டித்திருக்கிறார்கள். மும்பை பிரஸ் கிளப் இந்தக் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளை காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டுமாய்க் கேட்டிருக்கிறது. மும்பை திரையுலகமும் (க்ஷடிடடலறடிடின) மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளது. பத்திரிகை உலகம் மிகவே கவலையும், அதிர்ச்சியும் அடைந்திருப்பதும் தெரிய வருகிறது.

உண்மையைச் சொல்ல வந்தவர்களின் உயிர்களைக் கொன்றழிப்பது ஒரு நியாயமான செயல்தானா? நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளைகளை ஈவு இரக்கமின்றி நெரித்துச் சாகடிப்பது ஒரு நாகரீக சமுதாயத்தில் நடைபெறும் செயலாக இருக்க முடியுமா?
எழுத்தாளர்கள் சமுதாயத்தின் மனசாட்சி என்பதை மிக எளிதாக மறந்துவிட நினைக்கிறீர்களே... நியாயத்தின் குரல் வான மண்டலங்களையும் அசைக்கும் என்பதை கொலைக் குற்றவாளிகள் மறந்துவிட வேண்டாம்.

தேவின் இறுதிச் சடங்கின்போது அவரது தாயார் டீனா தளதளக்கும் அழுகுரலில் பிணத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கேட்ட கேள்வி இதுதான்:
"லுடிர கடிரபாவ கடிச டிவாநசள சiபாவள'. சூடிற றாடி றடைட கiபாவ கடிச லடிர?" (அனைவரின் உரிமைகளுக்காகவும் நீ போராடினாய்? உனக்காக இப்போது யார் போராடுவார்கள்?)
இந்தச் சமூகத்தின் மனச்சாட்சி இவ்வுலகை விட்டே அனுப்பப்பட்டுள்ளது. 
இவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கும், வருத்தத்தில் வாடும் பத்திரிகையாளர்களுக்கும் இந்தச் சமூகம் என்ன பதில் சொல்லும்?

source:namvalvu

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP