காஷ்மீர் பொது விபரங்கள்
12-ம் நூற்றாண்டில் இருந்து நன்கு அறியப்பட்டது காஷ்மீர். 19-ம் நூற்றாண்டின் மத்தியில் மன்னராட்சி ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. டோக்ரா வம்சம் 1947 வரை ஆண்டது. கடைசி மன்னரான ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார்.
பரப்பளவு : 860.24 சதுர மைல்கள் (1947-க்கு முந்தையது)
பெரிய பகுதிகள்:
காஷ்மீர் பள்ளத்தாக்கு 1,639 சதுர மைல்கள்
லடாக் 33,554 சதுர மைல்கள்
ஜம்மு 12,378 சதுர மைல்கள்
மக்கள் தொகை 70 லட்சம் (2000 ஆண்டு மதிப்பீடு)
வரலாற்றில் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டாலும் தாங்கள் காஷ்மீரிகள் என்கிற அடையாளத்தைக் காஷ்மீர் மக்கள் இழக்க விரும்புவதில்லை என்கிறார் ஒரு ஆங்கில வரலாற்றாசிரியர். 1948-லும் இதே நிலைப்பாடுதான். அப்போது காஷ்மீர் இஸ்லாமியர் பாகிஸ்தானுடன் இணையவோ அல்லது தனி நாடாகவோ மாற விரும்பியபோது இந்து பண்டிட்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். இந்திய அரசியல் நிர்ணய சட்டசபை உறுப்பினராக இருந்த ஷேக் அப்துல்லா இந்தியாவுடன் இணைவதையே விரும்பினார். காஷ்மீர் மன்னரும் ஒப்புக்கொள்ளவே தில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஒப்புதலும் பெறப்பட்டது.
ஆனால் காஷ்மீரை தன்னுடன் இணைக்க விரும்பியது பாகிஸ்தான். இதற்காக 1969, 71, 99 ஆகிய ஆண்டுகளில் நேரிடையாகப் போரில் குதித்தது. மூன்றிலும் தோல்விதான்.
பொது கருத்துக் கணிப்பு
இந்திய பிரதமர் நேரு காஷ்மீர் மக்களுக்கும் ஐ.நா.வுக்கும் பொதுக் கருத்துக்கணிப்பு நடத்துவதாக வாக்குறுதியளித்தார். இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தது சரியா? தவறா? என்பதுதான் அதன் சாராம்சம். இதை ஐ.நா.சபையில் தீர்மானமாகவும் கொண்டு வந்தனர். அதன்படி கருத்து கணிப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை கருத்துக் கணிப்பு பல்வேறு காரணங்களால் நடத்தப்படவேயில்லை.
ஆனால் பலமுறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றிலெல்லாம் 50% மக்களுக்கு மேல் வாக்களித்துள்ளனர். இதையே இந்தியா காரணங்காட்டி இந்தியாவுடனான காஷ்மீரின் இணைப்பு இறுதியானது என்கிறது. இருப்பினும் சில வருடங்களுக்கு முன்பு நடந்த 'அவுட்லுக்' பத்திரிகையின் கருத்துக் கணிப்பு வேறு கதையைக் கூறுகிறது. பெரும்பாலான மக்கள் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கிறார்கள் என்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட அரசியல் பிரிவு 370 தனி அந்தஸ்து மூலம் காஷ்மீர் மக்கள் தங்களை தாங்களே ஆள உரிமையளிக்கிறது. இராணுவம், நிதி, தொலைத்தொடர்பு, அயல் நாட்டு கொள்கை போன்றவை தவிர மற்றவை காஷ்மீர் அரசே வைத்துக் கொள்ளும். இதையே 'மாநில சுயாட்சி', 'முழுமையான கூட்டாட்சி' முறை என்ற பெயர்களில் தமிழ் நாடு, பஞ்சாப் மாநிலங்களும் கேட்கின்றன.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு
இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டபோது, இந்தியாவின் மேற்குப்புற மாநிலங்களான குஜராத்,
இராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீரின் ஒரு பகுதி போன்றவை சர்வதேச எல்லைப் பகுதியை கொண்டவைகளாக விளங்கின. இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டபோது வடமேற்கு காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் போனது. இப்பகுதி காஷ்மீர் போன்று இந்தியாவின் பகுதியே. எனவே, இப்பகுதியில் எது எல்லைக் கோடு என்பதில் சிக்கல் எழுந்தது. பாக் ஆக்ரமித்த பகுதிக்கு கீழுள்ள இந்திய எல்லைப் பகுதிகளே எல்லைக் கட்டுப்பாட்டு கோடாக அங்கீரிக்கப்பட்டது.
1949 கராச்சியில் ஐ.நா. உதவியுடன் பிரிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளை எல்லைக் கட்டுப்பாடு கோடு என்றழைத்தனர்.
Read more...