சமீபத்திய பதிவுகள்

விவிலியத்தின் விளக்கம்

>> Friday, April 4, 2008

விவிலியத்தின் விளக்கம்
Webdunia
விவிலிய நூல் (BIBLE) கிறித்துவர்களின் புனித நூலாகும். ஆங்கிலத்தில் பைபிள் என்பது கிரேக்க வார்த்தையான பிப்லியா (BIBLIA)வின் மொழிபெயர்ப்பாகும். பிப்லியா என்றால் புத்தகங்கள் என்று கிரேக்க மொழியில் கூறுவர்.

இப்புனித நூல் பழைய ஏற்பாடு (Old Testament), புதிய ஏற்பாடு (New Testament) என்று இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இயேசுநாதரின் பிறப்புக்கு முன் நடந்தவைகளின் தொகுப்பு பழைய ஏற்பாடாகும். இயேசுநாதரின் பிறப்பும், அதன்பின் ஏறக்குறைய 100 ஆண்டுகள் வரை நிகழ்ந்தவைகளின் தொகுப்பு புதிய ஏற்பாடாகும். இயேசுநாதரின் பிறப்பின் அடிப்படையில்தான் இன்றைய உலக சரித்திரமும் கி.மு. (BC), கி.பி. (AD) என்று பிரித்துக் காண்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஏற்பாடு :

இப்பகுதி உலக தோற்றமுதல் பல நிகழ்ச்சிகளை காலப் பகுதிக்கேற்ப பலரால் எழுதப்பட்ட தொகுப்பாகும். இது பழம் பெரும் நிகழ்வுகளை கொண்டுள்ளதால் தொன்றுதொட்டு வாய்மொழி வாயிலாகவும், பின்னர் மனிதன் எழுதும் திறனைப் பெற்றபோது காலப் பகுதிக்கேற்ப எபிரேயு (Hebrew), அரமைக் (Aramaic), சிரியாக் (Syriac), லத்தீன் (Latin), கிரேக்கம் (Greek) என்னும் மொழிகளில் எழுத்து வடிவம் பெற்றது. இதில் சில மொழிகள் இப்போது வழக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம் :

I. ஆகமம் (PENTATEUCH) (5) :

1. ஆதியாகமம்
2. யாத்திராகமம்
3. லேவியாகமம்
4. எண்ணாகமம்
5. உபாகமம்.

II. சரித்திரம் (HISTORICAL) (12) :

1. யோசுவா
2. நியாயாதிபதிகள்
3. ரூத்
4. I சாமுவேல்
5. II சாமுவேல்
6. I ராஜாக்கள்
7. II ராஜாக்கள்
8. I நாளாகமம்
9. II நாளாகமம்
10. எஸ்றா
11. நெகேமியா
12. எஸ்தர்

III. பாடல் (POETICAL) (5) :

1. யோபு
2. சங்கீதம்
3. நீதிமொழிகள்
4. பிரசங்கி
5. உன்னதப்பாட்டு

IV. தீர்க்கதரிசனம் (PROPHETICAL) :

பெரிய தீர்க்கதரிசிகள் (MAJOR PROPHETS) (5) :

1. ஏசாயா
2. ஏரேமியா
3. புலம்பல்
4. எசேக்கியல்
5. தானியேல்

சிறிய தீர்க்கதரிசிகள் (MINOR PROPHETS) (12) :

1. ஓசியா
2. யோவேல்
3. ஆமோஸ்
4. ஓபதியா
5. யோனா
6. மீகா
7. நாகூம்
8. ஆபகூக்
9. செப்பனியா
10. ஆகாய்
11. சகரியா
12. மல்கியா

பழைய ஏற்பாட்டில் மேலும் 7 புத்தகங்கள் (Books of Apocrypha) :

கத்தோலிக்க கிறித்துவர்கள் (Catholics) மேலே குறிப்பிட்ட 39 புத்தகங்களுடன் 7 புத்தகங்களை சேர்த்து மொத்தம் 46 புத்தகங்களை பழைய ஏற்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

1. தொபியாசு ஆகமம்
2. யூதித் ஆகமம்
3. ஞான ஆகமம்
4. சீராக் ஆகமம்
5. பாரூக் ஆகமம்
6. I மக்கபே ஆகமம்
7. II மக்கபே ஆகமம்

இது கிறித்துவர்களிடையே பெரிய வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் யூதர்களின் 46 புத்தகங்களடங்கிய கிரேக்க மொழி பெயர்ப்பு (Greek Translation) பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர். புராடஸ்டன்ட் கிறித்துவர்கள் (Protestant-Christians) 39 புத்தகங்களடங்கிய எபிரேயு பழைய ஏற்பாட்டை பின்பற்றுகின்றனர்.

புதிய ஏற்பாடு :

புதிய ஏற்பாட்டில் 27 ஆகமங்கள் உள்ளன. அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம் :

I. வாழ்க்கை வரலாறு (BIOGRAPHICAL) (5) :

1. மத்தேயு
2. மாற்கு
3. லூக்கா
4. யோவான்

II. வரலாறு (HISTORICAL) (1) :

(1) அப்போஸ்தலருடைய நடபடிகள்

III. பரி. பவுலின் நிரூபம் (PAULINE EPISTLES) (14) :

1. ரோமர்
2. I கொரிந்தியர்
3. II கொரிந்தியர்
4. கலாத்தியர்
5. எபேசியர்
6. பிலிப்பியர்
7. கொலொசெயர்
8. I தெசலோனிக்கியர்
9. II தெசலோனிக்கியர்
10. I தீமோத்தேயு
11. II தீமோத்தேயு
12. தீத்து
13. பிலமோன்
14. எபிரேயர்

IV. மற்றைய நிரூபம் (GENERAL EPISTLES) (7) :

1. யாக்கோபு
2. I பேதுரு
3. II பேதுரு
4. I யோவான்
5. II யோவான்
6. III யோவான்
7. யூதா

V. தீர்க்கதரிசனம் (PROPHETICAL)

(1) வெளிப்படுத்தின விசேஷம்

ஆக, பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் சேர்த்து கத்தோலிக்க கிறித்துவர்கள் 73 (46+27) புத்தகங்களடங்கிய விவிலிய நூலை பின்பற்றுகின்றனர். புராடஸ்டன்ட் கிறித்துவர்களின் விவிலிய நூல் 66 (39+27) புத்தகங்களை கொண்டுள்ளது.
http://tamil.webdunia.com/religion/religion/christian/0705/21/1070521009_1.htm

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP