சமீபத்திய பதிவுகள்

செல்போனில் அதிக நேரம் பேசுகிறீர்களா?

>> Tuesday, December 30, 2008

 

 

lankasri.comசெல்போனில் அதிக நேரம் பேசுவதால், உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இணைய தளம் ஒன்றில் வெளியான தகவலின் அடிப்படையில், செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மிகக் குறைந்த திறன் கொண்டதுதான் என்றாலும், அதிக நேரம் காதுகளில் வைத்து பேசிக் கொண்டிருப்பதால் ஏராளமான உபாதைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளை நரம்புகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தவிர எண்ணற்ற உடல் நலம் தொடர்பான நோய்களும் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி அந்த தகவல் கூறுகிறது.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக நேரம் செல்போனில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல் இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்தல் அவசியம். அதில் செல்போன் கதிர்வீச்சும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்த தகவல், தேவைப்பட்டால் மட்டும் கர்ப்பிணிப் பெண்கள் செல்போன்களில் பேசலாம் என்று தெரிவிக்கிறது.
 

StumbleUpon.com Read more...

ஈராக்கில் 98 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

 

 

அமெரிக்கா ஈராக் மீது போர் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை 98 ஆயிரத்து 400 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித உரிமை குழுவினர் தெரிவத்துள்ளனர்

2008ம் ஆண்டில் மாத்திரம் ஒருநாளைக்கு 25 பேர் விகிதம் சுமார் 8300 தொடக்கம் 9 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் 2006 மற்றும் 2007ம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் 48 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டள்ளார்கள்.

 

இதேவேளை 2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது போர் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் சுமார் 4200 அமெரிக்க துருப்பும் 175 இங்கிலாந்து துருப்பினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

StumbleUpon.com Read more...

எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை” - தமிழீழ தேசியத் தலைவர்

 

 

"நாம் ஒருபோதும் எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை" என தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார். லக்பிம நியூஸ் ஆங்கில பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். செவ்வியின் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.

"உங்கள் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக வதந்தி உலவுகிறது. உங்கள் சகாக்களை விட்டுச் செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்களா?" என கேட்கப்பட்டபோது "இவை அனைத்தும் இலங்கை அரச ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்யான பிரசாரங்கள் மாத்திரமே. நாம் ஒரு போதும் எமது மண்ணைவிட்டு செல்லமாட்டோம். மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக இறுதிவரை போராடுவோம்" என பிரபாகரன் பதிலளித்துள்ளார்.

நீங்கள் நாளுக்கு நாள் வயதாகி வருகிறீர்கள். ஆனால் ஈழம் இன்னும் கைகூடவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபாகரன், எமது போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாகும். எமது சுதந்திர போராட்டத்திற்கு கால எல்லையோ வயது எல்லையோ கிடையாது எனக் கூறியுள்ளார். கிளிநொச்சியை சில தினங்களில் இராணுவம் கைப்பற்றிவிடும் என்ற கருத்து தொடர்பாக பதிலளிக்கையில் "எமது போராட்ட வரலாற்றில் இதைவிட பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசின் பிரசாரத்திற்கும் முகம் கொடுத்துள்ளோம்.

நாம் யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னி பிரதேசத்திற்கு வந்தபோது எம்மால் மீண்டும் ஒருபோதும் பாரம்பரிய இராணுவமாக செயற்பட முடியாது என இலங்கை அரசுபெரும் பிரசாரம் மேற்கொண்டது. ஆனாலும் அதன்பின் ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3 மூலம் முல்லைத்தீவு, ஆனையிறவு மன்றும் வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றினோம். தற்போது நாம் விரைவில் கிளிநொச்சியை இழந்துவிடுவோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்கிறது.

எவ்வாறெனினும் கடந்த சில நாட்களில் கிளிநொச்சியில் நடைபெற்ற மோதல்களில் இலங்கை இராணுவம் சந்தித்த பாரிய இழப்புகள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது " எனக் கூறியுள்ளார்.

உங்கள் பயங்கரவாத செயற்பாடுகளை விரும்பாததால்தான் சர்வதேச சமூகம் உங்களை கைவிட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் அனைத்தையும் உங்களால் தோற்கடிக்க முடியாது அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எமது போராட்டம் நேர்மையான போராட்டம் என சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது. நாம் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. மக்களை இலக்கை வைத்து விமான குண்டுவீச்சுகளை மேற்கொள்வது மற்றும் அவர்களுக்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லையென்றால் மக்களை பாதுகாப்பதற்காகவும் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகளாகுமா என சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொள்ளுமாறு சிங்கள மக்கள் உட்பட முழு சர்வதேச சமூகத்தையும் நாம் கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கத்தன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியமை குறித்து தற்போது என்ன நினைக்கிறீர்கள். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்கு பணம் வழங்கப்பட்டதால்தான் அத்தேர்தலை பகிஷ்கரித்தீர்கள் எனக் கூறப்படுகிறது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையில், மக்கள் தாமாகவே தேர்தலை பகிஷ்கரித்தனர். மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். மக்கள் தேர்தலை பகிரஷ்கரித்தமை தொடர்பாக பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது விடுதலைப் போராட்டம் நேர்மையான போராட்டமாகும். பணம், லஞ்சம் மற்றும் பதவி போன்றவற்றினால் அதை ஒழிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

புலிகள் பலமிழந்துவிட்டதாக சர்வதேச ஊடகங்களும் கூறுவது குறித்து கேட்கப்பட்டபோது, நாம் பலமிழந்து விடவில்லை. எமது பலம் மக்கள்தான். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற சண்டை இதற்கு பதிலளிக்கின்றது. எமது எதிர்கால போராட்டங்கள் மூலம் எமது பலம் குறைந்துவிடவில்லை என்பது தெரியவரும் என பதிலளித்துள்ளார்
 
 

StumbleUpon.com Read more...

வன்னி களமுனையில் இதுவரை 10,000 படையினர் பலி: படைத்தரப்பு வட்டாரம்

 

 

வன்னியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா படைத்தரப்பில் 10,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவை தவிர தப்பியோடிய மற்றும் காயமடைந்த படையினரின் எண்ணிக்கைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே தற்போது படை பலத்தை தக்க வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கொழும்பு படைத்தரப்பு வட்டார தகவல்கள்

தெரிவிக்கின்றன.
வன்னியில் கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கையில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா படைத் தலைமையகத்தைச் சேர்ந்த விடயமறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
 
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னி நோக்கி சிறிலங்கா படை நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து படைத்தரப்பு பாரிய ஆட்பல இழப்புக்களை சந்தித்துள்ளது. இருந்தாலும், இந்நடவடிக்கையை மிகுந்த சிரமத்துடன் அரசாங்கம் தொடர்ந்து வருகின்றது.
இக்காலப்பகுதியில் படையினர் புதிதாக எட்டு படையணிகளை உருவாக்கியுள்ளதுடன் பல களமுனைகளையும் திறந்துள்ளது.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் எதிர்ச் சமர்களில் படையினர் என்றுமில்லாத அளவுக்குப் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
வன்னியை கைப்பற்றும் படை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்குள் இதுவரை 10,000 படையினர் உயிரிழந்துள்ளதுடன் 25,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பல ஆயிரம் பேர் உடல் அவயவங்களை இழந்துள்ளனர்.
இதே காலப்பகுதியில் 25,000-க்கும் அதிகமானோர் படைகளில் இருந்து தப்பியோடி விட்டனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் மட்டும் 11,000 பேர் வரை தப்பியோடிவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெரும் நிலப் பிரதேசங்களை கைப்பற்றி வரும் படையினர் அதனை தக்க வைப்பதற்கான படை பலத் தேவையில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
அதனை ஈடு செய்யும் முகமாக படைகளில் இளைஞர்களை சேர்க்கும் பொருட்டு தென்பகுதியில் உள்ள ஒவ்வொரு செல்லிடத் தொலைபேசிகளுக்கும் படையில் இணைந்து கொள்ளுமாறு தகவல்களை அரசாங்கம் அனுப்பி வருகின்றது.
மேலும் கிழக்கில் இருந்தும் யாழ். குடாநாட்டில் இருந்தும் வன்னி நோக்கி படையினரை நகர்த்தி வருவதுடன் சிறுவர்களையும் பெண்களையும் கூட படையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பு முடுக்கி விட்டுள்ளது.
இவை தவிர படையில் இருந்து தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், தப்பியோடுவோர் மீதான தண்டனைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தப்பியோடி மீளக் கைதாகும் படையினரை தண்டிப்பதற்கு என புதிதாக தானியங்கி தண்டனை இயந்திரங்களைக் கூட அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.
கைதாகும் தப்பியோடிய படையினர் இந்தத் தண்டனை இயந்திரத்துடன் பிணைக்கப்பட்டு இரு நாட்கள் தொடர்ச்சியாக மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட பின்னர் உக்கிரமான மோதல்கள் நடைபெறும் முன்னணி களமுனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
படையில் இருந்து சிங்கள இளைஞர்கள் தப்பியோடாது இருப்பதற்கு என படைத்தரப்பு பிரத்தியேகமாக கையாண்டு வரும் ஒரு கடுமையான முறை எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

 

StumbleUpon.com Read more...

முல்லைத்தீவில் புலிகளால் கைப்பற்றப்பட்ட கனரக ஆயுதங்கள்

 

 

முல்லைத்தீவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முறியடிப்புச் சமரில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட கனரக ஆயுதங்களின் நிழல்படங்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தனர். 

அதில் ஆர்.பி.ஜி., ஏ.பி. லோ, மற்றும் பாகிஸ்தான் மொழியில் (உருது) அடையாளப்படுத்தப்பட்டு தாக்குதலுக்குத் தயாராகவுள்ள கைக்குண்டு மற்றும் கனரக துப்பாக்கிகள் என்பன அடங்கியுள்ளன.

 
 
 

StumbleUpon.com Read more...

ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா
lankasri.comமெல்பர்னில் நடந்து வந்த 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி.16 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்ட்ரேலியா தொடரை இழந்துள்ளது.தென் ஆப்ரிக்கா அணி ஆஸ்ட்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்து வந்தது. பூவா தலையா வென்ற ஆஸ்ட்ரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கேட்டிச் 54 ரன்னும், அணித் தலைவர் பாண்டிங் அபாரமாக விளையாடி 101 ரன்னும், கிளார்க் 88 ரன்னும் பிராட் ஹட்டின் 40 ரன்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொல்லும் அளவுக்கு விளையாடவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்ட்ரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 394 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிடினி 2, காலிஸ், மோர்கெல், ஹரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது தென் ஆப்ரிக்கா அணி. அந்த அணியின் தொடக்க வீரர் மெக்கன்ஸி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் அணித் தலைவருமான ஸ்மித் அபாரமாக விளையாடி 62 குவித்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து விளையாட வந்த அம்லா (19), காலிஸ் (26), டிவில்லியர்ஸ் (7) ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் டும்னிக்கின் அபார ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 459 ரன்கள் குவித்தது. இது ஆஸ்ட்ரேலிய அணியை விட 63 ரன்கள் அதிகம் ஆகும்.

ஆஸ்ட்ரேலியாவின் பந்து வீச்சை சிதறடித்த டும்னிக் 166 ரன்கள் குவித்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த ஸ்டெய்ன் 76 ரன்கள் குவித்தார்.

பின்னர் தனது 2வது இன்னிங்சைத் தொடர்ந்த ஆஸ்ட்ரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஹைடன் 23, கேட்டிச் 15 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் அணித் தலைவர் பாண்டிங்கின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்ட்ரேலியா அணி ஓரளவு ரன்கள் எடுத்தது. 99 ரன் எடுத்திருந்தபோது பாண்டிங் மோர்கெல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பந்து வீச்சாளர் ஜான்சன் 43 ரன்கள் குவித்தார். ஆனால் முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது அணியை பாதாளத்துக்கு கொண்டு சென்றது. முடிவில் ஆஸ்ட்ரேலியா அணி 247 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

தென் ஆப்ரிக்கா பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோர்கெல், காலிஸ் தலா 2 விக்கெட்டும், நிடினி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் ஆஸ்ட்ரேலியா அணி தென் ஆப்ரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 183 ரன்கள் நிர்ணயித்தது.

தொடக்க வீரர் ஸ்மித் அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் மெக்கன்ஸி 59 ரன்னும், அம்லா 30 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10 விக்கெட் வீழ்த்திய ஸ்டெய்ன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணிலேயே ஆஸ்ட்ரேலியா அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

பா.ஜனதா அலுவலகத்தில் ரூ.2 கோடி மாயம்

 






டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் ரூ. இரண்டரை கோடி மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி அசோகா சாலையில் பாரதீய ஜனதா தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் அலுவலகம் உள்பட பல்வேறு நிர்வாகிகளின் அலுவலகங்கள் செயல் படுகின்றன. தலைமை அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஒரு அறையில் கட்சிக்கு சொந்தமான பணம் ரூ.2 கோடியே 60 லட்சம் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பணம் திடீர் என்று மாயமாகி விட்டது. கட்சியின் தேர்தல் செலவுக்காக இந்தப் பணம் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது பற்றி போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்பின் கடந்த  அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.

அப்போது தான் இந்தப்பணம் மாயமானது தெரிய வந்தது. இது தொடர்பாக கட்சி ஊழியர்கள் சிலரிடம் தனியார் துப்பறியும் ஏஜென்சி மூலம் விசாரணை நடக்கிறது. கட்சி அலுவலகத்தில் பணம் மாயமாகியுள்ளதால் பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=1532

StumbleUpon.com Read more...

இஸ்ரேல் தாக்குதல் : பலி எண்ணிக்கை 345

 

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் மேற்கு பாலைவனப் பகுதியான நெசவ் மீது பாலஸ்தீனம் தாக்குதல் நடத்தியது. ஒரு வாரமாக நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் அமைச்சரவை முடிவெடுத்தது.

அதன்படி பாலஸ்தீன நாட்டின் காசா கடற்கரையோர பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் சில தினங்களுக்கு முன்பு திடீரென்று சரமாரியாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின.போலீஸ் தலைமையகம் உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் மீது இந்த தாக்குதல் நடந்தது.

 இத்தாக்குதலில் 155 பேர் பலியாகியுள்ளதாக அன்று இரவு தகவல் வந்தன.  மறுநாள் பலியானோர் எண்ணிக்கை 230ஆக உயர்ந்தது.  இத்தாக்குதலில் ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.

பலியானோர் எண்ணிக்கை இன்று 345ஆக உயர்ந்துள்ளது.  மேலும் இன்றைய தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இன்று தாக்குதல் நடந்த இடத்தில் மீட்பு பணிக்காக ஆம்புலன்சுகள் சென்றன. அவற்றின் மீதும் குண்டு வீசப்பட்டன.இதில் 5 ஆம்புலன்சு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=1540

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP