சமீபத்திய பதிவுகள்

குளிக்கும்போது படையினர் மொபைல் போனில் படம் எடுத்தனர்: அதிர்ச்சி சாட்சியம் !

>> Saturday, August 13, 2011


 

போரின் இறுதிக்கட்டத்தின்போது தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெண்போராளிகள் மீது படைகள் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் எந்தவொரு பாலியல் தாக்குதலும் அங்கு நடக்கவில்லை என்றும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார். இராணுவத்தின் போர்க்குற்றங்களின் பட்டியலில் முகாம்களில் இருந்த பெண்கள் மீதான துன்புறுத்தலும் அடங்கியுள்ளது. இதனை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் தற்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஒருவர் தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தம்மிடம் தெரிவித்ததாக ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கூறியுள்ளது. முகாமில் ஒவ்வொரு முறையும் நாங்கள் காலையில் எழுகின்றபோது, நான்கு - ஐந்து பெண்கள் காணாமல் போயிருப்பர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று நாம் அறியவில்லை� என்று பாதிக்கப்பட்ட மற்றொருவர் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். உணவுக்காகவும், (மாதவிடாய்) சுகாதாரத் துண்டுகளுக்காகவும், உடைகளுக்காகவும் தான் ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வேறொரு பெண்ணும் சாட்சியம் அளித்துள்ளார். 

குளிக்கும்போது ஆண் படையினர் தம்மை கையடக்கத் தொலைபேசிகளில் படம் எடுத்ததாகவும், அதற்காகவே தம்மை திறந்தவெளியில் குளிக்க நிர்ப்பந்தித்ததாகவும் ஹெட்லைன்ஸ் ருடேயிடம் மற்றொரு பெண் கூறியுள்ளார். அரசாங்கத்தினால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டாத இரகசிய முகாம் ஒன்றில் ஒரு பெண் ஒரு ஆண்டைக் கழித்துள்ளார். �அது ஒரு சித்திரவதை முகாம். அடிப்படை வசதிகள் எமக்கு கிடைக்கவில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படவில்லை.� என்கிறார் சுந்தரி என்னும் ஒரு பெண். அது ஒரு இராணுவ முகாம். என்ன பிரச்சினையென்றாலும் இராணுவத்தினரையே அணுக வேண்டும். அவர்கள் சில பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்.� என்று தெரிவித்துள்ளார் சுந்தரி.

அங்கே பாலியல் வன்புணர்வுகள் நடந்தன. இளம்பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். ஆனால் எப்படி அதை வெளியே சொல்ல முடியும்? அவர்கள் சங்கடப்படுவார்கள், பெண்கள் ஆடைகளின்றி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததால், அவர்கள் எம்மை துன்புறுத்தினர். எம்மைத் தடுத்து வைத்துத் துன்புறுத்தினர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


source:athirvu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP