சமீபத்திய பதிவுகள்

தாய்லாந்து ஓபன் டென்னிஸ் லியாண்டர் பெயஸ் ஜோடி `சாம்பியன்'

>> Sunday, September 28, 2008


தாய்லாந்து ஓபன் டென்னிஸ்
லியாண்டர் பெயஸ் ஜோடி `சாம்பியன்'


பாங்காங், செப்.29-

தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி பாங்காங்கில் நடந்தது. நேற்று நடந்த இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-லுகாஸ் (செக் குடியரசு) ஜோடி, அமெரிக்காவின் ஸ்காட்-டேவிட் மார்டின் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் ஜோடி 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியை பெற 76 நிமிடம் தேவைப்பட்டது. லியாண்டர் பெயஸ் வென்ற 40-வது இரட்டையர் பட்டம் இதுவாகும். 2005-ம் ஆண்டில் லியாண்டர் இந்த பட்டத்தை ஆஸ்திரேலிய வீரர் பால் ஹான்லேவுடன் இணைந்து வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்பிரட் டோங்கா 7-6, 6-4 என்ற நேர் செட்டில் செர்பியாவின் முன்னணி வீரர் நோவாக் டோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=441580&disdate=9/29/2008

StumbleUpon.com Read more...

நாச்சிக்குடாவுக்குள் நுழைந்துவிட்டோம்: படைத்தரப்பு அறிவிப்பு

 
கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் வீதியிலுள்ள நாச்சிக்குடாப் பகுதியில் நேற்று மாலை இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றதாகக் களமுனைத் தகவல்கள் தெரிவித்தன.
நேற்றைய மோதலின்போது நாச்சிக்குடாவின் எல்லைப் பகுதியிலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரம் வரை இராணுவத்தினர் முன்னேறியிருக்கின்றனர் என நேற்று மாலை படைத்தரப்பு அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த மோதலில் 10 விடுதலைப் புலி உறுப்பினர்களும் இரு படைச்சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர். 8 படையினர் காயமடைந்தனர் என்றும் படைத்தரப்பு தெரிவித்திருக்கிறது. 58ஆவது படைப்பிரிவினரே இந்த மோதலில் ஈடுபட்டனர் எனவும் கூறப்பட்டது.
இதேவேளை, நேற்றைய மோதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.

 

 

StumbleUpon.com Read more...

அமெரிக்க பொருளாதார மீட்பு திட்டம் முன்னேற்றமான நிலையில் உள்ளது !முன்னேற்றமான நிலையில் உள்ளது

 

amari-29.jpg 

அமெரிக்காவின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்பதற்கான ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கிலான பெரிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முயன்றுவரும் அந்நாட்டின் அரசியல்வாதிகள் உடன்பாட்டின் கடைசி கட்ட விஷயங்களில் தற்போது கவனம் செலுத்திவருவதாகக் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் பாதிப்புக்குள்ளான நிதி நிறுவனங்களிடம் இருந்து வராக் கடன்களை பெற்றுக்கொள்வதற்காக எழுபதாயிரம் கோடி டாலர்களை அமெரிக்க கருவூலம் செலவுசெய்ய அனுமதிக்கும் இத்திட்டத்திற்கு ஒரு ஆரம்பகட்ட ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்று காங்கிரஸ் மன்றத் தலைவர்கள் கூறுகின்றனர்.

இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துவருகிறது என்ற செய்தியை ஜனநாயக கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளர் பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.

ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்திற்கு தன்னால் ஆதரவு வழங்க முடியும் என்று நம்புவதாக குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜான் மெக்கெய்ன் கூறியுள்ளார்.

அமெரிக்க மக்கள் கஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்டுவிட்டு முன்னோக்கி நகர வேண்டிய ஒரு விஷயம் இந்த நிதி நிறுவன மீட்சித் திட்டம் என்று மெக்கெய்ன் கூறினார்.
 

StumbleUpon.com Read more...

சீன விண்வெளிவீரர்கள் பூமிக்கு திரும்பினார்கள்

 


பீஜிங், செப்.29-

சீன விண்வெளி வீரர்கள் 3 பேரும் சீன விண்கலம் ஷென்ஷூ-7ல் விண்வெளியில் பறந்தனர். அந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வந்தது. அப்போது விண்வெளி வீரர் ஜாய் ஜிகாங் விண்வெளியில் நடந்தார். அமெரிக்கா, ரஷியாவுக்கு பிறகு விண்வெளியில் நடந்து சாதனை படைத்தது சீன வீரர்கள் தான்.

அவர்கள் நேற்று 5.40 மணிக்கு பூமிக்கு திரும்பினார்கள். உள் மங்கோலியாவில் உள்ள பகுதியில் அவர்கள் தரை இறங்கினார்கள். பூமிக்கு திரும்புவதற்கான வாகனம் பூமியின் வளி மண்டலத்தில் நுழைந்த 3-வது நிமிடத்தில் அவர்கள் அதில் இருந்து வெளியே வந்து பாரசூட்டில் கீழே இறங்கினார்கள். பூமிக்கு 50 கி.மீ உயரத்தில் பாராசூட் விரிந்தது. அது புல் வெளியில் இறங்கியது. அவர்களை தேடுவதற்காக ஹெலிகாப்டரும், மீட்புக்குழுவினரும் தயாராக இருந்த இடத்துக்கு அருகே அவர்கள் இறங்கினார்கள். அவர்கள் பத்திரமாக தரை இறங்கியதை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.

 

http://www.dailythanthi.com/article.asp?NewsID=441572&disdate=9/29/2008

StumbleUpon.com Read more...

கர்நாடகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அதிரடி நடவடிக்கை வெளிநாட்டு மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் முதல்-மந்திரி எடிïரப்பா அறிவிப்பு


கர்நாடகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அதிரடி நடவடிக்கை
வெளிநாட்டு மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்
முதல்-மந்திரி எடிïரப்பா அறிவிப்பு


மங்களூர், செப்.29-

கர்நாடகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி, வெளிநாட்டு மாணவர்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடிïரப்பா கூறினார்.

முதல்-மந்திரி எடிïரப்பா நேற்று காலை 9 மணிக்கு விமானம் மூலம் மங்களூர் வந்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மங்களூர் டவுன்ஹால் சென்றார். அங்கு நடந்த பிரம்மஸ்ரீ நாராயணகுரு சாமியாரின் பிறந்தநாள் விழாவில் அவர் கலந்து கொண்டார்.

விழா முடிந்ததும் நிருபர்களுக்கு எடிïரப்பா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாது:-

உதவவில்லை

கர்நாடகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறதோ என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. தீவிரவாதிகளை ஒடுக்க மாநில அரசு அனைத்து விதமான நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது எந்த பலனையும் அளிக்கவில்லை.

இந்த விஷயத்தில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை. வெறும் வாய்ப்பேச்சோடு சரி. கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. நாட்டில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டு விட்டது. மத்திய அரசின் மெத்தன போக்கு காரணமாக தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தற்போது எல்லைமீறி விட்டன. எனவே, இனியும் மத்திய அரசு கை கட்டி நிற்காமல் இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியலாக்காதீர்

கர்நாடகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. இதற்கு அரசியல் சாயம் பூச யாரும் நினைக்க கூடாது.

மேலும் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்கவும், தசரா, ரம்ஜான் போன்ற பண்டிகை கொண்டாட்டங்களின் போது தீவிரமாக கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள்

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாகவே இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சொல்வது போல சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்கேடு அடைந்து விடவில்லை. மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மத்திய அரசின் உதவி இல்லாமலேயே கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகக் பாதுகாக்கப்படும். கர்நாடகத்தில் இருந்து வெடிகுண்டு போன்ற பொருட்கள் மற்ற இடங்களுக்கு அனுப்பப்படுவதாக வரும் செய்திகள் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதனைத் தடுக்க கர்நாடகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக கர்நாடகத்தில் பாகிஸ்தான், வங்காள தேசத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக கண்காணிக்கப்படும். கர்நாடக மாநில போலீஸ் அதிகாரிகள் திறமையுடன் செயல்படுகிறார்கள். அவர்களின் பணிகள் பற்றி குறை சொல்ல முடியாது.

இவ்வாறு எடிïரப்பா கூறினார்.

தேவையில்லை

கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த எடிïரப்பா, ``கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டை தேவையான அளவுக்கு போலீஸ் படை இருக்கிறது. எனவே, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை வரவழைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை'' என்றார்.

``கர்நாடக மாநிலம் சுள்ளியா தாலுகா வில் உள்ள மண்டேகோலு அருகே சில ஏக்கர் நிலத்தை கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக கூறப்படுகிறதே?'' என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு எடிïரப்பா, ``கர்நாடகத்தின் வனப்பகுதியில் நில ஆக்கிரமிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'' என்று பதில் அளித்தார்.

பேட்டியின்போது உடன் இருந்த மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த கவுடா கூறியதாவது:-

அசைக்க முடியாது

காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் ஒன்று சேர்ந்தால் கூட பா.ஜனதாவை அசைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேஷ்பாண்டே, முதலில் அவருடைய கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அதற்கு முன் பா.ஜனதா பற்றி பேசக் கூடாது. பா.ஜனதாவை விமர்சிக்கும் தகுதி தேஷ்பாண்டேக்கு கிடையாது.

இவ்வாறு சதானந்த கவுடா தெரிவித்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

அதன்பிறகு நகர வளர்ச்சி ஆணைய அதிகாரிகளுடன் எடிïரப்பா ஆலோசனை நடத்தினார். பின்னர் மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தேரடி வீதியில் உள்ள வெங்கடரமணசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் எடிïரப்பா சிறப்பு பூஜை செய்து சாமி கும்பிட்டார். எடிïரப்பா வருகையை முன்னிட்டு மங்களூரில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

 
 

StumbleUpon.com Read more...

சர்ச் மீதான தாக்குதல் கண்டித்து தாராபுரத்தில் கிறிஸ்தவர்கள் பேரணி, உண்ணாவிரதம்

சர்ச் மீதான தாக்குதல் கண்டித்து தாராபுரத்தில்
கிறிஸ்தவர்கள் பேரணி, உண்ணாவிரதம்


தாராபுரம், செப். 28-


சர்ச் மீதான தாக்குதல் கண்டித்து தாராபுரத்தில் இன்று கண்டன பேரணி மற்றும் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.


ஒரிசா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலும், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் சர்ச் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டித்து தாராபுரத்தில் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் 28ம் தேதி பேரணி மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் கடந்த 25ம் தேதி தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகேயுள்ள புனித அலோசியஸ் சர்ச் வளாகத்தில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ள குழந்தைஏசுவின் சிலை கல்வீசி உடைக்கப் பட்டது.


சர்ச் மீதான தொடர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தாராபுரத்தில் இன்று கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் பேரணி நடந்தது. பேரணிக்கு புனித அலோசியஸ் சர்ச் பங்குதந்தை லூயிஸ்அடிகளார் தலைமை தாங்கினார்.
பேரணி, தென்னிந்திய திருச்சபை ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு வசந்தா ரோடு ரோடு, என்.என்.பேட்டை வீதி, அனுப்பர் தெரு, தாலுகா ஆபீஸ் ரோடு, சர்ச் ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் சென்றடைந்தது.
அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினர், தென்னிந்திய திருச்சபை யினர், பெந்தே கோஸ்தே சபையினர் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இப்போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
 
 
 

StumbleUpon.com Read more...

முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை

முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை

 

இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
சாம் ஷமான்

Muhammad and the Seal of Prophethood

A Sign or A Physical Deformity?

முகமது, "நபிமார்களின் முத்திரையானவர்" என்று குர்‍ஆன் சொல்கிறது:

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (குர்‍ஆன் 33: 40)

Muhammad is not the father of any of your men, but (he is) the Apostle of God, and the Seal of the Prophets: and God has full knowledge of all things. S. 33:40 Y. Ali

முதன் முதலில் மேலுள்ள வசத்தை படித்தவுடன், நமக்கு, "முகமது தான் நபித்துவத்தின் முடிவானவர் என்றும், அல்லாவால் அனுப்பபட்ட நபிகளின் வரிசையில் இவரே இறுதியானவர் என்றும்" விளங்கும். ஹதீஸ் தொகுப்புக்களை படிக்கும் போது, இஸ்லாமிய ஆதாரங்களின் படி பார்த்தால், முகமதுவுக்கு முன்னிருந்த நபிமார்களின் நிலைகளோடு(Status) , முகமதுவின் நிலையைப் பற்றிப் பார்க்கும் போது இந்த 'முத்திரை" என்பது சாதாரண ஒரு கூற்றை விட அதிகமானது. (இக்கட்டுரையில் கீழ் கோடிட்ட, கனத்த குறிப்புகள் அனைத்தும் நம்முடையது.)

சஹிஹ் அல்-புகாரி(Sahih al-Bukhari):

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 190

'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது" என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6352

சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பருகினேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.

சஹிஹ் முஸ்லீம்(Sahih Muslim):

அதிகாரம் 28: அவருடைய நபித்துவத்தின் முத்திரையைப் பற்றிய உண்மை, அதன் சிறப்பு குணாதிசயம் மற்றும் உடலில் அமைந்துள்ள இடம்.

ஜபீர் பி சமுரா கூறியதாவது: நான் அவர் முதுகிலிருந்த முத்திரையைப் பார்த்தேன், அது ஒரு புறா முட்டையைப் போல் இருந்தது.(Book 030 Number 5790)

அப்துல்லா பி சார்ஜிஸ் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதரை(ஸல்)ப் பார்த்து, அவரோடு ரொட்டி மற்றும் இறைச்சி சாப்பிட்டேன். அவரிடம் கேட்டேன் "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) உமக்கு மன்னிப்புக் கோரினாரா? என்று. அவர் சொன்னார்: "ஆமாம் உனக்காகவும், என்று இந்த வசனத்தை ஓதினார்கள்: " உன்னுடைய பாவத்திற்காகவும் உன்னுடைய விசுவாசமுள்ள ஆண் பெண்களுக்காகவம் மன்னிப்புக் கேள்(xlvii. 19)" பிறகு நான் அவர் பின்னாகச் சென்று, நபித்துவத்தின் முத்திரையை அவரது இரண்டு தோள்பட்டைகளின் இடையில் இடது தோள்பட்டையின் பக்கத்தில் கண்டேன், அது ஒரு மச்சம் போல காட்சி அளித்தது. (Book 030, Number 5793)

அபு தாவுதின் சுனான்(Sunan of Abu Dawud):

குர்ராஹ் இபின் இயாஸ் அல்- முஸானி கூறியதாவது:

நான் முஸாயானிகளின் கூட்டத்தோடு அல்லாவின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, கூட்டு வைப்பதற்கு சத்தியம் செய்துகொண்டோம். அவருடைய சட்டையின் பொத்தான்கள் திறந்திருந்தது. நான் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்து என் கையை அவருடைய சட்டைக்குள்ளே கழுத்துப்பகுதியில் வைத்தேன் அப்போது அந்த முத்திரையை உணர்ந்தேன். ( Book 32, Number 4071)

திர்மிதியின் ஜமி சுனான்(Jami (Sunan) of at-Tirmidhi)

அலி இப்னு அபுதலிப் கூறியதவாது:

அலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணித்தபோது சொன்னார்கள்: அவர் மிகவும் உயரமானரோ அல்லது மிகவும் குட்டையானவாராகவோ இல்லை. சரியான அளிவிலே இருந்தார்கள். அவருக்கு ரொம்ப நீளமான அல்லது சுருளான மயிராக இல்லாமல் இரண்டும் கலந்ததாக சரியான விதத்தில் இருந்தது. அவர் மிகவும் பருமனாக இருக்கவில்லை அவருடைய முகம் வட்டமாக இல்லை. அவர் சிவப்பும், வெண்மையுமாகவும், அகலமான கருவிழிகளும் நீண்ட இமைகளும் கொண்டிருந்தார். அவருக்கு நீட்டமான மூட்டுகளும் தோள்பட்டைகளும் இருந்தது. ரோமம் நிறைந்திருக்கவில்லை என்றாலும் அவர் மார்பில் ரோமம் இருந்தது. அவருடைய உள்ளங்கைகளும் கால்களும் கடினமாக இருந்தது. அவர் நடந்த போது சாய்வான இடத்தில் நடப்பது போல பாதங்களை உயர்த்தி; நடந்தார். அவருடைய தோள்களுக்கு நடுவில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது அவர் நபிமார்களின் முத்திரையாக இருந்தார். வேறு எவரையும் விட அவருடைய மார்பு புயம் அருமையாக இருந்தது, மற்றவர்களை விடத் தோற்றத்தில் நிஜமாக இருந்தார், உயர்குலத்தை சேர்ந்தவராக இருந்தார். அவரைத் திடீரென்று பார்த்தவர்கள் அவரைப் பற்றிய அச்சத்தில் ஆழ்ந்தார்கள். அவரோடு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர்கள் அவரை நேசித்தார்கள். அவரைப் பற்றி வர்ணித்தவர்கள், அவரைப் போல் ஒருவரை அதற்கு முன்னோ அல்லது பின்னோ பார்த்ததில்லை என்றார்கள். Tirmidhi transmitted it. (Hadith 1524; ALIM CD-Rom Version)

அபுமூஸா கூறியதாவது

அபுதாலிப், குராயிஷின் சில ஷியாக்களோடு ஆஷ் - ஷாம் க்கு (சிரியா) முகமது நபியோடுகூடப் போனார். அவர்கள் அந்த துறவியினிடத்திற்கு வந்தபோது தங்களுடைய பைகளை அவிழ்த்தார்கள் அந்த துறவி அவர்களை நோக்கி வந்தார். இதற்கு முன் அவர்கள் அந்த வழியாக கடந்து போயிருந்தபோதும் இப்படி நடக்கவில்லை. அவர்கள் தங்களுடைய பைகளை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது அந்த துறவி அவர்கள் அருகில் வந்து அல்லாவின் தூதரை (சமாதானம் உண்டாகட்டும்) கை பிடித்துத் தூக்கி, "இவர் தான் உலகத்தின் அதிபதியாயிருக்கிறார், இவர் உலகத்தின் இறைத் தூதராயிருக்கிறார் இவரை அல்லாஹ் உலகத்திற்கு ஒரு தயவாக கொடுத்திருக்கிறார்" என்றார். குராயிஷின் சில ஷியாக்கள் அவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்கள், அவர் கூறினார், " நீங்கள் மலைகளைக் கடந்து வந்த போது ஒரு மரமாவது அல்லது கல்லாவது பணிந்து வணங்கத் தவறவில்லை, அவைகள் நபிக்கு முன்பாக தங்களை பணித்தது. நான் அவரை நபித்துவத்தின் முத்திரை வைத்து அடையாளம் கண்டுகொண்டேன், அது ஒரு ஆப்பிளைப் போல் அவருடைய தோள் பட்டைக்கு கீழாக இருந்தது." அதற்கு பின் அவர் சென்று உணவை ஆயத்தப்படுத்தி அதை நபிக்கு(சமாதனம் அவர் மேல்) கொண்டு வந்தபோது, நபி அவர்கள் ஒட்டகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். பின் அதை அவருக்காக அனுப்பிவிடும்படிச் சொன்னார். மேலே ஒரு மேகம் சூழ நபி வந்தார், மக்களை நெருங்கிய போது மக்கள் அவருக்கு முன்பாக ஒரு மரநிழலடியில் சென்றிருந்தார்கள். அவர் அமர்ந்த போது மரத்தின் நிழல் அவரை சூழ்ந்துகொண்டது, அந்த துறவி , " எப்படி அந்த மரநிழல் அவரை சூழ்ந்துள்ளது என்று பாருங்கள். அல்லாவின் பேரில் வேண்டுகிறேன் உங்களில் யார் அவருடைய பாதுகாவலர் என்று எனக்கு சொல்லுங்கள்." என்றார். அபுதாலிப்தான் என்று கேள்விப்பட்டவுடன், அவரை திருப்பி அனுப்பிவிடும்படி வேண்டிக்கொண்டார். அபுபக்கர் பிலாலையும் அவரோடுகூட அனுப்பிவைத்தார், அந்ந துறவி அவர்களுக்கு ரொட்டி மற்றும் ஒலிவ எண்ணெயை கொடுத்து அளித்தார்கள். (Hadith 1534; ALIM CD-Rom Version)

அல்-டபரியின் சரித்திரம்(Tarikh (History of) al-Tabari):

…பஹிரா இதைப் பார்த்தபோது, தன்னுடைய அறையிலிருந்து இறங்கி அந்த பயணிகளை வரவேற்று ஒரு செய்தி அனுப்பினார்….. இறுதியாக அவர் முகமதுவின் பினபுறத்தைப் பார்த்தார், அவருடைய தோள்களுக்கு நடுவிலிருந்த நபித்துவத்தின் முத்திரையைப் பார்த்தார்…… அவர் பதிலுரைத்து,… "நான் அவருடைய தோள் குருத்தெழும்பின் கீழிருந்த நபித்துவத்தின் முத்திரையினால் அவரை அடையாளம் கண்டுகொண்டேன், அந்த முத்திரை ஒரு ஆப்பிள் போல் இருந்தது."…… (The History of al-Tabari: Muhammad at Mecca, translated and annotated by W. Montgomery Watt and M. V. McDonald [State University of New York Press (SUNY), Albany 1988], Volume VI, pp. 45, 46)

அல்-ஹரித்-முகமது பி. சாத– முகமது பி. 'உமர்-'அலிப் பி. ' இசா அல்- ஹக்கீமி– அவர் தந்தை– அமீர் பி. ரபி'யா: சாயித் பி கூறியதைக் கேட்டேன. 'அமர் பி. நுபாயில் கூறினதாவது……" அவர் மிகவும் குட்டையாகவும் இல்லை உயரமாகவும் இல்லை, அவருடைய தலைமயிர் மிகவும் அடர்த்தியாகவோ அல்லது அடர்த்தியற்றோ காணப்படவில்லை, அவருடைய கண்கள் எப்போதும் சிவப்பாக இருந்தது, அவருக்கு தோள்களுக்கு இடையில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது. அவருடைய பெயர் அகமது….." (பக்கம் 64)

அகமது பி. சினான் அல்-கட்டான் அல்-வாசிட்டி–அபு முஉ'அவியாஹ் - அ'மஷ் - அபு ஷிப்யான் இப்னு 'அப்பாஸ்: பனு அமீரைச் சார்ந்த ஒரு மனிதன் நபியினிடத்தில் வந்து, " உங்கள் தோள்களுக்கு இடையில் இருக்கும் முத்திரையை எனக்கு காட்டுங்கள், நீங்கள் ஏதாவது சூனியத்தால் கட்டுப்பட்டிருந்தால் நான் உங்களை குணமாக்குவேன் ஏனென்றால் நான் தான் அரபுகளின் மிகச் சிறந்த மந்திரவாதி." என்றான் "நான் உனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டுமா" என்று நபி கேட்டார். "ஆம், அந்த பேரீச்சைக் குலையை வரவழையுங்கள்" என்றான். நபி அந்தக் பேரீச்சை சோலையில் இருந்த பேரீச்சைக் குலையைப் பார்த்து, அது அவருக்கு முன் வந்து நிற்கும் வரை விரல் அசைத்தார். பின்பு அந்த மனிதன் "இதை திருப்பி அனுப்புங்கள்."; என்றான். அது திருப்பி அனுப்பபட்டது. அந்த அமீரி சொன்னான், " ஓ பானு அமீர், நான் இதுவரை இதுபோன்ற மிகச்சிறந்த சூனியக்காரரை நான் பார்த்ததில்லை" (பக்கம் 66- 67)

"அப்பொழுது அவர் மற்றொருவனிடம் சொன்னான், 'அவருடைய மார்பைத் திற'. அவர் என்னுடைய இருதயத்தை திறந்து, சாத்தானுடைய அசுத்தங்களையும் உறைந்த இரத்தத்தையும் எடுத்து வெளியே எறிந்து போட்டார். மற்றொருவனிடத்தில் சொன்னார், அவருடைய மார்பை தொட்டியை கழுவுவது போல கழுவு, அவருடைய இதயத்தை உறையை கழுவுவது போல கழுவு' என்றார். அதன் பின் சக்கினாவை வரவழைத்தார், அது ஒரு வெள்ளைப் பூனையின் முகத்தைப் போலிருந்தது, அதை என் இதயத்தில் பொருத்தினார். அவர்களில் ஒருவனிடத்தில் "அவருடைய மார்பைத் தையலிடு" என்று சொன்னார். அவர்கள் என்னுடைய மார்பைத் தைத்தார்கள் மேலும் என்னுடைய தோள்களுக்கு இடையில் அந்த முத்திரையை வைத்தார்கள்…." (பக்கம் 75)

இங்கே முகமதுவுடைய நபித்துவத்தின் முத்திரை என்பது ஒரு சரீர குறைபாடு என்று புலனாகிறது, புள்ளிகள் நிறைந்த மச்சம் ஒரு ஆப்பிள் போல, ஒரு சிறிய பொத்தானைப் போல அல்லது புறாவுடைய முட்டையைப் போல இருந்ததாக கூறப்படுகிறது. முகமதுவின் நபித்துவத்தை நிருபித்து மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்த மச்சம் போன்ற அடையாளம் எப்படி உதவமுடியும்?

மூலம்: http://www.answering-islam.org/Shamoun/seal_of_prophethood.htm

முகமது பற்றிய இதர கட்டுரைகள்


 

StumbleUpon.com Read more...

கோர்ட்டுக்கு பர்தாவில் வந்த ஷகீலாவுக்கு தமுமுக கண்டனம்

நெல்லை: ஆபாச படம் திரையிட்டது தொடர்பான வழக்கில் ஆஜராக நெல்லை நீதிமன்றத்துக்கு வந்த நடிகை ஷகீலா பர்தா அணிந்திருந்தார். இதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் முகமது ரபீக் இதுகுறித்துக் கூறுகையில், முஸ்லிம் பெண்களின் கண்ணியமான ஆடையான பர்தாவை ஆபாச படத்தில் நடித்தது தொடர்பான வழக்கில் ஆஜராக நெல்லை நீதிமன்றத்திற்கு வந்த நடிகை ஷகீலா அணிந்து வந்ததன் மூலம் விலை மாதர்களின் பாதுகாப்பு உடைபோல அதை காட்டியுள்ளார்.

இதை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது. காசுக்காக லட்சக்கணக்கான மக்கள் முன் முக்கால் நிர்வாணமாக நடிக்கும் இவர் நீதிமன்றத்திற்கு வரும்போது மட்டும் பர்தாவை அணிந்து வந்து முஸ்லிம்களின் கோபத்தை தூண்டியுள்ளார்.

அடுத்த முறை நீதிமன்றத்திற்கு ஷகீலா பர்தா அணிந்து வந்தால் தமுமுக மகளிர் அணியினரை திரட்டி செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்துவோம். இதற்காக சட்ட ரீதியாக எந்த பிரச்சனை வந்தாலும் இஸ்லாத்திற்காக இதை எதிர்கொள்ள நாங்கள் தயார் என்றார்.
 
 

StumbleUpon.com Read more...

துணை ஜனாதிபதி வேட்பாளரை பார்த்து,அசடு வழிந்த சர்தாரி:மன்மோகனிடம்,பவ்யமாக நடந்து கொண்ட சாரா பாலின்

 
lankasri.comஅமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பாலினை சந்தித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவரை பார்த்து, அவரது அழகில் மயங்கி அசடு வழிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதேநேரத்தில், அதே சாரா பாலினை சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங்கின் மிடுக்கான செயல்பாடுகளை கண்டு, பத்திரிகையாளர்கள் பலரும் பாராட்டினர். பெரிய பொருளாதார நிபுணரை சந்திக்கிறோம் என, நினைத்து சாரா பாலின் பதட்டம் அடைந்ததையும் அவர்கள் கண்டனர். பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் என்பதையும், உலகின் முதல் தர பொருளாதார நிபுணர் என்பதையும், மன்மோகன்சிங் தன் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.,சபையின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தானின் புதிய அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரும் சென்றுள்ளனர். அப்படிச் சென்றுள்ள தலைவர்கள், பன்னாட்டு தலைவர்களுடன் மட்டுமின்றி, அமெரிக்க குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். அந்த அடிப்படையில், குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண முன்னாள் அழகு ராணியுமான சாரா பாலினையும் சந்தித்து வருகின்றனர். சாரா பாலின் அழகி, அதிகம் அரசியல் அனுபவம் இல்லாதவர். அவர் விதவிதமாய் டிரஸ் அணிந்து ஆளும் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்கிறவர் என்று பெயர் பெற்றவர். கடந்த புதனன்று சாரா பாலினை, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சந்தித்துப் பேசினார். அப்போது, "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஒட்டு மொத்த அமெரிக்காவும் உங்கள் மீது ஏன் பைத்தியமாக இருக்கிறது என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது"என்று சர்தாரி கூறினார். அப்போது அங்கிருந்த உதவியாளர் ஒருவர், போட்டோ எடுப்பதற்காக இருவரையும் கைகுலுக்கும்படி கேட்ட போது, "நான் மீண்டும் போஸ் கொடுக்க வேண்டுமா?"என புன்சிரிப்புடன் கேட்டார். உடனே சர்தாரி, "உதவியாளர் வலியுறுத்தினால், நான் உங்களை தழுவிக் கொள்வேன்"என, அசடு வழியும் வகையில் பேசினார். அவரின் இந்தப் பேச்சை கேட்ட சாரா பாலின், எதுவும் கூறாமல், புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார்.

அதிபர் சர்தாரியின் சந்திப்புக்குப் முன்னதாக, பிரதமர் மன்மோகன்சிங்கை சாரா பாலின் சந்தித்தார். அப்போது, மன்மோகனின் முகம் இறுக்கமாக காணப்பட்டது. அதேநேரத்தில், அரசியலில் மற்றும் சர்வதேச விவகாரங்களில் சிறிதும் அனுபவம் இல்லாத நாம், மிகப்பெரிய பொருளாதார நிபுணரை, மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை சந்திக்கிறோம் என்பதால், சாரா பாலினும் ஒரு தர்ம சங்கடமான நிலைமைக்கு ஆளானார். சர்தாரியைப் போல அசடு வழியாமல், பிரதமர் மன்மோகன்சிங் அவரை லேசாக கையைப் பிடித்து குலுக்கியது, சாராவை மட்டுமின்றி, அங்கிருந்த நிருபர்களையும் வியப்படைய வைத்தது. சர்தாரியை சந்திக்கும் போது, சாதாரணமாக இருந்த சாரா பாலின், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கும் போது, சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். பிராந்திய பிரச்னைகள், எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல பிரச்னைகள் குறித்து, சாரா பாலினுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விளக்கினார்.

 

 

StumbleUpon.com Read more...

குழந்தையின் முகம் பார்த்தும் மாறாத தீவிரவாதிகள்

குழந்தையின் முகம் பார்த்தும் மாறாத தீவிரவாதிகள்
 
lankasri.comமோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த தீவிரவாதிகள், மெஹ்ராலி பூ மார்க்கெட்டில் வேண்டுமென்றே பாலிதீன் பையை கீழே தவற விட்டுள்ளனர்.இதைப் பார்த்த சிறுவன், அந்தப் பையை எடுத்துக் கொண்டு இளைஞர்களிடம் கொடுக்க ஓடினான்.

நெரிசலான பகுதி என்பதால் மோட்டார் சைக்கிள் இளைஞர்களை எளிதில் நெருங்கிய சிறுவன், அவர்களிடம் பையை அளிக்க முயன்றான்.

ஆனால் அந்த சின்னஞ்சிறுவனின் முகத்தைப் பார்த்தும் மனம் மாறாத அவர்கள், பையை சிறுவனிடம் திணித்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.

ஏதுமறியாமல் சிறுவன் திகைத்து நின்றபோதுதான் குண்டு வெடித்து சிதறியுள்ளது

 

 

StumbleUpon.com Read more...

பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை

பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் உயரதிகாரிகளின் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் 3 கடிதங்களை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள மாரத்தஹல்லி என்ற இடத்தில் நோக்கியா நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இதில் சோனி என்ற பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு சோனி தனது பெற்றோர், நண்பர் மற்றும் போலீசாருக்கு தனித்தனியே3 கடிதங்களை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை முழுவதும் சோனியை தொடர்பு கொள்வதற்காக மைசூரில் உள்ள அவரது பெற்றோர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள இயலாததால் வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அதன்பிறகு சனிக்கிழமை காலையில் தான் சோனி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. கடந்த சில தினங்களாகவே தனது மேலதிகாரிகள் தம்மை துன்புறுத்தி வந்ததாக சோனி கூறியதாகவும், இதுகுறித்து அவர்களிடம் தாம் பேசியதாகவும் சோனியின் தந்தை ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.

தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் நிறுவனத்தின் மேலதிகாரிகள் எந்தவித காரணமுமின்றி தம்மை துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது நண்பர் வெங்கட்டிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார். தமது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெங்கட் உயர் கல்வி பெற வசதியாக தனது பணம் அனைத்தையும் வெங்கட்டிடம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தற்கொலை குறித்து திலக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1222586336&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP