சமீபத்திய பதிவுகள்

புதுபாலம் கட்ட இடிப்பு ; வெடிகுண்டுகள் வைத்தும் அசையாத 108வயது பாலம்

>> Wednesday, April 23, 2008

வேலூர், ஏப்.23-
வேலூர்-விருதம்பட்டு பாலாற்று பாலம் 1901-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்திற்கு 108 வயதாகிறது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளத்தில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இதனையடுத்து சுப்பிரமணியபுரம் பாலம் வழியாக காட்பாடிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
போக்கு வரத்து நெரிசலை தவிக்கக் பாலாற்று பழைய பாலத்தை இடித்து விட்டு ரூ.16கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
கடந்த 16-ந் தேதி பாலத்தில் இருந்த 3 கணவாய்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. வெடி வைத்ததும் கண்ணாடி போல அப்படியே சரிந்து தரைமட்டமானது.
இதனையடுத்து பாலத்தில் உள்ள மேலும் 34 கணவாய்களை நேற்று வெடிவைத்து தகர்க்க போவதாக அறிவித்தனர்.
இதற்காக பாலாற்று கரையில் ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டனர். ஆற்றோர குடியிருப்புகளில் இருந்த பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர்.
ஹாலிவுட் படங்களில் வருவதை போல பாலம் சரிந்து விழ போகிறது என்று நம்பிய பொதுமக்கள் பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் காத்து நின்றனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம் உள்பட ஏராளமான வி.ஐ.பிக்களு ம் பாலம் சரிந்து விழுவதை காண வந்திருந்தனர்.


http://www.maalaimalar.com/
நேற்று மாலை 5.55 மணிக்கு கவுண்டவுண் தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் திக்திக்கென்ற திகைப்பில் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சரியாக 6 மணிக்கு பாலத்தில் அனைத்து கணவாய்களிலும் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. இதனால் அந்த பகுதியே பயங்கர அதிர்வுடன் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
சுமார் 5 நிமிடத்திற்கு பிறகு புகை மண்டலம் நீங்கியது. அப்போதும் பாலம் கம்பீரமாக காட்சியளித்தது.
வெடி வெடித்ததும் பாலம் சரிந்து விழும் என்ற நம்பிக்கையுடன் நின்றிருந்த அனைவரது கண்களிலும் ஏமாற்றம் என்றும் அனைவரது நெஞ்சிலும் ஆச்சர்யம் குடி கொண்டது.
அங்கிருந்த ஒவ்வொரு வரும் அது எப்படி என்று புலம்ப ஆரம்பித்தனர்.
இந்த பலமான பாரம்பரிய பாலத்தை இடிக்காமல் சீரமைத்து பயன்படுத்தி இருக்கலாமே ஏன் இதை இடித்துவிட்டு பல கோடி செலவில் புதிய பாலம் கட்ட போறாங்களோ தெரியவில்லை என்று பொதுமக்கள்ë கருத்து தெரிவித்தனர்.
ஆனால் வெடி வைத்ததையடுத்து பாலம் ஆட்டம் கண்டு விட்டது. இதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பாலத்தின் பலத்தை ஆரம்பத்திலேயே சோதனை செய்திருந்தால் வேலூரில் மேலும் ஒரு வரலாற்று சின்னத்தை இழக்காமல் இருந்திருக்கலாம் என்றும் பொதுமக்கள்ë கூறினர்.

StumbleUpon.com Read more...

அல்லாவின் மசூதியை சேதப்படுத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ)

TNTJ யின் அராஜகம்ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
தத-ஜமாத்தினரின் (TNTJ) அராஜகம்
Dec 4th 2007அபூ சஆத்பொதுவானவை

கடையநல்லூர் முபாரக் பள்ளியில் தத-ஜமாத்தினர் செய்த அராஜங்கள் பற்றி சிடி இரண்டாவது பாகம் விரைவில் இணையதளத்தில்

தத-ஜமாத்தினர் கடையநல்லூர் முபாரக் பள்ளியை வன்முறைமூலம் கைபற்றிய போது பள்ளிக்கு ஏற்படுத்திய சேதத்தின் புகைப்படங்கள்









http://jaqh.net/?p=192

StumbleUpon.com Read more...

திடீரென மதம் பிடித்த யானை 3 பேரை அடித்துக் கொன்றது

திருச்சூர், ஏப். 23: கோயில் திருவிழாவில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் பக்தர்கள் 3 பேரை அடித்துக் கொன்றது. இந்த பயங்கர சம்பவம் கேரள மாநிலம் திருச்சூர் அருகே இரிஞ்சாலகுடா என்ற இடத்தில் புதன்கிழமை நடந்தது.

அப்பகுதியில் பிரபலமான கோட்டைமணிக்கயம் என்ற கோயில் திருவிழா கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொண்ட யானைக்கு புதன்கிழமை திடீரென மதம் பிடித்தது. இதனால் பக்தர் கூட்டத்துக்குள் புகுந்து ஓடியது.

யானை மதம் பிடித்து தாறுமாறாக ஓடி வருவதை கண்ட பக்தர்கள் உயிர் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பீதியில் ஓடும்போதும் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவ்வாறு விழுந்த ஒரு பெண்ணை யானை காலில் போட்டு மிதித்து கொன்றது.

மற்றொருவரை தனது ஒரு தந்தத்தால் குத்தி கிழித்தது. தரையில் விழுந்த மற்றொருவரையும் யானை மிதித்துக் கொன்றது.

யானைக்கு மதம் பிடித்தது ஏன் என்று விவரம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பக்தர் ஒருவர் யானையின் வால் பகுதியில் உள்ள முடியை வலுக்கட்டாயமாக பிடித்ததாலேயே யானை ஆத்திரமடைந்து கூட்டத்துக்குள் புகுந்ததாக பக்தர்கள் சிலர் கூறினர்.

யானையை அடக்க மயக்கம் மருந்து செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் யானைப் பாகன் மெதுவாக யானையை சமாதானப்படுத்தி சங்கிலியால் கட்டிப்போட்டுவிட்டார்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20080423134104&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=0

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP