சமீபத்திய பதிவுகள்

அர்ஜூன் சம்பத்க்கு ஆப்படிக்கும் tbcd

>> Friday, March 28, 2008

20000 பேர் மதம் மாறுகிறார்களாம் :மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர பாடுபட்டவர்கள் வரவேற்கிறார்களாம்..

20000 பேர் மதம் மாறுகிறார்களாம் :மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர பாடுபட்டவர்கள் வரவேற்கிறார்களாம்..

யார் அழுகிறார்கள்...யார் அடிக்கிறார்கள் என்றே புரியாத வண்ணம் இருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்னால், எறையூரில், தலித் கிறித்துவர்கள், வன்னியர்கள் தங்களை தேவாலய வளாகத்தில் விடுவதில்லை என்று தனியாக தேவாலயம் எழுப்ப முயன்றனர். அதற்கு வன்னிய கிறித்துவர்கள், தலித் கிறித்துவர்களை, வீடு புகுந்து தாக்கினார்கள்.

சமூக இழிவு துயர் நீக்கவே அந்நாளில் சமூகத்தின் அடித்தட்டில் தள்ளப்பட்ட, வர்ணாசிரம இந்து மதத்திலிருந்து, கிறித்துவ மதத்திகு மாறினார்கள். ஆனால், சாதி பேய் அவர்களை விட்டப்பாடில்லை.

இப்போது, தலித் சமூகத்தினரின் குரலுக்கு ஆலய பாதிரிகள் செவி சாய்ப்பதால், இப்போது வன்னியர்கள் கிறித்துவ மதம் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மதம் மாற எண்ணியுள்ளார்களாம். அவர்கள் பாதுகாப்பு என்றுக் குறிப்பிடுவது, கிறித்துவ மதத்தில் சாதியயை வைத்து இழிவு செய்வதை தொடர ஆலய பாதிரிகள் வகை செய்ய வேண்டுமாம். தமிழர்கள் தமிழர்கள் என்று கூவும் இராமதாஸ், அய்யா, இவங்களைப் பார்த்து அறிவுரை சொல்லுவாரா. அதுக்கு அவருக்கு நேரம் இருக்கும்மா.

இது தான் கொடுமை என்றால், மத மாற்றம் செய்யக் கூடாது என்று போராடும், இராம கோபலன் குழுவைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் என்ன சொல்லுறார் தெரியும்மா..

"தீண்டாமை கொடுமையை இந்து மதம் ஏற்காது. தலித்துகளை இழிபடுத்தும் செயல்களை ஆதரிக்காது. மதம் மாற விரும்பும் வன்னிய கிறிஸ்தவர்கள் எந்த வகையான பாதுகாப்பை எதிர்பார்க்கின்றனர் என்பது தெரியவில்லை.

தீண்டாமையை கடைபிடிக்கப் பாதுகாப்பு கிடைக்காது. உண்மையிலேயே தேசிய நீரோட்டத்தில் இணைய அவர்கள் விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர தயாராக இருக்கிறோம் என்றார்."


இதை விட அண்ட புளுகு இருக்க முடியும்மா. தலித்துகளிஅ இழிவுபடுத்து செயல்களை ஆதரிக்காதாம். எப்பா, சாமிகளா கூசாம,எப்படியப்பா இப்படி புருடா விடுறீங்க.

மத மாற்றமே வேண்டாம் என்றுச் சொன்னவர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைய விரும்பின்லா, சேர்த்து விடுறாராம். எங்கடாப்பா ஓடுது..அந்த நீரோட்டம். கொஞ்சம் காட்டுங்க..அங்கேயிருந்து, வைகைக்கும், காவிரிக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்வோம்.
அப்ப, கிறித்துவ மதத்தில் இருப்பவர்கள் எல்லாம், தேதிய நீரோட்டத்தில் இல்லையா. அவர்கள் என்ன கட்டாந்தரையில் ஒரு ஓரமாக இருக்கிறார்களா.

கிறித்துவ மதத்தில் சாதி இழிவு/சாதி அனுமதிக்கப்படாது என்றாலும், 20000 வன்னியர்கள் என்று கணக்குச் சொல்லும் விதமாக வலுவாகவே சாதி பிரிவினை போற்றப்பட்டே வந்திருக்கிறது. அதற்கு எதிராக சின்ன நடவடிக்கை எடுத்ததவுடன், ஆலயங்களையும், பாதிரிகளையும் மிரட்ட ( இராமதாஸ் பானியிலே.) இப்படி ஒரு புலிப் பாய்ச்சல். மதம் மாற்ற பல் வேறு தகிடு தத்தம் செய்து வந்த கிறித்துவ மதப் பாதிரிகள், இதை எப்படியூம் தடுக்க முயற்சிகள் எடுப்பார்கள். அப்போது, அவர்களை தங்களுக்குச் சாதகமாக திருப்பலாம் என்ற கணக்கே இங்கே போடப் படுகிறது என்று நினைக்கீறேன். அப்படியே, மதம் மாறினாலும், அவர்கள் வேண்டும் பாதுகாப்பு என்பது, தீண்டாமையயைத் தொடர்வதே

எனக்கு மேல் எத்தனனப் பேர் இருந்தால் என்ன, என் ஊரில் நான் தான் பெரும்பான்மை. எனக்கு கீழே தான் அவர்கள் இருக்க வேண்டும் என்ற ஆண்டை மணப்பான்மை, கீரிப்பெட்டி, மேலவளவு நிகழ்வுகளுக்குப் பின், எறையூரில் தென் படுகிறது. வன்கொடுமைகளுக்கு பிராமனர்கள் காரணம் இல்லை, மற்ற சாதியினர் தான் செய்கின்றார்கள் என்றுச் சொல்லுபவர்கள் அவதானிக்க. சாதிக் கொடுமையயைத் தொடர, வெறு மதத்திற்கு மாற நாங்கள் தயார் என்ற உடன், தேசிய நீரோட்டத்தில் சேர்க்க முன்வந்து ஆதரவு குரல் கொடுப்பது, பிராமனர்களின் குரலாக ஒலிக்கின்ற கட்சிகள் தான் என்பது கவனிக்கத்தக்கது.

இப்படி, வெளிப்படையாக சாதி வெறிப் பிடித்து அலைபவர்கள் இருக்கும் ஊரில் தான் நாமும் இருக்கிறோம் என்பது வெட்க கேடு. அரசு சார்பாக, எது எதுக்கோ பிரச்சாரம் பண்ணுறாங்க. இந்தப் பிரச்சனைகளுக்கு ஏன் ஊடக இடத்தை பயன் படுத்தக் கூடாது.


பி.கு:-
1. இராம கோபலனுடன் இந்து முன்னனியில் இருந்து, பின்னர் பிரிந்து, இந்து மக்கள் கட்சி என்ற நடத்தி வருகிறார், அர்ஜூன் சம்பத்.

 

 

http://tbcd-tbcd.blogspot.com/2008/03/20000.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

2 கருத்துரைகள்:

Anonymous March 28, 2008 at 6:35 AM  

யோவ் அர்ஜூன் சம்பத்க்கும் tbcdம்"சண்டை மூட்டிவிடுரியா

Anonymous March 28, 2008 at 6:41 AM  

பத்த வச்சுட்டான்யா

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP