சமீபத்திய பதிவுகள்

வீடியோ பார்மட்கள்

>> Wednesday, January 5, 2011


செஞ்சியிலிருந்து ஒரு வாசகர், வீடியோ பார்மட்கள் குறித்து அவருக்குள்ள சந்தேகத்தினை எழுதி உள்ளார். ஏன் சில பார்மட்கள், குறிப்பிட்ட பிளேயரில் பிளே ஆகவில்லை என்று கேட்டு எழுதிவிட்டு, கோடெக்  இல்லை என்று மெசேஜ் காட்டப்படுவது எதனால்? என்று கேட்டுள்ளார். இந்த கோடக் சமாச்சாரம் எல்லாம் இல்லாமல், ஒரு வீடியோ பைலைக் கிளிக் செய்தால், எந்த பிளேயரும் அதனை இயக்கும் வகையில் ஏதேனும் வழி உள்ளதா? இதற்கான தீர்வு ஒன்றைக் கட்டாயம் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
அவரின் ஆதங்கம் அவருக்கு மட்டுமல்ல, பல வாசகர்கள் இது குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளனர். தொலைபேசியிலும் கோடெக் குறித்த சந்தேகங்களைக் கேட்டுள்ளனர். இவற்றுக்கான தீர்வு ஒன்றை இணையத்தில் அண்மையில் காண நேர்ந்தது. அதனையும் இணைத்து விளக்கம் தர எண்ணி இதனைத் தருகிறேன். 
உங்களிடன் ஒரு எம்பி3 ஆடியோ பைல் இருந்தால், அநேகமாக அனைத்து ஆடியோ  பிளேயரும் அதனை இயக்கும். அதே போல ஜேபெக் வடிவில் உள்ள பட பைலை எந்த பிக்சர் வியூவர் பைலும் இயக்கிக் காட்டும். 
ஆனால் . avi, .mpeg, , போன்ற வீடியோ பைல் இருந்தால், அனைத்து வீடியோ பிளேயரும் அவற்றை இயக்கும் என்று உறுதியாகக் கூற இயலாது. இன்னும் சொல்லப் போனால், இவை எல்லாம் வீடியோ பார்மட் இல்லை. டேட்டாவினை மற்ற பார்மட்களில் கொண்டுள்ளன என்று சொல்லலாம். இந்த பைல் வகைகள் எல்லாம், ஆடியோவினை ஒரு பார்மட்டிலும், வீடியோவினை இன்னொரு பார்மட்டிலும் (கோடெக்) கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, ஒரு ஏ.வி.ஐ.பைல்  (.avi),), மோஷன் ஜேபெக் வீடியோ  மற்றும் பி.சி.எம்.  டியோ பார்மட்களைக் கொண்டிருக்கலாம். இன்னொரு பைலில் எக்ஸ்விட் எம்பெக் 4 வீடியோ பார்மட்டும்  IMAADPCM பார்மட்டில் ஆடியோவும் இருக்கலாம். வேடிக்கையாக ருக்கிறதா? மேலும் படியுங்கள்.
இதனால் தான் ஒரு .ச்திடி பைல், விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கப்படலாம். இன்னொரு பிளேயர், பைலில் உள்ள ஆடியோவினை மட்டும் இயக்கும்; வீடியோ கிடைக்காது; அல்லது மாற்றாகவும் இருக்கலாம். சில பிளேயர்  ஒரு பைலில் உள்ள எதனையும் இயக்காமல் இருக்கலாம். 
ஒரு வீடியோ பைல் எந்த வகை கோடெக் பார்மட்டினைக் கொண்டுள்ளது என்பதனை எப்படி அறிவது? வெளிப்படையான ஒரு வழி உள்ளது. பைலின் மேலாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில் டீடெய்ல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுத்து பார்ப்பது. இங்கே, வீடியோவின் நீளம், ரெசல்யூசன், வீடியோ மற்றும் ஆடியோ பிட் ரேட் ஆகிய தகவல் கிடைக்கும். ஆனால் மிக முக்கியமான கோடெக் குறித்த தகவல் இருக்காது அல்லது கிடைக்காது. இந்த தகவல் தானே, ஒரு வீடியோ பிளேயரை இயக்க தேவையானது. பின் ஏன் மைக்ரோசாப்ட் சிஸ்டம் அதனைக் காட்ட மறுக்கிறது? கண்ணா மூச்சி விளையாட்டு ஏன்?
எப்படியோ? விண்டோஸ் வீடியோ பைலுக்கான கோடெக் குறித்து வாய் திறக்க மறுக்கிறது என்பதால், நமக்கு இதனை அறிய ஒரு தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவையாய் உள்ளது.  நான் அறிந்த வகையில் ஒரு சிறந்த புரோகிராம் AVI Codec என்பதாகும். இது மிக எளிமையானது மட்டுமின்றி இலவசமானதும் கூட. இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்த பின்னர், எந்த பார்மட்டில் உள்ள வீடியோ பைலிலும், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று,   அதன் மீது ரைட் கிளிக் செய்து AVIcodec: detailed informationஎன்பதனைத் தேர்ந்தெடுத்து, அதனை புரோகி ராமிற்குள் லோட் செய்திடும்படி செய்திடலாம். ஏற்கனவே ஏதேனும் கோடெக் புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தால், இது பலனளிக்காது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட பைலை, புரோகிராமிற்குள் ட்ராப் செய்து கொண்டு வரலாம். 
இவற்றையும் மீறி கூடுதல் கோடெக் பைல் தேவை எனில்,  WindowS Essentials Codec Pack தொகுப்பினை டவுண்லோட் செய்திட வேண்டும்

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP