சமீபத்திய பதிவுகள்

ஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உறவுகொள்ள சக்திபெற மாட்டாள்

>> Monday, August 22, 2011

4 மனைவிகள்- சரியத் சட்டமும் பெண்ணுரிமைகளும்

ஒரு ஆண் 4 பெண்களை ஒரே நேரத்தில். திருமணம் செய்துகொள்ளலாம் என்று இசுலாமியச் சட்டம் உள்ளது. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொள்வதை இன்று ஒருபோதும் விரும்புவது இல்லை. பெண்ணின் விருப்பம் ஒரு பக்கமிருக்க ஒரு தந்தையாக, சகோதரனாக. மகனாக உள்ள ஆண்கூட தன் மகளுடைய, சகோதரிவுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி இருப்பதை இன்று நிச்சயமாக விரும்புவதில்லை. தன் தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்வதை தன் தாய்க்கு இழைக்கப்படும் அநீதி என்று உணர்கிறான். நடைமுறையில் சமூக இழுக்காகமாறி வழக்கொழிந்து வரும் இச்சட்டத்திற்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அது இன்றைய சமூகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு பக்கபலமிருந்து காப்பாற்றுகிறது. அதனால் இச்சட்டத்தில் மாறுதல் தேவை என்பது மறுக்க முடியாததாக உள்ளது.

பின்வரும் நபிமோழியைப்படியுங்கள். (புகாரி 5230)

மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி, "ஷிஹாம் பின் முஃகிரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹலுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஓரு பாதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்" என்று சொன்னாரக்ள்.

இந் நபிமொழியை புகாரி அவர்கள் எந்த தலைப்பின் கீழ் பதித்துள்ளார்கள் தெரியுமா? "ஒருவர் தம் புதல்வியின் தன்மான உணர்வைக் காக்கவும் நீதிகோரி வாதிடுவதும்." என்ற தலைப்பில் கூறுகிறார்.

இந்த நபிமொழியிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்வது? முகம்மதுநபி தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாம் என்று கூறுகிறார்களா? அல்லது நான்கு மனைவிகள் சட்டத்தை மறந்துவிட்டார்களா? முகம்மதுநபி காலத்திலும்கூட தன் கணவன் இன்னொரு திருமணம் செய்துகொள்ள விரும்பியதில்லை என்பதும் தெரிகிறது.

இச் சட்டத்திற்கான நலம் விரும்பிகளின் வாதங்களும் சில விளக்கங்களும்:

1. விடியல் வெள்ளி என்ற இஸ்லாமிய மாத இதழின் ஜனவரி 2002ல் வந்துள்ள தலையங்கத்தின் தலைப்பு ˜சரவணபவனுக்கு சரியான பாதை அது கூறும் செய்தி பின்வருமாறு.

 'விதிவிலக்காக ஒரு சிலருக்கு ஒரு மனைவியைக் கொண்டு தங்கள் உடல் இச்சையைத் தணித்துக்கொள்ள முடியவில்லை. இது ஓரு சராசரியான உலக நிகழ்வு'என்றும்

'நான்கு மனைவி என்பது சட்டமல்ல ஒரு விதிவிலக்கு பொருளாதார வசதிக்கேற்பவே செய்து கொள்ள வேண்டும் என்பதே குர்இன் காட்டும் பாதை' என்று ஹோட்டல் தொழிலாளிகளின் மனைவிகளை அனுபவித்துக் கொலையும் செய்த இராஜகோபாலன் என்ற முதலாளியின் செயலை  கூறுகிறது

அதாவது நான்கு மனைவி என்பது பணக்காரனாகவும்  காம இச்சைக் கூடுதலாகவும் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என்பது இதன் பொருள்.

காம இச்சை கூடுதலாக உள்ளதற்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பில்லை. ஒரு மூடை சுமக்கும் தொழிலாளிக்குள்ள உடல் வலிமையைவிட உட்கார்ந்து தின்பவனுக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.  அதனால் ஏழையாக உள்ளவனுக்கு காம இச்சை கூடிவிட்டால் என்ன செய்வது? பெண்ணுக்கு காம இச்சை கூடிவிட்டாள் என்ன செய்வது? என்றெல்லாம் கேள்வியை நாம் கேட்கக் கூடாது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

2. ஆணின் காம உணர்வு பெண்களைவிட அதிகம் என்றும், ஒரு பெண் நான்கு ஆண்களிடம் ஒரே நேரத்தில் உறவுகொள்ள சக்திபெற மாட்டாள் என்றும், பெண்ணின் மாதவிடாய் காலங்களில் ஆணுடையக் காமத்தேவை நிறைவேற்ற பிற மனைவிகள் வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஒழுக்கத்தில் சிறந்தவர் ஆணா பெண்ணா எனும்போது பெண்கள்தான் கண்டதையும் பார்த்து காமவெறிபிடித்து சீரழிந்து போகிறார்கள் என்று கூறுகிறார்கள். விபச்சார விடுதிகள் நிரம்பி வழிவதையும், சினிமாத் துறையில் சீரழிவதையும் எடுத்துக்காட்டாக கூறுகின்றனர். பெண்கள்தான் சைத்தான்கள். ஆண்களை மயக்கி இச்சையைத் தூண்டி கெடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் 4 பொட்டாட்டி சரீயத் சட்டம் பேசும்போது பல்டி அடித்து ஆணுக்குத்தான் காம சக்கி கூடுதல் என்கின்றனர். அப்படிச் சொல்லும் போதும்  சொற்களிலும் கூட நயவஞ்சகத்தனம். ஆணுக்குத்தான் காம "சக்தி" கூடுதலாம், பெண் "காமவெறி" பிடித்து அலைகிறாளாம். எது உண்மை? 50, 60 வயதானாலும் பிற பெண்களைக்கண்டு பல்லிளிப்பதும், விபச்சார விடுதிகளுக்கு ஓடுவதும் ஆண்களா, பெண்களா?

டில்லி சத்தர்பஜார், மும்பை கிராண்ட் பஜார், கொல்கத்தா சோனாகாஞ்ச்.  இந்தியாவின் பிரபலமான விபச்சார பகுதிகள், இங்குள்ள ஒரு பெண் தினந்தோறும் குறைந்தது 6,7 பேர்கள் தம்மை புணர்வதால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்பவர்கள். (ஒரு சில மணிநேரங்களில் கூட 6,7 பேர்கள் இவர்களுடன் உறவுகொள்கின்றனர்) இப்படி ஒரு ஆண் ஒரு சில மணிநேரங்களில் 2, 3 பெண்களிடம்கூட உறவுகொள்ள முடியாது.

உடல் வலிமை என்பது உண்மையில் பெண்ணுக்குத்தான் அதிகம். ஆணாதிக்கம் தன்னிடமுள்ள இயலாமையை அல்லது காமவெறியை மறைக்க பெண்களால் முடியாது என்று பெண்கள்மீது பழியைப் போடுகிறது. சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் போய் பாருங்கள். இரண்டு பெட்டாட்டிகாரர்கள்தான் நிறையபேர் நிற்பர். பெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனையில் உடலுறவு கொள்ளும்போது உறுப்பில் ஏற்படும் வலி என்பதைத் தவிர சிட்டுக்குருவி லேகியம் என்ற பிரச்சினையே இல்லை இதனை எளிதில் மருத்துவம் செய்துகொண்டு தீர்துதுவிடலாம். எங்கேயாவது சிட்டுக்குருவி லேகிய மருத்துவர்களிடம் பெண்கள் மருத்தவம் செய்து கொள்வதை பார்த்துள்ளீர்களா? அல்லது சிட்டுக்குருவி லேகிய பெண் மருத்துவரைத்தான் பார்த்துள்ளீர்களா? ஆண்மைக் குறைவுக்கான விளம்பரத்தை பார்க்கும் நீங்கள் பெண்மைக்குறைவுக்கான விளம்பரத்தைப் பார்த்ததுண்டா?

திருமணமான புது இளம் ஜோடிகளிடம் வேண்டுமானால் ஒருசில மாதங்கள் வரை நாளொன்றுக்கு சிலதடவைகள் உடலுறவு கொள்ளும் ஆர்வமும் சக்தியும் இருக்கலாம். இயல்பான குடும்ப வாழ்க்கையில் 30 வயதுக்குமேல் உள்ளவர்கள் தினசரி உடலுறவு கொள்வது என்பதே முடியாத ஒன்றே. காம உணர்வு என்பது அவரவர் உடல் திறன் (ஊட்டச் சத்து) மற்றும் பருவம் சார்ந்தது. இதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது.

அது சரி. மாதவிலக்கு காலங்களில்கூட தனது மணைவிக்காக உடலுறவுகொள்வதை தவிர்க்க முடியாத விலங்கினமா மனிதன்? 4 மனைவி வைத்துக்கொள்ள பொருளாதார வசதியில்லாதவர்கள் தனது மனைவியின் மாதவிலக்கு காலங்களில் விபச்சார விடுதிக்கு போகலாம் என்று சட்டம் போட்டுடலாமா?

3. மக்கள்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அதனால் மணமகன் கிடைக்காத பிரச்சனையை தீர்க்க 4 மனைவிகள் சட்டமே தீர்த்துவைக்கும் என்று கூறுகின்றனர்.

இது உண்மையாக வேண்டுமானால் திருமணமாகாத 18 வயதுக்கு மேல் உள்ள பெண்ணும், 24 வயதுக்கு மேல் உள்ள ஆணும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் நின்று திருமணம் செய்ய முயற்சித்தால் இந்த எண்ணிக்கைப் பிரச்சனையாகலாம். இப்படிப்பட்ட நிலை எங்காவது உள்ளதா? உங்கள் ஊரில் உங்களுக்கு அக்கம் பக்கத்தில் பொண்ணு கிடைக்கவில்லை என்றும், மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் மணமக்களைத் தேடும் பெற்றோர்களைப் பார்க்கலாம். கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுவதற்கு காரணம் என்ன? தாம் விரும்பும் தகுதியில் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சனை. வரதட்சினையும் ஒரு பிரச்சனையாக உள்ளது.

மக்கள்தொகைப் புள்ளிவிபரம் மணமக்களைப் பிரித்து திருமணத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக கூறுகிறதா? இதனடிப்படையில் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறுவது எதையாவதுச் சொல்லி ஏமாற்றுவதாகும். அப்படி அது உண்மையானால்  ஆண்கள் அதிகம் என்றும், பெண்கள் குறைவு என்றும் புள்ளுவிபரம் கூறும் நாடுகளில்,  ஒரு பெண் 4 ஆண்களைத் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று சரீயத் சட்டத்தை மாற்றிடலாமா?

4. இதைப்போல சம உரிமை என்று பெண்கள் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று இசுலாமியர்கள் கூறும் சப்பைக்கட்டுகள்.

"பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்று அடையாளம் காண முடியாது.'

மரபணு தொழில் நுட்பம் இன்று எளிமையாகிவிட்டதால் இதுவரை ~தகப்பன் யார்~ என்று எப்படிக் கூறுவது என்று அலறிக் கொண்டிருந்தவர்களின் குரல் சுருதி குறைந்து டொய்ங்…. என்று இழுக்க ஆரம்பித்துள்ளது டிஎன்ஏ சோதனை மூலம் அறிந்து கொள்ளவேண்டுமானால் பொருளாதார வசதி வேண்டும். அது எல்லோராலும் முடியாது. முடிவுகள் தவறாக இருந்துவிட்டால் என்ன  செய்வது என்றெல்லாம் புலம்புகின்றனர். பொருளாதாரப் பிரச்சனைதான் இனி காரணம் என்றால் பொருளாதார வசதியுள்ளப் பெண் 4 ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முடிவு தவறாகிவிட்டால்…. கற்பழிப்பு வழக்குகளில் எல்லாம் டிஎன்ஏ சோதனையை ஏற்றுக்கொள்வார்களாம். இதற்கு மட்டும் முடியாதாம்

ஒரு குழந்தைக்கு தந்தை யார் என்று பெரியவேண்டிய அவசியம் என்ன? 1300 ஆண்டுகளுக்கு முன்பு மனித உழைப்பு முதன்மையான உற்பத்தி சக்கதியாக இருந்தது. அதனால் தனக்கு குழந்தை பெற்றுத் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்துகொண்டு தன்னிடம் பரிசுகளையும், உணவு மற்றும் தேவைகளையும் பெற்றுக்கொண்ட பெண் தமக்கு பெற்றுத்தராமல் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக "தந்தை" என்ற அடையாளம் அவசியமாக இருந்தது. ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிள்ளைகளை அவனது சகோதரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இன்றைய நிலை என்ன? ஒருவன் இறந்துவிட்டாலும் அல்லது மனைவியை தலாக் சொல்லிவிட்டாலும் குழந்தைகளின் நிலைமை என்ன? பெண்ணின் தலையிலேயே பெரும்பாலும் பொறுப்பாக்கப்டுகிறது. உறவினர்களோ முகத்தைக்கூட திருப்புவதில்லை.

அனாதை ஆசிரமத்திற்கு செல்வோம். தாய், தகப்பன் யார் என்று கூடத் தெரியாத இலட்சக்கணக்கான பிள்ளைகள். இவர்கள் வளரவில்லையா, படிக்கவில்லையா, சமூகத்தில் வாழவில்லையா? தகப்பன் பெயர் இவர்களுக்கு எதற்கு?

குழந்தைகளற்ற பெற்றோர்கள் பிற குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அக்குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கின்றனர். அப்படியிருக்க தன் குழந்தை என்று அடையாளம் தெரியாத குழந்தையின் நலத்தையும் பேண மனப்பக்குவமே தேவை. தந்தையின் பெய்ர் தேவையில்லை. இந்த மனப்பக்குவத்தை வளர்த்தால் குழந்தைகளுடன் மறுமணம் செய்துகொள்ளும் இளம் விதவைகளின் வாழ்வு இனிமையாக இருக்கும்.

இதன்பொருள் பெண்கள் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நான் வாதிட வரவில்லை. பலதாரமணம் என்ற நாகரீக காலத்திலிருந்து ஒருதார மணம் என்ற புரட்சிகர காலத்திற்குள் அடி எடுத்துவைத்துள்ள நாம் பழையதை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அதற்கான சப்பைகட்டுகளை கட்டிக்கொண்டிருக்கக் கூடாது.

கொள்ளகை அளவில் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்களில் எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவன் 4 பெண்களைத் திருமணம் செய்துகொள்ளவதை ஏற்றுக்கொள்வதில்லை. பெண்ணைப்பெற்ற பெற்றோரும் ஏற்றுக்கொள்வதில்லை. விவாதத்திற்காக வரட்டுத்தனமாக ஆதரிக்கும் பல ஆண்கள்கூட உண்மையில் 4 திருமணைம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இன்றைய மனமொன்றிய காதல் வாழ்க்கை தன் மனைவியை வெறும் உடலுறவுக்கான தேவை என்று பார்பதில்லை. சவூதிபோன்ற சில நாடுகளைத் தவிர வேறு எங்கும் இனிமேல் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.

அதனல் இசுலாமியப் பெண்களே! உங்கள் கணவர் பிற ஒரு திருமணம் செய்துகொள்ள அனுமதிக்காதீர்கள். அதற்கு நபிவழி நிகழ்சியே உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. பலதாரமணச் சட்டத்தை எதிர்ப்பீர். புகாரி அவர்கள் சொல்வதுபோல தன்மானத்துடன் வாழ்வீர்!

–சாகித்

source:paraiyoasai.wordpress

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP