சமீபத்திய பதிவுகள்

சூங் சான் வனப்பூங்கா

>> Monday, January 12, 2009

 

cri
பெய்ஜிங்கின் சுற்றுப்புறத்திலுள்ள ஒரேயொரு நாட்டு நிலை இயற்கை பாதுகாப்பு மண்டலமான சூங் சான் வனப்பூங்கா பற்றி கூறுகின்றோம்.
சூங் சான் வனப்பூங்கா, பெய்ஜிங்கின் யான் ச்சிங் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. பெய்ஜிங்கின் நகரப் பகுதிக்கான தூரம், சுமார் 90 கிலோமீட்டர் ஆகும். 4660 ஹெக்டர் பரப்பளவுடைய இந்தக் வனப்பூங்காவைச் சேர்ந்த, கடற்மடத்திலிருந்து 2199 மீட்டர் உயரமான ஹெய் தோ மலை, பெய்ஜிங்கில் 2வது உயரமான மலையாகும். 1986ம் ஆண்டு, சூங் சான் வனப்பூங்கா, சீன அரசவையால், நாட்டு நிலை இயற்கை பாதுகாப்பு மண்டலமாக கருதப்பட்டது. பெய்ஜிங்கின் பின் பூங்கா என பெயர்ப்பட்டுள்ளது. இப்பூங்காவில் நுழைந்த பயணிகள், பச்சை மலையையும் நீரையும் பார்த்து மகிழ்வதோடு, பசுமையான காற்றையும் உணர்கின்றனர். சூங் சான் இயற்கைக் காட்சி பிரதேசம், எடுத்துக்காட்டு மலை கால நிலையாகும். இங்கு குளிராக இருக்கிறது. பொதுவாக, சராசரி வெப்பம், சுமார் 7 டிகிரி செல்சியஸ், பெய்ஜிங் நகரப்பகுதியை விட, 4 டிகிரி செல்சியஸ் குறைவு. வெப்ப காலநிலையில், குளிரான இடங்களைத் தேடும் பொருட்டு, பல பயணிகள், கோடைக்காலத்தில் சிறப்பாக இங்கு வருகை தருகின்றனர். இந்த இயற்கைக் காட்சி பிரதேசத்தின் பொறுப்பாளர் திரு மா கூறியதாவது:
சூங் சான்னில், ஒரு பழங்குடி காட்டுப் பகுதி இருக்கிறது. இது, சீனாவின் வடபகுதியில் செவ்வனே பேணிக்காக்கப்படும், பரப்பளவு மிகவும் பெரிய Chinese pine காடு ஆகும்.
திரு மா கூறிய இந்த பழங்குடி Chinese pine காடு, சூங் சான் இயற்கை காட்சி பிரதேசத்தில் மிகவும் வரவேற்கப்பட்ட இடம் ஆகும். இயற்கைக் காட்சிகளை முக்கியமாக கொண்ட சூங் சான்னின் சுற்றுலா மண்டலம், தனிச்சிறப்பியல்புடையது. இதில், பழங்குடிக் காடு ஒப்பீட்டளவில் செவ்வனே பேணிக்காக்கப்பட்டது. பல்வகை வன விலங்குகள், இங்கு வாழ்கின்றன. இதில், leopard, goral முதலிய நாட்டின் முக்கிய பாதுகாப்பு வன விலங்குகள் இடம்பெறுகின்றன.
பழங்குடிக் காட்டில் நடந்த போது, பயணிகள், காட்டிலும், ஊற்றுப்பக்கத்திலும் வானிலும், பறவைகளையும் விலங்குகளையும் அவ்வப்போது பார்க்கலாம். சூங் சான் மலையில், ஒரு தூய்மையான ஊற்று, மலைச் சிகரத்திலிருந்து உருவாகி ஓடுகின்றது. பயணிகள், இவ்வூற்றின் பாதையில் நடந்து, ஊற்றின் தோற்றுவாய் இடமான BAI BU ஊற்றுக்குச் சென்றடைவார்கள். உயரமான மரங்களால், பெரும்பாலான சூரிய ஒளி மறைக்கப்படுகிறது. அமைதியான காட்டில், பல்வேறு விலங்குகள் மற்றும் நீரின் ஒலியை கேட்கலாம். பயணிகள் சூங் சான் மலை வந்த பிறகு, இந்தப் பழங்குடிக் காட்டிற்குச் சென்று நடந்து, நகரத்தை விட வேறுபட்ட அமைதியான உணர்வை உணர வேண்டும். காட்டில் நடந்து போகும் போது, திரு மா, செய்தியாளரிடம், சூங் சான் மலையிலுள்ள பல்வேறு இயற்கைக் காட்சிகளை அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:
சூங் சான் மலையில், பழங்குடி காடு, BAI BU ஊற்று, YUAN YANG YAN, SAN DIE SHUI, TING YUE TAN ஆகியவை, பெரிய இயற்கைக் காட்சிகளாகும். தவிர, சில சிறு இயற்கைக் காட்சிகளும் உள்ளன என்றார் அவர்.
நேயர்களே, இந்த அழகான இயற்கைக் காட்சியினால் நீங்கள் ஈர்க்கப்பட்டீர்களா? ஆனால், ஆழகான இடத்தில் சென்ற போது, சுற்றுலா பயணம் தவிர, தங்குமிட வசதியும் உணவும் இன்றியமையாதவை. இவை, பயணிகள் மிகவும் கவனம் செலுத்திய துறைகளாகும். பயணிகள், சூங் சான் மலையில் தங்கியிருக்க விரும்பினால், உள்ளூரின் விவசாயிகளின் இல்லங்களில் சென்று தங்கி இருக்கலாம். இரவில், சீனாவின் வடபகுதியில் தனிச்சிறப்பியல்புடைய ஒரு வகை படுக்கையில் தூங்கலாம். அதாவது, கல் தட்டு மற்றும் செங்கல்லைப் பயன்படுத்தி கட்டியமைக்கப்படும் படுக்கையாகும். இங்கு, விவசாய குடும்பத்தின் உணவுவகைகளை உண்டு, விவசாயியின் வேலையில் ஈடுபட்டு, விவசாயியாக உணரலாம். உள்ளூரின் விவசாயி வீட்டின் உணவு வகைகளில், மலையிலுள்ள காட்டு காய்கறிகள் முக்கிய இடம்பெறுகின்றன. மக்காச்சோளம் வடை, உருளைக்கிழங்கு வடை ஆகியவையும் உண்டு. அவை எல்லாம், மாசுபடாத உணவுகளாகும்.
விவசாயக் குடும்ப உணவைத் தவிர, சூங் சான்னில், தனிச்சிறப்பியல்பான உணவுகளைச் சாப்பிடலாம். பெய்ஜிங் யேன் ச்சிங் மாவட்டத்தின் சுற்றுலா பணியகத்தின் அதிகாரி திரு HE, எமது செய்தியாளரிடம் பேசுகையில்,
சூங் சான்னில், பல சிறப்பு மிக்க உணவுகளைச் சுவைக்கலாம். இவை, உள்ளூரின் பாரம்பரிய திருமணப் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையவை. பயணிகளுக்காக, நாங்கள் பாரம்பரிய அடிப்படையில் இவற்றைச் சீர்திருத்தம் செய்துள்ளோம் என்றார் அவர்.
மர்மமான பழங்குடிக் காட்டைப் பார்வையிட்டு, உள்ளூரின் தனிச்சிறப்பான உணவுகளைச் சாப்பிட்ட பிறகு, வெப்ப ஊற்று செல்லலாம். சூங் சான் மலையிலுள்ள வெப்ப ஊற்று மிகவும் புகழ்பெற்றது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன், கட்டியமைக்கப்பட்ட வெப்ப ஊற்றை, அப்போதைய பிரபுக்கள் அனுபவிக்கத் தொடங்கினர். அதன் நீரில் பல்வகை பொருட்கள் உண்டு. மனித உடலின் நலனுக்கு பயன் மிக்கது. இங்கு அடிக்கடி குளித்தால், மனபாரம் நீங்குவது மட்டுமல்ல, சில நோய்களுக்கும் சிகிச்சையாக அமையலாம்

 

 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP