சமீபத்திய பதிவுகள்

ஜுவரியா

>> Thursday, April 12, 2012

 

 

முகமதினாலும் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் தொடுக்கப்பட்ட போர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்லாமுக்கு முன்னர் அராபிய தீபகற்பத்தில் நடந்த போர்களெல்லாம் சிறுவர்களின் விளையாட்டாகும். முந்தைய போர்களெல்லாம் முக்கியமாக சிறு இனக்குழுக்களின் (tribes) இடையே நடைபெற்றது. அவைகளெல்லாம் வாய்ச்சண்டைகளுடன் கூடிய கைகலப்புகளோடும் தாக்குதல்களோடும் முடிந்துவிடும். இஸ்லாமின் அறிமுகத்திற்கு பிறகு, போர் மட்டும் வரவில்லை. முடிவற்ற படுகொலைகளும் படுபயங்கரமும் அறிமுகமாகி, விரைவிலேயே அவைகள் இஸ்லாமின் விரிவாக்கத்திற்கான முதன்மையான மற்றும் பிரிக்கமுடியாத செயல்முறையாகி விட்டன.

 

முகமது தன்னை தூதராக வரித்துக் கொண்டு மெக்காவில் வாழ்ந்த ஆரம்ப நாட்கள் சிறிது அமைதியாக இருந்தன. 13 வருட போதனைகளுக்குப் பிறகு 80 லிருந்து 100 மக்கள் மட்டுமே அவனை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சண்டையில் ஈடுபடும் வலிமை அற்றவர்கள். இதனால்தான் ஆரம்ப ஆண்டுகள் அமைதியாக கழிந்தன. முஸ்லிம்களுக்கு சண்டையிட வலு இல்லை.

 

மதீனாவிற்கு குடிபெயர்ந்ததற்குப் பிறகு அந்த ஊரின் மக்கள் முகமதின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, அவன் அதிரடித் தாக்குதல்களிலும், கொள்ளையிலும், ஈடுபட ஆரம்பித்தான். ஆரம்பத்தில் வணிகர்களின் சரக்குக் கேரவான்களையும் விரைவிலேயே ஊர்களையும் தாக்கத் செய்தான்.

 

மதீனாவின் அரபியர்களின் மத்தியில் தன் பிடியை பலப்படுத்திக் கொண்ட சிறிது காலத்திலேயே, பநி கைனுகா (Bani Qainuqa) என்ற யூத ஊரை சுற்றிவளைத்தான். அது ஒரு செல்வச்செழிப்பான பொற்கொல்லர்களையும் இரும்புக்கொல்லர்களையும் கொண்ட ஊர். அவர்களின் அசையாச் சொத்துகளையும் (திராட்சைத் தோட்டங்கள், வீடுகள்) மற்ற உடைமைகளையும் (நகைகள், ஆயுதங்கள்) கைப்பற்றிக் கொண்டு அந்த மக்களை நாடு கடத்தினான். பிறகு அவன் கண்கள் மதீனாவின் மற்றொரு யூதக் குடியிருப்பான பநி நடிர் (Bani Nadir) மீது பட்டது. அங்கேயும் அதையே செய்தான். அவன் அவர்களின் தலைவர்களையும் பல உடல் வலுமிக்க ஆண்களையும் படுகொலை செய்தான். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கொண்டு மதீனாவை விட்டு துரத்தி விட்டான். இந்த இரண்டு சமயங்களிலும், யூதர்கள் எந்த எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை.

 

தங்களை உயிருடன் விட்டுவிட்டால், தங்களின் எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு வேறு இடம் சென்று விடுவதாக கேட்டுக் கொண்ட, இந்த வலுவற்ற, போரிடும் பழக்கமில்லாத, மற்றவர்களை பயமுறுத்தாத மக்களின் மீதான வெற்றிகளுக்குப் பிறகு அவன் மிகவும் துணிந்து விட்டான். எல்லையில்லா பேராசையாலும், அதிகாரத்தின் மீதுள்ள வெறியாலும் இந்த சுயம்பு தூதர் இப்போது மதீனாவிற்கு வெளியே உள்ள யூதர்களின் மேல் கண் வைத்தான். அப்போது தான் பநி அல் முஸ்தளிக்கின் (Bani al-Mustaliq) முறை வந்தது.

 

புகழ்பெற்ற முகமதின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான, புகாரி, பின்வரும் ஹதிதில் பநி அல் முஸ்தளிக்கின் மீதான அதிரடித் தாக்குதலை இவ்வாறு வர்ணிக்கிறார்.

 

இப்னு ஔன் அறிவித்தார்:

நான் நஃபிக்கு ஒரு கடிதம் எழுதினேன். தூதர் தீடீரென்று பநி அல் முஸ்தளிக்கின் மீது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமலேயே தாக்குதல் தொடுத்தார் என்று நஃபி பதில் அனுப்பினார். அம்மக்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல், அவர்களின் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு இட்டுச் சென்றிருந்தனர். அவர்களின் போரிடக்கூடிய ஆண்கள் கொல்லப்பட்டு பெண்களும் குழந்தைகளும் அடிமைப்படுத்தப்பட்டனர். அந்த நாளில் தான் தூதர் ஜுவரியாவைப் பெற்றார். மேற்கண்ட கதையை தனக்கு இப்னு உமர் சொல்லியதாகவும் அவன் அந்த அதிரடிக் குழுவில் இருந்தான் என்றும் நஃபி கூறினார். Volume 3, Book 46, Number 717:

 

இதே ஹதித் முஸ்லிம் தொகுப்பிலும் பதியப்பட்டிருக்கிறது Sahih Muslim Book 019, Number 4292 I . இதிலிருந்து இந்த ஹதித் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

 

முகமது தனது மார்க்கத்தை யூதமதத்தை ஒத்திருக்கும் விதத்தில் உருவாக்கினான். இதனால் யூதர்கள் இவனை முதலில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற தப்புக்கணக்குப் போட்டு விட்டான். யூதர்களுக்கு அவனுடைய மார்க்கத்தில் எந்த ஆர்வமும் இல்லை என்பதைக் கண்டு மிகவும் ஏமாந்து விட்டான். அவன் இதற்காக யூதர்களை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை. சுய உன்னதம் போற்றும் நார்சிஸ்டுகளை அலட்சியப் படுத்தும்போது அவர்கள் கடும் கோபம் கொள்வார்கள். முகமது எந்த அளவுக்கு கடுப்பேறிப் போனான் என்றால் அவன் கிப்லாவையே (Qiblah = முஸ்லிம்கள் தொழுகை செய்யும் திசை) ஜெருசலேமில் இருந்து காபாவிற்கு மாற்றினான். அந்த சமயத்தில் இந்த காபா வெறும் சிலைகளைக் கொண்ட கோயிலாகத் தான் இருந்தது. மேலும், அவன் யூதர்களை பலிகடாக்களாக ஆக்கி தனக்கு புதிய பின்பற்றிகளைத் தேடிக் கொண்டான்.

 

மதீனாவின் அரபியர்கள் பொதுவாக படிப்பறிவில்லாதவர்களாகவும் குறிப்பான தொழிலறிவு அற்றவர்களாகவும், ஏழைகளாகவும், யூதர்களின் தோட்டங்களிலும், தொழிற்கூடங்களிலும் வேலை செய்து பிழைப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஆரம்பத்தில் ஏமானில் இருந்து வந்தவர்கள். யூதர்களோ தொழிலதிபர்களாகவும், தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் 2000 வருடங்களாக மதீனாவையே தாயகமாகக் கொண்டவர்கள். அவர்கள் எளிதான இரையானார்கள். முகமது அவர்களின் செல்வங்களைப் பறித்துக் கொண்டான், அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்தி அரபியர்களுக்கு விநியோகம் செய்தான். கொள்ளையும் கொலையும் கடவுளால் கட்டளையிடப்பட்டது என்று தனது பின்பற்றிகளை நம்பவைத்தான். அதிலிருந்து அவனின் தூதுத் தொழில் மிகவும் லாபகரமானதாக மாறிவிட்டது. அது அவனுடைய வாய்ப்பை முற்றிலுமாக மாற்றி அவனின் புதிய மார்க்கத்தை போர் மற்றும் ஆயுத முனையில் வளரச் செய்தது.

 

முகமது தனது பின்பற்றிகளில் ஒருவனான பரீதா பின் ஹசீபை (Bareeda bin Haseeb) பநி அல் முஸ்தளிக்கை வேவு பார்க்க அனுப்பினான். நிலவரத்தை தெரிந்து கொண்டவுடன் தாக்குதலுக்கு கட்டளை இட்டான். ஹி. வருடம் 5 ல் ஷாபான் மாதம் 2 ஆம் தேதியில் முஸ்லிம்கள் மதீனாவை விட்டு கிளம்பி மதினாவில் இருந்து 9 நடைகள் தொலைவில் இருந்த முரைசாவில் (Muraisa) கூடாரமிட்டார்கள்.

 

பின்வரும் விவரம் ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் காணப்படுகிறது.

 

முகமதின் படைகள் வருவதைப் பற்றிய செய்தி ஹாரிஸ்ஸை எட்டியது.  திகிலடைந்த அவரின் ஆட்கள் அவரைக் கைவிட்டு ஓடி விட்டார்கள். அவரும் ஏதோ ஒரு பெயர் தெரியா இடத்திற்கு ஓடி அடைக்கலம் புகுந்தார். ஆனால் முறைசாவின் உள்ளூர் மக்கள் ஆயுதங்கள் எடுத்துக் கொண்டு முஸ்லிம்களை எதிர்த்துத் தாக்கினார்கள். அம்பு மாரி பொழிந்தார்கள். முஸ்லிம்கள் ஒரு தீடீர் வெறித் தாக்குதல் புரிந்து எதிரிகளை வீழ்த்தினார்கள். அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்ப்பட்டது. கிட்டத்தட்ட 600 பேர் முஸ்லிம்களால் சிறை பிடிக்கப்பட்டார்கள். கொள்ளையில் 2000 ஒட்டகங்களும் 5000 ஆடுகளும் அடங்கும்.

போர்க்கைதிகளில் ஹாரிசின் மகளான பர்ராவும் (Barra) அடக்கம். இவர்தான் பிறகு தூதரின் துணைவியாக மாறிய ஜுவரியா. அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர். ஜுவரியா Thabit bin Qais ன் பங்கில் இருந்தார். அவர் அந்த இனக்குழுவின் தலைவரின் மகள். ஆகையால் ஒரு சாதாரண முஸ்லிம் சிப்பாயிடத்தில் அடிமைப்படுத்தப்பட்டவளாக இருப்பதை பெருத்த அவமானமாக எண்ணினார். ஆகையால் அந்த சிப்பாயை பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு தன்னை விடுவித்து விடும்படி வேண்டிக் கொண்டார். 9 தங்க ஔக்கியாக்கள் கொடுக்க முடிந்தால் விட்டுவிடுவதாக ஒத்துக் கொண்டான். அவரிடம் எந்த பணமும் தயாராக இல்லை. [ஏதோ அவளுக்கு வங்கியில் பணம் இருந்ததைப் போல. முகமது அவருடைய மற்றும் அவரின் மக்களுடைய அனைத்து உடைமைகளையும் கொள்ளை அடித்து விட்டான். அவளிடத்தில் எப்படி பணம் இருக்கும்?] அவள் வசூல் செய்து கொடுத்துவிடலாம் என்று எண்ணி முகமதிடம் வந்தார். ஒ அல்லாவின் தூதரே! நன் என் இனத்தின் தலைவரான அல் ஹாரிஸ் பின் ஜராரின் (Al Haris bin Zarar) மகள். எப்படியோ நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம். [எப்படியோவா?  முகமது அவர்களைத் தாக்கினான் என்றல்லவா நினைத்தேன்.] தபித்தின் பங்கில் விழுந்து விட்டேன். எனது அந்தஸ்தை எண்ணி விடுவித்து விடும் படி கெஞ்சினேன். அவர் மறுத்து விட்டார். என் மீது கருணை கொண்டு என்னை இந்த அவமானத்தில் இருந்து காப்பாற்றுங்கள். தூதர் மனம் இறங்கினார். [ஓ. மனம் இறங்கிவிட்டானா. எவ்வளவு இளகிய மனம்!] அதைவிட ஒரு நல்ல வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார். அது என்னவென்று அந்தப்பெண் கேட்டார். அவர் தான் பிணையத் தொகையை செலுத்தத் தயார் என்றும் தனக்கு மனைவியாக விருப்பமா என்றும் கேட்டார். அந்தப்பெண் ஒத்துக் கொண்டார். ஆகையால் தூதர் பிணைத் தொகையை செலுத்தி அவளை நிக்கா செய்து கொண்டார்"

 

மேலே கொடுக்கப்பட்ட கதையானது ஜுவரியா எப்படி முகமதை மணந்தார் என்பதைப் பற்றி இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்தது.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் முகமது தனது அல்லாவை வைத்து " நிச்சயமாக நீ உயர்ந்த நெறிகளைக் கொண்டவன்" (Quran 68:4) என்றும் "உண்மையில் நீங்கள் பின்பற்றுவதற்கு அல்லாவின் தூதரின் வடிவில் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு உள்ளது."(Quran 33:21) என்றும் தன்னை புகழச் செய்கிறான். அவன் உண்மையிலேயே உயர்ந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருந்தானா? என்பது நாம் கண்டிப்பாகக் கேட்க வேண்டிய கேள்வி.

 

முதலில் ஒரு ஊரை எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ரகசியமாக தாக்குகிறான். இதைத்தான் பயங்கரவாதம் என்பார்கள். ஏன்? அவர்களைத் தாக்குவது எளிது மற்றும் அவர்களிடம் நிறைய செல்வம் இருந்தது. வழக்கம்போல ஆயுதமற்ற ஆண்களை படுகொலை செய்கிறான். அவர்களின் உடமைகளை கொள்ளையடிக்கிறான். மீதியுள்ளவர்களை அடிமைப்படுத்துகிறான். ஒரு கடவுளின் தூதருக்கு இதுதான் லட்சணமா?

 

"அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர்." என்று எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமின் வரலாற்றைப் படிக்கப் படிக்க உண்மையிலேயே ரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாறு முழுக்க முஸ்லிம்கள் பின்பற்றிய வழக்கம் தான் இது என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தாலும் கேள்வி என்னவென்றால் ஒரு இறைத்தூதன் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டுமா? என்பது தான்.

 

தான் முழு உலகத்திற்கே 'கடவுளால் அனுப்பப்பட்ட கருணை' 21:107 என்று தன்னை சொல்லிக் கொண்டான் முகமது. இந்த 'இறைக்கருணைக்கும்' படுபாதக் கொள்ளைக்கூட்டத் தலைவனுக்கும் என்ன வித்தியாசம்?

 

இதுதான் அரபியர்களின் வழக்கம் என்றால் அல்லாவின் தூதரால் அதை மாற்ற முடியவில்லையா? இந்த ஈவு இரக்கமற்ற காட்டு மிராண்டித்தனங்களில் ஏன் ஈடுபடவேண்டும்? எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதற்காக வந்தவன் என்றல்லவா சொல்லிக் கொண்டான்? இவ்வாறு பெருமையாக சொல்லிக் கொண்டவன் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்வானேன்? அவன் காலத்து மக்களின் தீய செயல்களை பின்பற்றுவதற்காக வந்தானா இல்லை ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வந்தானா?

 

முகமதின் மனம் 'இளகியது' என்று சொம்பு தூக்கிகள் சொல்கிறார்கள். அவன் இளகியது பரிவினால் அல்ல காமவெறியினால் தான். அவன் இதயமே அற்றவன். அவனுக்கு இளகியது அவனின் இதயமல்ல, அவனின் குறி.

 

முகமது ஜுவரியாவிற்காக பரிதாபப்பட்டதனால் அவளை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க வில்லை. அவனுக்கு அது போன்ற உணர்சிகள் அற்றவன். ஜுவரியாவை தானே அனுபவிக்க வேண்டும் என்றே விரும்பினான்.

 

பெரும்பாலான மக்களின் எண்ணத்திற்கு மாறாக, முகமதின் நோக்கம் மக்களை தனது மார்க்கத்திற்கு மாற்றுவதல்ல. அவனுடைய உண்மையான நோக்கம் அதிகாரமும், பொருளாசையும், ஆதிக்கம் செலுத்தும் ஆசையும் தான். அவனுக்கு மார்க்கம் என்பது ஒரு சாக்கு. அவன் ஒவ்வொரு கேசையும் தனித்தனியாக மதிப்பிட்டு அதன் பயனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டான். பெரும்பாலான கேஸ்களில் மக்கள் அவனின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே அதிக லாபமானது. அப்படித்தான் அவனால் மற்றவர்களை படுகொலைகள் புரியவும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவும் முடியும்.

 

மக்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கப் பட்டிருந்தால் அவர்கள் தோல்விக்குப் பயந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். பிறகு முகமதினால் அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடிக்க முடியாதே. அவன் அதிரடியாகத் தாக்கி, தோற்கடித்து, கொள்ளையடித்த அல் முஸ்தளிக்கையோ அல்லது மற்ற பல மக்களையோ அவன் எச்சரிப்பது நல்லது என்று நினைக்கவில்லை.

 

முகமதின் சரிதையை எழுதிய மற்றொரு ஆசிரியரான முஸ்லிம் பின்வருமாறு எழுதுகிறார்:

 

இப்னு ஔன் அறிவித்தார்: நம்பிக்கையற்றவர்களை போரில் எதிர் கொள்ளும் முன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடவேண்டுமா என்று விசாரித்து நஃபிக்கு கடிதம் எழுதினேன். இஸ்லாமின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது என்று அவர் பதில் எழுதினார். அல்லாவின் தூதர் பநி அல் முஸ்தளிக்கின் மீது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமலேயே தீடீர் தாக்குதல் தொடுத்தார். அம்மக்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல், அவர்களின் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு இட்டுச் சென்றிருந்தனர். அவர் போரிட்டவர்களை கொன்றுவிட்டு மற்றவர்களை அடிமைப்படுத்தினார். அதே நாளில் அவர் ஜுவரியா பின்த் ஹரிதை (Juwairiya bint al-Harith) கைப்பற்றினார். இந்த ஹதீதை தனக்கு இப்னு உமர் சொல்லியதாகவும் அவன் அந்த அதிரடிக் குழுவில் இருந்தான் என்றும் நஃபி கூறினார். Book 019, Number 4292:

 

முஸ்லிம் படையினர் இந்த சுன்னாவை (Sunnah = முகமது வாழ்ந்து காட்டிய வழி) அவனின் சாவிற்குப் பிறகும் தொடர்ந்து பின்பற்றினர்.

 

முஸ்லிம் படை ஒரு நகரத்தைத் தாக்கும் போது, அவர்கள் மக்களை மூன்று நாட்களுக்கு இஸ்லாமை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வில்லை. இந்த மூன்று நாட்களில் அவர்கள் எவ்வளவு பேரைக் கொல்ல முடியுமோ கொன்றார்கள், எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அடித்தார்கள், அவர்களின் மகள்களையும் மனைவிகளையும் எவ்வளவு வல்லுறவு கொள்ள முடியுமோ கொண்டார்கள். அந்த நகரமே நாசமாக்கப்பட்ட பிறகு, அடிமைப்படுத்தப்பட்டு விற்க முடிந்த இளம் பெண்களையும் , குழந்தைகளையும், சங்கிலிகளில் பிணைத்த பின்புதான், பயங்கரமான முறையிலான இஸ்லாமிய மதத்திணிப்புப்பணி துவங்கும். எல்லோரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் கொல்லப்படுவார்கள். யூதர்களும் கிருத்துவர்களும் திம்மித்துவம் (dhimmitude) என்ற கொத்தடிமைப்படுத்தப்பட்ட நிலையை ஏற்றுக் கொண்டால் மதம்மாறத் தேவை இல்லை. திம்மி (dhimmi) என்றால் கொத்தடிமைப்படுத்தப்பட்டவர்  என்று பொருள். திம்மிக்கள் அவர்களை உயிருடன் விட்டுவைப்பதற்கான பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும். ஜிஸ்யா (Jizyah) என்று அழைக்கப்படும் இந்த வரியைக் கொண்டு தான் முஸ்லிம்கள் திம்மிக்களின் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

 

ஜுவைரியா பின் குதாமா அத்-தாமினி (Juwairiya bin Qudama At-Tamimi) அறிவித்தார்:

நாங்கள் உமர் பின் அல் கட்டாபிடன் கேட்டோம், "ஒ நம்பிக்கையாளர்களின் [முஸ்லிம்களின்] தலைவரே! எங்களுக்கு ஆலோசனை கூறுங்கள்". அவர் சொன்னார், " நான் உங்களுக்கு அல்லாவின் (திம்மிக்களுடன் செய்து கொண்ட) ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி அறிவுறுத்துகிறேன். அது தூதரின் ஒப்பந்தமும் உங்கள் சந்ததிகளின் வருமானமும் (அதாவது திம்மிக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிகள்) ஆகும்"  Volume 4, Book 53, Number 388:

 

இந்த தாக்குதலின் போது தூதருடன் சென்றிருந்த ஆயிஷா ஜுவரியாவை கைப்பற்றியதைப் பற்றி இவ்வாறு அறிவிக்கிறார்.

 

தூதர் Banu Almustaliq ல் அடிமைப்படுத்தப்பட்டவர்களை பங்கு பிரிக்கும் போது அவள் (பார்ரா) Thabit ibn Qyas ன் பங்கில் இருந்தாள். அவள் போரில் கொல்லப்பட்ட தனது முறைப்பையனை மணந்திருந்தாள். அவள் Thabit க்கு தனது சுதந்திரத்திற்காக 9 தங்க ஓக்குகள் தருவதாக ஒத்துக் கொண்டாள். அவள் மிகவும் அழகான பெண். அவளைப் பார்த்த எல்லா ஆண்களும் மயங்கினார்கள். அவள் தூதரிடம் வந்து உதவி கேட்டாள். எனது அறையின் வாசலருகே அவளை பார்த்த உடனே அவளை வெறுக்க ஆரம்பித்தேன். ஏனென்றால், நான் அவளை எப்படிப் பார்த்தேனோ அப்படித்தான் தூதரும் பார்ப்பார். அவள் உள்ளே சென்று தான் தன் மக்களின் தலைவனான அல் ஹரித் இப்னு திராரின் (al-Harith ibn Dhirar) மகள் என்றாள். "எனக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா? நான் Thabit ன் பங்கில் விழுந்து விட்டேன். பினயத்தொகையைக் கொடுத்து என்னை விடுவித்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்." என்று கூறினாள். "அதைவிட உயர்ந்ததை ஏற்றுக் கொள்கிறாயா? உன்னை பிணையில் இருந்து விடுவித்து நிக்கா செய்து கொள்கிறேன்" என்றார் அவர். "சரி, அல்லாவின் தூதரே!" என்றாள் அவள். அப்படியே ஆகட்டும் என்று பதிலளித்தார் அவர்.

http://66.34.76.88/alsalafiyat/juwairiyah.htm

 

முகமது அத்தனைப் பெண்களை நிக்கா செய்து கொண்டதற்கு உண்மையான நோக்கத்தைப் பற்றிய எல்லா விவாதங்களையும் இந்த கதை முடிவுக்குக் கொண்டு வருகிறது. விதவைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக அல்ல. அழகிய இளம் பெண்களை அனுபவிக்கத்தான். ஜுவரியாவின் மாமன் மகனுமான அவளின் கணவனை முகமது கொன்று விட்டான். அவளின் அழகில் மயங்கி அவளை விடுவிக்க முன்வருகிறான். அதுவும் அவனை மணந்து கொண்டாள் மட்டுமே. உதவி கேட்டு வரும் இளம்பெண்ணுக்கு இந்த சுயமாக அறிவித்துக்கொண்ட 'மனிதயினத்திற்கு அனுப்பப்பட்ட அல்லாவின் கருணை' இருப்பதிலேயே கசப்பான தெரிவை முன்வைக்கிறான். தனது கணவனைக் கொன்றவனையே கணவனாக்கிக் கொள்ளவேண்டுமாம். அவளுக்கு வேறு என்ன போக்கு இருக்க முடியும்?

 

முகமது கட்டிக் கொண்ட பெண்கள் விதவைகள் என்று இஸ்லாமிய சொம்பு தூக்கிகள் அடம்பிடிக்கிறார்கள். முகமது அவர்களுக்கு ஆதரவளிக்க மணந்து கொண்டான் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால் அவர்கள் எல்லோருமே அழகும் இளமையும் நிறைந்தவர்கள். முகமது அவர்களின் கணவர்களைக் கொன்றதனால் தான் அவர்கள் விதவைகளானார்கள். அப்போது ஜுவரியாவிற்கு வெறும் 20 வயது தான், முகமதுக்கோ 58 வயது.

 

பல ஹதிதுகள் கறைபட்டவைகளாக்கும் வகையில் ஜுவரியாவின் மீதிக் கதை பாதிப் பொய்களையும் மீதி மிகைப்படுத்தல்களையும் கொண்டது.

 

தூதர் தீடீர் தாக்குதலை முடித்துக் கொண்டு ஜுவரியாவுடன் கிளம்பி துல்ஜைஷ் (Dhuljaysh) ல் இருக்கும் போது, அவளை ஒரு அன்சாரிடம் ஒப்படைத்து விட்டு மதீனாவை நோக்கி முன்னேறினார் என்று சொல்லப் படுகிறது. அவளின் தந்தை, அல்-ஹரித் அவள் அடிமையாகப் பட்டிருக்கிறாள் என்று அறிந்து கொண்டு பிணையத் தொகையை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு சென்றார். அவர் அல்- அக்கியா (al-Aqia) வை அடைந்த போது பிணயத்தொகையாக தான் கொண்டுவந்திருந்த ஒட்டகங்களைப் பார்த்தார். அதில் இரண்டை மிகவும் விரும்பினார். அதனால் அவைகளை அல்- அக்கியாவின் ஒரு கணவாயில் மறைத்து வைத்தார். பிறகு அவர் ஒட்டகங்களை இழுத்துக் கொண்டு தூதரிடம் வந்து, "எனது மகள் மிகவும் நளினமானவள். அவளை அடிமைப்படுத்தவேண்டாம். இந்த பிணயத்தொகையை வைத்துக் கொண்டு விட்டுவிடுங்கள்" என்றார். "அவளையே தேர்ந்தெடுக்கச் சொல்வது சிறந்ததில்லையா" என்றார் தூதர். "நியாயம் தான்" என்றார் அல்-ஹரித். அவர் தன் மகளிடம் வந்து "இந்த மனிதன் உனது விருப்பத்திற்கு விடுகிறார். நமது பெருமையை கெடுத்து விடாதே" என்றார். நான் அல்லாவின் தூதரை தெரிவு செய்கிறேன் என்று அமைதியாக சொன்னாள். அவள் "என்ன ஒரு அவமானம்" என்று வருந்தினார்.

 

பிறகு தூதர் "அந்த கணவாயில் நீ மறைத்து வைத்த அந்த இரண்டு ஒட்டகங்கள் எங்கே?" என்று கேட்டார். அல்-ஹரித் வியந்து போய்விட்டார். "அல்லாவைத்தவிர வேறு ஒரு அல்லா இல்லை என்றும் முகமதுவான நீங்கள் தான் அவரின் தூதர் என்றும் ஏற்றுக் கொள்கிறேன் ஏனென்றால் அல்லாவைத் தவிர வேறு யாருக்கும் அதைப் பற்றி அறிந்திருக்க முடியாது" என்றார்.

இப்னு சாத் தனது தபகத்தில் (Tabakat)பின்வருமாறு எழுதி இருக்கிறார். சுவரியாவின் தந்தை அவளின் பிணையத் தொகையை செலுத்தினார். அவள் விடுதலை ஆனபோது தூதர் அவளை நிக்கா செய்து கொண்டார். இந்த நிக்காவின் விளைவாக கிட்டத்தட்ட 600 எண்ணிக்கையிலான எல்லா போர்க்கைதிகளும் முஸ்லிம்களால் விடுவிக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் தூதர் மணந்து கொண்ட வீட்டின் உறவினர்களை அடிமைப்படுத்த விரும்பவில்லை.

இந்த கதையின் எந்த பகுதி உண்மை என்று தீர்மானிப்பது கடினம். ஆனால் முக்கிய கதையில் உள்ள முரண்பாடுகளை கண்டுகொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. ஜுவரியாவை கைப்பற்றிய தபித்துக்கு தூதர் பிணயத்தொகையை செலுத்தி விட்டு அவளை நிக்கா செய்து கொண்டார் என்று படிக்கிறோம். பிறகு அவளின் தந்தை அல்-ஹரித் பிணயத்தொகையை செலுத்தினார் என்று படிக்கிறோம்.

 

ஒட்டகங்கள் மறைத்து வைக்கப்பட்டதைப் அறிந்து கொண்டதைப் போன்ற மாய சக்தி தூதருக்கு இருந்ததாக சொல்லப்படுவதைப் பொறுத்த மட்டில், அவை எல்லாம் சுத்தப் பொய் என்று எளிதாக முடிவெடுக்கலாம். பல சமயங்களில் அவனுக்கு அப்படிப்பட்ட திறன் இல்லாததை தெளிவாகக் காட்டினான். எடுத்துக்காட்டாக, அவன் கைபரின் மீது தீடீர்த்தாக்குதல் தொடுத்த போது, அவன் அந்த ஊரின் கருவூல அதிகாரியான கினானாவை அவ்வூரின் பொக்கிஷங்கள் எங்கே மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது என்ற ரகசியத்தைக் கூறும்படி அவன் இறக்கும் வரை சித்ரவதை செய்தான்.

 

இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியின் போது அரபியர்கள் தங்கள் தூதரை விட ஒழுக்க நெறியில் உயர்ந்தவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். முகமது ஜுவரியாவை நிக்கா செய்து கொண்டார் என்று அறிந்த போது அவர்கள் ஜுவரியாவின் உறவினர்களை விடுதலை செய்தார்கள். ஒரு வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் வகையில் முகமதிடம் குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கம் கூட இல்லை.

 

ஜுவரியா மிகவும் பக்தியான முஸ்லிமாக மாறினாள் என்றும் நாள் முழுக்க தொழுது கொண்டே இருப்பாள் என்றும் முஸ்லிம்கள் கூறிக்கொள்கிறார்கள். இந்த கூற்றுக்கு ஆதாரம் Usud-ul-Ghaba என்ற புத்தகத்தில் இருக்கிறது. அதன் ஆசிரியர் இவ்வாறு எழுதி இருக்கிறார். எப்போதெல்லாம் தூதர் ஜுவரியாவிடன் வருவாரோ அப்போதெல்லாம் அவள் தொழுது கொண்டு இருப்பாள். அவர் சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வரும்போதும் அவள் தொழுது கொண்டே தான் இருப்பாள். ஒரு நாள் அவர் அவளிடம் இவ்வாறு கூறினார் " நான் உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்கிறேன். நாள் முழுக்க தொழுவதை விட அது மிகவும் சக்தி வாய்ந்தது. 'subhaana allahe 'adada khalqihi, subhana allahe ridhaa nafsehe, subhana allahe zinata 'arshehe, subhana allahe zinata 'arshehe,subhana allah midadda kalimaatihi.' [அல்லாவை அவரின் படைப்புகள் எத்தனையோ அத்தனை முறையும், அவருக்கு எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு முறையும், அவரின் ஆசனம் எவ்வளவு கனமோ அவ்வளவு கனமாகவும், அவரின் வார்த்தைகளுக்கு எவ்வளவு மை வேண்டுமோ அவ்வளவு முறையும் துதி] என்று கூறு."

 

அல்லாவைப் புகழ இவ்வளவு எளிய மற்றும் அடிக்கவே முடியாத சூத்திரம் இருக்கும் போது முஸ்லிம்கள் ஏன் 5 முறை தொழுகை செய்து நேரத்தை வெட்டியாக்குகிறார்கள்? என்று வியப்பாக இருக்கிறது.

 

இந்த கதையை யதார்த்தமாகப் பார்க்கலாம். அந்த இளம்பெண்ணின் நிலையில் தங்களை வைத்துப் பாருங்கள். அவள் தனது கணவனைக் கொன்றவனின் கைப்பிடியில் மாட்டி இருக்கிறாள். ஜுவரியாவின் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணாக நீங்கள் இருந்தீர்களானால், உங்கள் கணவனையும், உறவினர்களையும், கொன்றொழித்தவனைப்பற்றி நீங்கள் எப்படி உணர்வீர்கள் ? மேலும் உங்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஜுவரியாவுக்கு முகமதை நிக்கா செய்ய சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது அந்த மனிதன் அவளுடன் படுக்க வந்தால் அந்தப் பெண் எவ்வாறு உணர்வாள்? அவளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவனுடன் படுப்பதைத் தவிர்க்கத்தானே முயல்வாள்? அதைத்தான் ஜுவைரியா செய்தாள். முகமதின் காலடி சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம் அவள் தொழுகை செய்வதைப் போல நடித்தாள். அவன் அவளை விட்டுவிட்டு வேறு பெண்ணிடம் போய் அவனின் காமத்தை தனித்துக் கொள்வான் என்று நினைத்தாள். இருந்தாலும் இந்த கேடுகெட்ட முகமது ஒரு தந்திரமான நரி. விரைவில் அவளுக்கு ஒருவரி மந்திரத்தைக் கூறி அது நாள் முழுக்க தொழுகை செய்வதை விட அதிக சக்தி வாய்ந்தது என்று கூறி அவள் அவனிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழியில்லாமல் செய்தான்.

 

எந்த நேர்மையான மனிதனும் இந்த கொடூரனை கடவுளின் தூதராக ஏற்றுக் கொள்ள முடியாது. தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் ஒன்று அவனைப் பற்றிய உண்மைகளை அறியாதவர்கள் இல்லை அவர்களே அவர்களின் தூதரைப் போன்று கொடூரமானவர்கள்தான். நீங்கள் அறியாமையினால் இதுவரை உங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொண்டு இருந்தீர்களானால், இப்போது உங்களுக்கு எந்த சாக்குப்போக்கும் இல்லை. இப்போது நீங்கள் தான் உங்கள் மனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும். முகமதின் மீதும் அந்த சனியன் பிடித்தவனின் புத்தகத்தின் மீதும் காறித்துப்பி விட்டு இஸ்லாமை விட்டு விலகுங்கள்.

 

Understanding Muhammad  என்ற எனது நூலை படியுங்கள், இஸ்லாமைப் பற்றிய உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.


source:http://http://tamil.alisina.org



--
http://thamilislam.blogspot.in

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP