சமீபத்திய பதிவுகள்

சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !

>> Thursday, August 18, 2011


ஈழத் தமிழர்களுக்கு சொன்னதைச் செய்தார் செல்வி ஜெயலலிதா !

தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தமிழக முதல்வர் முன்னர் கூறியிருந்தார். அதன் முதல் கட்டமாக பல ஈழத் தமிழ் குடும்பங்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அவர் வழங்கியுள்ளார். ஈழத் தமிழ் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர் இத் திட்டங்களைக் கையளித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறையும், ஆதரவும் கொண்டு அவர்கள் நல்லமுறையில் வாழ தமிழக மக்களுக்குக் கிடைக்கப் பெறும் அனைத்து நலத் திட்டங்களும் அவர்களுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று(16.08.2011) தலைமைச் செயலகத்தில் வைத்து திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் லட்சுமி வேலு, வேலு, லட்சுமி துரைசாமி ஆகியோருக்கு ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், புவனேஸ்வரி, நாககன்னி, சுந்தரியம்மாள் ஆகியோருக்கு ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும், இன்பரதி, சிவபாக்கியம், கமலாதேவி ஆகியோருக்கு ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணையையும்,

சுகநந்தினி, வத்சலா, பத்மவேணி ஆகியோருக்கு திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய தலா 4 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதியுதவியும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முகாமில் இயங்கி வரும் அன்னை தெரசா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அமிர்தசெல்வநாயகி, ஜூலியட் கொன்சி, தென்றல் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நாகம்மாள், ஞானசீலி, புதிய உதயம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த விஜயா, பத்மஜோதி ஆகிய மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சுழல் நிதியினையும், வாசுகி, பாக்கியலட்சுமி ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார் என அதிர்வு இணையம் அறிகிறது. (புகைப்படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது)








source:athirvu


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP