சமீபத்திய பதிவுகள்

கோடி ரூபாய் பரிசு- குரான் சவால்

>> Tuesday, May 13, 2008

கோடி ரூபாய் பரிசு- குரான் சவால்
இஸ்லாமுக்கு ஆதரவாக வாதம் செய்பவர்களில் மிதவாத இஸ்லாமியர் என்று அறியப்பட்ட ஜமால் பதாவி என்பவர் குஆனில் ஜிகாத் அல்லது சமயசார்பான யுத்தத்திற்கு ஆதரவான வசனங்களைக் காட்டுவோருக்கு 10 இலட்சம் அமெரிக்கன் டாலர்களை பரிசாக அறிவித்துள்ளார்.

பெர்ஜென் ரெக்கார்டு என்ற இந்த பத்திரிகை இதை மெலெழுந்தவாரியாக தெரியப்படுத்தியுள்ளது. எனவே பதாவி இந்த சவாலை விளையாட்டாக கூறியுள்ளார் என்ற போதிலும் பதாவி கூறவிரும்புவது தெளிவாக உள்ளது:குரான் சமய யுத்தத்தை கற்பிப்பதில்லை.பத்திரிகைகளே அப்படிப்பட்ட ஒரு தோற்றம் உருவாகும்படி திரித்துக் கூறுகின்றன.

பதாவி நிச்சயமாக உண்மையை அறீவார். ஆனால் அவரது விளையாட்டான சவால்ஜிகாத் யுத்தம் செய்பவர்கள் எப்படி குரான் வசங்களை உபயோகித்து தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் என்ற உண்மையை மறைத்து விவரம் அறியாத அமெரிக்கர்களை இஸ்லாம் பள்ளிகள் கண்காணிக்கப்பட தேவையில்லை என்றும்,இஸ்லாமியர்கள் அநியாயமாக சட்டத்துறையினரால் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறார்கள் என்றும் சிந்திக்கச் செய்கிறது. இந்த வகையில் பதாவியின் சவால் வேடிக்கையானது அல்ல. அது ஒரு அரசியல் கூற்று. அது தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் -நமது முயற்சிகளை பாதிக்கிறது.

டாக்டர் பதாவி நான் கோடீஸ்வரன் ஆக விரும்புகிறேன்.இதோ குரானிலிருந்து சிலவசங்கள்:
(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும் அவர்களைக் கொல்லுங்கள் இன்னும் அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள் ஏனெனில் ஃபித்னா (குழப்பமும் கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும் மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில் நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள் ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.(2:190)

விசுவாசியாதவர்களைக் கொல்லுங்கள் என்ற சொல் எனக்கு சமய யுத்தம் போலவே தோன்றுகிறது.இதுவும் அப்படியே இருக்கிறது:
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம் ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம் ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறியமாட்டீர்கள். (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: 'அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும் ஆனால் அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும் அவனை நிராகரிப்பதும் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும் அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும் பித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியது அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள் உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும் இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:216,217)


மேலும் இஸ்லாமியரின் எதிரிகளை விசுவாசியாதவர்கள் என்றும் சாத்தானின் நண்பர்கள் என்றும் குறிப்பிடும் இந்த பகுதி:எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி அல்லது வெற்றியடைந்தாலும் சரி அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். பலஹீனமான ஆண்களையும் பெண்களையும் சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) 'எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வுரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். (4:74-76)



இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: 'நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12)





இந்தவசனம் யுத்தத்தின் சமய பண்பை தெரிவிக்கிறது: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: 'நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.[47:4]


இதுசண்டையின் நோக்கத்தை சமயம்சார்ந்த யுத்தம் இது என்று தெளிவாக்கும் வார்த்தைகளில் கூறுகிறது.
(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள் ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

இந்த வசனம் மற்றும் பல வசனக்கள் போல இந்த யுத்தம் ஆவிக்குரியதல்ல சரீரபிரகாரமானது என்பதை தெளிவுபடுத்துகிறது. இல்லாவிட்டால் விசுவாசிகள் பெரிய எதிர்ப்புகளை மேற்கொள்வர் என்ற வாக்குத்தத்தங்களுக்கு அர்த்தமிராது போய்விடும்.

இதுதான் புகழ்பெற்ற பட்டய வசனம் ஆகும்.

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா துல்ஹஜ்ஜு முஹர்ரம் ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள் அவர்களைப் பிடியுங்கள் அவர்களை முற்றுகையிடுங்கள் ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் கிருபையுடையவனாகவும்[இருக்கின்றான்.9:5]


இதையும் ஆவிக்குரிய யுத்தமாக எடுத்துக் கொள்வது கடினம்.இந்த வசனம் யுத்தமானது வேதத்தின் மக்களென்று அழைக்கப்படும் யூதகளுக்கும்கிறிஸ்தவகளுக்கும் எதிரானது என்பதைஉறுதி செய்கிறது.பியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள் ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்.9:29]

இன்னமும் இப்படிப்பட்ட வசனங்கள் ஏராளமானவை இருந்தாலும் பதாவி இவர்களைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதை அறிய நான் அவரிடம் பேச வேண்டியதில்லை. நான் அந்த வசனங்களை தவறாகக் கையாளுகிறேன்.மூலாரபிய பாஷையில் தான் நான் அதன் சரியான பொருளை ஐயமுடியும்.னான் இவைகளைப் புஇந்து கொள்ள டாப்சி என்றழைக்கப்படும் குரானை விளக்கும் முறையை அறிந்திருக்கவேண்டும். இஸ்லாமியரின் விரோதி மட்டுமே இந்த வசனங்களை மேலுழுந்தவாரியாக அர்த்தம் கொள்வான்.

நல்லது. ஆனால் இந்த வசனங்களை மேலுழுந்தவாரியாக அத்தம் கொள்ளும் இஸ்லாமியரைப் பற்றி அவர் என்னச் சொல்லப் போகிறார்? உதாரணமாக செசன்யாவிலுள்ள இங்குஷேசியன் ஷீரா என்ற ஆலோசனைக் குழு சமீபத்திய அறிக்கையில் பிவருமாறு விளக்கியுள்ளது: அல்லா தான் தனியாக தொழுதுகொள்ளப்படுவதற்காக மனிதர்களை உருவாக்கினான், எனவே அவருக்கு கூட்டாளிகள் கிடையாது.அவர் ஜிகாத்தை நேர்வழியில் அனுமத்தித்துள்ளார்.இதன் மூலம் அல்லாவின் சமயம் மற்ற எல்லாவற்றிலும் மேற்பட்டதாயிருக்கவும் வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளும் இஸ்லாம் மூலமாக நடத்தப்படவும் பூமியிலிருந்து அவிசுவாசம் நீக்கப்படவும் வேண்டும்" இந்தக் கருத்திற்கு ஆதாரமாக ஸூரா.8:39ஐ மேற்கோள் காட்டியுள்ளார். அதேபோல சென்ற ஆண்டு அனேக ஜிகாத் இணைய தளங்களில் வெளியிடப்பட்ட "ஜிகாத்தின் உண்மையான அர்த்தம்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில் சித்திக் அக்பர் என்பவர் மேற்கத்திய நாடுகளில் ஜிகாத் என்பது நமது ஆசைகளுக்கெதிரான யுத்தம் என்று கூறி ஜிகாத்தின் அர்த்தத்தை திரித்துக் கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் தாராளமாக குரானை மேற்கோள் காட்டி ஜிகாத் என்பது அவிசுவாசிகளுக்கெதிரான யுத்தம் என்று உறுதிப்படுத்தி குரானில்120க்கும் மேற்பட்ட வசனங்கள் ஜிகாத் என்பதுசண்டையிடுவதும் கொள்ளுவதும் என்ற பொருளில் உள்ளதாக கூறியுள்ளார்.அக்பர் மேலும் கூறுவதாவது: நான்கு முக்கிய சன்னி முஸ்லீம் பிரிவுகள் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டுள்ளன.இஸ்ளாமிய ஷாரியாவின் பொருளில் ஜிகாத் என்பது சண்டையிடுவதும், அவிசுவாசிகளை கொல்லுவதும் என்று சிறந்த படிப்பாளிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பதியா சானியா என்ற புத்தகத்தில் கனாபிபிரிவும் மன்கால்ஜலீல் என்ற புத்தகத்தின் மாலிகி பிரிவும் அல் இக்னா என்ற புத்தகத்தில் ஷபிபிரிவும் அல்-முக்னி என்ற புத்தகத்தில் ஹன்பலி பிரிவுமுள்ளது.

அக்பர் இப்படிப்பட்ட விசயங்களைக் கூறுவதில் தனித்திருக்கவில்லை. இத்தகைய வாதங்கள் உலகமெங்கிலும் உள்ள ஜிகாதிகளால் எதிரொலிக்கப்படுகிறது. அவகள் குரான் மற்றுமிஸ்லாமின் சட்டப்பகுதிகளை பிரயோகித்துபுது ஜிகாத் வீரரை உருவாக்கவுமிஸ்ளாமியரை அவர்ர்கள்மதமே உண்மையானது என்று நம்பச்செய்கின்றனர். பதாவிக்கு இதெல்லாம் தெரியாதா? இப்படி குரான் புனிதப் போரை ஆதரிக்கவில்லை என்று கூறி தனது பணத்தை செலவழிக்கிறதை விட ஜிகாத் வசனங்கள் குரானில் உண்டென்றும் அவை ஜிகாதிகளால் உபயோகிக்கப்படுகின்றது என்றும் ஒப்புக் கொண்டு கூடுமானால் இஸ்லாமிய சமுதாயத்தில் அவர்களதுசக்தி மழுங்கடிக்கப்பட என்னசெய்யலாம் என்றுவிளக்குவதன் மூலம் அவ உண்மையுள்ளவாக காணப்படமாட்டாரா?

9/11க்குப் பிறகு உள்ள சூழ்நிலையில் அமெரிக்காவிலுள்ள அடிப்படை தவறுகளில் இதுவும் ஒன்று. இஸ்லாமியப் பேச்சாளர்கள் மீண்டும் மீண்டும் ஆதாரம் கொடுக்காமல் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்றூ எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கூறுகின்றனர்.அதேசமயம் உலகம் முழுவதும் இஸ்ளாமியர் தங்கள் மதத்தின் பெயரால் வன்முஇறையில் ஈடுபடுகின்றனர்.பதாவி போன்றோரது வெற்றுவாதங்கள் அவற்றை தடைசெய்ய த்வறுவதோடல்லாமல் நாம் தீவிரவாதத்தின் மூலத்த அறியாதபடி தவறாகவழிகாட்டும் பொய்கூற்றுகளை உறுதிப்படுத்துகிறது.இது இவ்வாறு இருக்கும்வரையில் ஜிகாத் தீவிரவாதம் உலகமெங்கிலும் உள்ள இஸ்லாமிய பள்ளிகளில் அதிகரிப்பதைதடுக்கஎதுவும்செய்ய முடியாது.

டாக்டர் பதாவி சீக்கிரத்தில் உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். உங்களுடைய பத்து இலட்சம் டாலர் அறிவிப்பினால் நான் மிகவும் மகிழ்ந்து இதோ இப்போதே என்னுடையபணத்தை நான் செலவழிக்க ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் எனக்கு பணத்தைக்கொடுத்தப் பின்பு நாம் ஒன்றாக மதிய உணவு சாப்பிடலாம். ஜிகாத் வாட்ச் என்ற எங்கள் விமானத்தின் புதிய விமானத்தின் மூலம் நாமங்கே செல்லலாம்.

[இந்தக்கட்டுரையின் ஆசிரியர்ராபர்ட்ஸ்பென்சர் வாட்ச் என்ற அமைப்பின் இயக்குனர் ஆவார்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP