சமீபத்திய பதிவுகள்

பெங்களூர் தமிழ்ச்சங்கம் அதிரடி முடிவு ,தமிழர்களை எதிர்த்தால் ஓட்டு போட மாட்டோம்! ,

>> Tuesday, April 8, 2008

பெங்களூர் தமிழ்ச்சங்கம் அதிரடி முடிவு


தமிழர்களை எதிர்த்தால் ஓட்டு போட மாட்டோம்!


கன்னட வெறி அரசியல் தலைவர்கள் பீதி


பெங்களூர், ஏப். 7-
தமிழை, தமிழரை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு கர்நாடக தமிழர்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று கர்நாடக தமிழ்ச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களை அடித்து நொறுக்கினர். தமிழ்ச்சங்க அலுவலகம், பத்திரிக்கை ஆபீஸ்கள், தமிழக அரசு பஸ்களை தாக்கினர். இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. திரைப்பட நடிகர், நடிகைகள் போராட்டத்தில் குதித்தனர். அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடிந்து புதிய அரசு அமையும் வரையில் ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்திவைப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து, இரு மாநிலங்களிலும் பரபரப்பு அடங்கியுள்ளது.
இதற்கிடையில் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடாவும் தமிழ்ச்சங்க தலைவர் சண்முகசுந்தரமும் பேச்சுவார்த்தை நடத்தி பந்த்துக்கு ஆதரவு தருவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ் அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. பெங்களூரில் தமிழர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது மற்றும் தமிழர் பாதுகாப்பை வலியுறுத்துவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது. 50-க்கும் அதிகமானவர்கள் பேசினர். தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1991-ம் ஆண்டில் கர்நாடக முதல்வர் பங்காரப்பா குழுவினரால் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் பல்லாயிரக்கணக்கான கர்நாடக தமிழர் குடும்பங்களில் உயிர் இழப்புகளும், உடமை இழப்பும் மான சிதைவுகளும் உண்டாயின. இதற்கு எதிர் விளைவுகளை தமிழகத்தில் யாரும் செய்யவில்லை. ஆனால் கன்னட அமைப்புகள் அவர்களை திடீர் தலைவர்களாக காட்டிக்கொள்ள காவிரி நீர் பிரச்னை என்றும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்றும் எந்த பிரச்னையையாவது கைகளில் எடுத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை குலைப்பதும், தமிழர்கள் எதிர்ப்பை வலுப்படுத்தும் வழக்கமாக இருந்தன. இதை தேசிய கட்சிகளை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள், நடுநிலையாளர்களான அறிஞர்கள் யாருமே கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதும் இல்லை. காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கலவரம் செய்யும் கன்னட அமைப்பினருக்கு காவல் இருப்பதுபோல் நடந்துகொள்கின்றனர்.
பெங்களூர் தமிழ்ச்சங்கம் தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும், தமிழக அரசும் அதனைச்சார்ந்த தோழமைக்கட்சிகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அனைத்து கலைஞர்களும் ஒன்று திரண்டு கர்நாடக தமிழர்களின் பாதுகாப்புக்கு துணைபுரிந்தனர். கர்நாடக தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. சாலையில் இறங்கி போராடவும் முன்வந்த தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர், நடிகர்கள் சங்கத்துக்கு பெங்களூர் தமிழ்ச்சங்கமும், கர்நாடகாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம். பத்திரிகை அலுவலகங்களை தாக்கிய வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் திரைப்படத்தை திரையிடும் திரையரங்க உரிமையாளர்கள், தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து அவர்களின் உரிமைகளையும் மற்றும் இந்திய அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ள அறிவுறுத்தவும் அதற்கான அனைத்து உதவிகளையும் பெங்களூர் தமிழ்ச்சங்கமும், அனைத்து தமிழ் அமைப்புகளும் வழங்கும் என்று உறுதியளிக்கின்றன. தமிழர்களுக்கு எதிரான எந்த அமைப்புகளுக்கும், சார்பு நிலை கட்சிக்கும் கர்நாடக தமிழர்கள் யாரும் வருகிற தேர்தலில் வாக்களிக்க கூடாது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகா வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட்டு வரும் தமிழ்ச்சங்கம் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கர்நாடக வெறியர்களாக செயல்படும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

StumbleUpon.com Read more...

கன்னடரை உதையுங்கள் என்றேனா நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்


பெங்களூர், ஏப். 7-
ஒகேனக்கல் விவகாரத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் திரையலகினரின் உண்ணாவிரத போராட்டத்தின் போது, கன்னடர்களின் மனது புண்படும்படியாக பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கன்னட தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கன்னடர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. கன்னடர்களை இழிவாக பேசும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. ஒகேனக்கல் விவகாரத்தில் அரசியல் லாபம் அடைய முயற்சிப்பவர்களை நீங்களே உதையுங்கள் என்றுதான் கூறினேன். இதையும், திரையரங்குளை தாக்குவது, பஸ்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மனதில் வைத்துதான் கூறினேன்.
மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் நடித்த படங்களை திரையிடவிடமாட்டோம் என்று சிலர் கூறி வருகின்றனர். இதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. நான் நடிக்கும் படங்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மக்களும் ரசிக்கின்றனர். கர்நாடகத்தில் நான் நடித்த படங்களை திரையிடாவிட்டால், கன்னட ரசிகர்கள்தான் வேதனையடைவார்கள். நான் தவறிழைத்தாக கன்னட திரையுலகின் அம்பரீஷ், விஷ்ணுவர்தன், அஸ்வத் போன்ற மூத்த நடிகர்கள் மனசாட்சியுடன் கூறினால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். 5 கோடி கன்னடர்களை உதைப்பேன் என்று நான் கூறியதாக, சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் எனது மனம் புண்பட்டுள்ளது.
இவ்வாறு பேட்டியில் ரஜினிகாந்த் கூறினார்.
கன்னட பட தயாரிப்பாளர் சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா ஆகியோர் கூறுகையில்,Ô ரஜினிகாந்த் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். அதே சமயம் அவர் கன்னடர்களை இழிவாக பேசியதால் கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று கூறி மறுபடியும் தவறிழைக்க வேண்டாம். தேவையானால், அவர் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்சை வரவழைத்து மறுபடியும் பார்க்கட்டும். கன்னடர்களை இழிவாக பேசியது உண்மை. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்Õ என்றனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்து செல்வது எப்படி?

உங்களுக்கு தெரியுமா? பூமியில் இருக்கும் கடலுக்கடியில் பூமியை எப்படி எடுத்துச்செல்ல முடியும்.அறிவுள்ளவர்கள் சிந்தியுங்கள்.





வராக அவதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஷ்ணுவின் வராக அவதாரம் - உதையகிரி குகையில் புடைப்புச் சிற்பம்
விஷ்ணுவின் வராக அவதாரம் - உதையகிரி குகையில் புடைப்புச் சிற்பம்

வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்

http://ta.wikipedia.org/wiki/வராக_அவதாரம்

StumbleUpon.com Read more...

"ஹேண்ட் பிரீ மொபைல் போன்' ஸ்ரீசாய்ராம் மாணவர்கள் அசத்தல்

சென்னை : கண் பார்வையற்றோர், காது கேளாதோர், கை இழந்தோர் போன்ற ஊனமுற்றவர்கள், நடைமுறையில் சகஜமாக பயன்படுத்தக் கூடிய அளவிற்கு பல்வேறு வகையான நவீன கருவிகளை தயாரித்து ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுõரி மாணவ, மாணவிகள் அசத்தியுள்ளனர். "ஸ்மார்ட் கிலவ்': வாய்பேச முடியாத மற்றும் முதியவர்களின் கை அசைவுகளை கொண்டு அவர்களுக்கு முறையாக பேசும் திறனையும், சிரமமின்றி தங்களின் உந்து வண்டியை இயக்கும் திறனையும் இந்த "ஸ்மார்ட் கிலவ்' மூலம் அளிக்க முடியும். இந்த கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் தயாரிக்கப்படும் போது பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடுகள் நல்ல முன்னேற்றத்தை காணும். இந்த கண்டுபிடிப்புக்கள் சிக்கனமாகவும், உபயோகிக்க எளிதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


பரிமாண கருவி: எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் முருகப்பன், ஸ்ரீஹரி, கார்த்திக், பாலாஜி ஆகிய மாணவர்கள் இரண்டு பரிமாண வடிவங்களை காட்டும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் மூலம் பல வடிவங்களை உருவாக்க முடியும். இதை முப்பரிமாண அமைப்பில் தயாரிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

அறுவை சிகிச்சைகளின் போது நமது பரிமாண வடிவத்தை காண முடியும். அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த புராஜெக்ட் போட்டியில் இத்துறை மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபாட் செஸ் போர்டு: பார்வையற்றோரும் செஸ் போட்டியில் சாதனை படைக்கலாம் என்ற நோக்கத்தில் ரோபாட் கருவியின் மூலம் சதுரங்கம் விளையாடும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதன் மூலம் "கீ பேட்' உதவியுடன் ஆரம்ப இடத்தையும், சேர வேண்டிய இடத்தையும் கூறிவிட்டால் போதும். செயல்பாடுகள் ரோபாட் உதவியில் நிறைவேற்றப்படும். இதனால் பார்வையற்றோர் வழக்கத்தைவிட சிறப்பான முறையில் செஸ் விளையாட முடியும். "அபோனிக் ஆர்டிகுலேடர்': காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு உதவும் வகையில் "அபோனிக் ஆர்டிகுலேடர்' என்னும் நவீன கருவியை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

குறைந்த செலவில் இந்த கருவியை வடிவமைக்க முடியும். கடந்த பிப்ரவரி மாதம் சி.ஐ.ஐ., நடத்திய தென்னிந்திய அளவிலான பொறியியல் மாணவர்களுக்கான போட்டியில் இக்கருவி முதல் பரிசினை பெற்றது. ஹேண்ட் பிரீ மொபைல்போன்: தகவல் தொழில்நுட் பத்துறையில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் கை இழந்தோர், கண் பார்வையற்றோர் சுலபமாக பயன்படுத்தும் வகையில், "ஹேண்ட் ப்ரீ மொபைல் போன்' ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த வகை மொபைல் போன் வாய்வழி இயங்கக்கூடியது. அழைப்பு மற்றும் தகவல் கூறும் முறையை குரல் மூலமே செயலாற்றும் திறன் கொண்ட, இந்த மொபைல்போன் ஊனமுற்றவர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை..

http://www.dinamalar.com/

StumbleUpon.com Read more...

புளியை வைத்து வானிலை அறிக்கை!

சேலம்: "பொங்கும் காலத்தில் புளி காய்க்கும். மங்கும் காலத்தில் மாங்காய் காய்க்கும் என முன்னோர் கூறியுள்ளனர். செழிப்பான காலத்தில் புளியும், வறட்சியான காலத்தில் மாங்காயும் அதிகமாக காய்க்கும் என்பது இதன் பொருள். இந்த ஆண்டு பாலமலையில் மாமரங்களில் வழக்கத்தை விட குறைவாக பிஞ்சு பிடித்துள்ளது. புளி இந்த ஆண்டு கூடுதலாக விளைந்துள்ளது.
எனவே, இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்கின்றனர் மலை கிராம மக்கள். கொளத்துõர் ஒன்றியம் பாலமலையில் உள்ள கடுக்காமரத்துகாடு, தலைக்காடு உட்பட ஏராளமான கிராமங்களில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. அனைத்து மரங்களிலும் புளி அமோகமாக விளைந்துள்ளது.
பாலமலையில் விளையும் புளிக்கு புளிப்பு சுவை அதிகம் என்பதால் இதன் விலையும் அதிகம்.
ஒரு கூடையில் 15 கிலோ முதல் 18 கிலோ வரை புளி இருக்கும். இது 350 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

http://www.dinamalar.com/Tamilagaserapuseithigal/t5.asp

StumbleUpon.com Read more...

நான் பேசியதில் என்ன தவறு?கேட்கிறார் ரஜினி










http://epaper.dinamalar.com

StumbleUpon.com Read more...

ரஜினிபேச்சுக்கு நடிகை ஜெயமாலா எதிர்ப்பு

சென்னை, ஏப்.8-

ஒகேனக்கல் கூட்டுகுடி நீர் திட்டத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்ட கன்னட வெறியர்களை கண்டித்து தமிழ் திரையு லகினர் கடந்த 4-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில் ரஜினி பங்கேற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கன்னடர்களை கண்டித்து பேசினார்.

அவரது பேச்சுக்கு கர்நாட கத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட அமைப்புகள் ரஜினியின் கொடும்பாவியை எரித்தனர். ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த ரஜினி கன்னடர் மனம் புண்படும்படி எதுவும் பேசவில்லை என்று மறுத்தார்.

ஒகேனக்கல்லை சுற்றி யுள்ள எல்லைகள் தொடர் பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாட காவுக்கும் 50ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் செய் யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு மாநில மக்களும் அமைதியாக வாழ விடாமல் வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்க வேண்டாமா என்று தான் கேட்டேன். திரையரங்குகளை தாக்குவது, பஸ்களை எரிப் பது போன்ற செயல் களில் ஈடுபடுவோரை மனதில் வைத்துதான் அதை சொன் னேன். கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. அந்த அளவுக்கு நான் முட்டாள் அல்ல என்று ரஜினி கூறினார்.

ரஜினியின் பதில் திருப்தி அளிக்க வில்லை என்று கன்னட நடிகை ஜெயமாலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- ரஜினி பேசிய பேச்சினால் கன்னடர்கள் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று கூறி மறுபடியும் அவர்தவறு செய்ய வேண்டாம்.

உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சின் வீடியோவை அவர் மீண்டும் பார்க்க வேண்டும் கன்னடர்களை ரஜினி இழிவாக பேசியது உண்மை.

எனவே அவர் கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் அதுவே இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இவ்வாறு ஜெயமாலா கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் ரஜினி பேச் சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளார். ரஜினி பேச்சு கன்னட மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அவர் மீது ஆத்திரமும் அடைந்துள்ளனர். ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

அவர் மன்னிப்பு கேட்ப தால் அவரது பெருந் தன்மை உயருமே தவிர அதற்கு பாதிப்பு ஏற்படாது.கன்னட மக்களின் மனதை புண்படுத்தும் வார்த்தையை ரஜினி பயன்படுத்தி இருந்தால் அவர் மன்னிப்பு கேட்பதே சரியானதாக இருக்கும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.


http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவ தேவாலயம் மீது சிங்கள ராணுவம் தாக்குவதை தடுத்து நிறுத்துங்கள் : நார்வே அரசுக்கு விடுதலைப்புலிகள் கடிதம்

கொளும்பு, ஏப். 8-

விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் நார்வே அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு வருட கால மாக சிங்கள படை வன்னி பகுதியை ஆக்கிரமித்து போர் தொடுத்து வருகிறது. மன்னார் மாவட்டதில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகு கிறிஸ்தவ தேவாலயத்தை இடைவிடாது தாக்கி வருகின்றனர். எப்படியாவது அந்த ஆலயத்தை தகர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படுகின்றனர்.

இது நூற்றாண்டு பழமை வாய்ந்த திருத்தலம். மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் வழிபடும் பகுதி. இந்த ஆலயத்தில் தினமும் குண்டுகளை வீசுகின்றனர். பீரங்கி, டாங்கி, மூலமும் தாக்குதல் நடக்கிறது. இதில் ஒரு பகுதி இடிந்து விட்டது. கண்மூடித்தனமாக நடக்கும் இந்த தாக்குதலால் அங்கு தஞ்சம் அடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும், ஆலய மதகுருமார்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்களபடை ஆலயத்தின் மீத தாக்குவதை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் மத சின்னங்களை அழிப்பது அந்த மதத்தை பின்பற்றும் மக்களை புண்படுத்துவதாக உள்ளது. உலக நாடுகள் உதவியோடு இந்த தாக்குதலை நிறுத்த நார்வே அரசு தேவையான முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP