சமீபத்திய பதிவுகள்

பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்; இறந்தோர் தொகை170ஆக அதிகரிப்பு(படம் இணைப்பு)

>> Thursday, October 30, 2008

lankasri.comபாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டி உள்ளது பலுச்சிஸ்தான் மாநிலம். மிகவும் பின்தங்கிய மாநிலமான இங்கு அடிக்கடி நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை இடர்பாடுகள் நடந்து மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவது வாடிக்கை.

கடந்த 1935-ம் ஆண்டு இந்த மாநில தலைநகர் குவெட்டா நகரத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அந்த நகரமே இடிந்து தரை மட்டமானது. இதே போல பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான (ரிக்டர் அளவில் 7.6) நில நடுக்கத்தில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். கடந்த ஆண்டு பலுச்சிஸ்தான் மாநிலத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 100-க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இந்த பலுச்சிஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகாலையில் 2 முறை மீண்டும், மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. முதல் நில நடுக்கம் அதிகாலை 4.33 மணிக்கு ஏற்பட்டது. அடுத்து 5.10 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. இதில் ஜியாரத் மற்றும் பிஷின் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஜியாரத் பகுதியில் உள்ள 8 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டதால் சேதம் அதிக அளவில் ஏற்பட்டதாக புவியியல் வல்லுனர் காமர்-உஜ்-ஜாமன் சவுத்ரி தெரிவித்தார். லோரலை, குயில்லா அப்துல்லா, சிப்பி, போலன், மஸ்துங், ஜோஹ்ப் ஆகிய பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.

2 முறை பூகம்பம் ஏற்பட்ட போது அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். நில நடுக்கத்தை உணர்ந்த பலர் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். விழித்துக் கொண்ட சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்து, துப்பாக்கியால் சுட்டு பூகம்பத்தை அறிவித்தனர். மசூதிகளில் இருந்த ஒலிபெருக்கிகள் மூலமும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினார்கள்.

இந்த நில நடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகள் களி மண்ணாலும், மூங்கிலாலும் கட்டப்பட்டவை. அந்த வீடுகள் முழுவதும் தரை மட்டமாயின. பல இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டது.

170-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியும், நிலச் சரிவில் உயிரோடு புதைந்தும் பலியானார்கள். 100 பேர் பலியானதை பலுச்சிஸ்தான் மாநில வருவாய்த்துறை மந்திரி ஜமாரக் கான் உறுதி செய்தார். இன்னும் நிறையப் பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று மேயர் தில்வார் காக்கர் அச்சம் தெரிவித்து உள்ளார். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ராணுவத்தின் நடமாடும் ஆஸ்பத்திரிகள், டெண்டுகள், கம்பளிகள், போர்வைகள் மற்றும் மருந்து பொருட்கள், உணவுப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

வீடுகளை விட்டு வெளியே வந்தவர்களும், வீடுகளை இழந்தவர்களும் சாலைகளிலும், திறந்த வெளிகளிலும் படுத்து தூங்கினார்கள். பலர் பயத்தில் தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தனர்.

பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு அரசாங்கம் உடனடியாக ராணுவத்தினரையும், துணை ராணுவப் படையினரையும், மீட்புக் குழுவினரையும் அந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது. பல கிராமங்களில் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டு இருந்ததாலும், கிராமங்களை எளிதில் சென்று அடைய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஒதுங்கி இருந்ததாலும், மலைப் பகுதியில் கிராமங்கள் இருந்ததாலும் மீட்புக் குழுவினரால் உடனடியாக அந்த இடங்களைச் சென்று அடைய முடிய வில்லை. பூகம்பம் ஏற்பட்ட 6 மணி நேரம் கழித்துக்கூட அவர்களால் அங்கு சென்று சேர முடியவில்லை.

பூகம்பம் ஏற்பட்ட இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

பூகம்பம் நடந்த பிறகு 7 முறை அதன் பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவை 4 முதல் 4.3 வரை ரிக்டர் ஸ்கேல் அளவில் இருந்தன. இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த பின்னதிர்வுகள் இருக்கும் என்றும், அவை அதிக அளவில்கூட இருக்க வாய்ப்புண்டு என்றும் புவியியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான இங்கு அதிக அளவில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது. அந்த ஆலைகளுக்கோ, இயற்கை எரிவாயு கிணறுகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் உடனடியாக கிடைக்கவில்லை.

lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1225269412&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அஸ்ஸாமில் தொடர் குண்டு வெடிப்பு: 50 பேர் பலி! 200 பேர் காயம்!!(படம் இணைப்பு)

 
lankasri.comஅஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான குவஹாத்தி உட்பட பல இடங்களில் அடுத்தடுத்த நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கி 11.50 மணிவரை 11 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாகவும், குண்டுகள் வெடித்த இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் புழங்கும் சந்தைப் பகுதிகள் என்றும் யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.

குவஹாத்தி நகரிலுள்ள கணேஷ்குரி என்ற இடத்தில்தான் முதலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. 50 மீட்டர் சுற்றளவில் இருந்த பலர் இதில் கொல்லப்பட்டனர். சில நிமிடங்களில் மீண்டும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர் என்று அச்செய்தி கூறுகிறது.

குவஹாத்தியில் மட்டும் கணேஷ்புரி, ஃபேன்சி பஜார், பான்பஜார் ஆகிய இடங்களில் 4 குண்டுகள் வெடித்துள்ளன.

கோக்ரஜார் என்ற இடத்தில் 3 குண்டுகள் வெடித்துள்ளன. போன்கைகுவான் என்ற இடத்தில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. பர்பீட்டா சாலையில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் மட்டும் 8 பேர் உயிரிழந்நதுள்ளனர்.

இத்தாக்குதலின் பின்னனியில் உல்ஃபா இயக்கம் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறிய அஸ்ஸாம் மாநில காவல்துறைத் துணைத் தலைமை ஆய்வாளர் ஜி.பி. சிங், அதிகம் பேர் கொல்லப்பட்ட கணேஷ்குரியில் காரில் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

தொடர் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து கோபமுற்ற மக்கள் சில இடங்களில் காவல் துறையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1225359467&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஒரிஸ்ஸா : உயிர் பிழைக்க வீடுகளில் காவிக் கொடி

ஒரிஸ்ஸா மாநில காந்தமால் மாவட்டத்தில் வன்முறைக் கும்பல்களிடமிருந்து உயிர் பிழைப்பதற்காக, தாங்கள் இந்துதான் என்று தெரியப்படுத்தும் விதமாக கிறிஸ்தவர்கள் வீடுகளிலும் காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஒரிஸ்ஸா மாநில காந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள கிறிஸ்தவர்கள் உயிர் பயத்தில் உள்ளனர்.

வன்முறைக் கும்பல் எந்த நேரமும் புகுந்து தாக்குதல் நடத்தலாம் என்பதால்,வன்முறைக் கும்பல்களிடமிருந்து தப்புவதற்காக, கிறிஸ்தவர்கள் கூட தாங்கள் இந்து என்று தெரிவிக்கும் நோக்கத்தில், தங்களது வீடுகளின் உச்சியில் காவிக் கொடியை பறக்க விட்டுள்ளனர்.

" ஒரு கொடி எங்களது உயிரை காப்பாற்றுகிறது என்றால் அதனை வீட்டு மீது பறக்க விடுவதில் தவறில்லை " என்று அங்குள்ள கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாவட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் கிறிஸ்தவர்களே அதிகம்.ஆனால் அங்குள்ள வீடுகளில் காவிக் கொடிகள் வரிசையாக பறப்பதை பார்க்கும்போது, அந்த கிராமமே இந்து கிராமமோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP