சமீபத்திய பதிவுகள்

விடுதலைப்புலிகள் இயக்க தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மரணம்

>> Wednesday, May 21, 2008

விடுதலைப்புலிகள் இயக்க தளபதி பால்ராஜ் மரணம்


கொழும்பு, மே.21-

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மரணம் அடைந்தார்.

பிரிகேடியர் பால்ராஜ்

விடுதலைப்புலிகளின் சார்லஸ் ஆன்டனி படைப்பிரிவின் தளபதியாக 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ். பல்வேறு நவீன யுக்திகளை கையாண்டு சிங்கள ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இலங்கை ராணுவத்துக்கு எதிராக பல முறை நேரடியாக களம் இறங்கி சண்டையிட்டும் உள்ளார்.

2000-ம் ஆண்டு யானை இரவு பகுதியில் சிங்கள ராணுவத்தை விரட்டியடித்ததிலும், கடற்புலிகள் பிரிவை வலிமையானதாக உருவாக்கியதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

மரணம்

மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் 2003-ம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் அமலில் இருந்தபோது சிங்கப்பூர் சென்று இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

கடந்த 3 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக வன்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு அவருக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.

பிரிகேடியர் பால்ராஜ் மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் 23-ந்தேதி முடிய 3 நாள் துக்கம் கடைப்பிடிப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=413957&disdate=5/21/2008

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP