சமீபத்திய பதிவுகள்

மகர விளக்கு செயற்கையே-பக்தர்கள் அதிர்ச்சி

>> Thursday, May 29, 2008




http://tm.dinakaran.co.in/2952008/tm_290508_e1_01_cni.jpg

StumbleUpon.com Read more...

மரமாக மாறிய மனிதர்

மரமாக மாறிய மனிதர்
 


   லாஸ் ஏஞ்சலஸ்: படத்தைப் பார்த்ததும் இது அரச மரமா, ஆல மரமா என்ற ஆராய்ச்சிக்கு போயிருப்பீர்கள். ஆனால், இது மரமல்ல, மரமாக நிற்கும் மனிதர். ஆம்.

இயற்கைக்கு ஆதரவான வாழ்க்கை முறையை ஆதரிக்கும் "பிளானட் கிரீன்" என்ற 24 மணி நேர டிவி சேனல், அமெரிக்காவில் தொடங்கப்படுகிறது. அதன் விளம்பர நிகழ்ச்சி நிகழ்ச்சி லாஞ் ஏஞ்சலஸ் நகரில் நடந்தது.

அதில் தத்ரூபமாக மரம் போன்ற ஆடை அணிந்து அனைவரையும் அசர வைத்தார் கிளிப் ஸ்பென்ங்கர் என்பவர். நடமாடும் மரமாக வந்து கலக்கிய அவரை எல்லாரும் பாராட்டினர்.
 

 

StumbleUpon.com Read more...

யாழ்ப்பாணம் அருகே, அதிகாலையில் அதிரடி தாக்குதல் கடற்படை தளம் செயல்பட்ட குட்டித்தீவை விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்


யாழ்ப்பாணம் அருகே, அதிகாலையில் அதிரடி தாக்குதல்
கடற்படை தளம் செயல்பட்ட குட்டித்தீவை விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்
13 சிங்கள மாலுமிகள் கொல்லப்பட்டனர்


கொழும்பு, மே.30-

இலங்கை ராணுவம் மற்றும் கடற்படை தளம் செயல்பட்ட குட்டித்தீவை, அதிரடி தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள். அதிகாலை நடைபெற்ற மோதலில் சிங்கள மாலுமிகள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

குட்டித்தீவு மீட்பு

இலங்கை தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் அருகில் உள்ள குட்டித்தீவில் (சிரத்தீவு) ராணுவம் மற்றும் கடற்படை தளங்கள் செயல்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் நேற்று அதிகாலையில் இந்த ராணுவ தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலை குலைந்த சிங்கள கடற்படை மாலுமிகள் கொல்லப்பட்டனர். வெற்றிகரமாக நடைபெற்ற இந்த தாக்குதலை அடுத்து குட்டித்தீவை கைப்பற்றியதாக விடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர்.

ராணுவம் மறுப்பு

விடுதலைப்புலிகளின் ஆதரவு இணைய தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பலியான 3 மாலுமிகளின் படங்களுடன் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதக்குவியலும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், இலங்கை ராணுவம் இந்த தகவலை மறுத்து உள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து பூநகரியில் இருந்து ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் கடற்புலிகளின் 4 படகுகளை மூழ்கடித்து, 15 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தசநாயகே அறிவித்து இருக்கிறார்.

பீரங்கி தாக்குதல்

சிங்கள வீரர் ஒருவர் பலியானதாகவும், 3 வீரர்களை காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் நகரை நோக்கி கடற்புலிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் பலியானார்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதல் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

54 பேர் பலி

சித்திரத்தீவு மற்றும் முல்லைத்தீவு, மன்னார் பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது இலங்கையின் முப்படையினர் நடத்திய தாக்குதலில் 46 விடுதலைப்புலிகள், பொதுமக்கள் 6 பேர், 2 சிப்பாய்கள் உள்பட 54 பேர் பலியானதாக ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் இலங்கைப்போரில், தற்போது ராணுவத்தின் கை ஓங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கணித்து உள்ளனர். என்றாலும், இரு தரப்பிலுமே சரியான தகவல்கள் வெளியிடப்படுவது இல்லை என்பதால், உண்மை நிலவரம் இன்னும் புதிராகவே இருந்து வருகிறது.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415806&disdate=5/30/2008

StumbleUpon.com Read more...

ஐயப்பன் பெயரில் போலி(மகர) விளக்கு ஏற்றப்பட்டுவந்த ரகசியம் அம்பலம்


செயற்கையாக ஏற்றப்படுவதாக தகவல்
சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு தோன்றுவது பற்றி விசாரணை
கேரள முதல்-மந்திரி அறிவிப்பு


திருவனந்தபுரம், மே.30-

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு தோன்றுவது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று கேரள முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் அறிவித்தார்.

மகர விளக்கு

கேரளாவில் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலுக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல லட்சம் பக்தர்கள் சென்று அய்யப்பனை தரிசித்து வருகிறார்கள்.

மகர சங்கராந்தி நாளன்று பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு 3 முறை தோன்றி மறையும். மகர விளக்கு தோன்றும்போது, அய்யப்பனே காட்சி தருவதாக கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர். அப்போது சரண கோஷம் விண்ணை பிளக்கும்.

செயற்கையானது என சர்ச்சை

இந்த நிலையில் அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், திருவாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான ராமன் நாயர் கூறுகையில்; மகர விளக்கு என்பது இயற்கையானது அல்ல. கோவில் ஊழியர்களால் செயற்கையாக ஏற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.

அதையடுத்து கேரள சுற்றுலா மேம்பாட்டுத் துறை தலைவரும், இடதுசாரி ஆதரவாளருமான செரியன் பிலிப் மற்றும் சில நாத்திக குழுக்களும், மகர ஜோதி என்பது பக்தர்களை ஏமாற்றும் ஒரு மோசடி என்று கூறினார்கள்.

சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமை தந்திரி விளக்கம்

இந்த நிலையில் இந்தப் பிரச்சினை பற்றி அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு சார்பில் அவரது பேரனும், தந்திரியுமான ராகுல் ஈஸ்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மகர விளக்கு வேறு. மகர ஜோதி வேறு. மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கு திசையில் தோன்றும் நட்சத்திரத்தை குறிக்கும்.

மகர விளக்கு என்பது, பழங்காலத்தில் அய்யப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவதாகும். மகர விளக்கு ஏற்றும் இந்த வழக்கம், பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது ஆகும். அதனை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால், இந்த வழக்கம் பல நூற்றாண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

எந்த ரகசியமும் இல்லை

மகர ஜோதியும், மகர விளக்கும் ஒன்று என்று நினைக்கும் ஒரு சிலரின் தவறான கருத்து காரணமாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது தேவையில்லாதது. இந்த இரண்டு விஷயங்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

மகர விளக்கு என்பது கடவுள் அய்யப்பனுக்கு வழங்கப்படும் ஒரு பாரம்பரிய தீப ஆராதனை. மற்றபடி இதில் எந்த ரகசியமும் இல்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தேவசம்போர்டு மந்திரி

இதற்கிடையே கேரள தேவசம்போர்டு மந்திரி ஜி.சுதாகரன் கூறுகையில், மகர விளக்கு மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்பது அரசாங்கத்துக்கு தெரியும் என்று கூறி உள்ளார்.

மகர விளக்கு ஏற்றப்படும் பகுதிக்கு செல்வதென்பது மிகவும் கடினம் ஆகும். இஸ்லாமிய மக்கள் சந்திரனின் பிறைவடிவை பார்த்து, விழாவை தீர்மானிப்பது போலான ஒரு நிகழ்வுதான் இது. நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையில் கைவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. இதை சொல்வதால் எனது முற்போக்கு சிந்தனைக்கு எந்த குறையும் ஏற்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது; சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்று கண்டறிய விசாரணை நடத்தப்படும். இப்பிரச்சினையில் பக்தர்களின் நம்பிக்கைக்கு இடைïறு ஏற்படுத்தும் விதத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அவர் கூறினார்.

பக்தர்கள் வேதனை

ஏற்கனவே கன்னட நடிகை ஜெயமாலா கோவில் கருவறை வரை சென்றதாக கூறியது, உன்னிக்கிருஷ்ண பணிக்கரின் தேவ பிரசன்னம் ஆகியவற்றால் சபரிமலை அய்யப்பன் கோவில் சர்ச்சைகளில் சிக்கியது. இந்த நிலையில் மகர விளக்கு பற்றி தற்போது சர்ச்சை எழுந்திருப்பது, அய்யப்ப பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415808&disdate=5/30/2008&advt=1

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP