சமீபத்திய பதிவுகள்

டெல்லி, ஆமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 5 முக்கிய தீவிரவாதிகள் பிடிபட்டனர். மும்பையை தாக்கும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது

>> Wednesday, September 24, 2008

டெல்லி, ஆமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 5 முக்கிய தீவிரவாதிகள் பிடிபட்டனர். மும்பையை தாக்கும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது

மும்பை, செப்.25-

ஆமதாபாத், டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 80-க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். `இந்தியன் முஜாகிதீன்' என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், இந்த தாக்குதலை நடத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, அதிக், சாஜித் ஆகிய இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். சயீப் உள்பட மேலும் சில தீவிரவாதிகள் டெல்லியில் பிடிபட்டனர்.

பிடிபட்ட தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், டெல்லி, ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு முக்கிய தொடர்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆசம்காட் பகுதியை சேர்ந்த தீவிரவாத கும்பல்தான் இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு `மூளை'யாக செயல்பட்டது தெரிய வந்தது.

அவர்களை கூண்டோடு பிடிக்க நாடு முழுவதும் வலை விரிக்கப்பட்டது. இந்த நிலையில், குண்டு வெடிப்பு சதியில் தொடர்புடைய 5 முக்கிய தீவிரவாதிகள் நேற்று மும்பையில் பிடிபட்டனர். அப்சல் முதாகிப் உஸ்மானி, முகமது சாதிக் ஷேக், முகமது ஆரிப் ஷேக், அகமத் ஜாகீர் ஷேக், ஷேக் முகமது அன்சாரி ஆகிய 5 தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை உலுக்கிய அனைத்து குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இந்த 5 பேருக்கும் தொடர்பு இருந்த திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 10 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடி பொருட்கள், 15 டெட்டனேட்டர்கள், எலக்ட்ரானிக் சர்கிïட்கள், இயந்திர துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகள், 38 தோட்டாக்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 5 பேரில், உஸ்மானி மும்பை டிராம்பேயில் பிடிபட்டான். சாதிக், வட கிழக்கு மும்பையில் உள்ள நேரு நகரிலும், ஆரிப் குர்லாவிலும், அன்சார் செம்பூரிலும், ஜாகீர், மும்பையின் எல்லையில் உள்ள தானே மாவட்டம், பிவாண்டியிலும் போலீசாரின் பிடியில் சிக்கினார்கள். இது குறித்து நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் கமிஷனர் ஹசன் கபூர், குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா ஆகியோர் கூறியதாவது-

"உஸ்மானி, ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் குண்டு வைத்தவன். அத்துடன் ஆமதாபாத் குண்டு வெடிப்பில் பயன்படுத்துவதற்காக, நவி மும்பையில் இருந்து 4 வாகனங்களையும் திருடிச் சென்று இருக்கிறான்.

சாதிக், இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவன். டெல்லி குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட அதீப்புடன் இணைந்து இவன் செயல்பட்டான். தனது சொந்த ஊரான ஆசம்காட்டில் இருந்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆமதாபாத், டெல்லி குண்டு வெடிப்புக்கு தயார்படுத்தியவன்.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியில் உள்ள சங்கத்மோச்சன் கோவில், மும்பை ரெயில்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, லக்னோ மற்றும் பைசாபாத் கோர்ட்டுகள், ஐதராபாத், பெங்களூர், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு மற்றும் சூரத்தில் வெடிக்காத குண்டுகளை வைத்த சம்பவத்திலும் இவர்கள் 5 பேருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லியில் வைத்த குண்டுகளை தயாரித்தவர்களில் ஆரீப்பும் ஒருவன். இந்தியன் முஜாகிதீன் இயக்க நிறுவன உறுப்பினர்களில் ஒருவனான ரோஷன் கான், பாகிஸ்தானில் பதுங்கி இருந்து சதிகாரர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தான். பிடிபட்டவர்களில் 3 பேர், பாகிஸ்தான் சென்று லஸ்கர் இ தொய்பா, ஹுஜி ஆகிய இயக்கங்களின் ஆதரவுடன் ஆயுத பயிற்சி பெற்றவர்கள்.

முதலில் சிமி இயக்கத்தில் செயல்பட்ட இவர்கள், பின்னர் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்த கும்பல் அடுத்த கட்டமாக மீண்டும் மும்பையை குறி வைத்து தாக்க திட்டமிட்டு இருந்தது. அதற்குள் பிடிபட்டதால் அவர்கள் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது''.

இவ்வாறு போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

StumbleUpon.com Read more...

தினமலர்:மந்திரத்தால் மாங்காய் வரவழைப்பது எப்படி?சாமியார்களுக்கு மேஜிக் நிபுணர் பயிற்சி அளிக்கிறார்.

 
 

StumbleUpon.com Read more...

பாக். ஓட்டல் மீது கார் குண்டு தாக்குதல்; இமாம் உள்பட 3 பேர் கைது

இஸ்லாமாபாத், செப். 23-

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் உள்ள `மாரியட்' 5 நட்சத்திர ஓட்டலில் கடந்த சனிக்கிழமை கார் குண்டு தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய இந்த கார் குண்டு தாக்குதலில் வெளிநாட்டு தூதர்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள், அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 68க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி உள்பட முக் கிய தலைவர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றது. ஆனால் அவர் கள் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தி யது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிர வாதி கள் என்று போலீசார் தெரி வித்து இருந்தனர்.

இந்த நிலையில் கார் குண்டு தாக்குதல் தொடர் பாக ஜாமியா மசூதி இமாம் குவாரி முகமது அலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஹர்கத் அல் ஜிகாத் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த அமைப்புக்கு அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கார் குண்டு தாக்குதல் நடத்திய தற்கொலைப் படை தீவிரவாதி அடையாளமும் தெரிய வந்துள்ளது. ஓட்டல் முன் அமைக்கப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் அந்த தீவிரவா தியின் படம் பதிவாகி உள்ளது.
 

StumbleUpon.com Read more...

கட்டண பாக்கிக்காக அழகியை நிர்வாண நடனம்; ஆட வைத்த அரசு வக்கீல்

அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி நடன அழகி ஒருத்தி ஒரு வழக்கில் சிக்கிக் கொண் டார். இந்த வழக்கில் அழகி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அழகிக்காக அரசு சார்பிலேயே ஒரு வக்கீல் ஏற்பாடு செய்யப்பட்டார்.

ஸ்காட்ராபர்ட் என்ற அந்த வக்கீல் வழக்கு விசா ரணை முடிந்ததும் அழகி யிடம் கட்டணத்தை கேட் டார். அவர் கேட்ட முழு பணத்தையும் கொடுக்க நடன அழகியிடம் வசதி இல்லை.

கட்டண பாக்கிக்காக நிர் வாண நடனம் ஆடும் படி அந்த அழகியை வக்கீல் வற்புறுத்தினார். அவர் சொன்னபடி அழகியும் நிர் வாண நடனம் ஆட அதை வக்கீல் ரசித்துப் பார்த் தார்.

நிர்வாண நடனம் பார்த்த அந்த வக்கீல் மீது ஒழுங்கு முறை குழு இப்போது நடவ டிக்கை எடுத்துள்ளது. அந்த வக்கீலை 15 மாதத்துக்கு `சஸ்பெண்ட்' செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.
 

StumbleUpon.com Read more...

மதப்பிரச்சாரம் செய்த பள்ளி நிர்வாகியை கைது செய்ய‌ சங்பரிவார் அமைப்புகள் கோரிக்கை‍

fd
 
 
 

StumbleUpon.com Read more...

உத்தரகண்டில் கிறிஸ்தவ போதகர்,கன்னியாஸ்திரீ கொலை

உத்தரகண்டில் கிறிஸ்தவ போதகர்,கன்னியாஸ்திரீ கொலை
 
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் கிறிஸ்தவ மத போதகரும், கன்னியாஸ்தீரீயும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.மீரட் நகரைச் சேர்ந்த போதகர் சாமுவேலும் (60), தில்லியைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ மெர்ஸியும் (35) டேராடூனில் உள்ள தேவாலய வளாகத்தில் தங்கியிருந்து கிறிஸ்தவ மதப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் தனித்தனி அறைகளில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை காவலாளி கண்டுபிடித்து போலீஸருக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

 

 

StumbleUpon.com Read more...

இல.கணேசனின் பொருபற்ற உளறல்

தான் பதவின் மரியாதை கூட தெரியாத கணேசன் இந்துக்கள் பொருமை இழந்துவிட்டதாக அறிக்கை விட்டுன் தன் அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளார்.

அப்போ குண்டு வைக்கும் தீவிரவாதிகளும் பொறுமை இழந்து செய்வது நீயாயமா?இதை நீயாயப்படுத்தும் சங்பரிவார் அதை ஏற்றுக்கொள்ள தயாரா?

 
 
 
=============================================================================================================
 
பொறுத்தது போதும் என இந்து மதத்தினர் முடிவெடுத்துவிட்டனர்:இல.கணேசன்
பொறுத்தது போதும் என இந்து மதத்தினர் தீர்மானித்து விட்டார்கள். அதனால் சில இடங்களில் எதிர்விளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:

கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் திட்டமிட்டவை. திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி இந்து இயக்கங்கள் மீது பழி போடப்பட்டுள்ளன. காவிரியில் உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்த கர்நாடக அரசு மறுத்த போது கூட, 355 வது பிரிவில் கடிதம் எழுதாத மத்திய அரசு உடனே கடிதம் எழுதி கர்நாடக அரசை கலைக்க கோரிக்கை வைத்தது எல்லாமே திட்டமிட்ட செயல்கள்; திரும்ப திரும்ப நிகழ்கின்றன.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1222182462&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

வழிபாட்டுத் தலத்தை அவமதிக்க 15 லட்சம்?:3 மாணவர்கள் கைது

 
வழிபாட்டுத் தலத்தை அவமதிக்க 15 லட்சம்?:3 மாணவர்கள் கைது
வழிபாட்டுத்தலத்தில் அவதிப்பு செய்ய ரூ.15 லட்சம் பணம் பெற்றதாக காங்கிரஸ் பிரமுகர் மகன் உள்பட 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து முதல்வர் எடியூரப்பா திங்கள்கிழமை கூறியதாவது:

ஷிமோகா நகரிலுள்ள சாகரில் உள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தல சுவரில் செருப்பு மாலையை சனிக்கிழமை காலை சிலர் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து போலீஸ?992;் விசாரணை நடத்தி ராஜு, ராகவேந்திரா, சுதர்சன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பிபிஎம் படிப்பு படித்து வரும் பட்டதாரி மாணவர்கள்.

கைது செய்யப்பட்ட சுதர்சன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷிமோகா நகராட்சி முன்னாள் கவுன்சிலர் லலிதம்மாவின் மகன் ஆவார். மேலும் இந்தச் சம்பவத்தில் தற்போதைய கவுன்சிலர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தச் இழிசெயலில் ஈடுபட ரூ.15 லட்சம் பணம் கைமாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பணத்தை ரவி என்பவர் கொடுத்தாக விசாரணையின்போது 3 பேரும் தெரிவித்துள்ளனர். அந்த ரவி யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதமாற்றம்: 5 பேர் கைது: குடகு மாவட்டம், சித்தாபுரம் அருகே நெல்லியஹுடிகெரே கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டது. இதில் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின.

இதுபற்றி விசாரித்தபோது தேவாலயத்தின் பொறுப்பாளராக இருப்பவர் சுனில் ஜார்ஜ் என்று தெரியவந்தது. இவர் அக்கிராமத்தினர் சிலரை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதை அறிந்த கிராமமக்கள் திரண்டுவந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து மதமாற்றம் செய்ததாக சுனில் ஜார்ஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆட்சேபகரமான துண்டுப் பிரசுரங்கள், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1222183277&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP